| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 183 online users. » 0 Member(s) | 180 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஜார்ஜ் புஷ் மீண்டும் இன்று பதவி ஏற்பு |
|
Posted by: Vaanampaadi - 01-20-2005, 02:24 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.allposters.com/IMAGES/ATA/24590GB.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் மீண்டும் இன்று பதவி ஏற்பு: 3 நாட்கள் கோலாகல விழா
வாஷிங்டன், ஜன. 20-
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்சும், ஜான்கெரியும் போட்டியிட்டனர். இதில் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார்.
தேர்தல் தொடர்பான நடை முறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்க செனட் கூட்டத்தில் புஷ் வெற்றி பெற்றதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இன்று 2-வது முறையாக பதவி ஏற்கிறார். இதற்காக வாஷிங்டன் நகரில் கோலகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா முழுவதிலும் இருந்தும் ஏராள மானோர் வாஷிங்டன் நகரில் வந்து குவிந்துள்ளனர். புஷ் பதவி ஏற்பு விழா 3 நாள் கொண்டாட்டமாக நடக்கிறது.
உறைய வைக்கும் கடும் குளிர் இடையே இசை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும், விருந்துகளும் தொடங்கி விட்டன. அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு நடைபெறும் முதல் பதவி ஏற்பு விழா என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக்கப் பட்டுள்ளது.
பதவி ஏற்கச் செல்லும் முன்பு ராணுவ வீரர்களுக்கு புஷ் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பிரார்த் தனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2-வது முறை யாக அதிபர் பதவி ஏற்பது குறித்து புஷ் கூறியதாவது:-
அதிபர் பதவி ஏற்கும் முன்பு அமெரிக்காவின் சுதந்திரத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது மிகவும் பொருத்தமானது. அமெரிக்க மக்களுக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் தீவிரவாதிகளின் சவாலை சந்திப்போம். சுதந்திரமாக வாழலாம் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
|
|
| த்ரிஷா |
|
Posted by: Mathan - 01-20-2005, 01:55 PM - Forum: சினிமா
- Replies (534)
|
 |
ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா
By JBR
<img src='http://cinesouth.com/images/new/20012005-THN12image1.jpg' border='0' alt='user posted image'>
"பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்."
இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை.
"விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் யார்தான் தப்பாக பேசமாட்டார்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு நண்பரை கட்டிப் பிடிப்பதில் தவறில்லை."
த்ரிஷா கிசுகிசு எழுதுகிறவர்களை கண்டிக்கிறாரா... இல்லை அவர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் அளிக்கிறாரா? சிண்டைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
த்ரிஷாவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் விஜய். இவர் த்ரிஷாவுக்கு நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார் என்பது லேட்டஸ்ட் வதந்தி. 'கில்லி'யின் பிரமாண்ட வெற்றியை கொண்டாட விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து பார்ட்டி கொடுத்தனர். அது த்ரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டியாகவும் இருக்கவே... பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. "எங்கள் நட்பைத் தவறாகப் புரிந்துக் கொண்டு எனக்கும் விஜய்க்கும் தொடர்பு இருப்பதாக கதை கட்டினார்கள்" என்று சொல்லும் த்ரிஷாவுக்கு, கிசுகிசுக்கள் ஒரு பொருட்டேயில்லை. திருமணமான ஒருவருடன் இணைத்து வதந்தி கிளப்பியதுதான் இவரது வருத்தம். விஜய் பற்றி குறிப்பிடும் போது, "விஜய்யுடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் எந்த ஒரு பந்தத்தையும் நான் ஏற்க மாட்டேன்" என்கிறார். அப்படியானால் தற்காலிகமான பந்தத்தை ஏற்பாரா?
இப்படி த்ரிஷாவின் பேச்சில் பலவித சந்தேகங்கள். பார்ட்டிகளில் கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதால் நான் குடிகாரியா? என்று அறிவுப்பூர்வமான இன்னொரு கேள்வியும் கேட்கிறார். அப்படியானால் குடிக்காமல் வெறுமனே மதுக்கோப்பை மட்டும் எதற்கு?
பதிலளிக்க முடியாத இந்த சுவாரஸ்ய கேள்விகளை நாம் கேட்பது நாகரீகம் அல்ல. நீங்களே த்ரிஷா உதிர்த்த முத்துக்களை படித்து கேள்விக்கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு வசதியாக அவர் சொன்னவை கீழே உங்களுக்காக...
* எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்.
* என் மீது வந்து விழும் ஆணை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. எனது ஆண் நண்பர்களுக்கு நான் எனது பங்கை (?) கொடுத்திருக்கிறேன்.
* இயல்பான உறவுகள் மூன்று முதல் ஆறுமாதம் வரைதான் நீடிக்கிறது.
* எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது.
* நான் ப்ரியதர்ஷனை சந்தித்ததை அம்மா எதிர்த்தார்.
* நண்பர்களை இழந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இதை எனது தாயார் விரும்பமாட்டார். என்னுடன் பார்ட்டிகளுக்கு வருவதையே தவிர்ப்பார்.
த்ரிஷாவின் பொன் மொழிகள் இப்படி நீண்டு கொண்டே போகிறது. த்ரிஷாவின் ஆண் நண்பர்கள்... கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
|
|
|
| இனியவளே |
|
Posted by: தமிழரசன் - 01-20-2005, 10:10 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (20)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>இனியவளே </span>
வானம் பார்த்த பூமியாய்
வரண்டிருந்த என் மனதில்
கார்மேகமாய் கனநேரம்
காட்சிதந்து கனியவைத்தாய்..
காதலுடன் காத்திருந்தேன்
நீயோ கானல் நீராய் மாறி
காணாமலே போனாய்..
மனமென்னும் மாநிலத்தில்
பூகம்பத்தை புகுத்தி விட்டு
நீராவி போல நீயும்
மறைந்தே போனாய்..
நீந்தத்தெரியாத என்னை
நீரில் தள்ளிவிட்டு
நிதானமாய் நீயும்
நித்திரை செய்கின்றாய்..
முடியவில்லை முயன்று பார்க்கிறேன்
முகிலிலே உன்னை முகர்ந்து
நானும் ழூச்சுவிட..
காத்திருக்க நானும் கஷ்டப்படவில்லை
இழவுகாத்த கிளியாகவும் இஷ்டபடவில்லை
இடியாக விழுவாயா?இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே…
thilee@gmail.comதமிழரசன்
|
|
|
| உளரீதியான பயிற்சி அவசியம் |
|
Posted by: hari - 01-20-2005, 05:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
[size=14]எமது குழந்தைகள், இளம் சிறார்கள் ஆகியோர் மிக மோசமான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இவ்வனர்த்தத்தின் பின் அவர்களது உளநலத்தில் கூடிய அக்கறை கொள்ளவேண்டியது எங்களது முன்னுரிமையாகவுள்ளது. மரபு ரீதியான அணுகுமுறைகளை விடுத்து எமது குழந்தைகளை விரைவாக மகிழ்ச்சிகரமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய புறச்சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டி யுள்ளது. விளையாட்டு மைதானங்கள் மகிழ்ச்சிகரமான பாடசாலைச்சூழல் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடைந்த அதிர்ச்சி அனுபவத்திலிருந்து அவர்களை விடுவிக்கமுடியும். <b> - தேசியத் தலைவர்- </b>
தெற்கில் மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் வெளி நாட்டவர்கள் அனேகமானவர்கள் அவர்கள் செய்யும் வேலைதிட்டங்களை படங்கள் எடுத்து தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்காக எனது இணைய மையத்துக்கு வருவது வழக்கம். வந்தவர்கள் கொண்டு வந்த படங்களில் நான் சுட்ட படங்களை இங்கு பிரசுரித்துள்ளேன், இப்படியான உளரீதியான வேலைத்திட்டங்கள் எங்கள் பிரதேசத்திலும் நடக்க வழிசெய்யவேண்டும்!
<img src='http://img124.exs.cx/img124/47/untitled359.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img124.exs.cx/img124/9003/untitled360.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img124.exs.cx/img124/7092/untitled361.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற |
|
Posted by: ragavaa - 01-20-2005, 05:49 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (67)
|
 |
<i><b>கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற</b></i>
தேவையான மென்பொருட்கள்
1. TMPGEnc Plus 2.521 or later ( http://download.pegasys-inc.com/download_f...63.181-Free.zip )
2. VirtualDUB 1.5.10 or later (http://puzzle.dl.sourceforge.net/sourcef...-1.6.3.zip )
3. Nero Burn 5.5 or later ( http://www.ahead.de )
மென்பொருட்களை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
உங்களது video file 70 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் VirtualDUB ன் உதவியுடன் பிரிக்கவும்.
குறிப்பு: திரைக்காப்பானை நிறுத்திவிடுவது நன்று.
வேறு இயக்கசெயல் எதுவும் செய்யாது இருப்பது நன்று
VirtualDUB ஐ இயக்கவும்
File-> open video file
video file ஐ தெரிவு செய்யவும்.
<img src='http://img136.exs.cx/img136/6100/vd.jpg' border='0' alt='user posted image'>[/img]
Trackbar , mark in and mark out உதவிகொண்டு படத்தின் நேரத்தை தெரிவுசெய்யவும்.
ஆரம்ப நிலையில் mark in ஐ அழுத்தவும். Trackbar ஐ அழுத்தியபடி நகர்த்துவதன் முலம் நேரத்தை தெரிவுசெய்யவும். முடிவு நிலையில்(70 நிமிடம்) mark out ஐ அழுத்தவும.
Menu bar ல் Video அழுத்தி direct stream copy ஐ தெரிவுசெய்யவும.
பிறகு File-> Save as Avi தெரிவுசெய்து படத்தை சேமிக்கவும்.
மிகுதிப்படத்திற்கு மேற்குறிப்பிட்டபடி செய்யவும்.
இப்பொழுது TMPGEnc ஐ இயக்கவும.
முதலில் வரும் Project Wizard ஐ cancel செய்யவும்.
<img src='http://img150.exs.cx/img150/1807/tmpge.jpg' border='0' alt='user posted image'>
Browse அழுத்தி படத்தை தெரிவு செய்யவும்.
இல 2 ப் பகுதியை கவனிக்கவும்.
குறிப்பு:
23.976 fps ஆகஇருந்தால் FILM
25 fps ஆகஇருந்தால் PAL
29.97fps ஆகஇருந்தால் NTSC
720x480 (NTSC)
720x576 (PAL)
704x480 (NTSC)
704x576 (PAL
352x480 (NTSC)
352x576 (PAL)
352x240 (NTSC)
352x288 (PAL)
மேற்குறிப்பிட்டதை கவனித்த பின் ( இல.3 )Load ஐ அழுத்தவும்.
புதிதாக வரும் திரையில் videocd NTSC / NTSCFilm / PAL தெரிவு செய்து ( பகுதி 2 ல் கவனித்தததிற்கு ஏற்ற வகையில் ) Open ஐ அழுத்தவும்.
( இப்பொழுது பகுதி 2 மாற்றம் அடையும்)
பின்பு ( இல.4 ) Setting-> video -> Motion Search precision ல் highest quality (very slow) ஐ தெரிவுசெய்யவும.( உயர்தர வெளியீட்டுக்கு )
Start ஐ அழுத்தவும்.
இந்நிலையில் Avi file, Mpg ஆக மாற்றப்படும்.
இறுதியில் பெறப்பட்ட file ஐ Nero Burn உதவியுடன் Vcd ஆக மாற்றவும்.
கணணியில் சேமித்த தரத்திற்கு இணையான VCD கிடைக்கும்
|
|
|
| தமிழரும் திருமணமும் |
|
Posted by: shiyam - 01-20-2005, 03:08 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (153)
|
 |
தமிழராகிய நாம் இன்று புலத்திலும் திருமணங்களை பொருத்தம் பார்த்து சடங்கு வைத்து தாலி கட்டி ( அக்னி)நெருப்பை சுற்றி அம்மி மிதித்து அருந்ததி(ஒரு நட்சத்திரம் )பாத்து சீதனம் வாங்கி செய்வதை ஏற்று கௌ;கிறீர்களா???
|
|
|
| காயங்கள் |
|
Posted by: shiyam - 01-20-2005, 02:58 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
காயம் படும் கொய்யா
இனிக்கிறது
காயம்படும் கல்தான்
சிலையாகிறது
காயம்படும் மூங்கில்
கானம் பாடுகிறது
காயம்படும் மரம்தான்
கனிதருகிறது
காயம்படும் காதல் தான்
காவியமாகிறது
காயம்படும் வாழ்க்கைதான்
அனுபவங்கள்
காயம் படும் இதயம்தான்
கவிதை படிக்கிறது
காயங்கள் இல்லையென்றால்
வாழ்க்கை இல்லை
காயமில்லாதவர்களே இனிமேலாவது
காயப்படுங்கள்...
|
|
|
| சமாதான பேச்சுகள்பற்றி எதுவும் கதைக்கமாட்டார்கள். |
|
Posted by: Vaanampaadi - 01-19-2005, 05:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
இம்முறை இலங்கை வரும் நோர்வே தூதுக்குழுவினர் சமாதான பேச்சுகள் பற்றி எதுவும் கதைக்கமாட்டார்கள்.
சுனாமி உதவி பற்றியே பேசுவார்கள் என்று கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது......
சமாதான பேச்சுக்கள் தொடங்குவது பற்றி பேச்சுவார்த்தைகள் அமையலாம் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.....ஆனால் தூதரக பெண் பேச்சாளர் "இந்த விஜயம் சமாதான பேச்சுக்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை" என்று கூறியுள்ளார்..........
<b>
Norwegians to talk Sri Lanka tsunami aid, not peace
</b>
Wed January 19, 2005 6:02 PM GMT+05:30
COLOMBO (Reuters) - Senior Norwegian officials flying into Sri Lanka will discuss post-tsunami reconstruction efforts and not the island's stalled peace process, the Norwegian embassy in Colombo said on Wednesday.
Norway's special envoy, Eric Solheim, arrived in Sri Lanka on Wednesday and he will join Foreign Minister Jan Petersen and Deputy Foreign Minister Vidar Helgesen for talks with reclusive Tamil Tiger rebel leader Velupillai Prabhakaran in Kilinochchi on Saturday.
The rebels' London-based chief negotiator, Anton Balasingham, is to fly in on Friday to attend the meeting.
There had been speculation the delegation would make a fresh attempt to revive peace negotiations between the Tigers and the government, in limbo since April 2003, but a spokeswoman for the Norwegian mission in Colombo said talks with the Tiger chief would focus only on tsunami relief efforts.
[b]"The visit has nothing to do with the peace process," the spokeswoman told Reuters.
In the aftermath of the Dec. 26 tsunami the rebels have locked horns with the government over millions of dollars of aid flowing into the country and have repeatedly complained that areas under their control were not getting a fair share.
A two-decade war between Tiger guerrillas and government troops killed more than 64,000 people before a Norwegian-brokered ceasefire took effect three years ago.
Source: Reuters
|
|
|
|