Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 361 online users.
» 0 Member(s) | 358 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,469
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,042
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  கீரிமலைக்குச் சென்ற 20 பேரைக்காணவில்லை
Posted by: ஊமை - 12-29-2004, 02:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கீரிமலைக்கு பிதிர்க்கடன் செலுத்துவதற்காகச் சென்ற 20 பேரைக் காணவில்லையெனவும் இவர்களில் 6 பேரின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.நேற்றுக்காலை 10.15 மணியளவில் பாரிய கடற் கொந்தளிப்பு ஏற்பட்டவேளை சேந்தாங்குளம் சந்தி வரை சுமார் இரண்டு பனை அளவு உயரத்திற்கு நீர் அள்ளி வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர்களே பிதிர்க்கடன் செலுத்து வதற்காக சென்றதாகவும் இவர்களில் பிரதீபன் ஜெயநாதன் ரவீந்திரன் பிரதீப் ராமச்சந்திரன் பரமநாதன் ராம்குமார் மனோகரன் பிரதீபன் தயாபரன் காங்கேயன் யசிதரன் தர்சன் நிசாந்தன் சிந்துஜன் பிரகலாதன் அற்புததேவன் (மாயவன்) மற்றும் அவருடைய சகோதரனும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை மீட்பதற்காக கடற் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Print this item

  த.வி.புலிகளின் தொலைபேசி செய்தி தொகுப்பிலிருந்து......
Posted by: ஊமை - 12-29-2004, 02:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கடல்கொந்தளிப்பு காரணமாக தாயக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புக்கள் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார் என அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
சகல வளங்களையும் பயன்படுத்தி மக்களை மீட்டு பாதுகாக்குமாறு தலைவர் சகல துறைசார்ந்த தளபதிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான உதவிகளை உடனுக்குடன் செய்ய தாயகத்தில் உள்ள எமது உறவுகளும் புலம் பெயர்ந்து நாடுகளில் வாழும் உறவுகளும் வழங்கிவரும் ஒத்தாசைகள் பெரும் உதவியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடாக வழங்குமாறு அரசியல்துறைப் பொறுப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கடல் பூகம்பத்தில் தமிழர் தாயகத்தில் இதுவரை 9852 பேர் பலியாகியுள்ளனர். 9771 காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் நடந்து 60 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் காணாமல் போனோர் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு அறவேயற்ற நிலையே மேற்படி மாவட்டங்களில் இன்றும் நேற்றும் காணப்பட்டது.

எனவே காணாமல் போனோரும் மரணமடைந்ததாகவே கருதப்பட வேண்டிய நிலையே தற்போதுள்ளது. அதன் பிரகாரம் தமிழீழப் பிரதேசத்தில் இவ் இயற்கை அனர்த்தத்தால் பலியானவர்கள் தொகை 19623 ஆகும். இறுதிக் கணக்கெடுப்பு முடிவடையும் போது இத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழீழ நேரப்படி இரவு 8 மணிக்கு கிடைக்கப்பெற்ற நிலவரப்படி இறந்தவர்கள் விபரம் வருமாறு: அம்பாறை 5ää350. மட்டக்களப்பு 1504. முல்லைத்தீவு 983. திருகோணமலை 844. யாழ்ப்பாணம் (வடமராட்சி கிழக்கு) 1171. கிளிநொச்சி 844. மேற்படி மாவட்டங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது..

காணமல் போயுள்ளவர்களின் விபரம் வருமாறு: அம்பாறை 6350. முல்லைத்தீவு 2750. மட்டக்களப்பு 612. யாழ்ப்பாணம் 59. திருகோணமலை கிளிநொச்சி வவுனியா மாவட்டப் புள்ளவிபரம் இன்னமும் கிடைக்கவில்லை.

காயமடைந்தவர்கள் விபரம் வருமாறு: முல்லைத்தீவு 1386யாழ்ப்பாணம் 489 கிளிநொச்சி 95 வவுனியா 104. மட்டக்களப்பு அம்பாறை திருக்கோணமலை மாவட்டங்களின் விபரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இடம்பெயர்ந்தவர்களின் விபரம்: மட்டக்களப்பு மாவட்டம் 53649 பேர்கள் முல்லைத்தீவு 25255; பேர்கள் திருகோணமலை 18910 பேர்கள் யாழ்ப்பாணம. 22383; பேர்கள் அம்பாறையின் புள்ளிவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நலன்புரி நிலையங்கள்: மட்டக்களப்பு 94 திருக்கோணமலை 66 முல்லைத்தீவு 14 யாழ்ப்பாணம் 47 அம்பாறை மாவட்ட விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை..

தமிழர் தாயகத்தில் இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ் ஈழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் சிறப்புச் செயலணிக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

இந்தச் செயலணிக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று தமிழ் ஈழ அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் தங்கன் தலைமையில் நடைபெற்றது.
வடமராட்சி கிழக்குää தாளையடியில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் மன்னார் கிளிநொச்சி யாழ்ப்பாண அரசாங்கம் அதிபர்களின் பிரதிநிதிகளும் யுனிசெவ் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம்ää அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் மகளிர் அணித் தலைவர் தமிழினி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி மங்களேஷ் தமிழ் ஈழ பொருண்மியத் துறைப் பொறுப்பாளர் ஜெய் மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கிடைக்கப் பெறும் உதவிகளை உரியவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய பணி என்று கூட்டத்தில் உரையாற்றிய தங்கன் தெரிவித்தார். இதேவேளை பேரழிவில் சிக்கிய எமது தாயகத்தை மீளக்கட்டி எழுப்புவதற்காக புலம்பெயாந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் ரெஜி அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ää வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு பார ஊர்தி மூலமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை சிங்களப் பேரினவாதிகள் குழு ஒன்று சிங்களப் பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று ஹபரணையில் இடம்பெற்றிருக்கிறது.

ஹபரணைச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடாக காவல் துறை உயர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டதை அடுத்து குறிப்பிட்ட நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஹபரணைச் சந்தியில் காத்திருந்த குழுவினர் காவல் துறையினரின் உதவியுடனேயேஇந்த முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று நிவாரணப் பொருட்களுடன் சென்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இயற்கையின் பேரனத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் தொடர்பான விபரங்களை அறிவதற்கான தொலைபேசி இலக்கங்கள் கிடைத்திருக்கின்றன.
0094212285056 - 4212285714என்ற இலக்கங்களில் காலை 8 மணி தொடக்கம் மலை 6.00 மணி வரையும் 0094212285725 இந்த இலக்கத்தில் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கான தொடர்பு இலக்கங்கள் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.

Print this item

  உலக வரை படத்தையே பூமி அதிர்ச்சி மாற்றியது !
Posted by: ஊமை - 12-29-2004, 01:58 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூமி அதிர்ச்சி உலக வரை படத்தையே மாற்றியது. பல தீவுகள் 20 மீட்டர் தூரம் இடம் பெயர்ந்தன. பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது பூமி உருண்டை தனது சுற்றுப்பாதையில் தள்ளாடியது என்று அமெரிக்க விஞ்ஞானி திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது அல்லவா? அது மீட்டர் அளவுக்கு கோலில் ஏறதாழ 9 இருந்தது. இது 1964-க்கு பிறகு உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய பூமி அதிர்ச்சி ஆகும்.

இந்த பூமி அதிர்ச்சியால் ஏற்பட்ட சுனாமி கடல் அலைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அமெரிக்க புவியல்துறையை சேர்ந்த விஞ்ஞானி கென் ஹட்நட் கூறியதாவது

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட பூமி அதிர்ச்சி சக்தி வாய்ந்தது. அது தனது அச்சில் சுற்றும் பூமி உருண்டையையே தள்ளாட வைத்தது. பிராந்திய வரை படங்களையே மாற்றி விட்டது.

அந்த பூமி அதிர்ச்சி பல தீவுகளை 20 மீட்டர் அளவுக்கு இடம் மாற்றி இருக்கலாம். அதன் மூலம் உலக வரை படத்தையே மாற்றி இருக்கிறது. சுமத்ராவின் தென்மேற்கு கரையில் இருந்த பல சிறுதீவுகள் தென்மேற்காக 20 மீட்டர் தூரம் நகர்ந்து இருக்கலாம். இது பெரிய விலகல் ஆகும்.

இந்தோனேசியாவின் வட மேற்கு விளிம்பு தென்மேற்காக 36 மீட்டர் வரை நகர்ந்து இருக்கும். கடலுக்கு அடியில் இருந்த 2 பகுதிகளும் உரசிக்கொண்ட தால் ஏற்பட்ட சக்தி தனது அச்சில் சுற்றிக்கொண்டு இருந்த பூமியை தள்ளாட செய்து இருக்கிறது. அப்போது பூமியின் அசைவை நாம் கவனித்து இருக்கலாம்.

பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது வெளியான பெரும் சக்தியும் திடீரென்று ஏற்பட்ட எடை வித்தியாசமும் பூமியை அதன் சுற்றுவட்டபாதையி;ல் தள்ளாடச் செய்து இருக்கும்.

இவ்வாறு கூறினார்.

ரஷிய பூமி அதிர்ச்சி ஆராய்ச்சி மைய நிபுணர் கோல் டன் கொல்ரோடா கூறுகையில் பூமி அதிர்ச்சியின் போது சுமத்ரா தீவு கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்து இருக்கலாம். பர்மா பீடபூமியைவிட இந்திய பீடபூமி கீழே இறங்கி இருக்கலாம். பூமி அதிர்ச்சியின் போது தீவுகளின் அசைவு பக்கவாட்டில் இல்லாமல் செங்குத்தாகத்தான் இருக்கும் என்று கூறினார்.

Print this item

  கனடியத் தமிழர்களுக்கோர் அவசர அழைப்பு....!
Posted by: tamilini - 12-29-2004, 12:11 AM - Forum: புலம் - Replies (3)

கனடியத் தமிழர்களுக்கோர் அவசர அழைப்பு.
28.12.2004 மாலை 6:00 மணிக்கு வோடன் அன்எக்கிளின்ரன்
அருகில் கனடிய அரச அதிகாரிகளுக்கும் தமிழர்களுக்குமான ஒன்று கூடல்.
ஜ புதன்கிழமைஇ 29 டிசெம்பர் 2004 ஸ ஜ பழையவன் ஸ
கனடிய அரசு வளங்கும் பேரலை இடர்பாட்டு உதவிகள் தமிழர் தாயகத்திற்கு சென்றடைவதில் ஏற்படக் கூடிய தடைகளையும் தாமதங்களையும் போக்கவும் அதேவேளை உங்கள் உறவுகளுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய இலங்கை அரசால் ஏற்படுத்தப்படும் தடைகள் தாமதங்கள் புறக்கணிப்புக்கள்; பற்றிய கருத்துக்களையும் உங்கள் சந்தேகங்களையும் அங்கு கலந்து கொள்ளும் கனடிய அரச அதிகாரிகள் முன் தெரிவிக்கும் படியும் கேட்கப்படுகிறீர்கள் மேலதிக விபரங்களுக்கு கனடாவிலுள்ள வானொலி கலையகங்களோடும் கீழ் தரும் தொலைபேசி இலக்கங்களோடும் தொடர்பு கொள்ளவும்.

1. 416 757 4288
2. 647 293 1192
3. 416 752 1524
4. 416 335 5458
நீங்கள் சமுகமளிக்க வேண்டிய முகவரி
777 வோடன் அவன்னியுää வோடன் அன் எக்கிளின்ரனுக்கு அருகில்.
நேரம் மாலை ஆறு மணியென்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி
தகவல் சிதம்பரம்

தகவல் நிதர்சனம்

Print this item

  "அறுக்கப்பட முடியாத தொப்புள்கொடி உறவு"
Posted by: Nellaiyan - 12-28-2004, 11:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

டிசெம்பர் காலை நான்கு மணியளவில் எனது வீட்டு தொலைபேசி அலறியது. என்னவோதானென்று தொலைபேசியை எடுத்தவுடன் இந்த அவலச் செய்தி கேட்டு கீழே ஓடிவந்து வானொலிகளைத் திருகியபடி இணைய மூலம் செய்தியின் உண்மையை அறிய முற்பட்டேன். வந்த முதல் செய்திகளோ மட்டு-அம்பாறை உட்பட்ட தென் தமிழீழம், இந்த அழிவு வெறி பிடித்த கடல் அரக்கனின் கொந்தளிப்பினால் அழிக்கப் பட்டிருப்பாதாகவும் பல எம்மிரத்தங்கள் கடலரக்கன் விழுங்கி விட்டாதாகவும் செய்திகள் வர வரத் தொடங்கின. என்னை அறியாமலே எனது கண்களீலிருந்து நீர்த் துளிகள் பொல பொலவென ஊத்துப்படத் தொடங்கியது. காலை முதல் வேலையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு தொடர்பு கொண்டு எனது முதல் சிறு பங்களிப்பை எனது மக்களின் துயர் துடைப்பதற்காக வழங்கினேன்.

இச்செய்தி கேட்ட நேரத்திலிருந்து இன்றுவரை நிம்மதியாக உறக்கம்வரவில்லை. இரவிரவாக நித்திரையால் திடுக்கிட்டு எழுந்து செய்திகளைக் கேட்க முற்படுவதும், தமிழ்நெற் போன்ற ஆங்கில இணையத்தளங்களில் வரும் செய்திகளை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்தி அவைச்சகத்துக்கும், உலக உணவு உதவி நிறுவனத்திற்கும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உதவி நிறுவனங்களுக்கு அனுப்புவதுமாகவும் வெளியில் வெளிக்கிடவே மனமில்லாமல் எனது வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன். இத்தனைக்கும் எனது குடும்பங்கள் அத்தனையும் புலம் பெயர் நாடுகளிலும், எனது உறவுகளோ யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடத்திலும் இருக்கிறார்கள். இதேநிலைதான் புலத்திலுள்ள எம்மவர் பலருக்கு. அப்படியிருக்க ஏன் இந்தக் கண்ணீர்? ஏன் இந்தச் சோகம்? ஏன் இந்த உணர்வு? எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? .......... ஆமாம் இது பிரிக்க முடியாத உறவு! அறுக்க முடியாத உறவு! ஈழமெனும் ஒரு தாய் பெற்றெடுத்த உறவு!

சர்வ தேசமே! ஒன்றை உணருங்கள், ஒன்றைப் புரியுங்கள், நாங்கள் உலகில் நடைபெற்ற அத்தனை அழிவுகளையும் சந்தித்து விட்டோம். இனி எந்த அழிவு வந்தாலும் சந்திப்போம். நீங்கள் எங்கள் உணர்வுகளை, வேதனைகளை, சோகங்களை புரிகிறீர்களில்லை. எங்கள் அவலக் குரல்கள் உங்கள் செவிகளுக்கு கேட்கவேயில்லை? கேட்கப் போவதுமில்லை! ஆனால் உலகின் மூலைகளில் உறங்கிக் கிடந்த ஈழத்தமிழர்கள் எல்லாம் எழத் தொடங்கி விட்டார்கள். மலையையொத்த, இரும்பையொத்த தலைமை எமக்குண்டு.ஒன்று பட்டு விட்டோம்.

Print this item

  கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி
Posted by: kavithan - 12-28-2004, 10:57 PM - Forum: புலம் - Replies (10)

<span style='font-size:30pt;line-height:100%'>
<b>கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி</b></span>


<span style='font-size:22pt;line-height:100%'>கனடாவில் பல காலமாக தழீழத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு வானொலி இச் சந்தர்ப்பத்தை தவறாக பயன் படுத்த நினைப்பதாக பலர் கூறி வருகிறார்கள். அதாவது நேற்று முன்தினம் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது வானொலியூடாக ஒரு மில்லியன் தொகையை கடல்பெருக்க நிதியாக வழங்கியதாக செய்தியை வெளியிட்டது. ஆனால் அது குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் கனடிய தமிழ் வானொலி கனடா வாழ் தமிழ் மக்களின் சார்பில் வினாவிய போது தனது கவலையையும் மனவருத்தத்தையும் தெருவித்த அவர் அது தப்பான தகவல் எனவும் தான்னிடம் அவ்வளவு நிதி இல்லை என்றும் அது கனடிய அரசால் நேற்று முந்தினம் தென்கிழக்காசியாவில் கடல் பெருக்கால் பாதிக்கபட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் அத்தோடு நேற்று மேலும் 3 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கி இருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது , இவ் நிதியானது இலங்கை அரசுக்கு அனுப்ப பட மாட்டது எனவும், அவை தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகளாக மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறினார்.


இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தப்பானவர்கள் எப்போதும் தம் பிரபல்யத்தை தான் வேண்டி நிப்பார்களே ஒழிய எம் அவலத்தை கருத்தில் கொள்ளமாட்டார்கள். எனவே தப்பானா வானொலிகளை கேட்பதையோ தப்பானவர்களிடம் உங்கள் அன்பளிப்பை செலுத்தி அது எம் உறவுகளுக்கு கிடைக்காமல் அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்துவதற்கு காரணமாக இருப்பதையோ விடுத்து. உங்கள் உதவிகளை கனடாவில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் கனடிய தமிழ் வானொலி, ரி.வி.ஜ, சி.எம்.ஆர் , போன்ற வர்களுடன் உங்கள் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் உதவிகளை வழங்குங்கள்.

www.kavithan.yarl.net</span>

Print this item

  கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை உலக ஊடகங்களுக்கு வேண்டுகோள்
Posted by: shanmuhi - 12-28-2004, 07:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை உலக ஊடகங்களுக்கு வேண்டுகோள்.
மேலதிக விபரங்களுக்கு..
http://www.tamilwebradio.com/

Print this item

  சடலங்களை மீட்பதில் கிழக்கில் அவல நிலை
Posted by: yarlmohan - 12-28-2004, 07:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடல் பெருக்கத்தினால் இப்பிரதேசம் தொடர்ந் தும் மயான பூமியாகக் காட்சியளிக்கின்றது. நேற்று திங்கட்கிழமையும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளும் மனித சடலங்களாலும் காயமடைந்த மக்களாலும் நிரம்பி வழிகின்றன.
மீட்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு கரையோரப் பிரதேசங்க ளில் நீர் தேங்கிநிற்பதால் சடலங்களை அடக் கம் செய்வதிலும் பாரிய சிரமங்கள் எதிர்நோக் கப்படுகின்றன. இதனால் சடலங்கள் மேட்டு நிலப்பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன.
கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான குடும்பங்களில் எவருமே உயிர் தப்பாமல் அனைவருமே இயற்கையின் சீற்றத்திற்குப் பலியாகியுள்ளனர். இதனால் வைத்தியசாலைகளில் உள்ள அவர்களது சட லங்களைப் பொறுப்பேற்க எவருமே இல்லாத நிலைகாணப்படுகின்றது. இதனால் அநாதர வான நிலையில் நூற்றுக்கணக்கான சடலங் கள் காணப்படுகின்றன.
பல பிரதேசங்களில் தொடர்ந்தும் சடலங் கள் மீட்கப்பட்டு வருகின்றன.மேலும் சில இடங்களில் சடலங்கள் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல பிரதேசங்களில் மீட் புப்பணிகளை மேற்கொள்ளமுடியாத அளவுக் குத் தொடர்ந்தும் கடல் நீர் தேங்கிநிற்கின்றது. மீட்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே நீர்மட்டம் உயர்ந்து செல்வதாகவும் மீட்புப்பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்க ளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு வைத்தியர்களுக்கும், சுகாதாரப்பணியாளர் களுக்கும் பற்றாக்குறை நிலவுவதால் பணி யில் இருப்போர் திண்டாடுவதையும் அவதா னிக்க முடிகின்றது.
பல இடங்களிலும் வழமையான அரசு நிர் வாகம் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. அனைத்து அதிகாரிகளும், தமது அலுவலகக் கடமைகளை இடை நிறுத்திவிட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்ற னர்.
கிழக்கில் பாதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த தமிழ் - முஸ்லிம் இளைஞர்கள் நிறு வன ரீதியாக ஒன்று சேர்ந்து நிவாரணப் பொருள் களைத் தத்தமது பகுதிகளில் சேகரித்து பாதிக் கப்பட்ட மக்களுக்குக் கொண்டுசென்று வழங்கி வருகின்றனர்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளதால் மக்கள் மிகுந்த சிரமங் களை எதிர்நோக்கி வருகின்றனர். பெரும்பா லான பிரதேசங்களில் மின்சாரம், தொலை பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவ் வாறான பிரதேச மக்களுக்கு வெளியிடங் களுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக் கப்பட்டுள்ளன.
பல கரையோரப் பிரதேசங்களில் வீதிகளில் மரங்களும், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கம்பங்களும் சாய்ந்து வீழ்ந்து காணப்படுவ தால் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத் துண்டிக்கப் படுவதால் பொருள்களுக்கு அன்றாடம் விலை அதிகரித்துக்கொண்டு செல்கிறது. எரிபொருள் களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களி லும் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
கடல் நீர் வடிவிலே எமன் வருவதால் கடலுக்கு மீனவர்கள் எவரும் செல்லவில்லை. இதனால் மீனுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவு கின்றது. இறைச்சிக்கடைகளில் நீண்ட வரிசை காணப்படுகின்றது.
பெரும்பாலும் மீனவக் குடும்பங்களே இந்த அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். பொது அமைப்புக்கள் சமைத்த உணவுப் பார்சல்களையும் உடுபுடைவைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
வடக்கு-கிழக்கு மாகாண கரையோரப் பிரதேச வீடுகளில் மரண ஓலம் ஓங்கி ஒலிக் கின்றது. உடன்பிறப்புக்களையும் தாய்தந்தை யர்களையும் பெற்ற பிள்ளைகளையும் இயற் கையின் சீற்றத்திற்குப் பலிகொடுத்த சோகம் தாழாது மக்கள் கதறி அழுத வண்ணமே உள்ளனர். பெரும்பாலான வீடுகள் மரண வீடுகளாகவே உள்ளன.
பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், அரச அலுவலர்கள் அனைவரினதும் விடு முறைகள் யாவும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதால் அனைத்து உத்தியோகத்தர்களும் மக்களுக் கான நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் ஈடு பட்டு வருகின்றனர்.
இயற்கையின் சீற்றம் இன, மத, குல, வேறு பாடுகள் எதுவும் இன்றி அனைவரையுமே அடித்துச் சென்றுள்தால் நிவாரணப் பணிகளி லும் ஆங்காங்கே இன ஐக்கியத்தைக் காணக் கூடியதாக உள்ளது

உதயன்

Print this item

  உறவினர்களைத் தேடும் இணயத்தளம்
Posted by: Vaanampaadi - 12-28-2004, 06:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

Search web site for relatives, friends and visitors.
LAcNet, December 28, 2004. Together with LK Domain Registry, Department of Computer Science & Engineering - University of Moratuwa, LAcNet has established a new website findthem.lk where people can register to request information about loved ones missing during the Tsunami disater in Sri Lanka.
Please kindly note that process of searching information of your friends/relatives might take couple of days.

Please follow the link to go to findthem.lk.


[url]http://findthem.lk
[/url]

Print this item

  ஒளிப்பதிவுகள்..
Posted by: hari - 12-28-2004, 03:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

Video clip from the Tsunami disaster

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/battic_rm_vid_003.gif' border='0' alt='user posted image'>
Windows Media format (wmv) Real Media format
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/12/battic_vid_rm_002.jpg' border='0' alt='user posted image'>
Windows Media format

Print this item