Yarl Forum
மோசடிக்காக நிதி திரட்டுவோருக்கு எச்சரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: மோசடிக்காக நிதி திரட்டுவோருக்கு எச்சரிக்கை (/showthread.php?tid=6044)



மோசடிக்காக நிதி திரட்டுவோருக்கு எச்சரிக்கை - Mathan - 12-29-2004

மோசடிக்காக நிதி திரட்டுவோருக்கு எச்சரிக்கை

மக்களின் அவலத்தைச் சாட்டி பலரும் தனிநபராகவும்ää குழுக்களாகவும்ää கோவில் பிரதிநிதிகளாகவும்ää வானொலிகளாகவும்ää இணைய வானொலிகளாகவும்ää தொலைக்காட்சிகளாகவும்ää இணையத்தளங்களாகவும்ää அமைப்புக்களாகவும்ää அரசியல் பாகுபாட்டாளர்களாலும்ää தமிழ் தேசவிரோதிகள் சிலராலும் பலதரப்பட்ட வடிவங்களில் ஜரோப்பாவில் நிதி திரட்டப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் அனைத்துத் தகவல்களும் கவனிக்கப்பட்டு வருகின்றது.

உங்களால் சேகரிக்கப்படும் அனைத்து நிதிகள் மற்றும் அனைத்துத் தரவுகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடகவே உரியவர்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். உங்களால் சேகரிக்கப்படும் அனைத்து நிதிகளும்ää பொருட்களும் தரவுகளும் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

அதே நேரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன் அனுமதி இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ள தங்களின் ஆதங்கம் எமக்கு புரிகிறது. எனினும் தயவு செய்து உரியவர்கள் ஊடாக இந்த விடயத்தை மேற்கொள்வதால் தாயக உறவுகளுக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகள் கிடைக்கவும் உங்களால் வழிசெய்யப்படும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.

இலன்டனில் உள்ள வானொலிகளில் ஜ.பி.சி வானொலிக்கு மட்டுமே நிவாரண நிதி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்களது சுயலாபங்களுக்கான விளம்பரமாகவும்ää வியாபார தந்திரமாகவும் பயன்படுத்தவும் ஊடகங்கள் சில முயன்றுவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன. எனவே உதவிகள் புரியும் அன்பான எம்முறவுகள் இந்த விடயத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது

http://www.nitharsanam.com/?page=warning


- thamizh.nila - 12-29-2004

பிணம் தின்னும் பறவைகள் எவ்வளவோ மேல் :evil:


- Mathivathanan - 12-29-2004

கடவுளே..


- Bond007 - 12-29-2004

கிழக் மாகண அமைப்பான பட்ஸ் என்ற அமைப்புடன் இணைந்த சிலர் பிரதேசவாத கண்ணோக்குடன் ஒரு நிதி திரட்டும் நடடிவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.வன்னிக்கு சிலர் தாம் தனிப்பட்ட முறையில் செய்ய பேவாதாகவும் புறப்பட்டுள்ளனர். இவர்கள் நிதி அங்கு போய் சேர்ந்தால் நல்லம். ஆனால் அது சேரக் கூடாத கைகளில் சேரவும் வாய்ப்புள்ளது!