Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 307 online users.
» 0 Member(s) | 304 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  நோர்வேயாளர்கள் கிளிநொச்சி செல்வதில் சிறிய தாமதம்
Posted by: Vaanampaadi - 01-22-2005, 12:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

நோர்வே மந்திரிகளை எற்றிச்சென்ற உளங்கு வானூர்தி மந்தாரமான (cloudy) கால நிலை காரணமாக அனுராதபுரத்தில் தரை இறங்கியுள்ளது. அங்கிருந்து மந்திரிகள் A9 பாதையூடாக தரைமார்க்கமாக கிளிநொச்சிக்கு பயணத்தை தொடர்கிறார்கள்.......

Norwegian Ministers visit to Kilinochchi delayed

[TamilNet, January 22, 2005 04:56 GMT]
The much awaited visit by Norwegian ministers to meet with the LTTE leadership in Kilinochchi is delayed as the Norwegian team was forced to take A9 land route from Anuradhapura instead of the scheduled helicopter route to Kilinochchi due to cloudy weather conditions, sources in Kilinochchi said.
The visiting Norwegian team comprises Norwegian Foreign Minister Mr. Jan Petersen, Minister of International Development Ms Hilde Frafjord Johnson, Deputy Foreign Minister Vidar Helgesen, Special Adviser Erik Solheim, Norwegian Ambassador to Sri Lanka Mr. Hans Brattskar and other officials of the Royal Norwegian Government.

The Norwegian team is also scheduled to visit Mullaithivu to study the ground situation and to gain a first hand impression of how the relief work is proceeding for the people struck by the natural disaster.

Print this item

  கடலோர தடுப்பு சுவர் கட்டும் புலிகள்
Posted by: Vaanampaadi - 01-22-2005, 11:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜனவரி 22, 2005

சுனாமி: கடலோர தடுப்பு சுவர் கட்டும் புலிகள்

முல்லைத்தீவு:

சுனாமி அலைகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக தமிழர் வாழும் பகுதிகளில் கடலோரத்தில் தடுப்புச் சுவர் கட்ட விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். ¬முற்றிலும் விடுதலைப் புலிகளே இந்தச் சுவரை கட்டவுள்ளனர்.


டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி அலைத் தாக்குதலில் இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விடுதலைப் புலிகளே கவனித்து வருகிறார்கள்.

சுனாமி அலைத் தாக்குதலிலிருந்து எதிர்காலத்தில் தப்புவதற்காக விடுதலைப் புலிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இந்தத் திட்டங்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வகுத்துள்ளார்.

அதில் ஒரு பகுதியாக கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ¬முல்லைத் தீவு பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு வலுவான மண் சுவரைக் கட்ட விடுதலைப் புலிகள்¬முடிவு செய்துள்ளனர். கடலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள நிலப் பகுதியில் இந்த தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.

3 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகத்தில் இந்த தடுப்புச் சுவர் அமையவுள்ளது. பழங்காலத்து தமிழர் கட்டடக் கலையைப் பயன்படுத்தி இந்தத் தடுப்புச் சுவர் ¬முற்றிலும் மண்ணால் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து இந்த சுவர் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழர் மறுவாழ்வு அமைப்புத் தலைவர் சிவனடியார் கூறுகையில், நாங்கள் கட்டப்போகும் மண் சுவர், கான்க்ரீட் சுவரை விட மிகவும வலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும். செலவும் மிக மிக குறைவாகவே இருக்கும்.

நமது மூதாதையர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். இதைத் தொடர்ந்து மாங்குரோவ் காடுகளையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தென்னை மரங்களும் கடலோரத்தில் அதிக அளவில் நடப்படும் என்றார் அவர்.

Source: Thatstamil

Print this item

  இந்தியெதிர்ப்புப் போராட்ட வரலாறு
Posted by: tamilan - 01-22-2005, 08:41 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (1)

இம்மாதம் 1965-ம் ஆண்டு நடந்த தமிழக மாணவர் இந்தியெதிர்ப்புப் போரட்டம் நடந்து 40 ஆண்டுகளாகிறது. அக்கால் ஏறத்தாழ 500 தமிழ் இளையோர் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2.4 மாணவர் போராட்டம்: சனவரி 26

சிதம்பரம் நகரிளுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக (Annamalai University) மாணவர்கள் 1965 சனவரி 26-ம் நாளில் இந்தி திணிப்பையெதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். இந்தியெதிர்ப்பு முழக்கங்கள் எழுதப்பட்ட பெரிய அட்டைகளும், கொடிகளும் ஏந்தி, இந்தியெதிர்ப்பு முழக்கங்களை ஒலித்தபடி மாணவர்கள் பல்கலைக்கழக விளாகத்திலிருந்து ஊர்வலம் தொடங்கினர். தாரை தப்பட்டைகள் முழக்கினர். சங்கூதினர். ஊர்வலம் எந்தவொரு வன்முறையுமின்றித் தொடங்கியது. ஆனால், காவல்துறையினர் (police) ஊர்வலம் சிதம்பரம் நகருக்குள் போகலாகாதென்று கூறி ஊர்வலத்தைத் தடுத்தனர். மாணவர்கள் அதற்கிணங்காமல் தொடர்ந்து அமைதியாக முன்னேறினர். காவலர்கள் (police) ஊர்வலத்தைக் கலைக்குமாற்றான் துமுக்கியால் (துப்பாக்கியால்) ஊர்வலத்தை நோக்கிச் சுட்டார்கள். காவலர்கள் கண்ணீர்ப் புகை வீசி ஊர்வலத்தைக் கலைக்க முயன்றிருக்கலாம். அல்லது இழுவைத் தோட்டாகளைப் பயன்படுத்திச் சுட்டிருக்கலாம். அது யாரையும் கொன்றிருக்காது. (இழுவைத் தோட்டா = இரப்பர் தோட்டா = rubber bullet) ஆனால் மேலதிகாரிகளிடமிருந்து வந்த ஆணைப்படி எக்குத் தோட்டக்களைப் (steel bullets) பயன்படுத்தினார்கள். இராசேந்திரன் என்ற மாணவர் துமுக்கிச் சூடு பட்டு இறந்தார். நெடுமாறன் என்ற மாணவர் படுகாயமடைந்தார்.

2.5 தமிழ்நாடுத் தெருக்களில் குருதியோட்டம்: சனவரி 27 - பெப்ருவரி 14

சனவரி 25-ம் நாளில் மதுரையில் ஆளும் கட்சியான பேராயக் கட்சியைத் தழுவிய தொழிலாளர் கழகத்தினைச் (a trade union affiliated with the Congress Party) சார்ந்த சிலர் மாணவர்களை அரிவாள் கொண்டு தாக்கியதும், சனவரி 26-ல் காவலர்கள் (police) மாணவர்களின் ஊர்வலத்தில் துமுக்கிச்சூடு (துப்பாக்கிச் சூடு) நடத்தியதும், தமிழ்நாடெங்கும் மாணவர்களைக் கொதிக்க வைத்தது. சனவரி 27-ல் தமிழ்நாடெங்கும் மாணவர்கள் கண்டன ஊர்வலங்கள் நடத்தினர். சனவரி 25-ல் நடந்த ஊர்வலங்களைப் போலவே இவ்வூர்வலங்களும் மிகப் பெரிதாயிருந்தன. பொதுமக்கள் மாணவர்களை முற்றிலும் ஆதரித்தனர். மாணவர்தம் போராட்டத்தை ஆதரித்து கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் தெருவோரங்களில் மிக அமைதியாக நின்று மாணவர் ஊர்வலங்களை பார்த்தார்கள். தமிழ்நாட்டு மாணவர் இந்தியெதிர்ப்புப் போராட்டச் செயற்குழு (Tamil Nadu Students Anti-Hindi Agiotation Committee) வரையறையற்ற போராட்டத்தை (indefinite strike) அறிவித்தது.

தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய இந்தி திணிப்பு எதிர்ப்பு ஊர்வலங்களும், அவற்றுக்குத் தமிழ்நாட்டுப் பொது மக்கள் கொடுத்த ஆதரவும் தில்லியிலுள்ள இதிக்காரப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு திகிலேற்படுத்தியது. இந்தியத் தலைமையமைச்சர் இலால் பகதூர் சாத்திரி (Lal Bahadur Shastri), உள்நாட்டுத்துறையமச்சர் குல்சாரிலால் நந்தா (Home Minister Gulzarilal Nanda) மற்றும் தமிழ்நாட்டு மாநில முதலமைச்சர் பக்தவத்சலல் ஆகியோர் தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போரை படைவலியோடு நசுக்குவதென முடிவு செய்தனர். பிறமாநிலக் காவல் துறையினர், இந்திய நடுவண் காவல்துறையினர் மற்றும் பட்டாளத்தினரை (out-of-state police, Indian Central Reserve Police and army) பேருந்து வண்டிகள் மூலமும், தொடர்வண்டிகள் மூலமும் (by trucks and rail) தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து குவித்தனர். அமைதியாக இந்திய நடுவண் அரசு நிறுவனங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் தொடர்வண்டி நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் (demonstrations) நடத்திய மாணவர்களை காவல் துறையினர் தடியால் தாக்குவதும், அதனால் சினங்கொண்ட மாணவர்கள் காவலர் மேல் கல் வீசுவதும், உடனடியாக காவல்துறையினரும் அவர்க்குத் துணையாக நிற்கும் பட்டாளக்காரரும் துமுக்கியால் சுடுவதும் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரையிலும் பலவிடங்களில் நடந்தன. துமுக்கிச் சூடால் பலர் காயப்பட்டு வீழ்வதையும், சிலர் சாவதையும் கண்டு மாணவரும், பொது மக்களும் சிலவிடங்களில் அஞ்சல் நிலையங்களுக்கும், தொடர் வண்டி நிலயங்களுக்கும் தீ வைத்தனர். தமிழ்நாடே போர்க்களம் போலாயிற்று. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் மறவர் தம் குருதி பாய்ந்தது. இந்நிலை ஏறத்தாழ இரண்டு கிழமைகளாகத் தொடர்ந்தது. எத்துணை தான் அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டாலும், எத்துணையோ பேர் துமுக்கிச்சூட்டில் கொல்லப்பட்டாலும் இந்தி எதிர்ப்புப்போர் தொடர்ந்து நடை பெறுவதைக் கண்ட இந்திய அரசு, இனி இந்தி திணிப்பு இருக்காது என்றும் அதற்குத் தேவையான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது. தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்தினார்கள். இந்திய அரசு அன்று கொடுத்த வாக்குறுதி வக்கில்லாமலேயே போயிற்று. 1968 ஆகத்டுத் திங்கள் முதல் நாளில் இந்தியப் பாராளுமன்றம் ஆட்சிமொழி குறித்த ஒருசட்டத்தை நிவேற்றியது. இது தமிழ்மக்கள் எதிர்பார்த்த சட்டமல்ல. இது ஏனோதானோவென்ற உப்புச்சப்பற்ற, சாரமில்லாத சட்டம். இன்னும், இன்றும் இந்தி திணிப்பு தொடரத்தான் செய்கிறது [குறிப்பேடு 1].

1965-ல் எத்துணை பேர் துமுக்கிச்சூட்டுக்குப் பலியானார்கள், எத்துணைபேர் கை, காலிழந்தார்கள், எத்துணை பேர் வேறுவகையில் காயப்பட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1967-ல் நடந்த தேர்தலில் 1965-ல் ஆளுங்கட்சியாகவிருந்த பேராயக்கட்சி (Congress Party) தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்து தமிழ்நாட்டு மாநில ஆட்சியை இழந்தது. ஆட்சியைக் கைவிடுமுன்னால் முதலமைச்சர் பக்தவத்சலம் 1965-ல் நடந்த துமுக்கிச் சூடுகளைப் பற்றி அரசிடமிருந்த எல்லா விவரங்களையும் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வடநாட்டு எழுத்தாளர் ஒருவர் 52 பேர் துமுக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள் என்று எழுதியிருக்கிறார். தமிழ்நாடைச்சார்ந்த ஒருவர் ஏறத்தாழ 500 பேர் கொல்லப்ப்பட்டார்கள் என்று கணித்திருக்கிறார். பல்வாறு காயமடைந்தோர் தொகை எத்துணையோ, ஆண்டவனுக்கே தெரியும்.

http://www.geocities.com/tamiltribune/annai/index.html

Print this item

  பிரதிபலிப்பு
Posted by: தமிழரசன் - 01-22-2005, 08:01 AM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

உதிர்த்துவிடாதே உன் புன்சிரிப்பை
உதிர்ந்து போவது நான்

தகர்த்துவிடாதே நம் பார்வைத்தொடர்பை
தகர்ந்து போவது நான்

தளர்த்திவிடாதே உன் நம்பிக்கையை
தளர்ந்துபோவது நான்

உலரவிடாதே உன் உதட்டின் ஈரத்தை
உலர்ந்து போவது நான்

சுழற்றிவிடாதே உன் பார்வைக்கயிற்றை
சுழன்று போவது நான்

மறுத்துவிடாதே என் விண்ணப்பத்தை
(வாழ்வை) மறுக்கப்போவது நான்

மறக்க நினைக்காதே மறந்துவிடுவேனென்று
(உன்னை) மறக்கப்போவதில்லை நான்


ஆஜோதா

Print this item

  புனர்வாழ்வுக்கழகத்தின் செயலை முடக்குவதற்காக
Posted by: வியாசன் - 01-21-2005, 10:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

புனர்வாழ்வுக்கழகத்தின் செயலை முடக்குவதற்காக அதன்பெயரில் வெளிநாடுகளிலிருந்து சிலதுரோகிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை ஆடைபோன்ற பொருட்களுடன் அதை தபு.கழகத்தின் பெயரில் அனுப்பிவிட்டு அதை அநாமதேய தொலைபேசிகள் மூலம் இலங்கை சுங்கப்பகுதிக்கு அறிவித்து விடுகிறார்களாம். இதற்கு பின்னால் ஒரு துரோகஇணையம் முழுமூச்சாக இயங்குகிறதாம்.

Print this item

  இப்படியும் கொடூரம்
Posted by: aathipan - 01-21-2005, 07:32 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/England_army_eraq/main.jpg' border='0' alt='user posted image'>


இப்படியும் கொடூரம்

http://www.maalaimalar.com/htmls/specialht..._eraq/photo.htm

Print this item

  அந்தமான் முழ்குவதாக வதந்தி: வெளியேறும் மக்கள்
Posted by: Vaanampaadi - 01-21-2005, 05:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஜனவரி 21, 2005

அந்தமான் முழ்குவதாக வதந்தி: வெளியேறும் மக்கள்

போர்ட் பிளேர்:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்குவதாக பரவிய வதந்தியை அடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.


ஜனவரி 21 (இன்று) அல்லது 26ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கிவிடும் என்று வதந்தி பரவியது. இதனையடுத்து அங்கிருந்து மக்கள் கப்பல்களில் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

எம்.வி. அக்பர், எம்.வி. நிக்கோபார், எம்.வி. நான்கௌரி, எம்.வி. ஸ்வராஜ்தீப், எம்.வி. ஹர்ஷவர்தன் ஆகிய கப்பல்களில் ஏதேனும் ஒன்றில் ஏறி, சென்னை, கொல்கத்தா அல்லது விசாகப்பட்டினத்திற்குச் செல்கின்றனர். இதனால் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

முத்துசாமி என்பவர் கூறுகையில், சென்னை செல்ல டிக்கெட் வாங்குவதற்காக நேற்று ராத்திரியிலிருந்து குடும்பத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீவை விட்டு வெளியேற விரும்புகிறோம். நான் இங்கு துணி வியாபாரம் செய்கிறேன்.

எனது சொத்துக்களை விற்காமல்தான் இப்போது செல்கிறேன். நிலைமை சீரானால் வருவேன். வந்து சொத்துக்களை விற்றுவிட்டுப் போய்விடுவேன். இப்போது உடமையை விட உயிர்தான் முக்கியம் என்றார்.

மக்கள் கூட்டத்தால் கப்பல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. பயணம் முழுவதும் (2 முதல் 4 நாட்கள் வரை) நின்று கொண்டே செல்ல மக்கள் தயாராக இருக்கின்றனர்.

இதற்கிடையே சிலர் உயரமான இடங்களை நோக்கி குடிபெயர்ந்துள்ளனர். கூட்டுறவுத்துறையில் அதிகாரியாக பணிபுரியும் அம்ரீத் சிங் என்பவர் கூறுகையில், படித்தவர்களிடம் கூட இத்தகைய வதந்திகள் பீதியைக் கிளப்பி விடுகின்றன. நான் கூட மலை மேல் வசிக்கும் எனது சகோதரனின் வீட்டிற்குச் செல்கிறேன் என்று கூறினார்.

வதந்திகளுக்கு எதிராக உள்ளூர் நிர்வாகம் எந்த வலுவான பிரச்சாரத்தையும் மேற்கொள்ளாததால் மக்களிடம் பீதி அதிகமாக உள்ளது. மேலும் கடல் மட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் இருக்கும் இடங்கள் குறித்த வரைபடம் மக்களிடம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

முருகன் என்ற கடைக்காரர் வரைபடத்தில் சிவப்புக் குறியிட்டிருக்கும் இடங்களைக் காட்டி, இந்த இடங்கள் தான் முதலில் மூழ்கப்போகிறது என்று கூறிகிறார்.

இந் நிலையில் அந்தமானின் துணைநிலை ஆளுநர் ராம் கப்சே கூறுகையில், இத்தகைய வதந்திகளுக்கு எந்த அறிவியல் ஆதராமும் இல்லை. யார் இந்த வதந்திகளைப் பரப்புவது என்பது தெரியவில்லை. மக்கள் இவற்றைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறினார்.

அந்தமானில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் லெப்டினென்ட் ஜெனரல் ஆதித்யா சிங், உலகின் எந்த புவியியல் வல்லுநரும் இத்தகைய அனுமானத்தைக் கூறவில்லை. எந்த ஜோதிடரும் அவ்வாறு கூறவில்லை. இந்த பீதி தேவையற்றது என்று கூறினார்.

தொடரும் நிலநடுக்கம்:

இதற்கிடையே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், நியூசிலாந்திலும் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

லிட்டில் நிக்கோபார் தீவின் மேற்குக் கரையோரத்தில் இன்று அதிகாலை 12.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக இது பதிவானது. இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

நியூசிலாந்தில்..:

அதேபோல் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனின் வடக்குப் பகுதியில் இந்திய நேரப்படி அதிகாலை 12.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.5 ஆக பதிவானது.

இதில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. கடைகளில் இருந்த பொருட்கள் அலமாரியில் இருந்து கீழே விழுந்தாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை இதே பகுதியில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஒரு தொடர்விளைவுதான் என்றும் யாரும் பீதியடையத் தேவையில்லை என்றும் நியூசிலாந்து புவியியல் நிபுணர் கெவின் பெனாக்டி கூறினார்.

1 மீட்டர் நகர்ந்த போர்ட் பிளேயர்:

இதற்கிடையே கடந்த மாதம் 26ம் தேதி சுனாமி அலைகள் தாக்கியதால் போர்ட் பிளேர் தீவு 1 மீட்டர் நகர்ந்துவிட்டதாக இந்திய கடல்வள மேம்பாட்டுத் துறை செயலாளர் ஹர்ஷ் குப்தா தெரிவித்தார்.

மேலும் சுனாமி தாக்குதலால் அந்தமான் தீவே லேசாகத் திரும்பிவிட்டதாகவும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை செயலாளர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் சாகர் பூர்வி, சாகர் பாஷ்சிமி, சாகர் கன்யா, சாகர் சம்படா ஆகிய கப்பல்களைக் கொண்டு சுனாமி பாதித்த பகுதிகளை ஆராய்ந்ததாகவும், முதல் கட்ட ஆராய்ச்சி முடிவுகள் வர ஆரம்பித்து விட்டதாகவும் குப்தா கூறினார்.

Source;Thatstamil

Print this item

  உதவி உதவி உதவி உதவி
Posted by: seelan - 01-21-2005, 04:37 PM - Forum: கணினி - Replies (6)

குடிலில் பாமினி எழுத்துரு மட்டும் தான் வேலைசெய்கிறது. ஆங்கிலம் யுனிகோட் வெலை செய்யவில்லை.
தயவு செய்து எப்படி தமிழ் யுனிக்கோட்டில் எழுதுவது என்று (குடிலில்)
விளங்கப் படுத்தமுடியுமா.(பாமினி இல்லை)

Print this item

  ஒளவையார் பற்றிய பாட்டு
Posted by: tamilini - 01-21-2005, 04:23 PM - Forum: தமிழும் நயமும் - Replies (142)

ஒளவையார் பற்றிய பாட்டு ஒன்றிருக்கு யாருக்கும் நினைவிருக்கா..?? ஒளவைக்கிழவி நம்கிழவி அமுதின் இனிய சொற்கிழவி என்று.. அந்தப்பாட்டு இருக்கிறவை தந்துதவுங்கள்... நினைவிருக்கிறவை ஒருக்கால்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  அல்வாய் அம்மன் ஆலயத்தில்...................
Posted by: Vaanampaadi - 01-21-2005, 12:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (18)

அல்வாய் அம்மன் ஆலயத்தில்
3 அடி ஆழத்தில் அதிசய நீரூற்று
அல்வாய்ப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் அதிசய நீரூற்று ஒன்றைக் கண்ட மக்கள் அதனை தீர்த்தமாகக்கருதி எடுத்துச்செல்கின்றனர்.
அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத் தில் மணி மண்டபத்துக்கான தூண்களை நிறுவுவதற்காகத் தோண்டப்பட்ட மூன்று அடி ஆழமுள்ள குழியொன்றிலிருந்தே இந்த அதி சய நீரூற்றுத் தோன்றியுள்ளது.
அல்வாய்ப் பகுதியில் 30 தொடக்கம் 35 அடிவரையான ஆழத்தில் நீரூற்றுக் காணப் படுவதே வழமை. இவ்வாறு மிகக் குறைந்த ஆழத்தில் சுவையுடன் கூடிய அதிசய நீரூற்று கிடைத்திருப்பது - அவ்வூர் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துமாரி அம் மன் ஆலயத்தில் இத்தகைய அதிசயம் நிகழ்ந் துள்ளமையால் அன்னையின் அருளே இது வெனத் தெரிவித்து வரும் மக்கள் மிகுந்த பக்தியுடன் அந்நீரைத் தீர்த்தம் என எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.

Print this item