Yarl Forum
பூகம்ப எதிரொலி....பூமியின் சுழற்சி வேகம் கூடியது..?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: பூகம்ப எதிரொலி....பூமியின் சுழற்சி வேகம் கூடியது..?! (/showthread.php?tid=6035)



பூகம்ப எதிரொலி....பூமியின் சுழற்சி வேகம் கூடியது..?! - kuruvikal - 12-29-2004

<img src='http://img134.exs.cx/img134/8275/quake9fp.jpg' border='0' alt='user posted image'>

<b>பூமியின் சுழற்சி வேகம் கூடியது...?</b>

இந்தோனேஷியாவிற்கு அருகில் இந்து சமுத்திரத் தளத்தில் ஏற்பட்ட மிக பயங்கரமான நில நடுக்கத்தால் பூமியின் சுற்று வேகத்தில் கூட சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

பூமி தன்னைத் தானே சுற்றும் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமி தன்னைத்தானே சுற்றும் காலத்தில் 3 மைக்ரோ வினாடிகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் இதனால் வருடத்தில் ஒரு நாள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூட அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

The deadly Asian earthquake may have permanently accelerated the Earth's rotation -- shortening days by a fraction of a second -- and caused the planet to wobble on its axis, U.S. scientists said on Tuesday.

(Reuters)

மேலதிக தகவல்கள் இங்கு


- vasisutha - 12-30-2004

ஒருநாள் குறைய போகிறதா :!: Confusedhock:


- KULAKADDAN - 12-30-2004

¦Àª¾£¸ò¾¢ø ÒÈÅ¢¨º¸û ¾¡ì¸Å¢ø¨Ä.... þÐ âÁ¢ìÌû ÁðÎõ
¿¢¸úóò¾Ð..... ÍÆüº¢ §Å¸ò¨¾ À¾¢ìÌÁ¡ :?: :?:


- kuruvikal - 12-30-2004

<img src='http://img90.exs.cx/img90/8136/spin0lz.jpg' border='0' alt='user posted image'>

figure skater ஒருவர் தன்னுடற் பாகங்ளின் ஸ்தானத்தை அல்லது தன்னுடலின் மீது தானே விசைகளைப் பிரயோகித்து எவ்வாறு தனது சுழற்சியை மாற்றுகிறாரோ அதுபோலத்தான் பூமியிலும் கடும் பூமி அதிர்ச்சியின் போது அகத்திணிவு இடம் மாறும் போது நிகழ்கிறது....

தொடர்ந்து இந்த இணைப்பைப் படியுங்கள் மேலதிக விளக்கம் கிடைக்கும்...ஆங்கிலத்தில் உண்டு...

http://www.newton.dep.anl.gov/askasci/env99/env275.htm

மேலும் சில இணைப்புக்கள் இங்கும் இணைக்கப்பட்டுள்ளன


- Mathan - 12-30-2004

நன்றி.


- tamilini - 12-30-2004

தகவலுக்கு நன்றிகள்.. எப்ப நடைமுறைக்கு வரும்..??


- KULAKADDAN - 12-30-2004

¿ýÈ¢


- vasisutha - 01-09-2005

அக்கினி மூலைப்பகுதி வாயு மண்டலத்தில் மாற்றம்?

இலங்கையின் தென் கிழக்கில் அக்கினி மூலைப்பகுதியில் வாயு மண்டலத்தில் மாற்றம் ஏற்படுவது தொடர்பாக காலநிலை அவதான நிலையம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென அதன் பிரதி பணிப்பாளர் எஸ்.எம்.காரியவசம் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையிலிருந்து 300 கிலோ மீட்டர் கடல் தொலைவில் இந்த மாற்றம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு அருகாமையில் உணரக்கூடியதாக இருக்குமென பிரதி பணிப்பாளர் மேலும் கூறினார்.

இதேவேளை நாட்டின் தென் கரையோரப் பகுதியிலும் அக்கினி மூலை கடற்பகுதியிலும் தற்போது புயல் காற்று வீசுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புயல் காற்று இலங்கையின் கரையோரப் பகுதிகளை தாக்குமா என்பதை உறுதிப்படுத்த முடியாதென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த நிலையை இட்டு பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

www.eelampage.com


- kavithan - 01-09-2005

நன்றி வசி