![]() |
|
சுனாமி அலைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: சுனாமி அலைகள் (/showthread.php?tid=6066) |
சுனாமி அலைகள் - vasisutha - 12-28-2004 <b>500 மைல் வேகத்தில் வரும் புதிய "சுனாமி அலைகள்": கரையை நெருங்கும் போதுதான் `திடீர்' கைவரிசையை காட்டும்</b> மக்களுக்கு இது ஒரு புது சோக அனுபவம்! இதற்கு முன்பு இப்படி ஒரு கொடூரத்தை கடலோர மக்கள் அனுபவித்தது இல்லை. இப்படி ஒரு துயரம் ஏற்படும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டியதில்லை. ஜாலியாக இருக்கலாம் என்று ஒருவித சுகத்துடன் இருந்தவர்களை கடல் தண்ணீர் அப்படியே "கபளீகரம்" செய்து விட்டது. கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த துயரம் நடந்து முடிந்து விட்டது. "கடல் மாதாவுக்கு ஏன் இந்த திடீர் கோபம்?" என்று மக்கள் அலறித்துடிக்கின்றனர். இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லையே... என்று ஓலமிடும் பெண்கள் முன்பு "இது சுனாமி" என்ற புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகளின் தாக்குதல் பற்றி நம்ம நாட்டுக்காரர்களுக்கு இப்போதுதான் முதல் முறையாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு சுனாமி அலைகள் நம்ம நாட்டுப்பக்கம் வந்ததே இல்லை. ஜப்பான், அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய 3 நாடு கள்தான் உலகில் அடிக்கடி சுனாமி அலைகளால் பாதிக்கப்படும் நாடுகளாகும். எனவேதான் இந்த கொடூர அலைகளுக்கு "சுனாமி" என்ற ஜப்பானிய மொழியில் பெயரிடப்பட்டது. சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று ஜப்பான் மொழியில் அர்த்தமாகும். அதாவது கடலோர பகுதிகளை திடீர் தாக்குதல் நடத்தி அழிக்கும் அலைகள் என்று ஜப்பான் நாட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். சுனாமி அலைகள் கடலில் எப்படி தோன்றுகின்றன. தெரியுமா? பூமியில் 70 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். அந்த 70 சதவீத நிலப்பரப்பில்தான் நிறைய எரிமலைகள் உள்ளன. அவை அடிக்கடி வெடித்துச் சிதறுகின்றன. அது போல கடலுக்கு அடியில் உள்ள 70 சதவீத நிலப்பரப்பில்தான் நிலநடுக்கம் தினம் தினம் நடக்கின்றன. எரிமலை வெடிப்பு மற்றும் சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது, அவற்றின் அதிர்வுகள் கடல் தண்ணீரில் எதிரொலிக்கும். சாதாரண தண்ணீரில் நீங்கள் `கல்' வீசினாலே அந்த தண்ணீரில் அதிர்வு ஏற்பட்டு வளையம், வளையமாக அலைகள் ஏற்படுவதை பார்த்து இருப்பீர்கள். அந்த அதிர்வு வளையங்கள் கரைவரை போவதைப் பார்த்து இருப்பீர்கள். நடுக்கடலில் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வு அலைகளும் இந்த மாதிரிதான் வளையமாக கிளம்பி கரையை நோக்கி பாய்ந்து வரும். இதைத்தான் சுனாமி அலை என்று சொல்கிறார்கள். சுனாமி அலைகள் வழக்கமாக கடலில் அடிக்கும் அலைகள் போல சாதாரண அலைகள் அல்ல. அவை மிக மிக சக்தி வாய்ந்தவை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதிர்வுகளால் இந்த அலைகள் கிளம்பும் கடல்பகுதியில் இவை வரும் போது சுத்தமாக எதுவும் தெரியாது. படகுகளில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை கூட இந்த அலைகள் எதுவும் செய்யாது. சாதாரணமாக ஒரு குலுக்கு குலுக்கி விட்டு கடந்து வந்து விடும். <b>கரையை நெருங்க நெருங்க சுனாமி அலைகளின் சுயரூபம் தெரியவரும். கரையை நெருங்க சில கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது, சுனாமி அலைகள் சூடுபிடித்து வேகம் எடுக்கத் தொடங்கும்.</b> அதாவது குறிப்பிட்ட எல்லை வந்ததும் சுனாமி அலைகள் 500 மைல் வேகத்தை எட்டிப்பிடித்து விடும். "ஓ... ஓ... ஓ..." என்ற இரைச்சல் காதை கிழிக்கத் தொடங்கும். கரையை நெருங்க நெருங்க சுனாமி அலைகளின் ஆக்ரோஷம் வெறிபிடித்தது போல மாறும். ஒவ்வொரு சுனாமி அலையும் 150 மீட்டர் தூரத்துக்கு வலுவாக மாறும். 500 மைல் வேகத்தில் வரும் சுனாமி அலைகள் கரைக்கு வந்ததும் அப்படியே எம்பி எழுந்து உயரத்தில் சுழலும். குறைந்த பட்சம் 50 அடி முதல் 100 அடி உயரத்துக்கு கடல் தண்ணீர் கொந்தளித்து எழும்பும். பிறகு அந்த கடல் தண்ணீர் அதே 500 மைல் வேகத்துடன் கடலுக்கு வெளியே கொப்பளிக்கும். ஏற்கனவே உயரே எழும்பி சுழன்றுள்ள கடல் தண்ணீர் வேகத்துடன் வெளியில் வரும். இந்த கொந்தளிப்பு 3 மைல் தூரம் வரை ஊருக்குள் புகுந்து விடும். அந்த சமயத்தில் எதிர் கொள்ளும் மனித உயிர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் சுனாமி அலை துவம்சம் செய்து விடும். <b>கடற்கரையில் சுனாமி அலைகள் ஆக்ரோஷ துவம்சம் செய்யும்போது அதன் சக்தி அணுசக்தி வெடிப்புக்கு ஈடான விளைவுகளை கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் சுனாமி அலைகளின் எடை பல டன் கணக்கில் இருக்கும்.</b> எனவேதான் இந்த அலைகளால் மாபெரும் கப்பல்களை கூட கவிழ்த்து விட முடிகிறது. கரையை நெருங்கும் வரை "இந்த பூனையும் பால் குடிக்குமா?" என்ற ரீதியில் ஓடி வரும் அலைகள் கரைக்கு வந்த பிறகே கொரில்லா பாணியில் திடீர் தாக்குதல் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடற்கரை ஓரம் நின்று பார்க்கும்போது சுனாமி அலை வருகிறதா இல்லையா என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாது. எனவேதான் சுனாமி அலைகளை பல நாடுகளில் "சதிகார கொலை கும்பல்" என்று ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். உலகில் சுனாமி அலைகள் தோன்றுவது அரிதாக நடக்கும் செயலாகும். பெரும்பாலும் இவை பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் தோன்றுவது உண்டு. நமது நாட்டு கடலில் சுனாமி அலைகள் ஏற்பட்டதே இல்லை. சுனாமி அலைகளை கண்டு பிடிக்க பசிபில் பெருங்கடல் பகுதியில் நவீன கருவிகளை அமெரிக்கா நிறுவி உள்ளது. எனவே சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் தோன் றும் போதெல்லாம் அமெரிக்கா தன் செயற்கை கோள்கள் மூலம் அதை கண்டுபிடித்து விடுகிறது. சுனாமி அலைகள் கரைக்கு எப்போது வரும் என்று அமெரிக்கா துல்லியமாக ஆராய்ந்து தன் மக்களை உஷார்படுத்தி வெளியேற்றி விடுகிறது. அதுவும் 10 ஆண்டுக்கு ஒரு தடவைதான் இத்தகைய அபாயம் ஏற்படும். ஆனால் இந்திய பெருங்கடலில் தோன்றி உள்ள சுனாமி அலைகளை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்ய நாம் இதுவரை எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. எனவேதான் சுனாமி அலைகளின் முதல் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை நமக்கு தெரியாமலே போய் விட்டது. முதல் தாக்குதல் நடந்த பிறகே இந்திய பெருங்கடலில் தோன்றிய சுனாமி அலைகள் பற்றி உலக ஆய்வு நிறுவனங்கள் பார்வையை திருப்பி உள்ளன. இதன் மூலம் இன்று காலை சுமித்திரா தீவு அருகில் பல தடவை அதிர்வு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுனாமி அலைகள் படையெடுத்து வந்த வண்ணம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சுனாமி அலைகள் ஓரிரு நாளில் எந்த நேரத்திலும் நமது கரையை தாக்கலாம் என்ற அபாயத்தில் நாம் இருக்கிறோம். malaimalar.com - Vasampu - 12-28-2004 உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஆனால் சுனாமி ஏற்படுவதற்கு முதலில் கடல் மட்டம் வற்றி பின் தான் கடல் மட்டம் திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு யாராவது சரியான விளக்கம் தருவீர்களா? - KULAKADDAN - 12-31-2004 http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/4136289.stm - Vasampu - 12-31-2004 மிக்க நன்றிகள் குளக்காட்டான்.
- kavithan - 01-01-2005 <b>சுனாமி அலை ஏற்படுவது குறித்தும் அது தொடர்பானபதிவுகளைக் கொண்டும் ஒரு அனிமேசன் பதிவு</b> - vasisutha - 01-09-2005 சுனாமி பற்றிய மேலதிக தகவல்களை இங்கு காணலாம். http://www.geophys.washington.edu/tsunami/...cs/physics.htmlhttp://www.geophys.washington.edu/tsunami/intro.html |