| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 101 online users. » 0 Member(s) | 99 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சந்தன வீரப்பன் விசம் வைத்தே கொல்லப்பட்டார்: தினகரன் செய்தி |
|
Posted by: Mathuran - 01-19-2005, 02:53 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (6)
|
 |
சந்தன வீரப்பன் விசம் வைத்தே கொல்லப்பட்டார் என தினகரன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. சந்தண வீரப்பனின் கொலையில் மர்மம் இருப்பதாக பல அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலயில், இன்று உண்மை அறியும் குழு தனது ஆய்வின் முடிவினை வெளியிட்டு உள்ளது. அவர்களின் ஆய்வின் படி சந்தண வீரப்பன் அவர்கள் விசம் வைத்தே கொல்லப்பட்டார் என தெரிவிக்க பட்டுள்ளது.
|
|
|
| ஊனமாகிப்போன தமிழ் நட்பு |
|
Posted by: Mathan - 01-19-2005, 12:12 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
ஊனமாகிப்போன தமிழ் நட்பு
இப்போதும் தமிழ்ச் சமுதாயத்தில் 'ஆண்-பெண்' நட்பு ஒரு அதிசியமாகவோ அல்லது சந்தேகத்துடனோ பார்க்கப்பட்டு வருகிறது.
தந்தை-தாய் , அண்ணன்-அக்காள் , தம்பி-தங்கை , மைத்துனன்-மைத்துனி என்று அனைத்து உறவிலும் 'ஆண்-பெண்' கலந்து வரும் போது "நட்பு" மட்டும் ஊனமாகிப்போய் ஒரு பாலுடன் நின்றுவிடுகிறது. இது நமது சமுதாய அமைப்பில் உள்ள பெரிய குறைபாடு .
ஆண்/பெண் நட்பில் புறத்தோற்றம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒரு முக்கிய காரணமாகிவிடுவது நடைமுறை வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திக்கும் உண்மை. இந்த புறத்தோற்றம் வேண்டுமானால் நட்புக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாமே தவிர, அதுவே உண்மையாகி விடாது.
நட்புக் கொள்வதும் அந்த நட்பை சீரான பாதையில் எந்த சுனக்கமும் இல்லாமல் வளர்த்துச்செல்வதும் பெரிய விசயம். புறத்தோற்றம் மட்டுமே ஆண்/பெண் நட்பின் அடிப்படையாகிப்போகும் பட்சத்தில் அது நட்பையும் தாண்டி திருமண உறவையோ அல்லது சமுதாயம் விமர்சிக்கும் ஒரு தப்பான உறவை நோக்கி வளர்ந்து செல்வது தடுக்க முடியாத ஒன்று.
என்னைக்கேட்டால் காதலியைத் தேர்ந்தெடுப்பதுகூட சுலபம் என்று சொல்வேன். காதலன்/காதலி தேர்வில் புறத்தோற்றம் மிகப்பெரிய இடம் வகிப்பதால் அவர்களை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. அடையாளம் கண்டபின் அந்த காதலை வளர்த்துச்செல்வது மிகச்சுலபமாகி விடுகிறது.
புறத்தோற்றம் தவிர்த்த ஆண்/பெண் நட்பு என்பது ஒரு இனிய அனுபவம் ஆகும். இந்த உறவு கத்திமேல் நடப்பது போன்றது. இது அனைவருக்கும் வாய்த்து விடுவது இல்லை.
இந்த வகை நட்பு திருமண உறவைவிட மேலானது.
திருமணத்தில் உறவு சட்டப்படி பதிவுசெய்யப்படுகிறது. நட்பு எந்த சட்டப்படியும் பதிவுசெய்யப்படுவது இல்லை.
இங்கு நட்பே எந்த சாட்சிகளும் இல்லாமல் தன்னைத்தானே தனக்குள் பதிவு செய்து கொள்கிறது.
இவ்விதமான உறவில் முழுமையான அன்பும், உண்மையும் இல்லாத பட்சத்தில் அந்த நட்பு எந்தச் சாட்சிகளுமின்றி தற்கொலை செய்து கொல்லும். இதற்கு எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது ஆனால் மனசாட்சி மரணதண்டனை கொடுத்துவிடும்.
Thanx: கணேசன்
|
|
|
| "காய் கூய் இந்டியா" |
|
Posted by: கறுணா - 01-18-2005, 11:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (13)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் காய் காய் இன்டியன்ஸ்!
உங்கள் மனிதாபிமானச் செயல் கேட்டு என்னால் பேசமுடியவில்லை! எழுத முடியவில்லை! சாப்பிட முடியவில்லை! ... ஏன் ஒன்றுமே செய்ய முடியவில்லை! ஐயோ ஐயோ அய்யய்யோ!!!!
"காந்தி, நேரு, புத்தன்" பிறந்த நாட்டிலிருக்கும் உங்களுக்கா உலகம் மனிதாபிமானம் சொல்லித்தர வேண்டும்? முன்பும் சாப்பாட்டுப் பொட்டலங்களைப் போட்டு, பின் இதே நரகாசுரர்களை அனுப்பி, பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரை நரவேட்டையாடி கொண்டு சென்ற உங்கள் மனிதாபிமானத்தை மறக்க முடியுமா? சுனாமியா கொக்கா என்று, சுனாமி என்ற சொல் உங்கள் காதுகளுக்கு விழமுன் நீங்கள் இலங்கை வந்து விட்டீர்களாம்!
அதுவும் உங்களது இந்து சமுத்திரத்திலுள்ள தீவுகளான "அந்தமான்", "நிக்கோபார்" ஏறக்குறைய முற்றாக அழிந்து விட்ட நிலையிலும், இன்று அனர்த்தம் நடந்து மூன்று கிழமைகளாகியும் நிவாரணக்களோ, உதவிகளோ போய்ச் சேராமல், அங்குள்ள மக்கள் இலை, குளைகளைத் தின்று வாழுகின்ற சூழ்நிலையிலும், உங்கள் மக்களாகிய அவர்களையும் காப்பாற்றாமல் இங்கு வந்த மனிதாபிமானத்தை வார்த்தைகளால் கூற இயலாமல் உள்ளேன்! அதுவும் உங்களது அங்குள்ள கடற்படைத்தளம், விமானப்படத்தளம் முற்றாக அழிந்த நிலையிலும், இங்கு யுத்தக் கப்பல்களையும், இராணுவ வீரர்களையும் உடனடியாக அனுப்பிய மனிதாபிமானத்தை எழுதவே எனது கைகள் படபடக்கிண்றன! இங்கு உயிருடன் கடைசி ஈழ மகன் இருக்குமட்டும் உங்கள் அன்பு மாறவே மாறாது என்பது எனது உறுதியான கருத்து!
மற்றும் உங்கள் டமிழ் நாட்டிலேயே ஆகக்கூடுதலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தும்! இல்லை இல்லை சில ஆயிரமானவர்களே இங்கு மாண்டதாக உங்கள் டமிழ் நாட்டரசு அறிவித்து இருப்பது, தனது சொந்த மக்களின் உயிரிழப்புகளையே அரசியல், நிவாரணம் வழங்குதல், நஸ்ட ஈடு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக மறைத்ததானது, உங்களது மனிதாபிமானங்களுக்கு சிகரம் வைத்த செயலாகிவிட்டது! ஆண்டவா!! இந்திய டமிழ்க் நாட்டுக் கடற்கரையோரங்களின் வாழும் செறிவான மக்கள் தொகையானது யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. சிலவேலை சுனாமியை முன்கூட்டியே அறிந்து (சாஸ்திரக்காரர்கள்மூலம்!) மக்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டீர்களோ? இல்லை! பில்லியனைத் தான்டிவிட்ட உங்களுக்கு, இவ்விழப்புகள் தூசிக்களாக தெரிகிறதா?
இல்லை! நாளைக்கு இந்த உண்மைகள் உந்த டமிழ் நாட்டுத் டமிழனுக்கு தெரிந்தாலும், இரண்டு டமிழ்ப் படத்தை ரிலீஸ் பண்ணியும், நாலு சின்னத்திரை சீரியல்களையும் போட்டால் அரோகராவென்று கற்பூரத்தையும் காட்டிப் போட்டு கடவுளைக் கண்டமாதிரி எல்லாத்தையும் மறந்து குந்தி விடுவார்களென்பது உங்களுக்குத் தெரியாததல்ல? சினிமா எனும் சாக்கடையில் தோன்றும் வேதாளங்களையும் "தலைவா" என்றபடி வேலை வெட்டிகளை விட்டுவிட்டு திரியும் அந்தக் கூட்ட்த்திற்கா விளங்கப்போகுது? மேலும் டமிழ் நாட்டு டமிழர்களுக்கா மனிதாபிமானம் மற்றவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்? அரை குறை ஆடைகளுடன் அன்று குலுக்கித் தழுக்கி ஆட்டம்போட்டு பலகளம் கண்ட வீராங்கனையை அம்மா!? கண்ணகி? மூகாம்பிகை? வேளாங்கன்னி? ... என்னென்ன உண்டோ அதெல்லாமாக்கி அரியணையில் அமர்த்தி, சமூக சீரளிவுகளில் சிக்கியவர்களையும் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் மனிதாபிகளல்லவா! சூ! சூச்சூ! சூ! ..............
ஒன்றை மட்டும் உணருங்கள்! 70களில் "JVP" இன் கிளர்ச்சியை அடக்கவென்று நீங்கள் வந்து செய்த மனிதாபிமானங்களை சிங்களவனும் மறந்திருக்க மாட்டான்! பின்பு 80களில் நீங்கள் வந்து தமிழ்ப் பகுதிகளில் உங்கள் மனிதாபிமானத்தைக் காட்டிய போது "எதிரிக்கு எதிரி நண்பன்" என விட்டு விட்டார்கள்! ஆனால் இம்முறை நீங்கள் வந்து கூடுதலாக இறங்கி அன்பைப் பொழியுமிடங்கள் சிங்கள ஊர்கள், எத்தனை நாளைக்குத் தானென்று பார்ப்போம் இந்த கனிமூன் காலமென்று?
நீங்கள் இலங்கையில் செய்யும் மனிதாபிமானங்களைப் பார்க்கும், கேட்கும் போது எங்கேயோ எனக்கு சிறு வயதில் படித்த பழமொழியொன்று அரை குறையாக ஞாபகத்திற்கு வருகிறது .... "தாய் தெருவோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டு திரியும் போது, மகனோ எங்கேயோ சிதம்பரத்தில் தங்கத் தட்டில் அன்னதானம் கொடுத்துக் கொண்டு திரிந்தானாம்" .. ம்ம்ம்ம்ம்
உங்களுக்காகவே, உங்களின் எச்சிலிலைகளை நக்கித்திரியும் இந்தக் "கோணல்", உங்களின் மனிதாபிமானங்களையும், பெருமைகளையும் பேசித் திரிவதே, நான் என் வாழ்க்கையில் பெறும் பேறாக எண்ணுகின்றேன்! இதற்காகவே உழைக்கவும் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்!
காய் கூய் ஜிந்தாபாத்! ஜெய் கிந் கின்டியா!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| தெற்காசியாவில் மீண்டும் லேசான பூகம்பம்..! |
|
Posted by: kuruvikal - 01-18-2005, 06:49 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<b>அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. </b>
காலை 8.33 ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.
இந்தியமியான்மார் எல்லையில் இந்த நில நடுக்கத்தின் மையம் இருந்தது. இது சுனாமியை உருவாக்கிய மாபெரும் நிலநடுக்கத்தின் தொடர்ச்சி இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தனியான நில நடுக்கம் என்று அம் மையம் கூறியுள்ளது. நில நடுக்கத்தையடுத்து மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்களை விட்டும் வெளியே ஓடினர்.
இதற்கிடையே சுமத்ராவின் அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட மிக பயங்கரமான பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலநடுக்கங்கள் கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளன.
தற்ஸ் தமிழ்.டொம்
|
|
|
| தோன்றினார் பிரபாகரன்: டென்மார்க் துரோகிகள |
|
Posted by: Kishaan - 01-18-2005, 06:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வட கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் நேரில் பார்வையிட்டார். இந்த சுனாமி அலையில் தேசியத் தலைவர்;ää புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாக டென்மார்;க்கில் உள்ள டென்ஒங்க எனும் துரோகிகளின் இணையத்தம் ஒன்று இல்லாத பொல்லாத புரளிகளை பரப்பிவிட்டு தமிழ் மக்களை குழப்பியடித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் தேசியத் தலைவர்;.
கிளிநொச்சி பகுதியில் நேற்று ஆய்வு நடத்திய தேசியத் தலைவர் அவர்கள் பின்னர் மீட்பு மற்றும் நிவாரணக் குழுவினருடன் ஆலோசனைகள் நடத்தினார்.
மேலும் தலைவர் பேசுகையில்ää இந்தப் பேரழிவால் மக்கள் யாரையும் சார்ந்து வாழும் நிலை உருவாகி விடக் கூடாது. போதிய உதவிகள் செய்து அவர்களே தங்கள் எதிர்காலத்தைää மறுவாழ்வை உருவாக்கிக் கொள்ளும் வகையில் கை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்;.
இதன் மூலம் தேசியத் தலைவர் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்த அனைத்து தமிழ் துரோகிகளுக்கும் மூக்குடைக்கப்பட்டுள்ளது.
Source: Nerudal.com
|
|
|
| சைபர் கிரைம் |
|
Posted by: Mathan - 01-18-2005, 05:38 PM - Forum: கணினி
- Replies (6)
|
 |
சைபர் கிரைம்: அதிகரித்து வரும் படித்த தாதாக்கள்!
சந்திப்பு : ரவிக்குமார்
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனிதகுலம் சாண் ஏறுவதற்குள், சில குறுகிய மனம் படைத்த குள்ள நரிகளின் ஆட்டத்தால் முழம் சறுக்கிவிடும் அவலம் நேர்ந்துவிடுகிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், பெருகும் இணையவழிக் குற்றங்கள்.
தில்லிப் பள்ளியொன்றில் படிக்கும் மாணவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் நடத்தியிருக்கும் பள்ளியறை விளையாட்டைச் சூட்டோடு சூடாக காமிரா செல்ஃபோனில் படமெடுத்து, தன்னுடைய பிரதாபத்தைப் பல மாணவர்களுக்கும் மின்அஞ்சலில் அனுப்ப, அதை இன்னொரு மாணவர் இணையச் சந்தையில் விற்றுவிட்டார். நாட்டின் தலைநகரத்துச் செய்தி இப்படி என்றால், மாநிலத்தின் தலைநகரத்தில் ஒரு நடிகையின் குளியலறைக் காட்சிகள் இணைய வெட்டவெளியில் கொட்டிக் கிடக்கின்றன.
காமிரா செல்ஃபோன், இணையம், சாட்டிங்... என இந்த வசதிகள் எல்லாவற்றையும் அதிகம் பயன்படுத்தும் இளைய தலைமுறையினர்தான் இதனால் அதிகம் பாதிக்கவும் படுகின்றனர். இந்தப் "பிரச்சினைப் பூனைக்கு' அண்ணா பல்கலைக்கழகம், "காமிரா செல்ஃபோனுக்கு வளாகத்திற்குள் தடை விதித்து' மணி கட்டியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் செயல்படும் இணைய சேவை நிலையங்களில் உள்ள பிரத்யேகத் தடுப்பு அறைகளை நீக்க உத்தரவிட்டுள்ளார் அந்த மாவட்டத்தின் காவல் அதிகாரி. இதையெல்லாம் இன்றைய தலைமுறை எப்படி எடுத்துக்கொள்கிறது? இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான அவர்களின் பார்வை என்ன? சென்னை சமூகப்பணி மையத்தின் மாணவர்கள் சிலரிடம் கேட்டோம்.
ஹேமா: இன்றைக்கு முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கல்வி தொடங்கிவிடுகிறது. பதிமூன்று வயதில் இன்டர்நெட், சாட்டிங் எல்லாம் தெரிந்துவிடுகிறது. நிறைய பெற்றோர்கள், "என் பொண்ணு மணிக்கணக்கா சாட்டிங் பண்றா' ன்னு பெருமைப்பட்டுக்குவாங்க. ஆனா, என்ன பண்றான்னு அவங்களுக்குத் தெரியாது. எதிலும் நல்லதும் கெட்டதும் இருக்கு. நிறைய பெண்கள் சாட்டிங்கில்தான்
முதலில் ஏமாறுகிறார்கள்.
சுகன்யா: காமிரா செல்ஃபோன்கிற அடிப்படையையே என்னால ஏத்துக்க முடியல. அதை நிச்சயமா தடை பண்ணணும். குறிப்பா, ஆண் - பெண் சேர்ந்து படிக்கும் இடங்களில் இந்தத் தடையைக் கொண்டு வரணும். சாட்டிங் மூலம் உறவுகளை முடிவு செய்வது பெரிய அபத்தம்.
பவித்ரா: இணையவழிக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பள்ளி அளவிலேயே உருவாக்க வேண்டும். இன்றைக்கு அவரவர் வாழ்க்கை அவரவரிடம்தான் இருக்கு. சட்டங்களைப் போடுவது பெரிதல்ல; அதை நடைமுறைப்படுத்துவதுதான் பெரிய விஷயம். நன்றாகப் படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வசதிதான் இணையத்தில் சாட்டிங். உரையாடலின் போக்கு தவறாகப் போகும்போது அதற்குப் பதில் சொல்லாமல் விலகுவதுதானே நல்லது? இது படித்தவர்களுக்குத் தெரியாதா?
அமெரிக்க இணைய தளங்களின் உரையாடல் அறைகளில் யாராவது உங்களுடன் உரையாடும்போது விஷமம் செய்தால் உடனே புகார் செய்யும் வசதி உள்ளது. இது போன்ற வசதிகளை எல்லாத் தளங்களிலும் ஏற்படுத்தி, அதன் பயன்பாட்டையும் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
மணிகண்டன்: சுயக் கட்டுப்பாடு இருந்தால்தான் எந்த விழிப்புணர்வும் எடுபடும். என்ன சொன்னாலும் நான் கெட்டுத்தான் போவேன்னு முடிவோடு இருக்கிறவங்கள நாம எதுவும் பண்ண முடியாது. எய்ட்ஸ் பத்தி எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தும் அது பெருகிக்கிட்டேதானே இருக்கு!
சுவாமிநாதன்: காமிரா செல்ஃபோனை எந்த காலேஜிலும் அனுமதிக்கக் கூடாது. அதே போல், பல பிரவுசிங் சென்டர்களின் "காபின்கள்' குட்டி அறையைப் போன்றே இருக்கும். அந்தரங்கம் தேவைதான். அதற்காக அந்தரங்க உறவுகளுக்கே உதவும் அளவுக்கு அறைகள் தேவை இல்லைய!
லஷ்மிப்ரியா: வெகுசில நாடுகளிலேயே உள்ள தகவல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் இந்தியாவிலும் கடந்த 2000 -ஆவது ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இந்தத் தடைச் சட்டத்தில், நாட்டின் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டுபிடித்தல், வெளிப்படுத்துதல், கலவரப்பட வைத்தல், இன்னொரு இணைய தளத்தில் தகவல்களை அளித்தல் போன்றவையே இணையவழிக் குற்றங்களாக இருக்கின்றன. பாலியல் ரீதியான துன்புறுத்தல், கொடுமைகளுக்கு இதில் இடமில்லை. இவற்றையும் சைபர்-குற்றங்களில் இந்தியா சேர்க்க வேண்டி அவசியமும், அவசரமும் இப்போது உருவாகிவிட்டது.
சேதுராம்: பயனுள்ள தகவல் தொடர்புத்துறை, படித்த சில தாதாக்களின் கையில் சிக்கிச் சின்னாபின்னமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விஞ்ஞான வளர்ச்சியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதன் மூலம் நடக்கும் வக்கிரத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. செல்ஃபோன் அத்தியாவசியமானது. வீட்டுக்கு ஒருவர் வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. காமிரா செல்ஃபோன் பெருகினால் மாடல்கள், நடிகைகள் என்னும் மேல்மட்டத்தைக் கடந்து சராசரி வீட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை பெருகும்.
சேதுராஜ்குமார்: இப்பவே சைபர் குற்றங்களுக்கான வரையறையை முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும். பிரவுசிங் சென்டர்களில் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபாசத் திரைப்படங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் தற்போது பார்க்கும் சிறுவர்கள் நாளை பிரவுசிங் சென்டரில் ஃபோர்னோகிராபியும் பார்க்கக் கூடும்!
ஃபெரோஸ்கான்: படிக்கும் மாணவர்களுக்கு காமிரா செல்ஃபோன் தேவையில்லாத ஒன்று. இதை இந்தியா முழுவதுமே கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். தொலைபேசியில் நமக்கு மோசமான அழைப்புகள் வந்தால், அதைப் புகார் செய்வதற்கு வசதி இருப்பது போல, சாட்டிங்கின்போது மோசமான அர்த்தத்துடன் உரையாடுபவர்களைப் பற்றி புகார் செய்வதற்கான வசதியை ஏற்படுத்து வேண்டும்.
Thanx: Dinamani
|
|
|
| இலங்கையில் சுனாமி அழிவினால் அநாதரவான ........... |
|
Posted by: Vaanampaadi - 01-18-2005, 12:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இலங்கையில் சுனாமி அழிவினால் அநாதரவான குழந்தைகளின் எண்ணிக்கையை விட அவர்களை தத்தெடுப்பதற்காக வந்துள்ள விண்ணப்பங்கள்தான் அதிகமாம்.
"இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு எங்களிடம் போதியளவு அனாதைக்குழந்தைகள் இல்லை" என்று குழந்தைகள் பராமரிப்பு திணைக்களத்தின் கமிஷனர் சரத் அபயகுணவர்த்தன கூறியுள்ளார்.........
Tuesday January 18, 9:29 AM
Sri Lanka flooded with more adoption applicants than orphans
Their plight has touched hearts around the world: children left parentless and homeless, their futures uncertain and bleak.
In the weeks since the tsunami claimed 31,000 Sri Lankan lives and tore apart a million more, adoption agencies here have been flooded with applications and inundated with telephone calls.
Couples who never thought before of adoption, celibate Buddhist priests and the even country's president herself have been eager to take in a tsunami-orphaned child.
The government's two main child protection institutions report 2,065 adoption applications _ more than twice the number of children orphaned by the Dec. 26 disaster, according to estimates by the U.N. children's agency.
"There are not enough orphans to satisfy the number of tsunami adoption applicants," said Sarath Abeygunewardene, commissioner of the Child Care and Probation Department.
And the numbers keep growing.
"We have no kids of our own, and it seemed the best way to help," said Sushila Wijekoon, a doctor who has been working, along with her physician husband, in refugee camps in the southern region of Balapitiya.
Childless after seven years of marriage, they had never applied before, she said.
But authorities caution that a hasty adoption can harm the child and lead to unhappy families.
"The worst thing is to rush into adoptions," said Prof. Harendra de Silva, chief of the government National Child Protection Authority. "Some have applied for adoptions in the heat of an emotional response to the tsunami."
De Silva said the first priority should be to trace surviving relatives, keeping the child within the extended family. "We won't even think of adoption for at least the next six months," he said.
"The issue of adoption should be put on the back-burner for the moment," said Ted Chaiban, head of UNICEF in Sri Lanka, agreeing that the extended family gives children "some familiar surroundings."
Meanwhile, other problems _ and horror stories _ have emerged.
In a Buddhist temple in the south, police arrested a man who tried to sell his two granddaughters to foreigners after their mother was killed in the tsunami.
Villagers and religious clergy speak of grief-stricken mothers taking children off the street, trying to replace those they lost to the deadly waves.
In the eastern district of Ampara, nine desperate women are battling to claim a 3-month-old boy dubbed "Baby 81." The infant was found caked in mud on a beach by an old man and brought to a hospital _ the 81st admission that day.
DNA tests are planned to determine whom, if any, among the nine women is the real mother _ a process that is likely to take months.
Child trafficking in the guise of adoption is another concern, said Arun Tampo, a veteran child activist. "They may take this opportunity to snatch children for work in factories or homes or use them for the sex trade," he said.
In the southern town of Galle, Thalawe Dhamma Joti, a saffron-robed Buddhist monk, sat outside the Child Probation office, hoping the district commissioner would give him some orphans he can train as monks.
"What's the harm? This could be their calling," he said.
Nihal and Padma Kaluarachchi were happy with their family of two children until the tsunami struck.
"We visited several refugee camps, and the plight of the children brought tears to my eyes," said Nihal said, their young son and daughter huddled next to their mother, Padma.
In the camps, Nihal saw some children playing, seemingly oblivious to the disaster that had changed their lives. Others sat in corner, refusing to speak.
Four days later after the tsunami, he filed an adoption application.
Whether for political capital or genuine concern, politicians are also saying they want to adopt.
President Chandrika Kumaratunga, an ethnic Sinhalese, said she would adopt a Tamil orphan, in an apparent gesture at national reconciliation between the two ethnic groups who have been fighting for 20 years until a cease-fire was signed in 2002.
A Tamil lawmaker also said he wanted an adopted child _ of either ethnicity.
Under the current adoption law, a single parent like Kumaratunga, who is a widow, cannot adopt. But new legislation is being proposed to relax the rules.
Tampo, the child activist, worries that the interests of the child may be sacrificed in a hasty revision of the process.
"The history of child care in this country is a tangled web of bureaucratic bungling," he said.
The country's adoption process needs to "ensure transparency with proper physical and emotional assessment matching the child's needs with those of the prospective parents," Tampo said.
Source: Associated press
|
|
|
| அலையில் சிக்கிய இரு சிறுமிகள் அபூர்வமாக தப்பியது எப்படி? |
|
Posted by: Vaanampaadi - 01-18-2005, 11:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
அலையில் சிக்கிய இரு சிறுமிகள்
அபூர்வமாக தப்பியது எப்படி?
அண்மையில் நடந்த சுனாமி அனர்த்த நிகழ்வின் போது அதிசய சம்பவங்கள் இடம்பெற்றதான செய்திகள் பலஅவ்வப் போது வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
இதுவும் அப்படியானதொரு சம்பவம் தான். மணற்காட்டுப் பகுதியில் சுனாமி தாக்கிய வேளையில் இரண்டு சிறுவர் கள் அபூர்வமான முறையில் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர்.
தம்பித்துரை சுகன்யா (வயது 7), தம் பித்துரை சசிரூபன் (வயது 02) ஆகிய இரு சகோதரர்களுமே இவ்வாறு காப் பாற்றப்பட்டவர்கள்.
சம்பவதினம் இவ்விரு சிறுவர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். சுனாமி அலைவந்துகொண்டிருந்த செய்தியறிந்து அவசரத்தில் வீட்டிலிருந்த மற்றவர்கள் வெளியில் ஓடித்தப்பிவிட சிறுவர்கள் இரு வரும் வீட்டினுள் தனியாகச் சிக்கிக்கொண் டனர்.
கடல் வெள்ளம் ஊரையே அடித்துச் சென்ற பின்பு உறவினர்கள் பிள்ளை களைக் காணாத ஏக்கத்துடன் தேடியோடி னர்.
ஆனால், எல்லோரும் ஆச்சரியப்படு மாறு அச்சிறுவர்கள் இருவரும் தமது வீட்டின் இடிபாடுபகளுக்கு மத்தியில் இருந்து அழுதுகொண்டு வெளியே வந்தனர்.
சிறுவர்களைக் கண்டு ஆச்சரியத்து டன் எப்படித் தப்பினீர்கள் என்று கேட்ட னர் ஊரவர்கள், அதற்கு அந்தச் சிறுவர் கள் கூறிய பதிலைக் கேட்டு உறைந்தே போய்விட்டனராம்.
கடல் வெள்ளம் வந்த போது எம்மை ஓர் அம்மா மேலே தூக்கியவாறு இருந் தார். அந்த அம்மா எங்களைக் கீழே இறக்கி விட்டு மறைந்து விட்டார். ஆனால், அவரை நான் ஒருநாளும் கண்டதில்லை... என்று தமது திகில் அனுபவத்தைச் சொன்னாள் சிறுமி த.சுகன்யா.
இந்நிலையில், தமக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் அன்னை வேளாங் கன்னியே இவ்வாறு தமது பிள்ளை களைக் காப்பாற்றினார் என்று அவ்வூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
Source: Uthayan
|
|
|
| அவசரகால நிலை அறிவிப்பினால் தமிழ்மக்கள் மனங்களில் போர்ப்பீதி |
|
Posted by: Vaanampaadi - 01-18-2005, 11:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அவசரகால நிலை அறிவிப்பினால்
தமிழ்மக்கள் மனங்களில் போர்ப்பீதி
அரசு வெளியிட்டுள்ள அவசரகாலநிலை அறிவித்தல் மக்கள் மனங்களில் மீண்டும் போர்ப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நுழைவதற்கும் இந்த அவ சரகாலநிலை வழிவகுத்துள்ளது என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. இதனால் அச்சம் அதிகரித் துள்ளது. அரசின் இந்தச் செயல் சமாதான முன் னெடுப்புகளுக்கும், யுத்தநிறுத்த உடன்படிக் கைக்கும் ஆப்பு வைத்துவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவரச கால நிலையைப் பிரகடனப்படுத்தும் அறிவித்தலில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கையய ழுத்திட்டுள்ளார். உத்தியோக ரீதியாக வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்படாத நிலையிலும் இந்த அவசரகாலநிலை ஜனவரி 4ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார். வர்த்தகமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிவிக்கப் படுகிறது.
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக் கும் வடக்கு - கிழக்கு, தென்மாகாணம், வட மத்திய மாகாணம், மேல் மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களிலும் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் அவசரகாலநிலை நடைமுறைப் படுத்தப்படும். பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், கொள்ளைகளைத் தடுக்கவும், நிவாரணப் பணி களை உறுதிப்படுத்துவதற்காகவுமே அவசரகால நிலை என ஜனாதிபதி கூறுகின்றார்.
இதனால் இராணுவத்தினரும், பொலீஸா ரும் சிவில் நிர்வாகத்தில் தலையிடவும், கூடுத லான தண்டனைகளை வழங்கவும், அவர்க ளுக்கு அeவுக்கு மீறிய அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன.
முன்னறிவித்தல் இல்லாத கைதுகள், கால வரையரையின்றி தடுத்துவைத்தல், திடீர்ச் சோதனைகள், என்பவற்றை மேற்கொள்வதற் கான அதிகாரங்களை இராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் அவசரகால நிலை வழங்கியுள் ளது. குறிப்பாக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சொத்துக்ளைப் பறிமுதல் செய்ய வும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகி றது.
அவசரகால நிலையால் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் நேரடியாகத் தாக்கத்துக்குள்ளாகி உள்ளன.
ஏற்கனவே, நிவாரணப் பொருள் விநியோ கம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் நேரடி நிர்வாகப் பொறுப்பு ஜனாதிபதியால் இராணு வத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது சட்டம், ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டவென அவசரகால நிலையை ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் இந்தச் செயல் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்குப் பெரும் பீதியையும், அமைதி யின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரி விக்கப்படுகிறது.
இது நாட்டில் மீண்டும் போர்ப்பீதியையும், மரண பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோத னைச் சாவடிகளும், திடீர்க் கைதுகளும் அதிக ரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். அரசின் இந்தச் செயலை தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என வும் தீர்மானித்துள்ளன.
Source : Uthayan
|
|
|
|