Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 424 online users.
» 0 Member(s) | 422 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,080
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  இதயம் தாங்குதில்லையே...
Posted by: Nitharsan - 12-28-2004, 08:00 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

[b]<span style='color:red'>இதயம் தாங்குதில்லையே..
<i>[size=14]அழிவு இப்படியும் வருமா?
இந்தக் கடல் நீர் கூட
இத்தனை ஆயிரம் பேரை திண்னுமா?
உன்னையே அன்னையாய்
உன்னையே தெய்வமாய்
உலவிய உறவுகளை
உன் கோரப் பசிக்கு இரையாக்கியவளே
இதயங்கள் எங்கும் சோகம்
திசை எல்லாம் அழுகையின் குரல்
பொத்துவில் முதல் பொலி கண்டி வரை
போன உயிர்கள் எத்தனை எத்தனை
யுத்தம் தந்த அழிவு
சத்தம் இன்றி நின்று விட
சத்தம் இன்றி நீ சந்ததி அழித்து விட்டாய்
உறவை இழந்த உறவின் குரல்
உலகை விட்டு பிரிந்த
ஆன்மாவின் ஏக்கக் குரல்
கேட்க வில்லையா? உனக்கு
முற்றத்தில் விளையாடிய குழந்தை
எண்ணவில்லை தான் மரணிப்பேன் என்று
அதன் எதிர் கால கனவுகள் எங்கே?
அதன் நினைவகள் எங்கே?
சாவு வரும் எனறு கனவு கண்டிருக்குமா?
அந்தப் பிஞ்சு
அழுவதற்க்கு கூட அவ காசமில்லை
அடித்து சென்று விட்டாய்-இன்று
அழுவதற்க்கு யாருமில்லை
குப்பைக்குள் குப்பையானார்
மண்ணுக்குள் மண்ணானார்
கடலுக்குள் மீனுக்கு இரையானார்
அறிக்கை விடுவோருக்கு தெரியாது
இதன் வேதணை...
ஆறுதல் சொல்வோருக்கு புரியாது
இதன் சோகம்
அழிந்தது அழிந்தது தான்
ஆறுதல் அதற்க்கு பரிகாரமாகாது
உயிருக்கு நிகர் ஏதுமுண்டோ
இறுதி வரை உங்களுடன் நாமில்லை
இழப்புக்களும் கணக்கில்லை
உயிருடன் மீண்ட உறவுகளுக்காய்
உலகத்தமிழ் உறவுகள் நாம்
அணி திரள்வோம்..
இது காலத்தின் கட்டாயம்
இயற்கையின் நிர்ப்பந்தம்
உங்களை எண்ணி
கண்கலங்கி நிற்க்கிறோம்
உலக தமிழர் நாம்
உரிமை பறிப்பை உறுதியாய்
எதிர் கொண்டோம்
இயற்கையின் அழிப்பு தனை
இதயம் தாங்கு தில்லை
இனி யொரு பொழுதில் இப்படியோர்
அழிவு வேண்டாம் எமக்கு இப் பூமியிலே...</span></i>
<img src='http://host155.ipowerweb.com/~tamilnaa/photos/mullai20041227/K%20(31).jpg' border='0' alt='user posted image'>
[size=18]நேசமுடன் நிதர்சன்

Print this item

  சுனாமி அலைகள்
Posted by: vasisutha - 12-28-2004, 05:52 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (5)

<b>500 மைல் வேகத்தில் வரும் புதிய "சுனாமி அலைகள்": கரையை நெருங்கும் போதுதான் `திடீர்' கைவரிசையை காட்டும்</b>

மக்களுக்கு இது ஒரு புது சோக அனுபவம்!

இதற்கு முன்பு இப்படி ஒரு கொடூரத்தை கடலோர மக்கள் அனுபவித்தது இல்லை. இப்படி ஒரு துயரம் ஏற்படும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டியதில்லை. ஜாலியாக இருக்கலாம் என்று ஒருவித சுகத்துடன் இருந்தவர்களை கடல் தண்ணீர் அப்படியே "கபளீகரம்" செய்து விட்டது. கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த துயரம் நடந்து முடிந்து விட்டது.

"கடல் மாதாவுக்கு ஏன் இந்த திடீர் கோபம்?" என்று மக்கள் அலறித்துடிக்கின்றனர். இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லையே... என்று ஓலமிடும் பெண்கள் முன்பு "இது சுனாமி" என்ற புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அலைகளின் தாக்குதல் பற்றி நம்ம நாட்டுக்காரர்களுக்கு இப்போதுதான் முதல் முறையாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு சுனாமி அலைகள் நம்ம நாட்டுப்பக்கம் வந்ததே இல்லை.

ஜப்பான், அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய 3 நாடு கள்தான் உலகில் அடிக்கடி சுனாமி அலைகளால் பாதிக்கப்படும் நாடுகளாகும். எனவேதான் இந்த கொடூர அலைகளுக்கு "சுனாமி" என்ற ஜப்பானிய மொழியில் பெயரிடப்பட்டது.

சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று ஜப்பான் மொழியில் அர்த்தமாகும். அதாவது கடலோர பகுதிகளை திடீர் தாக்குதல் நடத்தி அழிக்கும் அலைகள் என்று ஜப்பான் நாட்டுக்காரர்கள் சொல்கிறார்கள்.

சுனாமி அலைகள் கடலில் எப்படி தோன்றுகின்றன. தெரியுமா?

பூமியில் 70 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். அந்த 70 சதவீத நிலப்பரப்பில்தான் நிறைய எரிமலைகள் உள்ளன. அவை அடிக்கடி வெடித்துச் சிதறுகின்றன.

அது போல கடலுக்கு அடியில் உள்ள 70 சதவீத நிலப்பரப்பில்தான் நிலநடுக்கம் தினம் தினம் நடக்கின்றன.

எரிமலை வெடிப்பு மற்றும் சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது, அவற்றின் அதிர்வுகள் கடல் தண்ணீரில் எதிரொலிக்கும்.

சாதாரண தண்ணீரில் நீங்கள் `கல்' வீசினாலே அந்த தண்ணீரில் அதிர்வு ஏற்பட்டு வளையம், வளையமாக அலைகள் ஏற்படுவதை பார்த்து இருப்பீர்கள். அந்த அதிர்வு வளையங்கள் கரைவரை போவதைப் பார்த்து இருப்பீர்கள்.

நடுக்கடலில் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வு அலைகளும் இந்த மாதிரிதான் வளையமாக கிளம்பி கரையை நோக்கி பாய்ந்து வரும். இதைத்தான் சுனாமி அலை என்று சொல்கிறார்கள்.

சுனாமி அலைகள் வழக்கமாக கடலில் அடிக்கும் அலைகள் போல சாதாரண அலைகள் அல்ல. அவை மிக மிக சக்தி வாய்ந்தவை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதிர்வுகளால் இந்த அலைகள் கிளம்பும் கடல்பகுதியில் இவை வரும் போது சுத்தமாக எதுவும் தெரியாது. படகுகளில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை கூட இந்த அலைகள் எதுவும் செய்யாது. சாதாரணமாக ஒரு குலுக்கு குலுக்கி விட்டு கடந்து வந்து விடும்.

<b>கரையை நெருங்க நெருங்க சுனாமி அலைகளின் சுயரூபம் தெரியவரும். கரையை நெருங்க சில கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது, சுனாமி அலைகள் சூடுபிடித்து வேகம் எடுக்கத் தொடங்கும்.</b>

அதாவது குறிப்பிட்ட எல்லை வந்ததும் சுனாமி அலைகள் 500 மைல் வேகத்தை எட்டிப்பிடித்து விடும். "ஓ... ஓ... ஓ..." என்ற இரைச்சல் காதை கிழிக்கத் தொடங்கும்.

கரையை நெருங்க நெருங்க சுனாமி அலைகளின் ஆக்ரோஷம் வெறிபிடித்தது போல மாறும். ஒவ்வொரு சுனாமி அலையும் 150 மீட்டர் தூரத்துக்கு வலுவாக மாறும்.

500 மைல் வேகத்தில் வரும் சுனாமி அலைகள் கரைக்கு வந்ததும் அப்படியே எம்பி எழுந்து உயரத்தில் சுழலும். குறைந்த பட்சம் 50 அடி முதல் 100 அடி உயரத்துக்கு கடல் தண்ணீர் கொந்தளித்து எழும்பும்.

பிறகு அந்த கடல் தண்ணீர் அதே 500 மைல் வேகத்துடன் கடலுக்கு வெளியே கொப்பளிக்கும். ஏற்கனவே உயரே எழும்பி சுழன்றுள்ள கடல் தண்ணீர் வேகத்துடன் வெளியில் வரும்.

இந்த கொந்தளிப்பு 3 மைல் தூரம் வரை ஊருக்குள் புகுந்து விடும். அந்த சமயத்தில் எதிர் கொள்ளும் மனித உயிர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் சுனாமி அலை துவம்சம் செய்து விடும்.

<b>கடற்கரையில் சுனாமி அலைகள் ஆக்ரோஷ துவம்சம் செய்யும்போது அதன் சக்தி அணுசக்தி வெடிப்புக்கு ஈடான விளைவுகளை கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் சுனாமி அலைகளின் எடை பல டன் கணக்கில் இருக்கும்.</b>

எனவேதான் இந்த அலைகளால் மாபெரும் கப்பல்களை கூட கவிழ்த்து விட முடிகிறது. கரையை நெருங்கும் வரை "இந்த பூனையும் பால் குடிக்குமா?" என்ற ரீதியில் ஓடி வரும் அலைகள் கரைக்கு வந்த பிறகே கொரில்லா பாணியில் திடீர் தாக்குதல் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கடற்கரை ஓரம் நின்று பார்க்கும்போது சுனாமி அலை வருகிறதா இல்லையா என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாது. எனவேதான் சுனாமி அலைகளை பல நாடுகளில் "சதிகார கொலை கும்பல்" என்று ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

உலகில் சுனாமி அலைகள் தோன்றுவது அரிதாக நடக்கும் செயலாகும். பெரும்பாலும் இவை பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் தோன்றுவது உண்டு. நமது நாட்டு கடலில் சுனாமி அலைகள் ஏற்பட்டதே இல்லை.

சுனாமி அலைகளை கண்டு பிடிக்க பசிபில் பெருங்கடல் பகுதியில் நவீன கருவிகளை அமெரிக்கா நிறுவி உள்ளது. எனவே சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் தோன் றும் போதெல்லாம் அமெரிக்கா தன் செயற்கை கோள்கள் மூலம் அதை கண்டுபிடித்து விடுகிறது.

சுனாமி அலைகள் கரைக்கு எப்போது வரும் என்று அமெரிக்கா துல்லியமாக ஆராய்ந்து தன் மக்களை உஷார்படுத்தி வெளியேற்றி விடுகிறது. அதுவும் 10 ஆண்டுக்கு ஒரு தடவைதான் இத்தகைய அபாயம் ஏற்படும்.

ஆனால் இந்திய பெருங்கடலில் தோன்றி உள்ள சுனாமி அலைகளை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்ய நாம் இதுவரை எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. எனவேதான் சுனாமி அலைகளின் முதல் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை நமக்கு தெரியாமலே போய் விட்டது.

முதல் தாக்குதல் நடந்த பிறகே இந்திய பெருங்கடலில் தோன்றிய சுனாமி அலைகள் பற்றி உலக ஆய்வு நிறுவனங்கள் பார்வையை திருப்பி உள்ளன. இதன் மூலம் இன்று காலை சுமித்திரா தீவு அருகில் பல தடவை அதிர்வு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சுனாமி அலைகள் படையெடுத்து வந்த வண்ணம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சுனாமி அலைகள் ஓரிரு நாளில் எந்த நேரத்திலும் நமது கரையை தாக்கலாம் என்ற அபாயத்தில் நாம் இருக்கிறோம்.

malaimalar.com

Print this item

  Asian Disaster Death Toll Passes 22,000
Posted by: vasisutha - 12-28-2004, 05:12 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<b>More than 12,000 people died in Sri Lanka,
nearly 5,000 in Indonesia,
and 4,000 in India. </b>

The International Red Cross, which reported <b>23,700</b>deaths, said it was concerned that diseases like malaria and cholera could add to the toll.



In this aerial view taken Monday, Dec. 27, 2004 shows the tsunami-stricken areas near the coastal outskirts of Banda Aceh, capital city of Indonesia's Aceh province are still waterlogged
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.xint10112271700.indonesia_quake_tidal_wave_xint101.jpg' border='0' alt='user posted image'>___________________________________

The death toll in a tsunami that slammed into coasts from India to Indonesia topped 21,000 on December 27, 2004 as rescuers scoured the sea for missing tourists and soldiers raced to recover bodies amid growing fears of disease. (Reuters Graphic)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20041227/asia_quake_toll_map.gif' border='0' alt='user posted image'>
_________________________________

Toni Holzer, Petra Schmidt, Vinzenz Mihelak and Helmut Schmidt, from left to right, members of the Austrian Red Cross prepare to board a plane to Colombo, Sri Lanka, at Vienna Airport, Monday, Dec. 27, 2004. The death toll from tidal waves that struck nine Indian Ocean countries has risen to 23,700, the international Red Cross said Monday
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.vie10912271922.austria_asia_quake_vie109.jpg' border='0' alt='user posted image'>

_____________________________________

Sri Lankan armed force personel guard tsunami-destroyed area from looters in downtown Galle, southern Sri Lanka

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/cpress/20041227/capt.w122743a.jpg' border='0' alt='user posted image'>
_____________________________________
Indian tourists wait in a queue to get inside the Port Blair airport in Port Blair, capital of India's southeastern Andaman and Nicobar Islands

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.xms10612271857.india_quake_tidal_wave_xms106.jpg' border='0' alt='user posted image'>
_____________________________________

Sri Lankan civilians stand in a line to buy rice a day after a tidal wave hit their home town of Galle in southern Sri Lanka, Monday, Dec. 27, 2004. The death toll from the massive tidal waves that struck Sri Lankas coastline leapt to more than 12,000 on Monday as thousands of soldiers and familieas kept up the search for bodies

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.xed11112271838.sri_lanka_quake_tidal_wave_xed111.jpg' border='0' alt='user posted image'>
____________________________________
A Sri Lankan policeman stands next to a damaged house in downtown of Galle, Sri Lanka
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.xvt11112271838.sri_lanka_quake_tidal_wave_xvt111.jpg' border='0' alt='user posted image'>
____________________________________
Wounded Japanese tourists arrive to identify a dead body at main hospital in Colombo, Sri Lanka
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20041227/i/r2731561857.jpg' border='0' alt='user posted image'>
______________________________________

Sri Lankan civilians mill around damaged vehicles amongst debris left after a tidal wave hit the town of Galle early Sunday, in southern Sri Lanka
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.xed11612271810.sri_lanka_quake_tidal_wave_xed116.jpg' border='0' alt='user posted image'>
_____________________________________

Sri Lankan civilians make their way through heavy debris that was left littering the streets after a tidal wave struck the town of Galle early Sunday in southern Sri Lanka
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20041227/capt.xed11512271757.sri_lanka_quake_tidal_wave_xed115.jpg' border='0' alt='user posted image'>
_____________________________________

Members of Pakistan's test cricket team pay their respects to people killed by tsunamis around the Indian Ocean, during a moment of silence before the third day's play at the second test in Melbourne December 28, 2004.

<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20041228/i/r278488293.jpg' border='0' alt='user posted image'>
____________________________________

An Indian man sits atop the ruins of his house which was destroyed in a tsunami in Cuddalore, about 100 miles south of the southern Indian city of Madras
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20041228/mdf804839.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்காக தகவல்கள்
Posted by: yarlmohan - 12-28-2004, 03:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

பேரழிவில் இருந்து தப்பியிருப்போர் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கு தரும் தகவல் இது

http://www.yarl.com/newsarticles.php?articleId=27

Print this item

  கருப்பு ஞாயிறு எழுப்பும் பெரிய பெரிய கேள்விகள்
Posted by: vasisutha - 12-28-2004, 03:08 AM - Forum: புலம் - No Replies

<b>சன் செய்தியில் பேட்டியளித்த வானிலை ஆராய்ச்சி அதிகாரி திரு.ராவ் சிரித்த முகத்துடன் நிறைய செய்திகளைச் சொன்னார். அவர் ஒரு விஞ்ஞானி. அனைத்தும் அவருக்குத் தகவல்கள்தான். அலைகள் தொட முடியாத உயரத்தில் இருந்த அவர், அதிர்ச்சி ஏற்பட்டால் சுனாமி வருவது ஆர்டர் கொடுத்தால் டீ வருவது போன்ற ஒரு சாதரண நிகழ்வு என்பதை விளக்கினார். அப்படியானால், இதுபோன்ற மகானுபாவர்கள் அந்தமானில் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பின் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பல்விளக்கி குளித்து, மனைவியின் கையில் காப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களா?</b>

முழுமையான கட்டுரை Arrow Click..

Print this item

  &quot;புலத்திலுள்ள ஈழத்தமிழ் அமைப்புகளுக்கு .....&quot;
Posted by: Nellaiyan - 12-27-2004, 11:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் எமது தாயகப்பூமியே பாரியளவு உயிர், உடைமை, பொருட்சேதங்களை அடைந்துள்ளது. ஏறக்குறைய ஆறாயிரத்திற்கு அதிகமான எம்மிரத்தங்கள் கடலுக்குப் பலியாகியுள்ளனர், பல கரையோரக் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன, இன்னும் இறந்த உடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இறந்தோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கை சிங்கள ஏகாதிபத்திய அரசால் திட்டமிட்ட முறையில் ஈழப் பகுதிகளான வடக்குக் கிழக்கின் அழிவுகள் உலகிற்கு மறைக்கப்படுகிறது. இலங்கையில் அழிவுகளைக் காட்டிக் கொண்டிருக்கும் பி.பி.சி, சி.என்.என்,.... போன்ற உலக ஊடகங்கள் கூட வடக்குக் கிழக்கின் அழிவுகளை காட்டாமல் சிங்களப் பகுதிகளில் இடம்பெற்ற செய்திகளையே காட்டிய வண்ணம் உள்ளன. அவர்களின் செய்தியாளர்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்களோ? அண்றி வடக்குக் கிழக்கின் அழிவுச் செய்திகள் அவர்களுக்கும் மறைக்கப்படுகிறதோ? தெரியவில்லை. இந்நிலை தொடருவதானது உலக நாடுகளால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மிகப் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சென்றடைவதை தடுப்பதற்காகவேயென உணரக்கூடியதாகவுள்ளது. புலம் பெயர்ந்த மக்களாகிய நாம் இந்த இலங்கை அரசின் அநாகரிக செயல்களை கால நேரத்திற்கு சர்வதேச சமூகத்திற்கும், அரசுகளுக்கும் எடுத்துரைக்கா விட்டால் இவ்வுதவிகள் தமிழர் பகுதிகளுக்கு சொற்பமாக செல்வது கூட சிங்கள அரசால் முற்றாக தடுக்கப்பட்டுவிடும்.

நாம் எமது மக்களின் அவசர உயிர் காப்பு நிவாரணங்களைச் சேகரிப்பதில் ஒருபுறத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அதேவேளை உலக நாடுகளால் நிவாரணங்களுக்காக இலங்கை அரசிற்கு கொடுக்கப்பட்ட, கொடுக்கப்படப்போகும் உதவிகள் எமது மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்பதற்காக ...
1) நாமிருக்கும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் முன் அடையாள போரட்டங்களை நடாத்தலாம்.
2) இந்த போராட்டத்திற்காக கால அவகாசம் கொடுத்து எமது அறிக்கையொன்றை வெளியிடலாம்.
3) இந்தப் போராட்டம் மூலம் எமது பல பிரட்சனைகள் சர்வதேச சமூகத்தின் கண்களுக்குத் தெரிய வரலாம்.

தயவு செய்து எனது இந்த கோரிக்கையை புலத்திலுள்ள தமிழர் அமைப்புகள் பரிசீலிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Print this item

  பேரலைகளால் இறந்தோர் விபரம்:
Posted by: yarlmohan - 12-27-2004, 06:11 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (1)

பேரலைகளால் இறந்தோர் சிலரது விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கீழுள்ள முகவரியில் விபரங்கள் உள்ளன

http://www.yarl.com/newsarticles.php?articleId=26

Print this item

  ஜோதிடர்களின் எச்சரிக்கையும் சந்திரிகாவின்
Posted by: Suji - 12-27-2004, 05:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜோதிடர்கள் சந்திரிகாவை எச்சரித்ததை அடுத்தே அவர் ஒருவாரகாலம் இலண்டனில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது. சந்திரிகாவின் நம்பிக்கைக்குரிய ஒரு ஜோதிடர் சந்திரிகாவை இந்தவாரத்தில் இலங்கையில் தங்கியிருக்கவேண்டாம் பெரிய அனர்த்தம் ஏற்படும் அந்தநேரத்தில் இலங்கையில் தங்கியிருந்தால் அரசியலில் மிகவும் ஒரு இக்கட்டான நிலை உருவாகும் என எச்சரிக்கை செய்ததை அடுத்தே அவர் இலண்டன் சென்றதாக நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் எத்தகைய அவலங்களை சந்தித்தாலும் சரி தன்னுடைய அரசியல் வாழ்க்கைதான் பெரிதென நினைக்கும் அம்மணி வாழ்க.

Print this item

  &quot;ஆதங்கங்களைத் தெரிவிப்போம்&quot;
Posted by: Nellaiyan - 12-27-2004, 09:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் எமது தாயகப்பூமியே பாரியளவு உயிர், உடைமை, பொருட்சேதங்களை அடைந்துள்ளது. ஏறக்குறைய ஆறாயிரத்திற்கு அதிகமான எம்மிரத்தங்கள் கடலுக்குப் பலியாகியுள்ளனர், பல கரையோரக் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன, இன்னும் இறந்த உடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இறந்தோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கை சிங்கள ஏகாதிபத்திய அரசால் திட்டமிட்ட முறையில் ஈழப் பகுதிகளான வடக்குக் கிழக்கின் அழிவுகள் உலகிற்கு மறைக்கப்படுகிறது. இலங்கையில் அழிவுகளைக் காட்டிக் கொண்டிருக்கும் பி.பி.சி, சி.என்.என்,.... போன்ற உலக ஊடகங்கள் கூட வடக்குக் கிழக்கின் அழிவுகளை கட்டாமல் சிங்களப் பகுதிகளில் இடம்பெற்ற செய்திகளையே காட்டிய வண்ணம் உள்ளன. அவர்களின் செய்தியாளர்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்களோ? அண்றி வடக்குக் கிழக்கின் அழிவுச் செய்திகள் அவர்களுக்கும் மறைக்கப்படுகிறதோ? தெரியவில்லை. இங்கு புலம் பெயர்ந்த மக்களாகிய நாம், எமது நாடுகளிலுள்ள இப்படியான ஊடக நிறுவனங்களோடு பாரிய அளவில் தொடர்பு கொண்டு எமது ஆதங்கங்களையும், உண்மை நிலைமைகளையும் தெரித்தால் சிலவேளை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு?

இது சம்பந்தமாக பி.பி.சி நிறுவனத்தின் சர்வதேச செய்திப் பிரிவின் தொலைபேசி இலக்கம் கீழ் தரப்பட்டுள்ளது. இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு எமது தேசத்தின் உண்மை நிலைமையை அவர்களீற்கு எடுத்துரைப்போம்.

பி.பி.சி உலகச் சேவை தொலைபேசி இலக்கம்:
08700100222

Print this item

  மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்...
Posted by: thamizh.nila - 12-27-2004, 06:12 AM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

<span style='font-size:27pt;line-height:100%'><b>மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்</b>

அழிவதற்கு பிறந்தோமா - என்றும்
அழுவதற்கே பிறந்தோமா?
இன்னல்களில் இடிபாட்டே - நாம்
இறுதி கண்டுவிடுவோமா?

நடுக்கடலிற்கு போனாலும் - நாய்க்கு
நக்க தண்ணி.. - சிறுவயதில்
என்றோ காதில் விழுந்தவை அனைத்தும் - இன்று
நினைவில் வந்து தொலைக்கின்றதே

யுத்ததில் சிந்தி மீதம் இருந்த ரத்தம்
இன்று கடலோடு கடலாய்
ஊர் விட்டு ஊர் வந்தோர் - இன்று
உலகதிதை விட்டே சென்றது ஏன்?

எதை சொல்லி எம் உறவுகளை ஆற்ற?
வார்த்தைகள் மனதிலும் இல்லாது போயிற்றே
காலனவன் கொண்டானா? - இதற்கு
காலமது பதில் கூறுமா?

பிணமேடாய் கைக்குழந்தைகள்
கதறி அழும் ஆண், பெண்கள்
இதே எம் எதிர்கால தூண்கள்
கடலோடு கடலாய்

பக்கத்தில் இல்லையே
பரிவோடு உமை அணைக்க
கிட்டத்தில் இல்லையே
தோளோடு தோள் கொடுக்க

எம்மால் ஆனது எது?
சிந்திப்போம்..சற்றே சிந்திப்போம்
நாளை எமக்கிந்த நிலை வரில்????
எமை தாங்கும் தூண்களை - இன்று
நாம் தாங்குவோம்.

தமிழ்.நிலா</span>

எமை இங்கு தவிக்கவிட்டு காலனின் கோரத்தில் சிக்கி இறையடி சேர்ந்த உயிர்களுக்காய்...

Print this item