Yarl Forum
மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்... (/showthread.php?tid=6074)



மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்... - thamizh.nila - 12-27-2004

<span style='font-size:27pt;line-height:100%'><b>மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்</b>

அழிவதற்கு பிறந்தோமா - என்றும்
அழுவதற்கே பிறந்தோமா?
இன்னல்களில் இடிபாட்டே - நாம்
இறுதி கண்டுவிடுவோமா?

நடுக்கடலிற்கு போனாலும் - நாய்க்கு
நக்க தண்ணி.. - சிறுவயதில்
என்றோ காதில் விழுந்தவை அனைத்தும் - இன்று
நினைவில் வந்து தொலைக்கின்றதே

யுத்ததில் சிந்தி மீதம் இருந்த ரத்தம்
இன்று கடலோடு கடலாய்
ஊர் விட்டு ஊர் வந்தோர் - இன்று
உலகதிதை விட்டே சென்றது ஏன்?

எதை சொல்லி எம் உறவுகளை ஆற்ற?
வார்த்தைகள் மனதிலும் இல்லாது போயிற்றே
காலனவன் கொண்டானா? - இதற்கு
காலமது பதில் கூறுமா?

பிணமேடாய் கைக்குழந்தைகள்
கதறி அழும் ஆண், பெண்கள்
இதே எம் எதிர்கால தூண்கள்
கடலோடு கடலாய்

பக்கத்தில் இல்லையே
பரிவோடு உமை அணைக்க
கிட்டத்தில் இல்லையே
தோளோடு தோள் கொடுக்க

எம்மால் ஆனது எது?
சிந்திப்போம்..சற்றே சிந்திப்போம்
நாளை எமக்கிந்த நிலை வரில்????
எமை தாங்கும் தூண்களை - இன்று
நாம் தாங்குவோம்.

தமிழ்.நிலா</span>

எமை இங்கு தவிக்கவிட்டு காலனின் கோரத்தில் சிக்கி இறையடி சேர்ந்த உயிர்களுக்காய்...


- thamizh.nila - 12-27-2004

<span style='font-size:22pt;line-height:100%'>இது என்ன கொடுமை
இயற்கைகேன் இந்த வன்மை
கடல் விட்டு தரை வந்து
கொடுத்தவளே எடுத்தும் கொண்டாளே

வாழ்க்கை புரிகிறதா? தமிழா
உன்னால் வாழ முடிகிறடா
உரிமப் போராட்டத்தின் நடுவே - இயற்கையுடம்
ஓர் உயிர் போராட்டமா?

அந்நியன் எமை அழிக்கிறான் எனில்
அன்னை நீயுமா?
விடை தெரியாமல் தவிக்கிறேன்
விந்தையான உலகத்திலே

இறை அவன் ஆடும் நர்த்தனத்தில்
ஒடுங்கி மடிந்து போவது
எம் உயிர்களே எம் உறவுகளே
தவிக்கும் வாய்களுக்கு - நாம்
தண்ணீர் கொடுக்காவிடில் யார் கொடுப்பார்?

தமிழ்.நிலா</span>


- thamizh.nila - 12-27-2004

<span style='font-size:22pt;line-height:100%'>
பதில் சொல்லம்மா..விடை கூறம்மா..

அம்மா,
உனை நம்பி நின்றோமே
குலத்தெய்வமாய் இருந்தவளே
குலத்தையே அழித்துவிட்டாயே

சொல்லென்னா சோதனைகள்
சொல்லி அழுதோமே உன்னிடமே
தட்டிக் கொடுத்த நீயே
எம் உயிர்களை எடுத்துக் கொண்டாயே

பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்
உதாரணம் நாமாய்
காரணம் நீயாய்

கடலம்மா என காதலித்தோம்
கதறி அழ வைத்துவிட்டாயே
அம்மா என அழைத்த எம்மை
அய்யோ என கதற வைத்துவிட்டாயே

முழு மூச்சாய் போராடும் வீரர்களின்
மூச்சை நீயே நிறுத்திவிட்டாயே
நியாயம் எங்கே போயிற்று
எம் ஊரே நிர்மூலம் ஆயிற்றே

பதில் சொல்லம்மா..விடை கூறம்மா..

தமிழ்.நிலா</span>


- kavithan - 12-27-2004

நன்றி உங்கள் மனக்கிடங்கை கொட்டி தீர்த்திருக்கிறீர்கள் ... உங்கள் கேள்விகள் நியாயம் ஆனால் விடைதான் தெரியவில்லை...


- KULAKADDAN - 12-27-2004

¿ýÈ¢.........
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 12-27-2004

யாரை நோக?

விடங்கொண்ட இயற்கை மண்ணை

விடியமுன் ஆட்டிப்பார்க்க

கடல்கொண்ட குமரிக்கண்டம்

கண்களில் காட்சியாக

தடம்மாறிவந்த 'சுனாமி அதிர்வில்

தென்னவர் உயிர்கள் உடமையெல்லாம்

சடலமாய் சடமாய் ஆங்கே

சமுத்திரப் பெருக்கில் மிதந்து

காடென புகுந்த வெள்ள ஊழிக்

கூத்தினை யாரை நோக?

புடம் போட்டாய் இயற்கைஅன்னை

போதும் உன் அன்ர்த்தமம்மா

பிட்டுக்கு மண்சுமந்த பிரானேஉதவு

விரைந்தெம் இனத்தை மீட்க!



- முத்து விஜயராகவன்(இலண்டன்)


- Aalavanthan - 12-28-2004

Quote:பிட்டுக்கு மண்சுமந்த பிரானேஉதவு

விரைந்தெம் இனத்தை மீட்க!
இவரையும் சேர்த்துத்தான் அங்கே தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.


- வெண்ணிலா - 12-28-2004

Aalavanthan Wrote:
Quote:பிட்டுக்கு மண்சுமந்த பிரானேஉதவு

விரைந்தெம் இனத்தை மீட்க!
இவரையும் சேர்த்துத்தான் அங்கே தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.


இவர்களெல்லாம் எங்கேயோ பிக்னிக் போய்விட்டார்கள் போல. ஆபத்தில் உதவாதவர்களைத் தேடி என்னத்துக்கு. :evil: :twisted:


- thamizh.nila - 12-28-2004

யார் மேலே பிழை ? யார் மேலே பழி ? :twisted: