Yarl Forum
பிரித்தானிய தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


பிரித்தானிய தகவல்கள் - Mathan - 01-20-2005

<span style='font-size:30pt;line-height:100%'>பிரித்தானிய தேர்தல்

பிரித்தானியாவில் தற்போது பெருந்தொகையான தமிழருக்கு ஓட்டுரிமை உள்ளது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தால் அது தாயக மற்றும் புலத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?</span>


- tamilini - 01-20-2005

நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:


- Mathan - 01-20-2005

இங்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு வலிமையுள்ள பெரிய கட்சிகள் இரண்டுதான். அவை தொழிற் கட்சியும் கன்சவேட்டிவ் கட்சியும். அவற்றில் டொனி பிளேயர் தலைமை வகிக்கும் தொழிற்கட்சியே ஓரளவு சிறுபான்மையினருக்கு ஆதரவான கொள்கைகளை கொண்டுள்ளது. ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.


- Mathan - 01-20-2005

tamilini Wrote:நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

என்னுடைய ஓட்டும் தற்போதைய சூழ்நிலையில் டொனி பிளேயரின் தொழிற்கட்சிக்கே,


- kuruvikal - 01-20-2005

வோட்டு சுத்த வேஸ்டு என்றாங்க பியோர் பிரிட்டடிஷ் பீப்பிள்...! கடந்த தேர்தலில் 50% சற்று மேலதிகமானோரே வாக்களித்திருந்தனர்...! அதுக்க 18 மில்லியனில 0.2 மில்லியனா இருக்கிற உவை வோட்டுப் போட்டுத்தான் பிளேயர் டைனிங் ஸ்றீரில குடியேறப் போறாராக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:

பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகள் கட்சி சார்ந்தவையல்ல...எனவே உவைக்கு வோட்டுப் போட்டு நம்ம தாயகச் சனத்துக்கு ஆகப் போகிறதும் ஒன்றுமில்ல...! Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-20-2005

ஏங்க ஒரு சாதாரன பொதுமகன் என்ற வகையில் ஓட்டுப்போட வேண்டியது நமது கடமை.. உரிமைகளை பெறுற மாதிரி கடமைகளையும் செய்யத்தானே வேணும்.. சிறிதுளி பெரு வெள்ளம் ஆச்சே.. Idea :wink:


- kuruvikal - 01-20-2005

tamilini Wrote:ஏங்க ஒரு சாதாரன பொதுமகன் என்ற வகையில் ஓட்டுப்போட வேண்டியது நமது கடமை.. உரிமைகளை பெறுற மாதிரி கடமைகளையும் செய்யத்தானே வேணும்.. சிறிதுளி பெரு வெள்ளம் ஆச்சே.. Idea :wink:

ஓ... போடலாமே...யார் சொன்ன தப்புன்னு...ஆனா செல்வாக்குச் செலுத்த முடியாது...! அது கனவு...! உங்களிட்ட இல்லாத ஒற்றுமையின்மையால...உங்கள விட இங்க இருக்கிற சிங்களவன் அதிகம் செல்வாக்குச் செலுத்துறான்....அதைப் புரிஞ்சுக்கோங்க...!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- Mathan - 01-20-2005

kuruvikal Wrote:வோட்டு சுத்த வேஸ்டு என்றாங்க பியோர் பிரிட்டடிஷ் பீப்பிள்...! கடந்த தேர்தலில் 50% சற்று மேலதிகமானோரே வாக்களித்திருந்தனர்...! அதுக்க 18 மில்லியனில 0.2 மில்லியனா இருக்கிற உவை வோட்டுப் போட்டுத்தான் பிளேயர் டைனிங் ஸ்றீரில குடியேறப் போறாராக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:

இரண்டு கட்சிகளும் ஏறத்தாள சம அளவான ஆதரவு நிலையில் இருக்கும் போது சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் ஓரளவுக்காவது உதவி செய்யும் அல்லவா?

kuruvikal Wrote:பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகள் கட்சி சார்ந்தவையல்ல...எனவே உவைக்கு வோட்டுப் போட்டு நம்ம தாயகச் சனத்துக்கு ஆகப் போகிறதும் ஒன்றுமில்ல...! Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


சரி உங்கள் கருத்தின்படி தாயக மக்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இங்கு வசிக்கும் புலம் பெயர் மக்களின் வாழ்க்கையில் அது குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இங்கு வாழும் தகுதியை அல்லது அகதி அந்தஸ்தை எதிர் நோக்கி பலர் காத்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களது எதிர்கால அந்தஸ்தை கட்சிகளின் குடியேற்ற கொள்கைகள் பாதிக்கின்றன. அது மட்டுமல்லாமல் இலங்கை பிரச்சனையில் தமிழர்களின் ஒரு முக்கிய சக்தியாக புலத் தமிழர்கள் இருக்கின்றார்கள். புலத் தமிழ்ர்களை பாதிக்கும் விடயங்கள் மறைமுகமாக தாயக தமிழர்களையும் பாதிக்கும்,


- Mathan - 01-20-2005

kuruvikal Wrote:
tamilini Wrote:ஏங்க ஒரு சாதாரன பொதுமகன் என்ற வகையில் ஓட்டுப்போட வேண்டியது நமது கடமை.. உரிமைகளை பெறுற மாதிரி கடமைகளையும் செய்யத்தானே வேணும்.. சிறிதுளி பெரு வெள்ளம் ஆச்சே.. Idea :wink:

ஓ... போடலாமே...யார் சொன்ன தப்புன்னு...ஆனா செல்வாக்குச் செலுத்த முடியாது...! அது கனவு...! உங்களிட்ட இல்லாத ஒற்றுமையின்மையால...உங்கள விட இங்க இருக்கிற சிங்களவன் அதிகம் செல்வாக்குச் செலுத்துறான்....அதைப் புரிஞ்சுக்கோங்க...!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

ஒற்றுமை இல்லாவிட்டால் இங்கு மட்டுமல்ல இலங்கையிலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒற்றுமை இன்ன்மையால் தான் இலங்கையில் ஒரு சில ஆசனங்களை ஈபிடிபி போன்ற கட்சிகள் கைப்பற்றின. 225 ஆசனங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 20 + ஆசனங்களை கொண்ட தமிழர் கூட்டமைப்பின் இருப்பு அரசை தீர்மானிக்க முடியாவிட்டாலும் நமக்கு தேவைப்படுகின்றது தானே?


- kuruvikal - 01-20-2005

பிரித்தானியாவில் சிறுபான்மையினருக்கு என்று ஒரு கட்சி இல்லை..சிறுபான்மையினர் என்றும் இல்லை...அப்படிச் சொன்னால் அது டிஸ்கிறிமினேசன்...உங்கள நாடு கடத்தக் கூடக் கோரலாம்....கவனம்..! எனவே பல்லின மக்களும் பிரித்தானியர்கள் என்ற வகையில்... உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இதர சிறிய கட்சிகளுக்கும் தான் வாக்களிப்பர்...எனவே அவர்கள் இனத்துவ ரீதியாக கட்சி சார்ப்பில் பிரிந்து பெரியளவில் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது...வேண்டுமானால் கவுண்சில் தேர்தல்களில்...செல்வாக்குச் செய்யலாம்...அதிலும் பிரித்தானியாவில் ஒரு சிங்களவர் கவுன்சிலராக வரக்கூடிய நிலை கூட இருக்கிறது..அங்குள்ள மக்களில் அநேகர் சேவைக்குத்தான் வாக்களிக்கின்றனரே தவிர ஆள் பார்த்தல்ல..! சிறீலங்காவில் உள்ளது போல அல்ல அங்கு அரசியல்...!

அகதிகள் விவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பாவிலேயே நெகிழ்வுப் போக்குடைய நாடு...அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களைக் கூட வெளியேறிப் போ என்று கட்டாயப்படுத்தும் நாடல்ல...அவர்களின் சட்டத்து ஒழுங்குக்கு மதிப்பளித்து இருக்கும் வரை இருக்க விடுவார்கள்..எனவே உவை வாக்குப் போட்டுத்தான் அகதிகள் உரிமைகள் நடைமுறைக்கு வரும் என்றால் அது சுத்தப் பித்தலாட்டம்...அது ஏற்கனவே நடைமுறையில் தான் இருக்கு...! ஆனா ஒரு விசயம்...நம்மாக்கள் செய்யிற திருவிளையாடல்கள் தான் தாயகத்தமிழரை மறைமுகமாக அதிகம் பாதிக்கிறது...எனவே குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- shiyam - 01-20-2005

குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...!
_________________
அவர்களிற்கே உங்கள் ஒட்டு


- Mathan - 01-20-2005

kuruvikal Wrote:பிரித்தானியாவில் சிறுபான்மையினருக்கு என்று ஒரு கட்சி இல்லை..சிறுபான்மையினர் என்றும் இல்லை...அப்படிச் சொன்னால் அது டிஸ்கிறிமினேசன்...உங்கள நாடு கடத்தக் கூடக் கோரலாம்....கவனம்..! எனவே பல்லின மக்களும் பிரித்தானியர்கள் என்ற வகையில்... உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இதர சிறிய கட்சிகளுக்கும் தான் வாக்களிப்பர்...எனவே அவர்கள் இனத்துவ ரீதியாக கட்சி சார்ப்பில் பிரிந்து பெரியளவில் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது...வேண்டுமானால் கவுண்சில் தேர்தல்களில்...செல்வாக்குச் செய்யலாம்...அதிலும் பிரித்தானியாவில் ஒரு சிங்களவர் கவுன்சிலராக வரக்கூடிய நிலை கூட இருக்கிறது..அங்குள்ள மக்களில் அநேகர் சேவைக்குத்தான் வாக்களிக்கின்றனரே தவிர ஆள் பார்த்தல்ல..! சிறீலங்காவில் உள்ளது போல அல்ல அங்கு அரசியல்...!

இங்கு பாகுபாடு பார்த்தால் டிஸ்கிறிமினேசன் என்று சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்பது உண்மைதான். இருந்து மறைமுகமாக இருப்பது வேறு விடயம்,

kuruvikal Wrote:அகதிகள் விவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பாவிலேயே நெகிழ்வுப் போக்குடைய நாடு...அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களைக் கூட வெளியேறிப் போ என்று கட்டாயப்படுத்தும் நாடல்ல...அவர்களின் சட்டத்து ஒழுங்குக்கு மதிப்பளித்து இருக்கும் வரை இருக்க விடுவார்கள்..எனவே உவை வாக்குப் போட்டுத்தான் அகதிகள் உரிமைகள் நடைமுறைக்கு வரும் என்றால் அது சுத்தப் பித்தலாட்டம்...அது ஏற்கனவே நடைமுறையில் தான் இருக்கு...!


யார் ஆட்சிக்கு வருகின்றார்கள், யார் உள்துறை கொள்கைகளை தீர்மானிக்கின்றார்கள் என்பது குடியேறிகளை நிச்சயமாக பாதிக்கின்றது, உதாரணமாக பழைய உள்துறை செயலர் டேவிட் பிளன்கட் கொண்டுவந்த குடும்பத்தாருக்கான வதிவிட உரிமை சட்டத்தின் மூலம் இங்கு குடும்பமாக வதிவிட உரிமை இல்லாமல் இருந்த பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்தது, இந்த திட்டத்தை கன்சவேட்டிவ் கட்சி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது,



kuruvikal Wrote:ஆனா ஒரு விசயம்...நம்மாக்கள் செய்யிற திருவிளையாடல்கள் தான் தாயகத்தமிழரை மறைமுகமாக அதிகம் பாதிக்கிறது...எனவே குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


திருவிளையாடல் செய்பவர்களை நீங்கள் சொன்னது போல் தான் செய்யவேண்டும் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை,

அகதிகள் உரிமைகள் நடைமுறை இல்லை என்றோ நெகிழ்வு போக்கு இல்லை என்றோ நான் சொல்லவில்லை அப்படி இருப்பதால் தான் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட பலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வருகின்றார்கள்,


- kuruvikal - 01-20-2005

பிரித்தானியா கூட ஐநா விதிகளுக்கு அமைவான அகதிகள் கொள்கையத்தான் அடிப்படையாகக் கொண்டு சட்டவரைபுகளை வைத்திருக்கிறது...! சிறிய சிறிய சட்ட நெகிழ்வுகளால் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...தொழிற்கட்சி கொண்டு வந்த சட்டமாற்றம் கூட நாட்டின் நன்மை கருதியதே அன்றி அகதிகளின் என்று முற்றாகக் கூற முடியாது...!

குறிப்பாக குடும்பமா இருந்தும் அகதியாக இருந்து அரச பணத்தைச் சுரட்ட அனுமதிப்பதைவிட நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கி பிழைப்புக்கு அனுப்புறது அரசுக்கு இலாபம்...! தொழிற்கட்சி தன்னுடைய கொள்கைக்கு ஏற்ப சிறிய மாற்றங்களை தந்ததே ஒழிய அடிப்படை சட்டங்கள் மாற வாய்ப்பில்லை...எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து அகதிகளுக்கான ஒரு பொது சட்ட வரைபைத் தீட்டும் திட்டத்தை பிரிட்டன் பரிசீலித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- Mathan - 01-20-2005

kuruvikal Wrote:பிரித்தானியா கூட ஐநா விதிகளுக்கு அமைவான அகதிகள் கொள்கையத்தான் அடிப்படையாகக் கொண்டு சட்டவரைபுகளை வைத்திருக்கிறது...!

பெரும்பான்மையான மேற்கத்தைய நாடுகள் ஐநாவின் அகதிகளுக்கான ஜெனீவா உடன்படிக்கையை ஏற்று அதன் அடிப்படையில் சட்ட வரைபுகளை வைத்திருந்தாலும் அவற்றை அமுல் படுத்தும் முறைகளை வேறுபட்டவை. நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் மற்றய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரித்தானியா இந்த விடயத்தில் நெகிழ்வு போக்கை காண்பிக்கின்றது. ஒரே அடிப்படையாக இருந்தபோது இவை எல்லாம் வேறுபாடுகள் தானே.

kuruvikal Wrote:சிறிய சிறிய சட்ட நெகிழ்வுகளால் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...தொழிற்கட்சி கொண்டு வந்த சட்டமாற்றம் கூட நாட்டின் நன்மை கருதியதே அன்றி அகதிகளின் என்று முற்றாகக் கூற முடியாது...!

குறிப்பாக குடும்பமா இருந்தும் அகதியாக இருந்து அரச பணத்தைச் சுரட்ட அனுமதிப்பதைவிட நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கி பிழைப்புக்கு அனுப்புறது அரசுக்கு இலாபம்...! தொழிற்கட்சி தன்னுடைய கொள்கைக்கு ஏற்ப சிறிய மாற்றங்களை தந்ததே ஒழிய அடிப்படை சட்டங்கள் மாற வாய்ப்பில்லை...

சிறிய சட்ட நெகிழ்வாக இருந்த போதும் குடும்பத்தாருக்கான வதிவிட உரிமை சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வதிவுரிமை பெற்றனர். அவை நாட்டின் நன்மை கருதி இருந்தாலும் சரி அகதிகள் நலன் கருதி இருந்தாலும் சரி வதிவிட உரிமை கிடைத்தது தானே. மக்கள் வேலை அனுமதி இன்றி களவாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்துக்கும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வதிலும் பார்க்க வதிவிட உரிமையுடன் அதிக சம்பளத்துக்கு வேலை செய்யலாம் அல்லவா? அரசுக்கும் வரி கிடைக்கும் மக்களுக்கும் வேலை சம்பளம் கிடைக்கும்.


kuruvikal Wrote:எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து அகதிகளுக்கான ஒரு பொது சட்ட வரைபைத் தீட்டும் திட்டத்தை பிரிட்டன் பரிசீலித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

இந்த பொது வரைவு வந்தால் அதி நிச்சயம் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பாதகமாக அமையும் :!:


- kuruvikal - 01-20-2005

இப்போ சட்டத்தின் பிரகாரம் புலிகளைத் தடை செய்தாலும் அவர்களை பிரிட்டனில் அரசியல் ரீதியாக மறைமுகமாக செயற்பட பிரிட்டன் அனுமதிக்கிறது..ஆனால் அமெரிக்காவில் இந்த அளவுக்கு நெகிழ்வுத் தன்மையில்லை...! அது அவ்வவரசுகளின் ராஜதந்திர நகர்வுகளில் தங்கியுள்ளதே அன்றி...அது பிளேயரின் கட்சி கொள்கையல்ல நடைமுறைப்படுத்த...! அதேபோற்தான் அகதிகள் பிரச்சனையிலும் கட்சி சார்பான கொள்கையைக் கூட சட்ட வரைபாக்கும் போது அனைத்துக் கட்சி அங்கீகாரமும் கோரப்பட்டு...நாட்டு நலன் மக்களின் நலன் கருதித்தான் செயற்படுத்தப்படுமே ஒழிய ஒரு சில ஆயிரம் வாக்குகளால்...அதைச் சாதித்ததாகக் கொள்ள முடியாது...அதைத்தான் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்...!

மற்றும்படி இதில் வாதத்திற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Kishaan - 01-21-2005

tamilini Wrote:நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

என்ரை வோட் யோன் கெறிக்குதான் எப்பவுமே!!

அட அவர் அமெரிக்காவெல்லே.. மறந்து போயிட்டன்.. :roll:


- kavithan - 01-21-2005

நல்ல காலம் ஜே.ஆர் க்கு என்று கூறவில்லை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 01-21-2005

தொழிற்கட்சி குடிவரவுக் கொள்கையில் இறுக்கமாகத்தான் உள்ளது. கொன்சவேர்டிக் கட்சிக்கும் லேபருக்கும் இடையில் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இரு கட்சிகளுமே மேற்தட்டு வர்க்கத்தை தொடர்ந்து மேற்தட்டிலும், கீழ்மட்ட தொழிலாளிகளை தொடர்ந்து கீழ்மட்டத்திலும் வைத்திருப்பார்கள். வருமான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது.

லிபரல் டெமோக்கறிற்றின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு மிகவும் ஆதரவானது. அத்துடன் அவர்கள்தான் ஈராக் யுத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்.


- kuruvikal - 01-21-2005

kirubans Wrote:தொழிற்கட்சி குடிவரவுக் கொள்கையில் இறுக்கமாகத்தான் உள்ளது. கொன்சவேர்டிக் கட்சிக்கும் லேபருக்கும் இடையில் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இரு கட்சிகளுமே மேற்தட்டு வர்க்கத்தை தொடர்ந்து மேற்தட்டிலும், கீழ்மட்ட தொழிலாளிகளை தொடர்ந்து கீழ்மட்டத்திலும் வைத்திருப்பார்கள். வருமான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது.

லிபரல் டெமோக்கறிற்றின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு மிகவும் ஆதரவானது. அத்துடன் அவர்கள்தான் ஈராக் யுத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்.

நீங்கள் சிறுபானமையினர் என்று பிரிட்டனில் குறிப்பிட்டது யாரை...அவர்களைப் பிரதிநிதித்துவம் கட்சி எது...அவர்களின் வாக்குகளைக் கொண்டு பாராளுமன்றத்தில் வரும் புதிய சட்டத்திருத்தங்கள் மீது எந்தளவு ஆதிக்கம் செய்ய முடியும்...இவற்றைச் சொல்லுங்கள்...அதன் பின் நாம் சொல்கிறோம்...0.2 மில்லியனாக உள்ள ஈழத்தமிழ் பூர்வீக பிரித்தானிய குடியேற்றவாசிகள் எதைச் சாதிக்க முடியும் என்று...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 01-28-2005

<img src='http://www.labour.org.uk/fileadmin/labour/template/conference/howard_inside.gif' border='0' alt='user posted image'>

http://www.labour.org.uk/ac04torycuts