Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 361 online users.
» 0 Member(s) | 358 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,469
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,042
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  பூகம்ப எதிரொலி....பூமியின் சுழற்சி வேகம் கூடியது..?!
Posted by: kuruvikal - 12-29-2004, 03:54 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (8)

<img src='http://img134.exs.cx/img134/8275/quake9fp.jpg' border='0' alt='user posted image'>

<b>பூமியின் சுழற்சி வேகம் கூடியது...?</b>

இந்தோனேஷியாவிற்கு அருகில் இந்து சமுத்திரத் தளத்தில் ஏற்பட்ட மிக பயங்கரமான நில நடுக்கத்தால் பூமியின் சுற்று வேகத்தில் கூட சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

பூமி தன்னைத் தானே சுற்றும் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமி தன்னைத்தானே சுற்றும் காலத்தில் 3 மைக்ரோ வினாடிகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் இதனால் வருடத்தில் ஒரு நாள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூட அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

The deadly Asian earthquake may have permanently accelerated the Earth's rotation -- shortening days by a fraction of a second -- and caused the planet to wobble on its axis, U.S. scientists said on Tuesday.

(Reuters)

மேலதிக தகவல்கள் இங்கு

Print this item

  தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு அலைகளின் ஆலோசனை !
Posted by: ravi_dk - 12-29-2004, 02:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

http://www.tamilnet.dk/tamilan/html/module...rticle&sid=1159


<b>தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு அலைகளின் ஆலோசனை !</b>

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அரிய பணியை ஆற்றியுள்ளது. ஆனால் அது போதியதல்லää பணிகள் மிகமிக நெடியவை என்று அதன் பொறுப்பாளர் றெஜி அவர்கள் நேற்று தொலைக்காட்சியில் பேசும்போது தெரிவித்தார்.

ஐ.நா சபையின் உதவி வழங்கும் நிறுவனங்களும் உடனடி உதவிகளுக்குத் தயார் ஆனால் நீண்ட உதவிகளை வழங்க தமது பொருளாதாரம் இடம் கொடுக்காது என்று தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இந்த அவலத்தை வெற்றிகொள்ள எது வழி இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அனைத்துப் பணிகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு சரியான இலக்கைத் தொட வேண்டிய நிலை உள்ளதால் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் கவனத்திற்கு இது குறித்த நமது எண்ணங்களைத் தருகிறோம்.

முதலாவதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனை என்ற புள்ளிவிபரம் துல்லியமாக எடுக்கப்பட வேண்டும். வீடமைப்புää தொழில்ää மறுவாழ்வுää ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களை நம்பிக்கையுடன் வாழவைக்கும் திட்டத்திற்கு முதலில் பாதிப்பின் சரியான பட்டியல் அவசியம்.

அப்படி ஓர் அறிக்கை தயாரித்தால் அடியோடு பாதிக்கப்பட்ட குடும்பங்கள்ää இடைநிலைப் பாதிப்பிற்குள்ளான குடும்பங்கள்ää ஓரளவு பாதிப்பிற்குள்ளான குடும்பங்கள் என்று மூன்று பிரிவுகள் தோன்றும். இவற்றில் அடியோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியலை முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் குடும்பங்களை நகர வாரியாக கொத்தணிகளாகப் பிரிக்க வேண்டும். இது கட்டம் ஒன்று.

கட்டம் இரண்டு வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உதவி புரியும் பணி ஒவ்வொரு வெளிநாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். கட்டம் மூன்று ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் பொறுப்பாக வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தை நியமிக்க வேண்டும். கட்டம் நான்கு அடுத்த ஆறு மாதங்கள் இதற்காக பணியாற்றி தாம் பொறுப்பெடுத்த குடும்பத்தை ஒவ்வொரு புலம் பெயர் குடும்பமும் மீட்டெடுத்து நம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான நம்பிக்கை ஒளி.

ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இது குறித்த பணியைச் செய்ய ஒவ்வொரு குழு நேரடியாக செல்ல வேண்டும். அவர்கள் நாடு திரும்பி புலம் பெயர் மக்கள் மத்தியில் நம்பிக்கை தரும் பூரண அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு குடும்பத்தையும் பொறுப்பெடுத்த குடும்பம் நேரடியாக சென்று அவர்களின் உண்மையான தேவையை அறிந்து அதை பூர்த்தியாக்க வேண்டும். இருப்பிடம்ää தொழில் இதற்கான ஏற்பாடுகளை கணிசமான அளவு செய்து கொடுத்துää அதன் பின்னர் அவர்களாக மீண்டெழவும் ஒரு வெற்றிடம் வைத்துப் பணியாற்றினால் போதுமானது. சுமார் ஆறு முதல் ஒரு வருடத்தில் இதைப் பூர்த்தி செய்ய முடியும்.

சரியாக திட்டமிட்டு செயலாற்றினால் இதை எட்டித் தொட்டு இந்த அவலத்தை உடனடியாக வெற்றி கொள்ள வழியிருக்கிறது. அதேவேளை பணியின் அளவு பெரிதாக இருந்தால் அதற்கேற்ப வலுவுள்ள குடும்பங்களை தெரிவு செய்து பணியை ஒப்படைக்கலாம். அடுத்த பணியாக இடைநிலை குடும்பங்கள்ää சாதாரண பாதிப்புக் குடும்பங்களுக்கு பொதுவான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நேரடியாக செய்யலாம்.

இது ஒரு நுட்பமான விஞ்ஞான வடிவமைப்புச் செயற்பாடுää உள்ளார்ந்த நுட்பாந்திரங்கள் பல இதில் பின்னி நிற்கின்றன. பேரவலங்களால் சீரழிந்த இனங்கள் தம்மை மின்னல் வேகத்தில் சீரமைத்த வரலாற்றோடு தொடர்புடைய பணி. எனவேதான் திட்டத்தை செயற்படுத்த முன்னர்ää செற்படுத்த முற்படுவோருக்கு பல வகுப்புக்கள் எடுத்து விளக்க வேண்டும். பயன் பெறு வோருக்கும் இது குறித்த விளக்கää உளவியல் வகுப்புக்கள் அவசியம். மேலும் பணியாளருக்கு சமுதாய உளவியலைப் புரியும் நுட்பங்களை கற்றுக் கொடுத்துää இங்குள்ள ஈகோ பிரச்சனையை வெல்லும்படியாக பணியாற்ற வைக்க வேண்டும். அதேவேளை தமிழர் தாயகத்தின் இதர தேவைகளையும் கருத்தில் கொண்டு இதைக் கட்டமைக்க இடமிருக்கிறது. இது ஓர் எண்ணம்ää ஆலமரம் போல கிளைவிட்டு பரவிää நலம் தர இதில் நிறையவே இடமிருக்கிறது. இதை தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் கவனத்திற்கு தருகிறோம்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இதுவரை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களை தனது காரியாலய ஊழியர்களின் கண்ணளுடாகவே பார்த்துள்ளது. அடுத்த கட்டமாக அதன் பார்வை முப்பரிமாணம் கொண்டதாக அமைந்தால் மட்டுமே அதன் அடுத்த கட்டப் பாரிய பணிகளைச் சுலபமாகச் செய்யலாம்.

ஆறு மாதத்தில் தமிழீழத்தையே போரின் அடையாளமே தெரியாத தேசமாக மாற்ற வேண்டிய பணியும் காத்திருக்கிறது. அப் பணியின் ஆரம்பக் கட்ட வேலை இதுவாகும். இதை தமிழீழத்தில் இருக்கும் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையகத்தின் மேலான பார்வைக்கு முன் வைக்கிறோம்.

<b>www.alaikal.com
அலைகள் ஆசிரிய பீடம். 29.12.2004</b>[/size][size=24]

Print this item

  தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து...........
Posted by: Vaanampaadi - 12-29-2004, 12:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து 300 மில்லியன் ருபாய்கள் மக்களைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமைஇ 28 டிசெம்பர் 2004 அருணா
தமிழீழ தேசியத்தலைவரின் நிதியத்தில் இருந்து 300 மில்லியன் ருபாய்களைத் தமிழீழ தேசியத் தலைவரின் உத்தரவுக்கு அமைய முற்றுமுழுதாக வடக்கு கிழக்கிற்கு தமிழ் உறவுகளின் உடனடி நிவாரனத்திற்காக பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாகவும் எனினும்ää இந்த நிதி பாதிக்கப்பட்ட 13 இலட்சம் மக்களின் அவசர தேவைகளுக்கு போhததது என்று அறியமுடிகிறது. இந்த நிதி தமிழீழ விடுதலைப்புலிகளின் பாதீட்டினுடையதாக (budget) இருக்கலாம் என்றும் அறியமுடிகிறது.

இந்த நிதி உடனடியாக உனவுப்பண்டமாகவும் மாற்று உடைகளாகவும் மருந்து பொருட்களாகவும் இறந்தவர்களை அடக்கம் செய்யவும் அவர்களைப் பொதி செய்யவும் முற்றுமுழுதாக பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களுக்கு எந்த உதவியையும் உலக நாடுகள் இதுவரை வழங்காத நிலையில் தமிழீழ தேசியத்தலைவர் தனது அவசர உத்தரவை நேற்று உத்தரவிட்டதாகவும் அறியமுடிகிறது.


நன்றி- நிதர்சனம்

Print this item

  உணர்வாளர்களே நிதானம்
Posted by: Nada - 12-29-2004, 11:50 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (1)

உணர்நாளர்களே நிதானம் துரோகிகளும் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கிறார்கள். உங்கள் உதவிகளை புனர்வாழ்வுக்கழகத்தின் மூலம் செய்யுங்கள். சிலகுழுக்கள் தங்களுடைய தேவைகளுக்காகவும் பெயருக்காகவும் உங்களை பயன்படுத்த முயலும் ஆதலால் சிந்துpத்து செயல்படுங்கள் .நடந்து முடிந்தபின் கவலைப்படாதீர்கள்.

Print this item

  ¦Åó¾ Òñ½¢ø §Åø À¡îÍõ Ãçô †ì¸¢õ
Posted by: elanguyilan - 12-29-2004, 11:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

http://www.nitharsanam.com/?art=7843

Print this item

  உதயன் தகவற் சேவைTP இல.222 3837
Posted by: yarl - 12-29-2004, 11:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வடமராட்சி, வடமராட்சி கிழக்கு மற்றும் வன் னிப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கிக் காணாமற்போணவர்கள் தொடர்பான தகவல்களைப்பெற உதவும் வகையில் மதகவற் சேவைடு ஒன்றை உதயன் ஆரம்பித்துள்ளான்.
காணாமற்போனோர்களின் விவரங்களை நேரிலோ அல்லது <b>தொலைபேசி இல.222 3837 </b>மூலமோ அல்லது கடிதமூலமோ தெரியப் படுத்தினால் அவற்றைப் பிரசுரித்து தமது உறவு களைக் கண்டுபிடிக்கத் தவித்துக்கொண்டிருக் கும் மக்களுக்கு உதவிடும் சேவை இதுவாகும்.
காலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை தகவல் சேவை கருமபீடத்தினர் பணி யாற்றுவர்.
மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் யாழ்.அரச அதிபரும் அனைத்து ஒத்துழைப்பை யும் நல்க முன்வந்துள்ளார்.

Print this item

  அவசர வேண்டுகோள்
Posted by: hari - 12-29-2004, 05:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

துரித மீட்புப் பணிகளை மேற்கொள்ள மேலதிக தொண்டர்களை இணையுமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்
ஜ கிளிநொச்சி நிருபர் ஸ ஜ புதன்கிழமைää 29 டிசம்பர் 2004ää 4:28 ஈழம் ஸ
கிழக்கு மாகாணத்தில் துரித மீட்பு பணிகளை மேற்கொள்ள மேலதிக தொண்டர்களை இணையுமாறு அவசர வேண்டுகோள் ஒன்றை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ளது.

மட்டக்களப்புää அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடற்கொந்தளிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்;ட நூற்றிற்கு மேற்பட்ட கரையோரக் கிரமாங்களில் துரித மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்;டு வருகின்றன.

மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள இப்பகுதிகளில் சுமார் 7ää000 பொதுமக்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை மீட்கும் பணிகள் அவசர பணிகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளையில் இந்த பகுதிகளில் பல்லாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து இன்னமும் அவசர மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர் என அப்பகுதி புனர்வாழ்வுகழக பணியகங்கள் அறிவித்துள்ளன.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்துக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலமே உடனடி உதவிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இது இப்பணிகளை மேலும் தாமதப்படுத்தி வருகின்றது.

இப்பணிகளினை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வரும் அம் மாவட்ட புனர்வாழ்வுக் கழகத்தினர்ää உடனடி தேவைகளுக்காக உணவு மற்றும் மருத்துவ பொருட்களை கொழும்பு மற்றும் பிற பகுதிகளிலிருந்து அப்பகுதிகளிற்கு அனுப்பி வருகின்றனர்.

அத்துடன் வன்னி மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து சுமார் 300 தொண்டர்கள் 10 லொறிகளில் உணவு பொருட்களுடன் மட்டக்களப்புää அம்பாறை மாவட்டங்களின் அவசர மனிதாபிமான பணிகளுக்காக சென்றுகொண்டிருக்கின்றனர்.

மேலும்ää இப் பணிகளில் ஈடுபட முன்வரும் தொண்டர்களை உடனடியாக அங்கு சென்று இணையுமாறு புனர்வாழ்வுக் கழகம் கோரியுள்ளது.

தமது மட்டக்களப்பு பணிமனையினை 00 94 65 222 53 99 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும்ää அம்பாறை மாவட்டத்தினை 00 94 67 22 79 050 எனும் தொலைபேசி ஊடகவும் தொடர்பு கொள்ளுமாறு புனர்வாழ்வுக் கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.றெஐP இன்று விடுத்த அவசர வேண்டுதலில் கோரியுள்ளார்.

இதேவேளையில் பயிற்றப்பட்ட வைத்தியர்கள்ää தாதிகள் மற்றும் மருத்துவ தொண்டர்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கோரியுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று பணியாற்ற வரும் முன்வரும் தொண்டர்களை உடனடியாக தமது அனைத்துலக கிளைகளுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மீட்பு மற்றும் மனிதாபிமானப் பணிகளிற்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்புத் தருமாறு புனர்வாழ்வுக்கழகம் கேட்டுள்ளது.

குறிப்பாகää நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட இடங்களிற்கு உரிய காலத்தில் துரிதமாக சென்றடைவதற்கு சிறீலங்கா அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் பொதுநிறுவனங்கள் உதவிடல் வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருமலைக்கு சென்று கொண்டிருந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய லொறிகள் ஹபரணைப் பகுதியில் சில இடையூறுகள் ஏற்பட்டமை தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வடக்குக்கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவின் தாக்கங்களை பார்வையிடவும்ää இடம்பெறும் புனர்வாழ்வுப் பணிகளை கண்காணிப்பதற்காகவும் அனைத்துலக ஊடகவியலாளர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு அழைத்துச் செல்ல புனர்வாழ்வுக் கழகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இன்று 29.12.04 புனர்வாழ்வுக்கழக கொழும்பு பணிமனை இதற்கான ஏற்பாட்டினை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தப் பயணங்களில் பங்கேற்க விரும்பும் ஊடகவியலாளர்களை தமது கொழும்பு பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறும் புனர்வாழ்வுக் கழகம் கோரியுள்ளது.
www.puthinam.com
........................................................................................................
நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்பு காரியாலயத்துடன் நான் தொடர்புகொண்டபோது. கொழும்பு பிரதேசத்தில் சேர்க்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதற்கு லொறிகளும் தொண்டர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர், இதன்படி கொழும்பு பழைய மாணவர்கள் நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் தொண்டர்களாக சேர்ந்துகொண்டனர், மேலும் சேரவிரும்புவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்பு கிளையுடன் உடனடியாக இணைந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

Phone: +94 11 2 69 32 54
Fax: +94 11 4 71 65 76

அல்லது
பழைய மாணவர்கள்
0094777248644 / 0094776512000

Print this item

  Please visit to www.tsunamiineelam.com
Posted by: KaviPriyan - 12-29-2004, 04:55 AM - Forum: இணையம் - Replies (10)

இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது...

நன்றி

Print this item

  BBC ஊடகத் துரோகம்
Posted by: Mathan - 12-29-2004, 04:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

ஊடகத் துரோகம்.

கடந்த இருநாட்களாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(BBC) மீது பயங்கர எரிச்சலுற்றிருக்கிறேன்.ஆகக்குறைந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை மூடி மறைத்து வருகின்றது அந்த ஊடகம்.

இதுவரை வெளிவந்த விவரணப்படங்கள்,செய்திகள் எவற்றிலுமே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு,திருகோணமலை ஏன் மட்டக்களப்பு பாதிக்கப்பட்டதாக சிறு செய்திகூட வெளிவரவில்லை.செய்தியில் என்ன, சொன்னால் சொல்கிறார்கள் சொல்லாவிட்டால் போகட்டும் என்று விட்டுவிடலாம்தான்,ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் எல்லாமே இந்த ஊடகங்களினால் குறிப்பிடப்படும் இடங்களுக்குப் போய்ச்சேர்கின்றன என்பதுதான் வேதனை.

இலங்கையில் எந்த எந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என அறியவிரும்பும் வெளிநாட்டிலிருக்கும் ஒருவர் முதலில் எடுத்துப் பார்ப்பது BBC போன்ற ஊடகங்களைத்தான்.இன் செய்தியைப் பார்க்கும் ஒருவர் இலங்கையில் காலி,மாத்தறை மற்றும் கொழும்பின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவே முடிவுக்கு வருவார்.

இது எந்தவிதத்திலும் தென்னிலங்கையில் ஏற்பட்ட இழப்புகளை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது இழப்பே இல்லையென்று சொல்வதற்கோ அல்ல உண்மையைக் கூற BBC ஊடகம் தவறிவிட்டது.

சராசரி ஊடகத் தர்மத்துடன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை மனிதாபிமானத்துடனாவது வடக்கு கிழக்கில் இதுவரை 8000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதை செய்தியாகவாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை.இற்கு அவ்வாறு சொல்லவேண்டிய தேவை ஏனோ இருக்கவில்லை.

ஒரே ஒரு வரி போராளிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை.இதைத்தான் நாள் முழுவதும் BBC சொல்லிக்கொண்டிருக்கிறது.

இதே BBC தான் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறப் போகிறேன் என்று அறிவித்தவுடன் பலத்த சிரமங்களுக்கும் உயிராபத்துக்கும் மத்தியில் மட்டக்களப்பில் அவரது முகாமுக்குப் போய் பேட்டியொன்றை எடுத்து வெளியிட்டது.அதே BBC இற்கு இப்போது மட்டக்களப்புக்குப் போய் ஒரு சிறு செய்தியோ ஒளிப்படமோ எடுத்து வெளியிட முடியவில்லை.

இதே BBC தான் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் பிரபாகரனைப் பேட்டியெடுத்து வெளியிட்டது.இதே BBC தான் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்கு கிளிநொச்சி போய் நாட்கணக்கில் தவமிருந்தது.
இப்போது என்னவென்றால் முல்லைத்தீவோ கிளிநொச்சியோ தனக்குத் தெரியாதமாதிரி நடந்துகொள்கிறது ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி என்னைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

நன்றி - ஈழநாதன்

Print this item

  மோசடிக்காக நிதி திரட்டுவோருக்கு எச்சரிக்கை
Posted by: Mathan - 12-29-2004, 03:52 AM - Forum: புலம் - Replies (3)

மோசடிக்காக நிதி திரட்டுவோருக்கு எச்சரிக்கை

மக்களின் அவலத்தைச் சாட்டி பலரும் தனிநபராகவும்ää குழுக்களாகவும்ää கோவில் பிரதிநிதிகளாகவும்ää வானொலிகளாகவும்ää இணைய வானொலிகளாகவும்ää தொலைக்காட்சிகளாகவும்ää இணையத்தளங்களாகவும்ää அமைப்புக்களாகவும்ää அரசியல் பாகுபாட்டாளர்களாலும்ää தமிழ் தேசவிரோதிகள் சிலராலும் பலதரப்பட்ட வடிவங்களில் ஜரோப்பாவில் நிதி திரட்டப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் அனைத்துத் தகவல்களும் கவனிக்கப்பட்டு வருகின்றது.

உங்களால் சேகரிக்கப்படும் அனைத்து நிதிகள் மற்றும் அனைத்துத் தரவுகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடகவே உரியவர்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். உங்களால் சேகரிக்கப்படும் அனைத்து நிதிகளும்ää பொருட்களும் தரவுகளும் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

அதே நேரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன் அனுமதி இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ள தங்களின் ஆதங்கம் எமக்கு புரிகிறது. எனினும் தயவு செய்து உரியவர்கள் ஊடாக இந்த விடயத்தை மேற்கொள்வதால் தாயக உறவுகளுக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகள் கிடைக்கவும் உங்களால் வழிசெய்யப்படும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.

இலன்டனில் உள்ள வானொலிகளில் ஜ.பி.சி வானொலிக்கு மட்டுமே நிவாரண நிதி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்களது சுயலாபங்களுக்கான விளம்பரமாகவும்ää வியாபார தந்திரமாகவும் பயன்படுத்தவும் ஊடகங்கள் சில முயன்றுவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன. எனவே உதவிகள் புரியும் அன்பான எம்முறவுகள் இந்த விடயத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது

http://www.nitharsanam.com/?page=warning

Print this item