| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 78 online users. » 0 Member(s) | 75 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| திருமலையில் கடற்படையை மீளமைக்க இந்தியாத்தரப்பிலிருந்து ..... |
|
Posted by: Vaanampaadi - 01-18-2005, 11:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
செவ்வாய்க்கிழமை 18.01.05 8.30 மணி தமிழீழம்
திருமலையில் கடற்படையை மீளமைக்க இந்தியாத்தரப்பிலிருந்து பல்வேறு உதவிகள்.
கடற்கோள் அனர்த்தத்தால் திருகோணமலை மாவட்டத்தில் கடற்படையினர் பாரிய சேதங்களை சந்தித்த நிலையில் அவற்றை மீளக்கட்டியெழுப்ப இந்தியா முன்வந்துள்ளது. கடற்கோளினால் திருகோணமலை மாவட்டத்தில்ää கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகம் உட்பட கடற்படை முகாம்கள் பல பெரும் சேதத்திற்குள்ளாகின.
இந்த மாவட்டத்தின் கரையோரத்தில் சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தினுள்ளிருந்த பல கடற்படைமுகாம்கள் அடித்துச்செல்லப்பட்டன. பலபடையினர் காணமால் போனதுடன் ஆயுதக்களஞ்சியங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அனைத்து முகாம்களும் இருந்த இடமே தெரியாமல் போனதால் அவற்றை அவசரமாக மீள் நிர்மாணம் செய்ய வேண்டிய நிலையில் இலங்கை கடற்படையினருக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
இலங்கை-இந்தியா கடற்படையினர் இந்தப்பணிகளில் இணைந்து ஈடுபடவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை கடற்கடையின் விஜயபாகு மற்றும் வலகம்பா படையணியினரே இப்பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு இந்தியப் படையினர் உதவவுள்ளதுடன்ää உபகரணங்களையும் வழங்கவுள்ளனர். இலங்கை வந்துள்ள இந்தியாப் படையினர்ää பொது மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை வழங்கினாலும்ää கடற்படையினருக்கும் உதவவுள்ளனர்.
திருகோணமலை துறைமுகத்தில் ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்திää துறைமுகச் செயற்பாட்டைமீள ஆரம்பித்த இந்தியா கடற்படையினர் இலங்கை கடற்படையினருக்கு ஏற்பட்ட சேதங்களையும் மதிப்பீடு செய்வதுடன் அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளனர். [b]கடற்கோள் அன ர்த்த நிவாரணப் பணிகளுக்கெனக் கூறிää இலங்கைக்கு வந்துவிட்டு தற்போது இராணுவ உதவிகளை வழங்குவதிலும் இந்தியப் படையினர் அக்கறை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
Source: Pathivu
|
|
|
| வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாகரன் |
|
Posted by: Vaanampaadi - 01-18-2005, 11:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாகரன்
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுனாமி தாக்குதலில் இறந்துவிட்டதாக இலங்கை அரசு வதந்தி பரப்பியது. இலங்கை ரேடியோவும் பிரபாகரன் இறந்து விட்டதாகவும் அவரை பல நாட்களாக காணவில்லை என்றும் ஒலிபரப்பியது. விடுதலைப்புலிகள் இதை வன்மையாக கண்டித்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விடுதலைப்புலிகளுடன்கிளிநொச்சி முகாமில் ஆலோ சனை நடத்தினார். தமிழ்செல்வன் உள்பட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்பும் அவர் தோன்றி இலங்கை அரசின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விடுதலைப்புலிகளுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்திய புகைப்படத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் பிரபாகரன் பேசும்போது "தமிழர் பகுதி யில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் முதல் சுனாமி. இப்போது தமிழர் பகுதியில் ஏற்பட்டு இருப்பது 2-வது சுனாமி நாம் சர்வதேச உதவிகளை மட்டுமே நம்பி இருக்கமுடியாது. மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். சுனாமி பாதித்த தமிழர் பகுதிகளில் மருத்துவ பணிகளை மேற்கொண்ட டாக்டர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
News Source : Maalaimalar
Photos: Tamilnet
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ltte_leader_meet_170105_02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ltte_leader_meet_170105_06.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| யாழ் இந்துவின் சுனாமி நிவாரண பணி |
|
Posted by: Mathan - 01-18-2005, 04:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (41)
|
 |
யாழ் இந்துவின் சுனாமி நிவாரண பணி
<img src='http://www.geocities.com/jhctsunami2004/store1_files/request_princ.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'>http://www.jhctsunami2004.com/</span>
|
|
|
| கடற்கோள் சிறுவர்கள் |
|
Posted by: AJeevan - 01-18-2005, 04:04 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'> முன்னைய எந்தவொரு இயற்கை அனர்த்தத்தையும் விட 2004 டிசம்பர் 26 கடற்கோள் சிறுவர்கள் மீது படுமோசமாக அதன் கொடூரத்தைக் காட்டியிருக்கிறது. பேரழிவுக்குள்ளான சகல நாடுகளிலும் இறந்து போனவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் குருத்து வயதுச் சிறுவர்களே. நெஞ்சைப் பிழியும் இந்த இழப்புகளுக்குப் புறம்பாக உயிர் தப்பியவர்களில் மிகவும் பாதிப்புறக் கூடியவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் சிறுவர்களே விளங்குவது மிகுந்த வேதனையைத் தருகிறது. கடற்கோளுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை எட்டும் நிலையில், பல ஆயிரக் கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் அநாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு எதிர்காலம் குறித்துச் சிந்திக்கவோ அல்லது நேர்ந்த கதியின் பாரதூரத் தன்மையை புரிந்துக் கொள்ளவோ இயலாத பராயத்தில் பராரிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெற்றோரில் எவராவது ஒருவர் அல்லது இருவருமே கடல் அலைகளினால் காவு கொள்ளப்பட்டதைக் கண்டதனால் உணர்வதிர்ச்சிக் கோளாறுக்குள்ளாகியிருக்கும் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் பற்றிய வேதனை மிகு தகவல்கள் அன்றாடம் வந்துகொண்டிருக்கின்றன. தங்களது வாழ்க்கைச் சூழ்நிலைகளைத் தடம்காண முடியாத அளவுக்கு மாற்றியமைத்து விட்ட அந்த விதிவசமான தினத்தின் கோர நிகழ்வுகளில் எந்தவொன்றையுமே நினைவு மீட்க இயலாத கைக்குழந்தைகள் கூட அநாதைகளாகியிருக்கும் அவலத்தை என்னென்று வர்ணிப்பதென்றே எமக்குப் புரியவில்லை.
இந்தச் சிறுவர்கள் எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் காண்பிக்கப்படும் அதேயளவு சிரத்தை அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற சிறுவர்களும் சிறுமிகளும் கவனிக்கப்படாமல் விடப்பட்டால் பழிபாவத்துக்கு அஞ்சாத பிரகிருதிகளினால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய விபரீதம் சொல்லுந்தரமன்று. இயற்கையின் சீற்றத்தினால் எமது கரையோரப் பகுதிகள் பேரழிவுக்குள்ளான ஓரிரு நாட்களுக்குள்ளாகவே வைத்தியசாலைகளில் இருந்தும் அகதி முகாம்களில் இருந்தும் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் அநாதைகளாகி நிற்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், நாளடைவில் நேரக்கூடிய பேரபாயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.
இது விடயத்தில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை பாதிப்புற்ற நாடுகளின் அரசாங்கங்கள் விரைவாக உணர்ந்து சில உடனடி நடவடிக்கைகளில் இறங்கியமை ஓரளவுக்கு ஆறுதலைத் தருகிறது. உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பதற்கு வழங்கப்பட்ட கட்டுமீறிய சுதந்திரத்தின் விளைவாக இலங்கையின் கரையோரப் பகுதிகள் நீண்ட காலமாகவே சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதில் வக்கிர திருப்திகாணும் வெளிநாட்டுப் பிரகிருதிகளினதும் அவர்களுக்கு தரகுவேலை செய்து பணம் பண்ணும் உள்நாட்டு சமூகவிரோதக் கும்பல்களினதும் உறைவிடங்களாக விளங்கி வந்திருக்கின்றன. தற்போது தோன்றியிருக்கும் முன்னென்றுமில்லாத மனிதாபிமான நெருக்கடி நிலைமையில் பாதுகாப்பின்றியிருக்கும் சிறுவர்களை தங்களுக்கு இரையாக்குவதற்கு இப்பிரகிருதிகளும் பழிபாவத்துக்கு அஞ்சாத கும்பல்களும் கிஞ்சித்தும் தயங்கப் போவதில்லை.
ஜனாதிபதி திருமதி குமாரதுங்க கடற்கோளினால் அநாதையான வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அறிவித்திருக்கின்றார். தனிப்பட்ட ரீதியில் திருமதி குமாரதுங்க மேற்கொண்ட இத்தீர்மானம் உணர்ச்சி வசமானதொன்றாக இருக்கின்ற அதேவேளை, தமிழ் நாட்டில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் அரசாங்கம் சமுதாய ரீதியிலும் தார்மீக ரீதியிலும் முன்னுதாரணமான ஒரு முடிவை அறிவித்திருக்கிறது. கடற்கோளினால் அந்த மாநிலத்தில் அநாதைகளாகிப் போன சகல சிறுவர்களையும் தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அனர்த்தம் நிகழ்ந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஜெயலலிதாவின் அரசாங்கம் அறிவித்தது.
அவசர நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளில் இருந்து இப்போது புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளில் அரசாங்கத்தின் கவனம் திரும்பியிருக்கும் நிலையில், இந்தச் சிறுவர்களினதும் சிறுமிகளினதும் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து விரைவாக சிந்திக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். அநாதைச் சிறுவர்களின் புனர்வாழ்வைப் பொறுத்தவரை, முதல் தெரிவு அச் சிறுவர்களை உறவினர்களுடன் இணைத்து விடுவதாகவே இருக்க வேண்டுமென்று சில நிபுணர்கள் வாதிடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அச்சிறுவர்களுக்கு பரிச்சயமான சமூகத்தில் - சுற்றாடலில் அவர்கள் வாழ்வைத் தொடரக் கூடியதாக இருக்கும் என்பது இந்நிபுணர்களின் வாதம். ஆனால், முழுச் சமூகமும் அல்லது அச்சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அக்குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் சிறுவர்களை உறவினர்களின் கவனிப்பில் விடுவதென்பது அவர்களின் வாழ்வை மேலும் பாழாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தத்தெடுப்பைப் பொறுத்தவரை, சிறுவர்களைச் சட்டபூர்வமாகத் தத்தெடுத்து அவர்களை நன்றாக வளர்க்கக் கூடிய ஆற்றலு டைய குடும்பங்களை நாடுவதே உகந்ததாகும். தத்தெடுப்பு நடைமுறை சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அடிமை வியாபாரத்தை ஊக்குவிக்கும் பிரகிருதிகளுக்கு வசதியான ஒரு ஏற்பாடாகி விடாதிருப்பதை இன்றைய துயர்மிகுந்த வேளையில் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மறுபுறத்தில், பெற்றோருடன் சேர்ந்து கடற்கோளினால் பாதிக்கப்பட்டு உணர்வதிர்ச்சிக் கோளாறுக்குள்ளாகியிருக்கும் சிறுவர்களைப் பொறுத்தவரை, இயல்பு வாழ்க்கையின் தொடர்ச்சியை ஓரளவுக்கேனும் அவர்கள் உணரக்கூடியதாக சாத்தியமானளவு விரைவாக பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யூனிசெவ்) ஆலோசனை தெரிவித்திருக்கிறது. இதற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பாடசாலைகளை விரைவாக புனர்நிர்மாணம் செய்யவேண்டியது அவசியமாகும். அகதி முகாம்களில் பேட்டி காணப்பட்ட பல மாணவர்கள் தாங்கள் ஒழுங்காக கல்வி கற்று பண்பான வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட நிலையில் கணப்பொழுதில் கடற்கோள் தங்களை அகதி முகாம்களில் கொண்டு வந்துவிட்டிருப்பதை ஜீரணித்துக்கொண்டு அரசாங்கத்தினதும் பரோபகாரி களினதும் கருணையில் வாழுவதற்கு இயலாமல் இருக்கிறது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.
கடற்கோளினால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் அஞ்சப்பட்டதைப் போன்று அதிகளவானதாக இல்லை என்று இப்போது தெரியவந்திருப்பதாக யூனிசெவ் நிறைவேற்று பணிப்பாளர் கரோல் பெலாமி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருப்பது ஒப்பீட்டளவில் ஒரு மனநிம்மதியைத் தருகிறது. அரசாங்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும் பரோபகாரச் சிந்தை கொண்டவர்களும் இந்தச் சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு- முறையாக அவர்கள் கல்வியைத் தொடர உருப்படியானதும் நிலைபேறானதுமான வழியில் நிதியுதவியையும் ஆதரவையும் அளிக்கவேண்டும்.</span>
|
|
|
| 2005ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன் தமிழனைச் செய்தான்..... |
|
Posted by: Nitharsan - 01-18-2005, 12:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்
செய்தான்.....
கொலை செய்யப்பட்டவர்
<img src='http://www.yarl.com/forum/files/050116_jeyakumaran_125.jpg' border='0' alt='user posted image'>நேற்று இடம் பெற்ற இச் சம்பவத்தில் தனுசன் ஜெயக்குமாhர் 18 வயது என்பவர் ஏனைய நான்கு பேர் கொண்ட தமிழர் குழவினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கத்திக்குத்தானவர் ஸ்பைசிலான்ட் மாhக்கற்றில் பணி புரிந்தவராவார். இவரை அவரது வேலையிடத்தில் வந்து அழைத்த இளைஞர் குழு அவரை காரினுள் துஸக்கிச் சென்றது இது பற்றி 42ம் பிரிவு காவல் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் தமது விசாரனை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இறுதியாக McLevin park அருகில் கத்திக்குத்துக்கு இலக்கான தனுசன் குற்றுயிராய்க் கிடப்பதை இரவு 9.15 மணிக்கு காவல் துறையினர் கண்டு பிடித்தனர். உடனடியாக Sunnybrook Health Sciences Centre இல் வைத்து சிகிச்சை அழிக்கப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனளிக்காது தனுசன் சாவடைந்தார். இது தொடர்பாக உடனடியாக இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவரையும் மற்றும் கடத்துவதற்க்கு பயன் படுத்தியதாக கருதப்படும் வாகனமும் தேடப்பட்டு வருகிறது இதற்க்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பை ரொரன்ரோ காவல் துறையினர் வேண்டுகின்றனர். தகவல் தெரிந்தோர் 416-808-7400 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
ரஜீவன் அற்புதராஜா 20வயது
பிரான்கிளின் நேசராஜா 21 வயது
ரோகான் ஜோர்ச் 19 வயது ஆகியோரே கைத்து செய்யப்பட்டுள்ளனர்.
புருசோத்தமன் நடராஜ் என்பவர் தேடப்பட்டு வருகிறார்
கொலை செய்யப்பட்டவர்
நேசமுடன் நிதர்சன்
|
|
|
| அமெரிக்காவின் அடுத்த இராணுவ இலக்கு...??! |
|
Posted by: kuruvikal - 01-17-2005, 02:59 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40728000/jpg/_40728393_us_specials_ap203.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்காவின் அடுத்த இராணுவ இலக்காக ஈரான் விளங்குவதாக புலனாய்வு ஏடுகளை ஆதாரம் காட்டிச் செய்திகள் வந்திருக்கின்றன...!
இதற்காக ஈராக் எல்லையூடு ஊடுருவிய அமெரிக்க விசேட கமோண்டோப் படையணிகள் ஈரானிய அணு ஆயுத மற்றும் ஏவுகணை இலக்குகளைக் குறிவைத்துச் செயற்படுவதாகவும் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் பத்தில் அமெரிக்காவின் இத்தகைய செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன...!
இதற்கிடையே ஈரானிய அரசு தாம் அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பத்தாக அறிவித்துள்ளது...!
தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான் இந்தியா அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்பதும் இந்தியா அமெரிக்கப் போட்டி நாடாக இருந்தது என்பதும் பாகிஸ்தான் முஸ்லீம் மத அடிப்படைவாதத்தை வெறுக்காத நாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்...!
செய்தி ஆதாரம் bbc.com.... தமிழ் வடிவம் - வலைப்பூவேடு- குருவிகள்..!
|
|
|
| அமெரிக்காவின் பிரதிப்பாதுகாப்பு காரியதரிஷி........ |
|
Posted by: Vaanampaadi - 01-17-2005, 02:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அமெரிக்காவின் பிரதிப்பாதுகாப்பு காரியதரிஷி பவுல் வொல்வ்(f)விட்ஷ் இலங்கை வந்துள்ளார்......
அவர் உள்ளூர், வெளியூர் செய்தியாளர்மாநாட்டில் சொன்னார் "எங்களைத்தேவைப்படும் வரை தவிர அதைவிட ஒரு கொஞ்சமும் நீடித்து இங்கே தங்கமாட்டோம், எங்களை வேண்டப்படும்வரை தவிர,நிச்சயமாக நீடித்து இங்கே இருக்கமாட்டோம்" என்று சொன்னார்.....................
US Marines will not stay any longer than wanted, says US Defence Secretary
[TamilNet, January 17, 2005 10:03 GMT]
Visiting Deputy Defence Secretary of the United States of America, Paul Wolfowitz said in Colombo on Monday morning that the US Marine troops would not stay in Sri Lanka any longer than they were wanted. "We don' want to stay any longer than we are needed, most certainly not longer than we are wanted," he told both foreign and local reporters at a press conference at Ceylon Continental Hotel on Monday, before completing his short review visit to Sri Lanka.
Mr. Wolfowitz, who was accompanied by Admiral Thomas Fargo, Commander of the US Pacific Command, visited the tsunami-hit Galle district in the Southern Sri Lanka, where the US Marines are engaged in clearing the wrecked buildings to help rebuilding a sea wall.
Commenting on the general situation he said that there had been some positive movement in a positive direction and that the LTTE was co-operating with the government of Sri Lanka in relief effort.
Over 700 US troops are in Sri Lanka with two Marine ships providing logistics and other material support to them.
|
|
|
|