Yarl Forum
BBC ஊடகத் துரோகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: BBC ஊடகத் துரோகம் (/showthread.php?tid=6043)



BBC ஊடகத் துரோகம் - Mathan - 12-29-2004

ஊடகத் துரோகம்.

கடந்த இருநாட்களாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(BBC) மீது பயங்கர எரிச்சலுற்றிருக்கிறேன்.ஆகக்குறைந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை மூடி மறைத்து வருகின்றது அந்த ஊடகம்.

இதுவரை வெளிவந்த விவரணப்படங்கள்,செய்திகள் எவற்றிலுமே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு,திருகோணமலை ஏன் மட்டக்களப்பு பாதிக்கப்பட்டதாக சிறு செய்திகூட வெளிவரவில்லை.செய்தியில் என்ன, சொன்னால் சொல்கிறார்கள் சொல்லாவிட்டால் போகட்டும் என்று விட்டுவிடலாம்தான்,ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் எல்லாமே இந்த ஊடகங்களினால் குறிப்பிடப்படும் இடங்களுக்குப் போய்ச்சேர்கின்றன என்பதுதான் வேதனை.

இலங்கையில் எந்த எந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என அறியவிரும்பும் வெளிநாட்டிலிருக்கும் ஒருவர் முதலில் எடுத்துப் பார்ப்பது BBC போன்ற ஊடகங்களைத்தான்.இன் செய்தியைப் பார்க்கும் ஒருவர் இலங்கையில் காலி,மாத்தறை மற்றும் கொழும்பின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவே முடிவுக்கு வருவார்.

இது எந்தவிதத்திலும் தென்னிலங்கையில் ஏற்பட்ட இழப்புகளை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது இழப்பே இல்லையென்று சொல்வதற்கோ அல்ல உண்மையைக் கூற BBC ஊடகம் தவறிவிட்டது.

சராசரி ஊடகத் தர்மத்துடன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை மனிதாபிமானத்துடனாவது வடக்கு கிழக்கில் இதுவரை 8000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதை செய்தியாகவாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை.இற்கு அவ்வாறு சொல்லவேண்டிய தேவை ஏனோ இருக்கவில்லை.

ஒரே ஒரு வரி போராளிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை.இதைத்தான் நாள் முழுவதும் BBC சொல்லிக்கொண்டிருக்கிறது.

இதே BBC தான் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறப் போகிறேன் என்று அறிவித்தவுடன் பலத்த சிரமங்களுக்கும் உயிராபத்துக்கும் மத்தியில் மட்டக்களப்பில் அவரது முகாமுக்குப் போய் பேட்டியொன்றை எடுத்து வெளியிட்டது.அதே BBC இற்கு இப்போது மட்டக்களப்புக்குப் போய் ஒரு சிறு செய்தியோ ஒளிப்படமோ எடுத்து வெளியிட முடியவில்லை.

இதே BBC தான் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் பிரபாகரனைப் பேட்டியெடுத்து வெளியிட்டது.இதே BBC தான் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்கு கிளிநொச்சி போய் நாட்கணக்கில் தவமிருந்தது.
இப்போது என்னவென்றால் முல்லைத்தீவோ கிளிநொச்சியோ தனக்குத் தெரியாதமாதிரி நடந்துகொள்கிறது ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி என்னைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

நன்றி - ஈழநாதன்


- Mathan - 12-29-2004

ஹும் வடக்கு கிழக்கு அழிவுகள் குறித்த செய்தியை பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். ஏன் BBC என்ற பெயரை புனை பெயராக உபயோகித்தேன் என்று இப்போது வருந்துகின்றேன். முதலில் இந்த பெயரை தூக்கி எறிய வேண்டும்.


- ஊமை - 12-29-2004

இன்று எமது நகரப்பகுதியிலே தற்செயலாக ஜேர்மானிய என் ரீ வீ செய்தி தொலைக்காட்சி நிறுவனரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எமது தாயக அனர்த்தம் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.
அந்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை விடுத்து அதிகம் பாதிக்கப்படாத தென்னிலங்கை செய்திகளைசெய்திகளை மட்டும் ஒலிபரப்பியத்தற்காக அவர்களுடன் சற்று காரசாரமாக விவாதித்தோம்.

தமிழ்த்தேசியத்தையும் சிங்கள இனவாததையும் பற்றி எடுத்துக் கூறினோம். இற்றைக்கு 20 வருடங்களாக நடக்கும் இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றி தாங்கள் நன்றாகவே அறிவோம் என்றும் இதனாலே நாம் தெரிவித்த கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தாங்கள் ஓர் செய்தி விவரணமே தயாரித்தாகவும், அதனால் அவர்களின் செய்தி சேகரிப்பாளர் தலைநகரில் தன் தங்குமிடத்திற்கு அருகில் கண்முன்னே கண்ட காட்சிகளை மட்டும் படமாக்கியதால் ஆரம்பத்தில் அவைகளையே ஒளிபரப்பியதாகவும் தாங்கள் ஓர் செய்தி ஸ்தாபனம் ஆகையால் தாங்கள் நடுநிலமையாய் தான் செய்ற்படுவோம் என கூறினர்.

தாங்கள் சகல பாதிக்கப்பட்ட நாடுகளைப்பற்றி ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கிறோம் என்றும் அதிலே இலங்கையிலே ஏற்பட்ட சகல பாதிப்புக்களையும் உள்ளிட்டு தான் செய்யப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் இந் நிறுவனமும் பாரிய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதால் அது பற்றியும் கதைத்தோம். அவர்களும் உதவிகள் யாவும் வழமை போல் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்றடையக் கூடிய வகையில் வழங்கப்படும் எனவும், இவைகள் தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திடமோ அல்லது தனிப்பட்டவர்களிடமோ வழங்கப்படமாட்டாது என கூறினர்.


- thamizh.nila - 12-29-2004

முருகா..... இதிலும் அரசியலா? சகிக்கிறபோல இல்லை. :twisted: நாங்கள் ஏதாவது செய்ய முடியுமா? அல்லது எம் தமிழ் ஊடகங்கள் இது பற்றி ஏதாவது செய்ய முடியுமா என யாரவது சொல்லுங்களேன்...


- Nada - 12-29-2004

இனத்தின்மீது பற்றில்லாத தமிழ் ஊடகங்கள் இருந்தென்ன இல்லாதென்ன.
நாம்தான் நமக்குதவி. அடுத்தவர் கரங்களினாலா நாம் நிமிர்ந்து நிற்கிறோம். இந்த புலம்பெயர் நாட்டிலுள்ளவர்கள் ஆளுக்கு 100 டொலர் கொடுத்தால் எமது தேசத்தை முன்னைவிட அழகாக புனரமைக்கலாம். சூசைஅவர்கள் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுங்கள்..எங்களவர்கள் சூரியனையே சுடுபவர்கள். தலைவணங்கா தன்மானத் தலைவன் எங்கள் தலைவன் இன்னும் ஏன் தயக்கம் ஏன் அடுத்தவர்உதவி எம்மால் முடியும் உலகத்தையேவியக்கவைப்போம் .
எம்மhல் பொருளதவிசெய்யமுடியும். புலிகளால் நாட்டை கட்டியெழுப்பமுடியும் சோர்வுஏன் தமிழா. துரோகிகள் எம்முன்னே மீண்டும் தலைகுனிவர்எழுந்திரு


- ஊமை - 12-30-2004

சரியாக சொன்னீர்கள் நடா அண்ணா.