| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 288 online users. » 0 Member(s) | 285 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| யாழ் இணையம் - சிட்னியில் இருந்து "இன்ப தமிழ் ஒலி" |
|
Posted by: thamizh.nila - 01-23-2005, 08:07 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (29)
|
 |
வணக்கம்,
நேற்று இரவு அவுஸ்திரேலியாவில் ஒலி பரப்பாகும் "இன்ப தமிழ் ஒலி" வானொலியில் "கருத்துக்களம்" நிகழ்ச்சியை கேட்டு கொண்டு இருக்கும் போது, "யாழ்" பற்றி, அதன் பயன்கள் பற்றி அறிவிப்பாளர் கூறி இருந்தார்.எல்லோரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு இணையம் என கூறினார்.கேட்கும் போது சந்தோசமாக இருந்தது. அடடா என்ன இவை எங்கட யாழ் பற்றி சொல்லினம் எண்டு.அதுதான் உங்களுக்கும் சொல்லுவம் என்று எழுதுகிறேன்.
அத்துடன், அனைவர் சார்பிலும் மோகன் அண்ணாவிற்கும், மற்றைய modz கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்.நிலா
|
|
|
| புலிகளுடன் இனணவதா? ஜிகாத்திற்கு தயாராவதா? |
|
Posted by: cannon - 01-23-2005, 01:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சுனாமியõல் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தமக்கு நிவாரண உதவிகள் உரியவாறு கிடைப்பதில்லை என்றும் அரசாங்கம் தம்மை புறக்கணிப்பதாகவும் ஒருமித்து குரலெழுப்புகின்றனர்.
வடக்கு,கிழக்கு,தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் குரலாகவே இது உள்ளது.
முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையும் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது அரச நிவாரணங்களோ அரச உதவிகளோ இன்றிப் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர். கடந்த 18 ஆம், 19 ஆம் திகதிகளில் காலி,மாத்தறை,ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்குச் சென்ற போதும் அவர்களும் தாம் புறக்கணிக்கப்படுவது பற்றியே கூறினர்.
ஹம்பாந்தோட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் விரக்தியின் விளிம்பில் நின்று அரசாங்கம் ஏன் எம்மை புறக்கணிக்கின்றது. விடுதலைப் புலிகளுடன் இணையுமாறு அரசு கேட்கிறதா? அல்லது ஜிகாத்தாக மாறவேண்டும் என்று கேட்கிறதா? என ""கேசரி'' வார இதழுக்குத் தெரிவித்தனர்.
கடந்த 19 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் சிறுவர், முதியவர், ஆண்,பெண் என்ற பேதமின்றி திரண்ட முஸ்லிம் மக்கள் மேற்படி கேள்வியை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி நின்று கோஷமெழுப்பினர்.
""1500 குடும்பங்களுக்கு 27 கூடாரங்களா?'',""1500 குடும்பங்களுக்கு 17 உணவுப் பொதிகளா'',"" நாங்கள் அனைவரும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களே'',"" ஜனாதிபதியே அபிவிருத்திக்கான அடிக்கல்லை இங்கு நாட்டுங்கள்'',""சுனாமியால் பாதிக்கப்பட்ட எமக்கு வழங்கப்படும் தண்டனையா இது '', ""சுனாமி பாதிப்பிற்கு என வந்த வெளிநாடுகளின் உதவிகள் எங்கே?'',""கடற்றொ ழில் அமைச்சரே நீங்கள் நித்திரையா?'',வெளிநாடுகளின் உதவிகள் சுனாமி அனர்த்தத்திற்கா அல்லது துறை முகம் அமைக்கவா'',"" ஜனாதிபதி அவர்களே! எமது துக்கத்தையும் கவனத்திலெடுங்கள்'' போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தம்மை தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கூறுகின்றது. இந்த இடத்தில் துறைமுகம் அமைக்கப் போவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நாம் எங்கு போவோம்? என்று அவர்கள் கேள்வியும் எழுப்புகின்றனர்.
நன்றி - வீரகேசரி வாரமலர்
|
|
|
| காரைக்கால் அருகே கிணற்று நீர் பொங்கியதால் மக்கள் பீதி |
|
Posted by: aathipan - 01-22-2005, 11:02 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
25 . காரைக்கால் அருகே திடீர் பள்ளம் கிணற்று நீர் பொங்கியதால் மக்கள் பீதி
காரைக்கால் : காரைக்காலில் அரசு குடிநீர் வழங்கும் கிணற்றோரம் நிலம் உள்வாங்கி, நீர் பொங்கி வழிந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள ஜீவா நகரில் அரசுக்கு சொந்தமான குடிநீர் விநியோக நிலையம் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் நீரேற்று ஊழியர் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் நிரப்பச் சென்றுள்ளார். நீர் ஏற்றுவதற்காக மோட்டாரை இயக்கிவிட்டு கிணற்றின் அருகே வந்தபோது தரை நழுவுவதைப் போல் உணர்ந்து திடுக்கிட்டார். அங்கிருந்து வேகமாக நகர்ந்தார். அப்போது கிணறு அருகே தரைப்பகுதி ஒரு அடி ஆழத்துக்கு உள்வாங்கியதைப் பார்த்து கிராம மக்களிடம் தெரிவித்தார்.
கிராம மக்கள் அங்கு திரண்டுவந்து கிணற்றைப் பார்த்தபோது கிணற்றில் இருந்த தண்ணீர் கொப்பளிப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். கிணற்றின் நீர் மட்டமும் உயர்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அக்கிணற்று நீரை பல முறை இறைத்தும், நீர்மட்டம் அதிகரித்துப் பொங்கி வழிந்து வருவது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
|
|
|
| அழிய மறுக்கும் சாப்ட்வேர்... |
|
Posted by: aathipan - 01-22-2005, 10:53 PM - Forum: கணினி
- Replies (4)
|
 |
கம்ப்யூட்டர் மலர் 21.01.2005
1.அழிய மறுக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள்!
கம்ப்யூட்டரில் பல சாப்ட்வேர் தொகுப்பு களை நீங்கள் நிறுவியி ருப்பீர்கள். ஏதாவது ஒரு சாப்ட்வேர் தொகுப்பு உங்களுக்குத் தேவை யில்லை என முடிவு செய்து உடனே அதனை முற்றிலுமாக நீக்கிவிட முயற்சிப்பீர்கள். அது தொல்லை கொடுக்கா மல் நீங்கிவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் சில சாப்ட்வேர் களை அழிக்க முடி யாது. ஏதாவது ஒரு காரணத் தைக் காட்டி கம்ப்யூட்ட ரில் அமர்ந்து கொண்டு இருக்கும். உங்கள் கம்ப் யூட்டர் மீது பிரியா அன்பு கொண்டிருக்கும் அந்த சாப்ட்வேர் தொகுப்பை முற்றிலுமாகத் தொலைந்து போ என அனுப்ப என்ன செய் யலாம்?
பொதுவாக சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை கம்ப்யூட்ட ரில் இருந்து நீக்கிட இரு வழி கள் உண்டு.
1. கண்ட்ரோல் பேனலில் உள்ள Add/Remove Program கணூணிஞ்ணூச்ட் என்ற பிரிவிற்குச் சென்று ஐகானைக் கிளிச் செய்து சாப்ட்வேர் தொகுப்பை நீக்கலாம்.
2.அந்த சாப்ட்வேர் தொகுப் பிலேயே Uninstall Applet தரப் பட்டிருக்கும். அதனைப் பயன் படுத்தியும் அந்த சாப்ட்வேர் தொகுப்பை நீக்கிவிடலாம்.
மேலேயுள்ள வழிகளில் ஒன் றைப் பின்பற்றி சாப்ட்வேர் தொகுப்பை நீக்கிடும் போது அந்த சாப்ட்வேர் உள்ள போல் டர், சாப்ட்வேர் தொகுப்பு குறித்து விண்டோஸ் ரெஜிஸ்ட் ரியில் உள்ள குறிப்பு, அதற் கான ஷார்ட்கட் மற்றும் திரை யில் உள்ள ஐகான்கள் அனைத் தும் நீங்கும். சில வேளைகளில் சாப்ட்வேர் நீக் கப்பட்டது; ஆனால் முற்றிலுமாக அடுத்த முறை கம்ப்யூட்டர் இயக்கு கையில் நீக்கப்படும் என அறிவிப்பு வரும். ஐகான் போன்ற சமாச்சாரம் மட்டும் அவ்வாறு நீக்கப்படும். இவ்வாறு சாப்ட்வேர் தொகுப் பின் சில எச்சங்கள் மிச்சங் களாய் இருக்கையில் முழுவது மாக எவ்வாறு சாப்ட்வேர் தொகுப்பினை நீக்க வேண்டும் என்பதனைப் பார்க் கலாம்.
சாப்ட்வேர் தொகுப்பை முற்றிலுமாக நீக்க:
கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட் வேர் தொகுப்பை முற்றிலு மாக நீக்குவதற்கு முன்னர் ஹார்ட்டிஸ்க்கை பேக்கப் செய் திடுங்கள். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் பேக்கப் இமேஜை உருவாக்குங்கள். அந்த சாப்ட் வேரின் பெயர் அல்லது அதனை உருவாக்கிய நிறுவ னத்தின் பெயர் கொண்டு கம்ப் யூட்டரில் அதற்கான பைல்கள் மற்றும் பைல்கள் உள்ள போல் டர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இவை எல்லா வற்றையும் அழியுங் கள். இப்போது Start==>Run கட்டளையைக் கொடுங்கள். Reg Edit என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். ரெஜிஸ்ட்ரி எடிட்டர் திறக்கப் படும். இங்கேயும் அந்த சாப்ட் வேரின் பெயர், அதை எழுதிய வரின் பெயர், அதைத் தயா ரித்த நிறுவனத்தின் பெயர் கொண்டு தேடுங்கள். அவை தொடர்பான விபரங்கள் ரெஜிஸ்ட்ரியில் தேடப்படும். அவற்றை எல்லாம் அழியுங் கள்.
கம்ப்யூட்டரை மறுபடியும் பூட் செய்யுங்கள். பூட்டாகும் போது ஏதாவது பிழைச்செய்திகள் கிடைக்கின்றனவா எனப் பா ருங்கள். பிழைச்செய்தி எது வும் கிடைக்காவிடில் நீங்கள் அழித்தவற்றால் கம்ப்யூட்ட ரில் உள்ள இதர சாப்ட்வேர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பொருள். பிழைச்செய்தி கிடைத்தால் பேக்கப்பைப் பயன்படுத்தி அழித்ததைப் பழையபடி கம்ப் யூட்டருக்குக் கொண்டு வர வேண்டும்.
ரெஜிஸ்ட்ரி பதிவைச் சோதிக்க:
ரெஜிஸ்ட்ரியில் நீங்கள் அழித் தவற்றால் பாதிப்பு இருக்கிறதா என்பதைச் சோதிப்பது முக் கியம். Registry Checker என்ற பிரிவில் பல சாப்ட்வேர் தொகு ப்புகள் இதற்காகவே உள்ளன. Add Windoctor, jv16 போன்ற சாப்ட் வேர் தொகுப்புகள் இந்த வகை சாப்ட்வேர்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். இவற்றைக் கொண்டு ரெஜிஸ் ட்ரியைச் சோதியுங்கள்.
ரெஜிஸ்ட்ரி பட்டியலில் இருந்து சாப்ட்வேரின் பெயரை நீக்க:
சில நேரங்களில் நீங்கள் சாப்ட்வேரை கம்ப்யூட்ட ரில் இருந்து முற்றிலுமாக நீக்கினாலும் அதன் பெயர் கண்ட்ரோல் பேன லில் உள்ள Add / Remove Program வழங்கும் பட் டியலில் காணப்படும். இந்த பட்டியலில் உள்ள பெயரை நீங்கள் நீக்கினா லும் அந்த பெயர் பழை யபடி அங்கே உட்கார்ந்தி ருக்கும். இப்படிப்பட்ட பெயரை நீக்கும் வழி யைப் பார்ப்போம். ரெஜிஸ்ட்ரி எடிட்டரின் இடப்பக்கம் தெரிகிற HKEY_ LOCAL_MACHINE பெயரை ஒட்டிய பிளஸ் அடையாளத் தைக் கிளிக் செய்யுங்கள். இப் படியாக பிளஸ் அடையாளங் களை வரிசையாகக் கிளிக் செய்து கொண்டே Microsoft பின்பு Windows பின்பு Current Version அடுத்து Uninstall வரை செல்லுங்கள். அதன் கீழே யுள்ள பெயரை (கீயைக்) கிளிக் செய்யுங்கள். வலதுபக்கம்தெரி Display Name ©ØÖ® Unin stall String ஆகிய பெயர்கள் நமக்கு முக்கியம். Display Name என்பதில் தெரிகிற Add/Remove Programs பெயர்தான் வழங் கும் பட்டியலில் காணப்படும். Unin stall String என்று குறிக்கிற இடத்தில் தான் இந்த சாப்ட் வேருக்கான பைல்கள் கொடுக் கப்பட்டுள்ளன.
அழிக்க விரும்புகிற பெயரை ரைட் கிளிக் செய்து Delete கட்டளையைத் தேர்வு செய்யுங் கள். அழிக்க உங்கள் ஒப்புதல் கேட்கப்படும். எனவேYes பட்டனை அழுத்துங்கள்.
Uninstall String என்பதில் குறிப் பிடப்பட்டுள்ள போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சென்று அழியுங்கள். இப்பொ ழுது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அந்த சாப்ட்வேர் முற் றிலுமாக நீக்கப்பட்டு விடும்.
|
|
|
| ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை |
|
Posted by: வியாசன் - 01-22-2005, 07:14 PM - Forum: புலம்
- Replies (5)
|
 |
ஈழத்தமிழரின் அரசியல் தந்தையான செல்வநாயகம் அவர்களை கொச்சைப்படுத்தவதாக பல ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்ட திரைப்படமான ஆயுதஎழுத்து திரைப்படம் இன்று தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படப்போகிறது..
இந்த திரைப்படத்தில் வரும் அரசியல்வாதிக்கு செல்வநாயகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த அரசியல்வாதி ஒரு வன்முறையாளனாக சித்தரிக்கப்பட்டமையால் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாரித்திருந்தது.
இந்த திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புவது நியாயமா?
உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாக சொல்வது நல்லது .யாரையும் புண்படுத்தாமல் எழுதுங்கள்.
|
|
|
| தலை துண்டிப்பு......... |
|
Posted by: Vaanampaadi - 01-22-2005, 06:51 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
ஈராக்கியர்களை அங்குள்ள அபு முஷாப் அல்-ஷர்க்காவி யின் தலமையின் கீழ் இயங்கும் பயங்கரவாத குழுவினர்
நேற்றைய தினம் பகிரங்கமாக பட்டப்பகலில் நடு வீதியில் வைத்து அந்த இருவரின் கழுத்துகளை வெட்டினார்கள் என்று செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். அந்த காட்சியை பார்க்க விரும்புவோர் கீழ் காணும் லிங்கை கிழிக் பண்ணிப் பார்க்கவும்.
<span style='font-size:25pt;line-height:100%'><b>எச்சரிக்கை!!!! இதயபலவீமான்வர்கள், இரத்தத்தை பார்க்க சகிக்காதவர்கள் மற்றும் கொடூரத்தை காண சகிக்காதவர்கள் தயவுசெய்து இந்த பக்கத்திற்கு போகவேண்டாம்.............!!!!!!! </b></span>
முதலாம் நபரின் தலை துண்டிப்பு:
**********
எச்சரிக்கை என்று குறிப்பிட்டு இணைப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், காட்சிகளின் கோரத்தன்மை காரணமாக இணைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
|
|
|
| பிரபாகரன் நோர்வேயாளர்கள் சந்திப்பு |
|
Posted by: Vaanampaadi - 01-22-2005, 05:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/nor_t_pi.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/nor_t_jan_pi1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/nor_t_hil_pi.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/nor_t_jan_pi2.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| இதைத் தடுப்பது எப்படி...?! |
|
Posted by: kuruvikal - 01-22-2005, 03:09 PM - Forum: இணையம்
- Replies (3)
|
 |
<b>வலைப்பூப் பதிவுகள் என்பது இன்று ஒவ்வொருவரிடமும் அவர்களிடம் உள்ள ஆற்றல்களை ஓரளவுக்கேனும் வெளிக்கொணரும் களமாக இருக்கும் இவ்வேளையில் சில இணைய விசமிகள் தமது கருத்தென்று அநாகரிக விளம்பரங்களை ஒட்டிவருகின்றனர்...!
உதாரணத்துக்கு குருவிகளின் தேடற்சரத்தில் இப்படியான சில நூறு விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன...அவை அனைத்தையும் ஒரு நேர அழிப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது...அவற்றை ஒருசேர அக்கற்ற ஏதாவது வழியிருந்தால் அல்லது கோடிங்கில் செய்யக் கூடிய மாற்றங்கள் இருந்தால் அறியத்தரவும்..தேவையற்ற விளம்பரங்களைக் காவ நாம் துணைபோக விரும்பவில்லை...!</b>
|
|
|
|