Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 142 online users.
» 0 Member(s) | 140 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஆழப்பேரலையின் பின் ஆவிகளின் பீதி....
Posted by: KaviPriyan - 01-21-2005, 12:04 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (9)

ஆழப்பேரலையின் பின் ஆவிகளின் பீதி....

<img src='http://home.no/tsunamiineelam/images/ghost.jpg' border='0' alt='user posted image'>

மேலதிக விபரங்கள்
www.tsunamiineelam.com

Print this item

  பிரேசில் நாட்டில்.....
Posted by: Vaanampaadi - 01-20-2005, 09:26 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

பிரேசில் நாட்டில் 38 வயதுடைய Francisca Ramos dos Santos என்ற பெண் 16.7 pound (7.57 கிலோ) எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்...........

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050120/capt.xvc10101201208.brazil_big_baby_xvc101.jpg' border='0' alt='user posted image'>

Ademilton, a 16.7 pound (7.57 kilogram) baby boy is seen at the Albert Sabin Maternity Hospital in Salvador, 1,450 kilometers 900 miles northeast of Sao Paulo, in the state of Bahia, on Tuesday, Jan. 18, 2005. Francisca Ramos dos Santos, 38, gave birth to the healthy boy named Ademilton on Tuesday. He was the largest baby born at the Albert Sabin Maternity Hospital in its 12-year history, the hospital said. 'Obviously the baby was born by Caesarean section,' hospital director Rita Leal said. 'Both mother and baby are doing just fine.'(AP Photo/Eleoi Correa, Agencia Estado)

Print this item

  நோர்வே நாட்டு அனுசரணையாளர்கள்......
Posted by: Vaanampaadi - 01-20-2005, 09:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கை வந்தடைந்துள்ள நோர்வே நாட்டு சமாதான அனுசரணையாளர்கள், வெளியுறவுப் பிரதி அமைச்சர் விடார் ஹெல்கசன், சிறப்புத் தூதுவர் எரிக் சோல்ஹைம் ஆகியோர், இன்று இலங்கைத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினர். சுனாமி அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாகவும் இன்றைய பேச்சுவார்த்தைகள் அமைந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் நிதியமைச்சர் சரத் அமுனுகாம, நோர்வே மேம்பாட்டு உதவி அமைச்சர் மற்றும் பிரதி வெளியுறவு அமைச்சர், நோர்வே தூதர் மற்றும் திரு எரிக் சொல்ஹைம் ஆகியோருடன் சந்த்தித்து பேசியதாகவும் சுனாமி பேரழிவிற்குப் பின் நோர்வே உதவியை எப்படித் தரலாம் அதை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து ஆராய்வதுதான் இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் கூறினார்.

நிவாரணப்பணிகள் தங்கள் மூலமாகத்தான் நடைபெறவேண்டும் என்று விடுதலைப்புலிகள் கருதுவது தொடர்பாக அரசுக்கும் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது போல் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு பதிலளித்த சரத் அமுனுகம
நிவாரண உதவிகளை விடுதலைப்புலிகளே விநியோகிக்கப்போவதில்லை. அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற அமைப்பை வைத்திருக்கிறார்கள். எனவே அது ஒரு அரசு சாரா அமைப்புதான். அவர்களும் மற்ற அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றலாம் என்றார்.

மேலும், வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால், அங்குள்ள நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது; முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கூட அரசாங்க அதிபர்கள் இருக்கிறார்கள், அரசு இயந்திரம் செயல்படுகிறது. கிழக்கே பார்த்தீர்கள் என்றால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்கள் புலிகள் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அங்கு புலிகளால் மட்டும் இந்த வேலையை செய்யமுடியாது. அவர்களுக்கும் செய்ய உரிமை இருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் அவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று கவனமாக உழைக்கிறோம் என்றார் சரத் அமுனுகாம.

இதனிடையே நோர்வே வெளி விவகாரத் துறை அமைச்சர் யான் பேட்டர்சன் வெள்ளிக் கிழமை இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------

'பன்னாட்டு உதவி அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும்' - ஆய்வாளர்

இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் வெளியுறவுப் பிரதி அமைச்சர் விடார் ஹெல்கசன், சிறப்புத் தூதுவர் எரிக் சோல்ஹைம் ஆகியோர், இலங்கைத் தலைவர்களைச் சந்தித்த பின் வன்னி சென்று விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், இவர்கள் வன்னி வரும்போது, அந்த சந்திப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த கொழும்பு அரசியல் ஆய்வாளர் தமிழ்மாறன். சமாதான வழிமுறையில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் இலங்கை அரசுக்குப் பன்னாட்டு உதவி கிட்டும் என்கிற நிலை மாறி, தற்போது சுனாமிக்குப் பிறகான் புனரமைப்புப் பணிக்குப் பன்னாட்டு உதவி கிட்டியிருப்பது இலங்கை அரசின் பொருளாதார பலத்தைக் கூட்டியிருக்கிறது, எனவே இலங்கை அரசு இப்போதைக்கு இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை தரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் பன்னாட்டு உதவி மக்களுக்குப் போய்ச்சேருவதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு என்கிறார் தமிழ்மாறன்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக் கோரிக்கையின் அவசியத்தை புனரமைப்புப் பணிகள் நிறைவேற வேண்டிய தேவையுடன் இணைத்து, பன்னாட்டு அரங்கின் முன்பு வைக்க அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறுகிறார் தமிழ்மாறன்.

Print this item

  குஷ்பு நிதி சேகரிக்கிறார்
Posted by: Vaanampaadi - 01-20-2005, 09:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையில் அடுத்தமாதம் 12, 13 ம் திகதிகளில் கொழும்பில் உள்ள "Holiday Inn" ஹொட்டலில் நடைபெற இருக்கும் dance-cum-fashion ஷோவில் முக்கிய பங்கு எடுக்கும் நடிகை குஷ்பு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிக்கிறார்........
இலங்கையில் மிகவும் பிரபல்யமான குஷ்பு,இந்த ஷோவுக்குரிய ஒழுங்குகளை மேற்பார்வை செய்துவிட்டு இலங்கையில் இருந்து தற்போது திரும்பிய அவர் "இப்படியான நிகழ்வுகளில் தான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக" கூறினார்......
அவருடன் கூடச்சென்றிருந்த ஷோபா ரவிஷங்கர் கூறுகையில்,"குஷ்பு இலங்கையில் மிகவும் பிரபல்யமானவர். அவர் நடித்த படங்களால் மட்டுமில்லை, அவருடைய TV நிகழ்ச்சிகளைக்கூட மிகவும் விரும்பி பார்க்கின்றனர்" என்று கூறினார்......
இந்த ஷோவில் சென்னையில் இருந்து 8 பெண் மாடல்களும், 2 ஆண் மாடல்களும் பங்குபற்றுகிறார்கள்
இதில் முக்கியமானவர்கள்:சிம்ரன்,நிருப்மா மற்றும் சூர்யா ஆவர்......

Khushboo raising funds for Sri Lankan tsunami victims:

[India News]: Mumbai, Jan 20 : A dance-cum-fashion show in Sri Lanka next month featuring south Indian actress Khushboo is set to enthral her fans there while raising money for tsunami victims.

Khushboo will be anchoring "Swayambo", to be held Feb 12 and 13 at Holiday Inn in Colombo.

The actress, who has just returned from Sri Lanka - where she is very popular - after overseeing arrangements for the show, said she was glad to be associated with such an event.

"I am looking forward to 'Swayambo,'" the actress, who is as popular in Sri Lanka as in southern India, said in a press note.

VIBA, an event management company that conducts annual pageants in Chennai, is organising the event.

Shoba Ravishankar of VIBA who accompanied Khushboo to Colombo told IANS: "Khushboo is very famous in Sri Lanka; not only her films but also her TV shows are watched with great interest.

"Her TV serials jackpot and 'Kalki' on Jaya TV, where Khushboo wears designer costumes, especially 'cholis', are a rage in Sri Lanka," Ravishankar said, adding 300 such cholis would be auctioned at "Swayambo".

Shoba, a choreographer and fashion designer herself, said apart from Khushboo, there would be many other stars in the show, depending on their availability.

"The event would comprise fashion shows, dance and music, tête-à-tête with stars and auctioning of clothes."

The theme of the fashion show will be Indian and Indo-Western wear. It will showcase bridal wear, designer wear, fashion garments, jewellery, salwar- cholis, fashion fabrics, makeup and body paints.

There will be eight female and two male models from Chennai. Prominent among them are Simran, Nirupma and Surya. Miss Chennais Bindya of 2003 and Sitara of 2002 will also participate in the show.

The dances would be based on contemporary Indian themes and the dancers and musicians would all be from Tamil Nadu.

Sri Lanka's Shakthi TV and Maharaja TV are sponsoring the event. The first day of the show will be in association with Madhar-Shakti, a women's welfare organisation in Sri Lanka, and the Saiva Mangaiyar Kazhagam, Wellawatte.

Both these organisations are working for woman war victims or those who have become disabled due to landmines.


Source: Indo-Asian News Service

Print this item

  வெந்த புண்ணில் வேல்
Posted by: Vaanampaadi - 01-20-2005, 07:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

வெந்த புண்ணில் வேல் கோபியார் இலங்கை வருகை!

மன்னை மாதேவன்

உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுசெயலாளர் திரு.கோபி அன்னன் அவர்களின் இலங்கை வருகை, தமிழர்களின் இதயத்தில் வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்கியதாக அமைந்துவிட்டது. துயருற்றவருக்கு அளிக்கின்ற ஆறுதல் வார்த்தைகளில் கூட

"ஓர் கண்ணில் வெண்ணை, பிறிதொன்றில் சுண்ணாம்பு" என்னும் ஓரகம் காட்டிவிட முடியும் என்பதை நிருபித்திருக்கிறது. சமீப காலமாக, ஐக்கிய நாட்டுச் சபையின் பயன்பாடு மட்டும்தான் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என எண்ணியிருந்தோருக்கு, அதன் பண்பாட்டிலும் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறது. மேலும், தமிழர்களின் வாழ்வு நிலைக்கு இலங்கை அரசு தரும் மதிப்பீடுகளை, தாயக தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒருமுறை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.

கோபி அன்னன் அவரது வருகை தொடர்புடைய நிலையினை நாம் மூன்று அங்கங்களாக உற்று நோக்கவேண்டும்.

1. ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்.

2. சந்திரிகா அம்மையாரும் அவரது அரசும்.

3. தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்.

ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்:

கோபியாருக்கு எந்த இறை அசரீரி வந்து, துயருறும் தமிழர்கள் அனைவரும் "தவிர்க்கப்பட வேண்டிய கனிகள்" என்று ஆணையிட்டது? "சாத்தான்கள் ஓதிய வேதத்திற்கு "அவரும்" செவிசாய்த்து விட்டார் என்பது வெறுக்கத்தக்க, வேதனைத்தரும் செயல். இங்கு "அவரும்" என, இச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பது, பொருளற்றதல்ல. யார் இந்த கோபியார்? அவர் ஒரு தனிமனிதரல்ல அவர் விரும்பிய வண்ணம் செயல்பட, ஓர் பேரமைப்பின் தலைமையின் குறியீடு. அவ்வமைப்பும் எத்தகையது. நாடு என்ற எல்லைகளை மட்டுமல்ல, இன, மொழி மற்றும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்த ஒரு பொது அமைப்பு.

ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுமைத் தத்துத்வதை உணர்ந்துகொள்ள வேண்டுமாயின், அது தோற்றுவிக்கப்பட்ட காலச் சூழலை எண்ணிப்பார்க்க வேண்டும். இருபெரும் உலகமகா யுத்தங்கள் கற்பித்த பாடத்தின் வெளிப்பாடுதான் ஐக்கிய நாட்டுச் சபை. இன்றளவும் அம்வமைப்பு தன் நோக்காக (அதிகாரபூர்வகமாக) வரையறுத்துள்ளதில், முக்கிய அங்கமாய் விளங்குவது மனிதனின் தன்மானமும், சம உரிமையும். உலக சமாதானமும். அந்த தன்மானமும், சமத்துவமும் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுவதில் ஒட்டுமொத்த தமிழர்களும் மனம் குமுறாமல் வேறு என்ன செய்வது?

PREAMBLE

WE THE PEOPLES OF THE UNITED NATIONS DETERMINED

to save succeeding generations from the scourge of war, which twice in our lifetime has brought untold sorrow to mankind, and to reaffirm faith in fundamental human rights, in the dignity and worth of the human person, in the equal rights of men and women and of nations large and small, and

HAVE RESOLVED TO COMBINE OUR EFFORTS TO ACCOMPLISH THESE AIMS

Accordingly, our respective Governments, through representatives assembled in the city of San Francisco, who have exhibited their full powers found to be in good and due form, have agreed to the present Charter of the United Nations and do hereby establish an international organization to be known as the United Nations.

Ref: www.un.org


கோபியார் தமிழ் மக்களுக்கு என்ன சமாதானம் அளித்திருக்கிறார்? தான் தமிழர் பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் செல்வதையே விரும்பியதாகவும் ஆனால், ஒரு நாட்டின் விருந்தினர் என்ற வகையில் பயணத் திட்டங்கள் அரசே வகுக்க வேண்டியுள்ளதால் அது தன்னால் இயலவில்லை, ஆனால் மீண்டும் ஒருமுறை தமிழர் பகுதிக்கு வருவேன் என்பதும்தான்.

தமிழர் பகுதிக்குச் செல்லாத அவர் செயலை அவர் வார்த்தைகளிலேயே ஆய்வுசெய்தால் மனிதாபிமான அடிப்படையில் செல்ல விரும்பினேன் என்கிறார். ஆக செல்லாதது மனிதாபிமானமற்ற செயல்.

சரி..அவர் எதனால் தமிழர் பகுதிக்கு செல்ல விரும்பினார்? அதுதான் முறையானது, எனவேதான் விரும்பினார். அவ்வாறாயின் தான் விரும்பிய, ஒரு முறையான செயலை நிறைவேற்றிக்கொள்ள, நாடுகடந்த அதிகாரம் படைத்த ஓர் அமைப்பின் தலைமைக்கு இயலவில்லை என்றால் என்ன பொருள்? அந்த அமைப்பில் நிலவும் நடைமுறைச் சட்டதிட்ட சடங்குகளின் அவலம்தான் இதன் பொருள்.

மறுமுறை வருவேன் என்பது இதனிலும் வேதனைக்குரியது. ஒரு தெருவில் உள்ள இரு வீட்டில் துயரச் சம்பவங்கள் நிகழ்வுறுகின்றது. ஒரு இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறிய ஒருவர், ஒன்றுமே கூறாமல் சென்றுவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மற்ற இல்லத்திற்கு பிறிதொருமுறை வருகிறேன் என்பது எவ்வளவு உணர்வற்ற, அருவறுக்கத்தக்கது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வீட்டிற்கு பொருந்துகின்ற இதே நியதி எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

நடந்து முடிந்துவிட்ட ஒரு சாதாரண நிகழ்வுக்கு, மிக வருத்தி பொருள் கொண்டு, இத்துனை அளவுக்கு விமர்சிக்க வேண்டுமா? என நம்மில் சிலர் எண்ணக்கூடும். அத்தகையவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் விமர்சிப்பது தனிப்பட்ட கோபி அன்னன் அவர்களை அல்ல, நாம் அவரது தனிமனித சிறப்புகளை அறியாதவர்களுமல்ல. தமிழர் பகுதிக்கு வரவில்லையே என்ற விவாதம், அவர் இலங்கைக்கு வந்து சென்றபின் தோன்றியிருக்குமானால், திரு கோபியாரின் சமாதானம் மிகச் சரியாக பொருந்தும், நாமும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நடந்தது என்ன? அவர் மாமன்றத்தை விட்டு புறப்படும் முன்பாகவே இக்கோரிக்கை வேண்டுகோளாக வைக்கப்பட்டு, ஆய்வில் உள்ளதாகவும், அவர் வருவதற்கு விரும்புவதாகவும் கூறப்பட்ட பின்பாக தமிழர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நடைபெறுகிறது என்றால் என்னவென்றுரைப்பது?

சந்திரிகா அம்மையாரும், அவரது அரசும்!

கோபி அன்னன் அவர்களை, தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காததன் வாயிலாக, சந்திரிகா அம்மையார் அவரது நரித்தன அரசியலை மட்டுமா உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்? இன்னும் பல முக்கிய செய்திகளையும் உணர்த்தியுள்ளார்.

உலகமே கண்ணீர் வடித்த சுனாமி துயருக்கு பின்னால், அம்மையார் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. துயர்துடைப்பு பணிகளில், எந்தவித இன வேறுபாடுகளுக்கும் அல்லது திசை வேறுபாடுகளுக்கும் இடமளிக்காது, விடுதலைப் புலிகளோடு அரசு இணைந்து செயல்படும் என்றும், விடுதலைப் புலிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது. விடுதலைப் புலிகளும், அரசு ஒத்துழைக்குமானால், இணைந்து செயல்பட இணக்கம் காட்டினர். இன்றளவும் அவ்வாறே செயல்பட்டும் வருகின்றனர். அம்மையார் ஏதோ புலிகளின் மீது பாசம்கொண்டு, நேசம்கொண்டு அல்லது தமிழ் மக்களின் மீதும் அவர்கள் படும் துயர்மீதும் கரிசனத்துடன் இந்த வேண்டுகோளை விட்டுவிடவில்லை. பிறகு என்ன காரணம்?.

விடுதலைப் புலிகள் அமைப்பானது, துயர் நிகழ்வுற்ற அடுத்த நொடிமுதல், உலகே வியக்கும்படி தங்கள் மீட்பு பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் தொடங்கிவிட்டது. இவர்களது பணிகளின் துரிதத்தையும், நுட்பத்தையும் வெகுவாக பாராட்டி "வாஷிங்டன் டைம்ஸ்" பத்திரிக்கையின் செய்தியாளர் திரு. ஆர்தர் மாக்ஸ் அவர்கள் ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதுமளவுக்கு விடுதலைப் புலிகளின் செயல்பாடு அமைந்துவிட்ட பிறகு, அம்மையாரின் அரசுக்கு அவர்களின் உதவியின்றி வேறு வழியில்லை என்ற கையறு நிலையில்தான் வேண்டுகோள் விடப்பட்டதேயன்றி பிறிதொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளோடு புனரமைப்பு பணிகளில் இணைந்து செயல்படும் எனும் அறிக்கை ஓர்புறம், தமிழர்களை தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்குவது மறுபுறம் என நரித்தனத்தின் மொத்த வெளிப்பாட்டையும், நாகரிகமற்ற அரசியல் அழுக்குகளையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சாதாரண அனுதாப செய்தியைகூட (இதுபோன்ற கொடிய நிகழ்வுகளின் தாக்கத்திலும்) சிங்களர்களையும், தமிழர்களையும் சமமாக பாவித்து பகிர்ந்தளிக்க இயலாத இந்த சிங்கள அரசுதான், நாளை ஒருவேளை சமாதான நிலை ஏற்பட்டு, இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அரசு அமைந்தால், வடக்கையும், தெற்கையும் இரு கண்களாக பாவித்து நாட்டின் வளத்தையும் நலத்தையும் பகிர்ந்தளிக்கப் போகிறார்கள். என்னே இவர்தம் இழிநிலை?

அம்மையாரின் இவ்விருமுக வேடம், புலிகளை பொருத்தமட்டில் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதைக் காட்டிலும், ஒருவகையில் அவர்களுக்கு உதவவே செய்திருக்கிறது. அவர்களின் ஒழுங்குமிக்க உள் கட்டமைப்பிலும், நிர்வாக திறனிலும், உலக நாடுகள் புதிய பார்வையை செலுத்த தொடங்கிவிட்டன. இதன் வெளிப்பாடுதான், சுனாமி துயர்துடைப்பு பணிகளில் உதவிகள் புரியும் பல நாடுகளும், அம்மையார் அரசிற்கு பல அழுத்தத்தை கொடுக்க முனைந்திருப்பது.

தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்!

இலங்கை மண்ணிலும் உலக அரங்கிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் ஒட்டுமொத்த தமிழினமும் மிக ஊன்றி கருத்தில் கொண்டு செயல்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. அம்மையார் அரசு மட்டுமல்ல, இனி வரும் எந்த இலங்கை அரசும், தமிழர்களை முழுமையாக புறம்தள்ளிவிட முடியாது. இதுகாறும் இலங்கை மண்ணில் இன்னலுற்று வரும் தமிழர்தம் வாழ்வு, மீண்டும் தன் பழம் பெருமையோடு புகழ்மிகு வாழ்வாய் மலரும் காலம் கனிந்துவரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்கள் ஒன்றை மிக ஊன்றி சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

அன்றும், இன்றும் தமிழனிடம் எவையில்லை? ஒன்றே ஒன்றைத்தவிர? அன்பு, அறம், மறம், பணிவு, துணிவு என அனைத்துமுண்டு. ஆனால் எல்லாக் காலங்களிலும் தமிழனின் ஒற்றுமை மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்து வருகிறது. அனைத்தும் இருந்தும் தமிழர்களாகிய நாம் "நெல்லிக்காயென" சிதறுன்டு அல்லலுறக் காரணத்தை ஈராயிரமாண்டுக்கு முன்பாகவே, "பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்" என நம் பொய்யா மொழியார் புகன்றார். எனவே இனியேனும் அனைத்து வகை உட்பகைகளையும் ஒழித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு, தமிழர்தம் நல்வாழ்வு உயர விழைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

மன்னை மாதேவன்(muraveer@yahoo.com)

Source: Thatstamil

Print this item

  காத்திருப்பு
Posted by: shiyam - 01-20-2005, 06:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

அவள் வீட்டு கதவு
தானே திறக்கும்
உள்ளே அணைப்பதற் கென்றே
ஏற்றப்பட்ட விளக்கெளியில்
உரிவதற்காய் உடுத்திய
சேலையில்
கலைப்பதற்கென்றே செய்த
ஒப்பனையில்
கசக்குவதற்காக சில மலர்களை
காதேரம் வைத்து
காத்திருக்கிறாள்.
உடம்பில் எங்கும்
உணர்சியில்லை வயிற்றைதவிர
என்வாயிற்று இன்று
ஆணினமே அழிந்துவிட்டதா
சுனாமி வந்து
சுத்திக்கொண்டுபோய்வட்டதா
படுக்கைவிரிப்பு
பத்திரமாய் இருக்கிறதே
வைத்தபொட்டு
வைத்தபடியே இருக்கிறதே
அதுஅழியா விட்டால் அவளிற்கு
அமங்கலமல்லவா
செல்லாத இராத்திரி
சிறுகச் சிறுக
விடியும்பகல்
பட்டினிபகலா
எங்கோ ஒருகட்சி தலைவன்
தேர்தல் வாக்குறுதி
நான் ஆட்சிக்கு வந்தால்
அதை சட்டப்படி செய்யலாம்
அவள் நிமிர்கிறாள்
ஆகா அதுமடடும் நடந்துவிட்டால்
அரசாங்கமே ஆளனுப்புமா????

Print this item

  'றோவும்&quot; தமிழரின் உரிமைப்போரும்
Posted by: Mathan - 01-20-2005, 05:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

'றோவும்" தமிழரின் உரிமைப்போரும் -நீலன்

அண்டத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒருசில நவீன புலனாய்வு அமைப்புகளினுள் 'றோ"வும் (Research and Analyse Wing -RAW) ஒன்றாகத் திகழ்கின்றது.

தெற்காசியப் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களுக்காக இந்திய அரசு 1968 இல் 'றோ" அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பு இந்தியப்பிரதமரின் நேரடிப்பொறுப்பின் கீழ் புதுடில்லியில் லோதி வீதியிலுள்ள 13 மாடிக்கட்டடத்தை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றது.

இந்திய அரசு ஆரம்ப காலங்களில் 'றோ" விற்கென இரண்டு கோடி (இந்தியப் பணம்) நிதியை பாதீட்டில் ஒதுக்கியது. இன்று ஜயாயிரம் கோடி ரூபாய்களாக பாதீட்டுத்தொகை விரிவடைந்து, ஒரு பலமான நவீன உளவறியும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.

தெற்காசியாவைப் பொறுத்தவரையில். சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஸ்தரிப்பு அல்லது பிராந்திய ஆதிக்க முனைப்புக்கள், இந்தியாவின் கேந்திர, பொருளாதார நலன்களை ஸ்திரப்படுத்துவதற்கும், விஸ்தரிப்பதற்கும் பிரதான முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது.

இந்தியாவினது பிராந்தியப் பாதுகாப்பும், அயலுறவுக் கொள்கையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. இவைகள் இரண்டும் இணை கோடுகளாக செல்லக்கூடியதாக இருக்கின்றதனால் இவ் விடயங்களில் 'றோ" முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றது.

'றோ" சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்தும், இந்திய நலனுக்கு ஏற்ப அயல் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி ஆட்டம் காணச்செய்தும் வருகின்றது.

அயல் நாடுகளிலுள்ள இனச்சிக்கலின் ஊடாக அரசியல், இராணுவ, பொருளாதாரத் தளங்களில் சேதாரங்களை உண்டுபண்ணியும், சனநாயகத்திற்கான போராட்டங்கள் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் பின்கதவுக் காரியங்களை 'றோ' செய்தும் வருகின்றது.

இந்திய பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தை (கிழக்கு பாகிஸ்தான்) பிரித்தெடுப்பதற்கு வங்களாதேச விடுதலை வீரர்களாக முக்தி பாகினிக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. 'றோ" வினது உளவுச்சேவைச் சரித்திரத்திலேயே பாகிஸ்தானை வெற்றி கொண்ட மறைமுக நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

பாகிஸ்தான் ஒரு தனியான, பலமான தேச அரசுப் பண்பை கொண்டிருந்தது. அது 'றோ"வின் புலனாய்வுத் தந்திரோபாயப் பண்பினால் பாகிஸ்தான், வங்களாதேசம் என இரு நாடுகளாக 1971 இல் பிரிந்தன.

இந்த புலனாய்வு செயற்பாடுகளுக்குப் பின்னரும் இவ்விரு நாடுகளில் இத்தகைய மறைமுக வேலைகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவி விடவில்லை. அது தனக்குச் சார்பான உளவு வட்டத்துக்குள் நுழைவதற்காக வங்காள தேசத்திலுள்ள மதச் சார்பற்றவர்களுக்கும், இந்து சிறுபான்மையினருக்கும் மறைமுக ஆதரவுகளை வழங்கி இருகின்றது.

'றோ" கழுகுக்கண் கொண்டு கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானிலுள்ள சின்ட், புன்சாப் பிரிவினரிடையேயுள்ள பல்வேறு இனக்குழுக்கள் கருத்து முரண்பாடுடையவர்கள் மத்தியில் விரிவான உளவு வலையமைப்பை அமைத்துள்ளது.

இதனைவிடவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க திறமையான இந்து உறுப்பினர்களை ஆர்.எல்.எஸ் மூலம் ஆள் திரட்டல்களைச் செய்து அவர்களுக்கு உளவுப் பயிற்சிகளை வழங்கிக் களத்தில் இறக்கியுள்ளது.

உலகில் வல்லரசுகளின் பல்போட்டியில் சமநிலையேற்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படும் உளவுச் செயல்கள் உளவு வரலாற்று ஏடுகளில் தனித்துவம் வாய்ந்ததாகும்.

இவ்வாறே சர்வதேச ஆதிக்க சக்திகளின் கைகள் இலங்கைக்குள் உள்நுழைய தொடங்கியதும் இந்தியா இலங்கையை தனது செல்வாக்கினுள் கொண்டுவருவதற்காக ஏனைய வல்லரசுகளைப்போல் தமிழர் தேசிய இனச்சிக்கலை கையாளத்தொடங்கியது.

இந்தத் தந்திரோபாயப் பண்பு அடிப்படைக் கொள்கையின் அத்திவாரத்தில் இருந்து கொண்டு 'றோ" தமிழ் இளைஞர்களின் தீவிரவேட்கை உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது. அது உயர்பாதுகாப்பு நிலையங்களான புதுடில்லியிலுள்ள சக்ராட்டாவிலும், மையங்களை உருவாக்கி 'ஜந்து" தமிழ் குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கியது.

தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் நெருக்கடியை நல்லிணக்கப் போக்குடன் மாத்திரம் அணுகவேண்டிய நியாயம் அல்லது தேவை இருந்தபோதும் 'றோ" இந்திய நலன்களுக்கான உணர்வுகளுடன் அந்த நெருக்கடியை அணுகத்தலைப்பட்டது. இதுவே எல்லாக் குழப்பத்துக்கும் அடிப்படையாக அமைந்தது.

தமிழரின் இனச் சிக்கலை சரிவரப் புரிந்துகொள்ளாமல், தொலை நோக்குப் பார்வையெல்லாம் இல்லாம் 'றோ" உயர் குழாமினரின் விருந்து உபசார மேசையில் கதைக்கப்படும் விடயங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துத் திட்டங்களை வகுத்து வருகின்றது.

இந்தக் குறுகிய வெளிப்பாட்டில் ஏற்பட்ட ஒருவகைப் பண்பு மாற்றமாகத்தான் 'றோ" புலிகள் இயக்கத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன் நோக்கிய வீறு நடையைத் தடுத்து நிறுத்துவதற்கு தன்னாலான சகலதையும் செய்தது. ஆனாலும் புலிகள் பலம்பெற்றனர்.

தமிழரின் படையான புலிப்படை பலமாகியபோதே சிங்கள ஆளும் உயர்பீடம் நிலை குலைந்துபோய் இந்திய அரசின் காலடியில் சென்றுவிழுந்தது. புலிகளின் பலத்தால்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய வழி வகுத்தது.

இந்த யதார்த்த அரசியல் களநிலைவரங்களை பகுத்துணரும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளின் தொடர்ச்சியான போராட்ட வரலாற்று நீட்சி காரணமாக உள்ள தமிழரின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள பின்நிற்பது அல்லது தயங்குவதே கவலையானது.

தமிழர் ஒவ்வொரு வீடுகளிலும் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோய் போன்றவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்திராகாந்தி இறந்ததும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனது தாயை இழந்தது போலவே சோகத்தினுள் மூழ்கியிருந்தார்கள். இப்படியான தமிழர்களின் நல்லிணக்க உறவு போக்குகளை புரிந்துகொள்ளாது தமிழர்களுக்கு 'றோ" உயர் பீடமும், இந்தியக்கொள்கை வகுக்கும் உயர்பீடமும், இந்திய அரச உயர்பீடமும், துன்பதுயரங்களை கொடுத்து.

சிங்கள தேசத்தை மாறி, மாறி ஆட்சிசெய்யும் ஆளும் தரப்பினர் எல்லோரும் இந்திய நலனுக்கு விரோதமான அரசியல், இராணுவ, பொருளாதார கொள்கைகளையே கடைப் பிடித்துவந்துள்ளனர். வருகின்றனர். அதாவது நீல நிறக் கட்சிக்காரங்கள், பச்சைநிறக் கட்சிக்காரங்கள், சிவப்பு நிறக் கட்சிக்காரங்கள் என அனைத்தும் இந்தியாவிற்கு சார்பான போக்குகளைக்கொண்டிருக்கவில்லை என்பதை எந்தொரு ஆய்வுகளையும் செய்யாமலே வெளிப்படையாக 'றோ" உயர் பீடத்தினர் தெரிந்துகொள்ளக்கூடிய விடயம்.

87இல் ஜே.ஆர். ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளை இங்கு பார்ப்பதனால் உண்மையொன்று 'றோ'வுக்கு முன்னால் விரிந்து விட்டுச்சென்றுள்ளது.

அதாவது இதுவரை காலமும் புலிகளும், சிங்களப் படையினரும் சண்டை பிடித்த போது இந்தியா மத்தியஸ்தம் வகித்தது. இப்போது புலிகளையும், இந்தியாவையும் மோத விட்டு சிங்கள தேசம் மத்தியஸ்தம் வகிப்பதாகவும், சிங்களவர் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் சிங்களவரைப் பாதுகாத்து இந்தியர்களை இரத்தம் சிந்த வைத்துள்ளேன் என்று சொன்னார். அதற்கு அப்பால் ஜே.ஆர். முன்னால் இந்திய எதிர்ப்புணர்வு மிக்க சிங்களக் கடற்படை தாக்கப்பட்டு உயிர்தப்பிய நிகழ்வு நடந்தது.

இப்படியாக சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்புணர:வு ஆழமாகப் புரையோடி இருக்கும் சிங்கள தேசத்தின் இறைமையின் பாதுகாப்பிற்காக 'றோ" உதவ முன் நிற்பது தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் இறைமையின் பாதுகாப்பை அசட்டை செய்வது தமிழருக்கு கவலை தரும் நிகழ்வாகும்.

'றோ" தமிழரின் உரிமைப் போரை குறைத்து மதிப்பிடும் மனங்பாங்கையுள்ள முகவர் வட்டத்தினரால் வழங்கப்படும் தகவல்களையும் தமிழரின் உரிமை பற்றி சிங்கள உயர் குழாம் வட்டத்தினரால் திணிக்கப்படும் தகவல்களையும் மிள்பரிசீலனை செய்து தமிழர் தொடர்பான கொள்கை மீளுருவாக்கம் செய்யப்படும்போதே இந்திய அரசு நடுநிலை வகிக்க முடியும்.

'றோ'வின் வான் பறப்பியல் ஆய்வு மையம் (Aviation Research Center -ARC) சுறு சுறுப்பாக இயங்குகின்றது. கப்பல்களை கண் காணிக்க 'றோ" அமைப்பின் 2ஆவது பிரிவினர் ஓரிசாவில் டொனியர் (Donier) கடல் கண்காணிப்பு விமானத்தை உபயோகிக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் புலனாய்வுத் தகவல்களை வழங்கும் இணைப்பு நிலையமொன்றை நிறுவி, இணையம் (Internet) மின்னஞ்சல் (E-mail) செய்மதி வழித் தொலைபேசி (Inmarsat) வழித் தகவல்களை கண்காணித்தும் வருகின்றது.

இதுபோன்ற நவீனத்துவ வசதிகளைத் தாங்கிய பலம்மிக்க 'றோ" இந்தியாவினுள் உளவுவேலை செய்யப்படும் எந்தொரு சதுரங்க ஆட்ட நகர்தலையும் முறியடித்து வந்த போதிலும் சிங்கள தேசத்தில் ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களை தடுக்க எவ்வளவோ முயன்றும் 'றோ"வினால் வெற்றிபெறமுடியவில்லை.

சிங்கள தேசம் இந்தியாவோடு இணைந்து நடித்த நாடகத்தின் திரை உயர்த்தி, தனது உண்மை ரூபத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் சிங்கள இறைமைக்கு, குந்தகம் விளைவிக்கும் எந்தொரு தமிழர் சார்புநிலை அரசியல் பணிகளை இந்தியா செய்யாது என்கிற அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நடுநிலை, வகிக்கும் கண்ணோட்டத்தோடு தமிழரின் உரிமைப்போரை அணுகும் அரசியல்பண்போடு தங்களை அர்ப்பணிக்கவேண்டும். அதனை விடுத்து சிங்கள உயர் குழாமோடு ஒட்டி உறவாடித் தகவல்களைப் பெறும் நிரூபமா, நாராயணன், முனி போன்ற 'றோ" உயர்மட்டத்தினரின் ஆலோசனை கேட்கும் பட்சத்தில் இந்திய அரசை மீண்டும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே முடியும்.

மத்திய கிழக்கு நாடுகளினுள் இஸ்ரேல் தேசம் பலமாக இருப்பதனாலே அமெரிக்கா நலனுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படைக்கொள்கையில் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்து அத்தேசத்தை பலமாக்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பாடத்தை இந்திய வகுப்பாளர்கள் கற்றுக்கொண்டிருந்தபோதிலும் தமிழர் தாயகம் விடயத்தில் 'றோ"வினது தவறான அணுகு முறைப்போக்கை மாற்றியமைக்காது இருப்பது அறிவுபூர்வமான அரசியல் பண்பிலிருந்து விலகி நிற்பதாக அமைகின்றது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தாக்கம் தமிழர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சோகமான சூழலில் சிங்களதேசமும், ஆதிக்க சக்திகளும் பூகம்ப அரசிலையப் பயன்படுத்தி தங்களது இராணுவ நலன்களையே முதன்மையாக வேணி வருகின்றது.

சிங்கள தேசம் இந்தியாவினது இறைமையைப் பற்றி சிறிதும் சிந்திக்காது இந்திய நலனுக்கு பாதகமான நிலைப்பாட்டினை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் இன்றைய பூகம்ப அரசியல் சூழலை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தமிழரின் உரிமைப் போரை பலவீனப்படுத்தும் மறைமுக பணிகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவிவிட வேண்டிய நிலை ஒன்று உதயமாகியுள்ளது.

தமிழர் உரிமைப் போராட்டம் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்றுவிட்ட அரசியற் சூழ்நிலையிலும், தமிழர் எந்தொரு தீர்வை எட்டாத போதிலும் தமிழர்படை பலமாகவே உள்ளது. இந்தப் பலத்தை பலவீனமாகும். 'றோ"வின் உளவுச் செயற்பாடுகளால் தென்னிந்திய பிராந்திய பாதுகாப்பிற்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை. அது தர்மமாகவும் இருக்கப்போவதும் இல்லை.

ஆகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழரின் தொன்மையை ஏற்றுக்கொண்டும் தமிழரின் உரிமைப்போரின் நியாயத்தை புரிந்துகொண்டும், தமிழரின் துன்ப துயரங்களை மனிதாபிமானமாக அணுகியும் செயலாற்றக்கூடிய கொள்கைக்கு அத்திவாரம் இடவேண்டும். இதுவே தமிழர் தாயக விடயத்தில் இந்தியாவை நடுநிலைப்படுத்தும்.

ஈழநாதம்.

Print this item

  எது காதல்??
Posted by: tamilini - 01-20-2005, 04:35 PM - Forum: நகைச்சுவை - Replies (263)

ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?? அது பற்றி சொல்லுங்க.. உங்க அனுபவங்களையும் சொல்லுங்க...?? வெங்காயமாதிரியா காதல் இல்லை பெருங்காயம் மாதிரியா..??

Print this item

  திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை
Posted by: தமிழரசன் - 01-20-2005, 04:07 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (19)

சில காலங்களுக்கு முன்னர் இலண்டன் நகரில் தமிழர்கள் (இளைஞர்கள்) மத்தியில் கொலை கொள்ளை
என வன்முறை பெரியளவில் தாண்டவம் ஆடிவந்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் மீண்டும் "மின்சாரம்"
என்ற பெயரில் ஒரு இளைஞர் வன்முறைக் குழு உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ் இளைஞர்கள்
மீண்டும் கத்தி வாள் என பல ஆயதங்களோடு நடமாடுவதாகவும் - யாரையோ தாக்குவதற்கு தேடுவதாகவும்
அதே தகவல் உறுதிசெய்தது.

தாயகத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இயற்கை அழிவில்
பலி- அதே போன்று விடுதலைக்காக 18000 மாவீரர்கள் வீரச்சாவு - சிங்களவனின் வெறியாட்டத்தில்
100.000 மக்கள் பலி என
தமிழனின் இரத்த வரலாறு. இவ்வளவிற்கும் மத்தியில் தமிழ் தேசியத்தை பேரம் பேசும் ஒரு கூட்டம்.
இதுக்கு மத்தியில்
இவ்வாறு திண்டதை செமிக்கவைக்க ஒரு இளைஞர் கூட்டம்.

ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் !
சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?

Print this item

  பிரித்தானிய தகவல்கள்
Posted by: Mathan - 01-20-2005, 03:15 PM - Forum: புலம் - Replies (211)

<span style='font-size:30pt;line-height:100%'>பிரித்தானிய தேர்தல்

பிரித்தானியாவில் தற்போது பெருந்தொகையான தமிழருக்கு ஓட்டுரிமை உள்ளது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தால் அது தாயக மற்றும் புலத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?</span>

Print this item