![]() |
|
தெற்காசியாவில் மீண்டும் லேசான பூகம்பம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தெற்காசியாவில் மீண்டும் லேசான பூகம்பம்..! (/showthread.php?tid=5737) |
தெற்காசியாவில் மீண்டும் லேசான பூகம்பம்..! - kuruvikal - 01-18-2005 <b>அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. </b> காலை 8.33 ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது. இந்தியமியான்மார் எல்லையில் இந்த நில நடுக்கத்தின் மையம் இருந்தது. இது சுனாமியை உருவாக்கிய மாபெரும் நிலநடுக்கத்தின் தொடர்ச்சி இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தனியான நில நடுக்கம் என்று அம் மையம் கூறியுள்ளது. நில நடுக்கத்தையடுத்து மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்களை விட்டும் வெளியே ஓடினர். இதற்கிடையே சுமத்ராவின் அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட மிக பயங்கரமான பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலநடுக்கங்கள் கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளன. தற்ஸ் தமிழ்.டொம் - tamilini - 01-18-2005 hock: :?
- vasisutha - 01-18-2005 :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 01-20-2005 <b>கடலூரில் கடல் கொந்தளிப்பு! மக்கள் பீதிவெளியேற்றம்!!</b> கடலூர் பகுதியில் கடலில் மீண்டும் லேசான கொந்தளிப்பு காணப்படுவதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. கடலோரத்தில் வசிக்கும் பலர் தங்களது வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி வருகின்றனர். ஆனால், கடலூர் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை, எனவே பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு விளக்கமளித்துள்ளது. சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரணப் பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று கடலில் லேசான கொந்தளிப்பு காணப்படுவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்ற அச்சம் வேகமாக பரவியதால் மக்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து போலீஸார் ஜீப்புகளில் சென்று சுனாமி வராது, பயப்படத் தேவையில்லை என்று மைக் மூலம் அறிவித்து வருகின்றனர். இருப்பினும் தேவானம்பாட்டினம், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருவோர் தங்களது வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். பூகம்பவியல் துறை விளக்கம்! இதற்கிடையே, கடலில் சுனாமி அலைகள் வருவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் பூகம்பவியல் பிரிவு இயக்குனர் ராவ் கூறுகையில், இந்தியா மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்தில் எந்தவித பூகம்பமோ, நில அதிர்வுகளோ பதிவாகவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது 7க்கு மேல் பதிவானால்தான் சுனாமி குறித்து அச்சப்படலாம். ஆனால் கடந்த 2 மணி நேரத்தில் எந்தவித நில அதிர்வும் பதிவாகவில்லை. எனவே கடலூர் உள்பட தமிழகத்தின்கடலோரப் பகுதிகளில் சுனாமி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார். ஆனாலும் கடலில் கடும் காற்று காரணமாக கொந்தளிப்பு காணப்படுவதை சுனாமி அலைகள் எனக் கருதி மக்கள் வெளியேறுவதாகத் தெரிகிறது. இந்திய பெருங்கடலில் நேற்றிரவு 9.30 மணிக்கு 5.2 ரிக்டர் என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. thatstamil.com |