Yarl Forum
காத்திருப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காத்திருப்பு (/showthread.php?tid=5707)



காத்திருப்பு - shiyam - 01-20-2005

அவள் வீட்டு கதவு
தானே திறக்கும்
உள்ளே அணைப்பதற் கென்றே
ஏற்றப்பட்ட விளக்கெளியில்
உரிவதற்காய் உடுத்திய
சேலையில்
கலைப்பதற்கென்றே செய்த
ஒப்பனையில்
கசக்குவதற்காக சில மலர்களை
காதேரம் வைத்து
காத்திருக்கிறாள்.
உடம்பில் எங்கும்
உணர்சியில்லை வயிற்றைதவிர
என்வாயிற்று இன்று
ஆணினமே அழிந்துவிட்டதா
சுனாமி வந்து
சுத்திக்கொண்டுபோய்வட்டதா
படுக்கைவிரிப்பு
பத்திரமாய் இருக்கிறதே
வைத்தபொட்டு
வைத்தபடியே இருக்கிறதே
அதுஅழியா விட்டால் அவளிற்கு
அமங்கலமல்லவா
செல்லாத இராத்திரி
சிறுகச் சிறுக
விடியும்பகல்
பட்டினிபகலா
எங்கோ ஒருகட்சி தலைவன்
தேர்தல் வாக்குறுதி
நான் ஆட்சிக்கு வந்தால்
அதை சட்டப்படி செய்யலாம்
அவள் நிமிர்கிறாள்
ஆகா அதுமடடும் நடந்துவிட்டால்
அரசாங்கமே ஆளனுப்புமா????


- Kishaan - 01-20-2005

ம்ம்ம்... ம்ம்..ம் :roll:


- kuruvikal - 01-20-2005

சியாம்..உங்கள் கவிதை எங்கள் பார்வையில் ஒழிக்கப்பட வேண்டிய சமூக ரசியங்கள் சிலவற்றுள் ஒன்றுள் துணிந்து கை வைத்திருக்கிறது...உங்கள் துணிவுக்குப் பாராட்டலாம்...! ஆனா அதென்ன "ஆணினமே அழிந்துவிட்டதா" என்று ஒரு கேள்வி கேட்டு ஒட்டுமொத்த ஆணினத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போல கவிதை நடை பயில்கிறது.... அது தப்பு....! Idea

இப்படியான அவள்களும் மனிதர்கள் தான்...அவர்களுக்கு அவர்கள் தப்புக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதைவிட...வேற நல்ல மார்கக்த்தைக் காட்ட வழிகாட்டலாமே.....! Idea


- kavithan - 01-20-2005

வாழ்த்துகள் சியாம் கவிதை அருமை .. கலக்குங்கள் தொடர்ந்து <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shiyam - 01-21-2005

[quote="kuruvikal"]சியாம்..உங்கள் கவிதை எங்கள் பார்வையில் ஒழிக்கப்பட வேண்டிய சமூக ரசியங்கள் சிலவற்றுள் ஒன்றுள் துணிந்து கை வைத்திருக்கிறது...உங்கள் துணிவுக்குப் பாராட்டலாம்...! ஆனா அதென்ன "ஆணினமே அழிந்துவிட்டதா" என்று ஒரு கேள்வி கேட்டு ஒட்டுமொத்த ஆணினத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போல கவிதை நடை பயில்கிறது.... அது தப்பு....! :kuruvikal


மொத்த ஆணினத்தையும் குற்றம் சாட்டவில்லை அந்த பெண்ணின் இடத்திலிருந்து யோசிக்கும்போது அவளிற்கு அப்படித்தான் தோன்றும்..அதைவிட அவர்களிற்கு வேறு ஒரு நல்ல வழி காட்டுவதென்பது நடைமுறைக்கு சாத்தியபடாத ஒன்று உதாரணத்திற்கு இந்தியாவில் எத்தனை லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் எப்படி வேறு வேலைதேடிக்கொடுப்பது. அதைவிட அதை சட்டமாக அங்கீகரித்து விட்டால் தொழிலாளிகளிற்கான பாதுகாப்பும் இருக்கும் பாலியல் நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும் .பெண்கள் கடத்தல் விற்பனை என்கிற குற்ற செயல்களையும் கூட கட்டுப்படுத்தலாம் இல்லையா?? என்ன போலிசுக்கு வருமானம் குறையும்