Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 101 online users.
» 0 Member(s) | 99 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  சுயாட்சிக்கான தேவையை விடுதலைப் புலிகள்
Posted by: வியாசன் - 01-19-2005, 05:48 PM - Forum: புலம் - Replies (6)

<span style='font-size:25pt;line-height:100%'>சுயாட்சிக்கான தேவையை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்: பிரான்ஸ் ஏடு புகழாரம்! </span>
பிரான்சிலிருந்து மீரா பாலகணேசன் புதன்கிழமை 19 சனவரி 2005 17:53 ஈழம்


இலங்கைத் தீவகத்தில் ஆழிப்பேரலை நிகழ்த்திய பின்னர் மக்களைப் பாதுகாக்கும் பராமரிக்கும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; உலகின் பார்வைக்கு சுயாட்சிக்கான நியாய காரணத்தையும் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் என பிரான்சின் பிரபல ஏடான மெட்ரோ தெரிவித்துள்ளது.

மெட்ரோ ஏடு தெரிவித்துள்ள கருத்துகள்:

ஆழிப்பேரலை ஓய்ந்த சில கணங்களில் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றினார்கள்.

கடலில் மிதந்த பிணங்களை மீட்டெடுக்கும் பணியிலும் மிகச்; சிறப்பாக இயங்கினார்கள். அவர்கள் முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைத்தனர்.

அதன்பின்னர் பாதுகாப்பு அரண்களை அமைத்து கொள்ளைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான செயல்களில் இறங்கி இருந்தார்கள். வாகனங்களில் காயப்பட்டவர்களை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச்; சென்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்தம் வழங்குவதிலும் அவர்கள் முன்நின்றார்கள். ஒளிää ஒலிப்பதிவுக் கருவிகளுடனும்ää கணனிகளுடனும் விடுதலைப் போராளிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் முகங்களை புகைப்படம் எடுத்தார்கள். அடையாளம் காண்பதற்காக அவற்றை ஆவணப்படுத்தினார்கள்.

அதன் பின்னர் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கும்ää புதைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

'அவர்களின் இராணுவம் மிக நன்றாக வேலை செய்யும் திறன்மிக்கதாக இருந்தது என்று உதவி செய்வதற்காக தமிழீழத்திற்கு வருகை தந்திருந்த பிரித்தானியாவைச்; சேர்ந்த மருத்துவர் ரூபன் துரைராஜா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் அக்கறையாக இருந்தனர்.

இப்பேரழிவின் போது சிறிலங்கா அரசோ செயலற்றதாக இருந்தது.

1983ல் இருந்து இலங்கைத் தீவகத்தின் வடக்கிலும்ää கிழக்கிலுமாக விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடிவருகிறது.

இரத்தம் சிந்திய தற்கொடையின் மூலம் நன்கு அறியப்பட்டவர்களாக விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள்.

2002ம் ஆண்டிலிருந்து போர் நிறுத்தச்; செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஆழிப்பேரலைää இரண்டு முகாம்களுக்கிடையிலும் ஒரு சாமாதனத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்கு ஆதரவளிக்கலாம்.

ஒன்றாக வேலை செய்வதற்கான உடன்பாடுகளையும் எட்டலாம்ää சமாதானப் பேச்;சுக்களும் உருவாகி இலங்கையில் அவர்களிடையே ஒரு மாற்றம் நிகழலாம் எனவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.


நன்றி புதினம்

Print this item

  'பாரதி-யார்&quot;!?
Posted by: tamilini - 01-19-2005, 04:11 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (2)

செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி!

பசியாலும்ää பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு 'மனிதனுக்கு மரணமில்லை."

'காலா என் கண்முன்னே வாடாää உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும்ää அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.!

பாரதியார் - பாரதி யார்? அவரது சில சிந்தனைகளையும்ää கருத்துக்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.

ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்! 'தையல் சொல் கேளேல்" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.

'தையலை உயர்வு செய்" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.

'ஆறுவது சினம்" என்றாள் ஒளவை. இவரோ 'ரௌத்திரம் பழகு" என்றார். 'நுப் போல் வளை" என்றாள் ஒளவை. இவரோ 'கிளை பல தாங்கேல்" என்றார். 'தொன்மை மறவேல்" என்றாள் ஒளவை. 'தொன்மைக்கு அஞ்சேல்" என்றார் பாரதி. 'போர்த் தொழில் புரியேல்" என்றாள் ஒளவை. 'போர்த்தொழில் பழகு" என்றார் இவர். 'மீதூண் விரும்பேல்" என்றாள் அவள். 'ஊண் மிக விரும்பு" என்றார் இவர்.

'போர்த் தொழில் புரியேல்" என்று ஒளவையை பேச வைத்தன அவள் காலத்தில் தமிழ் மன்னர்களுக்குள் நடைபெற்ற போர்கள். பாரதி காலத்தில் அவன் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான வீரர்களை திரட்டுகின்ற வேலை அவனுக்கிருந்தது. ஆகவே தான் 'போர்த் தொழில் பழகு" என்று சொல்லி வைத்தான்.

இருந்தும் 'ஈவது விலக்கேல்" 'ஈகைத்திறன்" என்று அவளோடு ஒத்துப்போன இடங்களுமுண்டு.

ஆகவே பெரும்பாலும் அவளிடமிருந்து கருத்தால் முரண்பட்ட நமது முண்டாசுப் புலவன் அந்த மூதாட்டியை வாழ்த்தி வரவேற்று அவளது கருத்துக்களின் செறிவான தாக்கத்தை எழுதி உணர்த்துகிறான் என்பதைப் பார்க்கிறோம். இவன் தான் பாரதி. கருத்தால் முரண்பாடு இருந்தாலும் அவள் தமிழ்ப்பாட்டி-அவள் சொன்னது அமிழ்தம் என்பதற்காகப் பாராட்டுகிறான். இக்காலத்தில் இப்படி ஆட்களைப் பகுத்து பார்த்துப் பாராட்ட வேண்டிய அம்சங்களிருந்தால் பாராட்ட வேண்டுவது மிகவே அவசியமாகிறது.

மூடத்தனமான பக்தியை நம்பிக்கையைப் பாரதியார் மிக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார். அவரது கட்டுரையில் இருந்து இதோ ஒரு பகுதி:- 'நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிடம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும்ää விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.

இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில்ää எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் - லக்னம் - முதலியன பார்த்தல். சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால்ää அதற்குக் கூட மாஸப்பொருத்தம்ää பஷப்பொருத்தம்ää திதிப் பொருத்தம்ää நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. சவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள்ää சடங்குகள்ää வியாபாரங்கள்ää யாத்திரைகள்ää விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிற்கும்ää கால விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது.

'காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின் அதனால் பணலாபம் கிடையாமல் போகும். இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமதப்படுத்தி வைப்பதனால் அந்தகாரியம் பலமான சேதமடைந்து போகும்.

'இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்கப்பட்டிருக்கின்றன" என்றும்ää 'ஜனங்களுக்குப் படிப்பு கற்றுக்கொடுப்பதனால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றென்.

ஆனால் பி.ஏää எம்.ஏ பரீட்சைகள் தேறிää வக்கீல்களாகவும்ää உபாத்தியாராகவும்ää என்ஜினீயர்களாகவும்ää பிற உத்தியோகத்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர்ää ஐயங்கார்ää பிள்ளை முதலியவர்கள் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா? 'பெண்பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்கு கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்றும் சிலர் முறையிடுகிறார்கள். பெண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்றும் இடத்தேää அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு - ஆனால் உண்மையில் பாரதியின் தத்துவ தரிசனம் என்ன? வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ன?

பாரதி கடவுள் உண்டென்ற கொள்கையுடையவன்தான். ஆயினும் அவன் 'ஒருவனே தேவன்" என்பதையோää கடவுள் இப்படியன்ää இவ்வண்ணத்தன்ää இந் நிறத்தன்" என்பதையோ நிலைநாட்டுவதை முதற்பெருங் கொள்கையாகக் கொள்ளவில்லை. பாரதியின் இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால்ää தேசியப்பாடல்களையோää தோத்திரப்பாடல்களையோ வேதாந்த பாடல்களையோää இதர பாடல்களையோ எதை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த வாழ்வையும் இதில் மனித வர்க்கம் முழுவதும் உயர்நிலை எய்தி வாழ்வதையும் அதற்கான கால மாறுதலையும் பெருநோக்;காகக் கொண்டு நிற்கின்றான் என்பதைத் தெளிவாக காணமுடியும்.

'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர்
பித்தமனிதர் அவர்சொல்லும் சாத்திரம்
பேயுரையாமென்று ஊதடா சங்கம்" (வேதாந்த-சங்கு)

இந்தப்பாட்டில்ää செத்தபிறகு வாழ்வு உண்டென்றோää சிவலோகம்ää வைகுந்தம் உண்டென்றோ நினைக்கும் கருத்தை மண்டையிலடித்து நசுக்கி விடுகின்றான்.

'மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்படவேண்டும்"

இவ்வாறு 'வேண்டும்" என்ற பாட்டில் சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை அது இங்கேயே தோன்ற வேண்டும் என்கிறான்.

'வீடு(மோட்சம்) வேறு எங்கேயும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது" 'கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" என்று 'அறிவே தெய்வம்" என்ற பாட்டில் பாடுகின்றான்.

'ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்தில் விடுதலையுண்டுää நிலையுண்டு"

என்று 'ஜீவன் முத்தி" என்ற பாட்டில் இந்த பிறப்பிலேயே விடுதலை உண்டு என்கிறான்.

பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும்ää தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.

'தமிழ்ää தமிழ்ää தமிழ் என்றும்ää எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்திää புதிய-புதிய யோசனைää புதிய-புதிய உண்மைää புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும்ää வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.

ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!

'தமிழாää உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள்ää லௌகீகக் கொள்கைகள்ää வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கி விடு. வீட்டிலும்ää வெளியிலும்ää தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழாää எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்."

அதே வேளை தமிழ் மொழி குறித்துச் சற்று வித்தியாசமான கருத்துக்களையும்ää ஏன் கடுமையான கருத்துக்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். 'தமிழில் எழுத்துக் குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் 'தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். தமிழ்க்குரல் அன்பர்களின் தமிழ்ப்பசிக்கு அவை தீனி போடுவதாகவே அமையும் என்பது எமது கருத்து! அவற்றில் இருந்து சில வசனங்கள்:

'பிரெஞ்சுää இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும்ää ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் - உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும்-உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்த நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்."

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்"

என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.

'தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்"

தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும்ää பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதிää அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.

ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்.! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி! அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தைää தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும்ää மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். அவர் தன்னைப்பற்றி பாடிய பாடலை இந்த தினத்தில் அவருக்கு காணிக்கையாக்குகின்றோம்.

இந்த ஆய்வுக்குப் பாரதி பற்றிய பல நூல்கள் பயன்பட்டன. பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

tamilnaatham.com

Print this item

  Website owners!
Posted by: thaiman.ch - 01-19-2005, 03:02 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (25)

எனது புலனாய்வு அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தேசதுரோக இணையத்தளங்களும் அதன் உரிமையாளர்களும் பின்வருமாறு உள்ளன:

www.ரிஎம்விபி.com (கருணாவின் இணையத்தளம்)
Registrant ID:CORG-100842
Registrant Name:Mathi Kumar
Registrant Organization:
Registrant Street1:Stjaerten 13
Registrant City:Viborg
Registrant Postal Code:8800
Registrant CountryBig GrinK
Registrant Email:mathi@kumar.dk

www.தேனீ.com
Owner Contact:
Amutha Kanagatharan
Moenchhaldenstr.107
Stuttgart, Germany, D-70191, Germany

Domain Name: thenee.com
Status: REGISTRAR-LOCK

Admin Contact
Amutha Kanagatharan (AK1488-ABC)
Jemini@t-online.de
Moenchhaldenstr.107
Stuttgart, Germany, D-70191, Germany
phone: +49 7112579923


www.புளொட்.org
Registrant Name:Valluvan Kanakaratnam
Registrant OrganizationTonguelote Organisation
Registrant Street1:20 Tuxedo Court #1207
Registrant City:Toronto
Registrant State/Province:ON
Registrant Postal Code:M1G3S5
Registrant Country:CA
Registrant Phone:+1.4164380851
Registrant EmailConfusedelvam2000ca@yahoo.ca




மற்றும் யாழ் இணையத்தள நேயர்களிற்கு வேறு சில தேச துரோகிகளின் இணைய முகவரியும் அதன் உரிமையாளரும் தேவைப்பட்டால் என்னிடம் கேட்கவும்.

Print this item

  எரிக் சொல்ஹைம் இலங்கை வந்துள்ளார்.......
Posted by: Vaanampaadi - 01-19-2005, 01:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

நோர்வே சமாதானதூதுவர் எரிக் சொல்ஹைம் இன்று இலங்கை வந்து சேர்ந்துள்ளார்.இவருடன் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசன் இணைந்து கொள்வார்.........

நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீட்டர்ஷன் நாளை வருகிறார். அவருடன் சர்வதேச அபிவிருத்திக்குரிய அமைச்சர் ஹில்டெ F.ஜோன்சனும் சேர்ந்துகொள்கிறார். இவரின் வருகை, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள், தேவைகளை அறிந்து கொள்வதற்காகவே வருகிறார் என நோர்வே தூதரகம் தெரிவித்தது..........

பீட்டர்ஷனை பிரபாகரன் சந்திப்பார் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் கூறினார்கள். இச்சந்திப்பை தூதரகம்
உறுதி செய்தது.........


South Asia - AFP


Norway's top peace envoy in Sri Lanka to try to save talks

1 hour, 6 minutes ago South Asia - AFP



COLOMBO (AFP) - Norway's top peace envoy Erik Solheim has arrived in Sri Lanka to launch the first post-tsunami attempt to salvage faltering peace efforts, diplomats said.

Solheim, who initially raised Sri Lanka's peace hopes with a landmark meeting with Tamil Tiger rebel supremo Velupillai Prabhakaran in November 2000, is to make a fresh attempt to save the troubled initiative, they said.


He will be joined by Norway's deputy foreign minister Vidar Helgesen, who is also a key figure in attempts to broker peace in Sri Lanka where more than 60,000 people have been killed in three decades of fighting.


"The two men are here quite separately from the visit by Foreign Minister Jan Petersen who is expected on Thursday," a diplomatic source said on Wednesday. "But they will all try to nudge the parties to the table."


The Norwegian embassy said Petersen will be accompanied by Minister for International Development Hilde F. Johnson on a mission to assess the damage and needs of tsunami-affected areas.


The rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) said their elusive leader Prabhakaran will meet Petersen. The meeting was confirmed by the embassy.


Sri Lanka appeared on the brink of returning to war before the December 26 tsunamis lashed much of the island's coastline, killing almost 31,000 people. Two thirds of the fatalities were in the embattled northern and eastern provinces.


Both the Tigers and the military lost men and weapons and other equipment.


Diplomats had said the tsunamis could nudge the warring parties to the table in the face of an unprecedented calamity, but control over international aid has in fact heightened tensions.


Both sides have been observing a truce Norway arranged in February 2002 but peace talks have remained deadlocked since April 2003. Attempts by Norway since then have failed to break the impasse.


There is disagreement over an agenda for future talks, with the Tigers demanding that the government agree to negotiations based on their plan for interim self-rule.


The government insists that discussions on interim arrangements must be accompanied by talks on a final peace deal.


The Tiger supremo said in November that he may be forced to revert to his "freedom struggle" unless Colombo gives in.

Print this item

  வெள்ளியன்று வன்னி வருகிறார் பாலா!
Posted by: Vaanampaadi - 01-19-2005, 12:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

வெள்ளியன்று வன்னி வருகிறார் பாலா!
தலைவர் பிரபாகரனின் அழைப்பின் பேரில்


விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் நாளைமறுதினம் வெள்ளிக் கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் சனிக்கிழமை நோர்வே சமாதானக் குழுவினருக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்வதற் காக,தலைவர் பிரபாவின் அழைப்பின் பெயரில் அவர் இலங்கை வருகின்றார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்ஸன் தலை மையில் நாளை இலங்கை வரும் அந்த நாட்டு சமாதானத்துக் கான அனுசரணைக் குழுவினர் எதிர்வரும் சனிக்கிழமை கிளி நொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து கலந்துரையாடுவார் கள்.இந்தச் சந்திப்பின்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் உடனிருப்பார்.
நாளை வியாழக்கிழமை இரவு பாலசிங்கம் தமது துணை வியாரோடு லண்டனிலிருந்து புறப்படுகிறார். மறுநாள் வெள்ளிக் கிழமை காலை 9.00 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்குவார்.
அங்கிருந்து விமானப்படை யஹலியில் அவர் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பகல் 11.00 மணியளவில் கிளிநொச்சியைச் சென்றடையும் பாலசிங்கம் அன்றே தலைவர் பிரபாவைச் சந்தித்துக் களநிலைவரம் குறித்து கலந்துரையாடுவார்.
மறுநாள் நடைபெறும் நோர்வே குழு - தலைவர் பிரபா பேச் சிலும் கலந்துகொள்வார் பாலசிங்கம். இம்முறை வன்னியில் இருவாரங்களுக்குத் தங்கியிருப் பார் என்று தெரிகின்றது.
கடந்த முறை நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன்பீற்றர்ஸன் வன்னிக்கு வந்து தலைவர் பிரபாவைச் சந்தித்தபோதும், பாலசிங் கம் லண்டனிலிருந்து வந்திருந்தார். எனினும், அந்தச் சந்திப்பு இடம்பெற்ற மறுநாளே அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
தடைப்பட்டுப் போயிருந்த சமாதான முயற்சி களை முன்நகர்த்தும் நோக்கோடு ஜனாதிபதி சந்திரிகா அப்போது பீற்றர்ஸனை இலங்கைக்கு வரவழைத்திருந்தார்.ஆனால், பீற்றர்ஸனின் அப்போதைய முயற்சிகள் எந்தவிதப் பயனை யும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Uthayan

Print this item

  ராணுவ வாகனம் மோதியதில் தழிழர் பலி
Posted by: Vaanampaadi - 01-19-2005, 11:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கை தென்மராட்சி பகுதி மிருசுவில் வடக்கைச் சேர்ந்த திரு.வைரவன் நடேசு, வயது 52 என்பவரை நேற்று (திங்கள்) இரவு ராணுவ வாகனம் மோதியதில், அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்........

Army vehicle knocks down cyclist

[TamilNet, January 18, 2005 21:03 GMT]
Mr.Vairavan Nadesu aged 52 of Mirusuvil north in Thenmaradchchi division in Jaffna district died on the spot when he was run over by a heavy vehicle of the Sri Lanka Army (SLA) on Monday night, police said.
The army truck, which was speeding along Jaffna-Kandy highway, knocked down the cyclist and run over him. The death was instantaneous. This accident took place Monday around 9.30 p.m., police said.

The Chavakachcheri Magistrate Mr.P.Subramaniam held the post-mortem of the deceased at the site and ordered the Kodikamam Police to arrest the driver of the army vehicle, legal sources said.

Print this item

  ப்ரியாவிடை
Posted by: வெண்ணிலா - 01-19-2005, 09:27 AM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/WKingbird1-thumb.jpg' border='0' alt='user posted image'>

[size=18][b]
பிரியாவிடை

[i]பட்ட மரமான என்னை விட்டு
பறந்து செல்ல
நீ நினைத்துவிட்டாய்
பரவாயில்லை- நீ
பறந்து செல்
அழகிய பட்சியே
ஓர் பசுமையான சோலைதனில்
படர்ந்து வளர்ந்த அடர்ந்த
மரமொன்றிலே
அமைத்துக் கொள்
உனக்காக ஒர் அழகிய கூடுதனை
பட்டுப்போன மொட்டை மரமான
நான் உன் ஞாபகத்தோடே
மீதமாயிருக்கின்ற -என்
காலத்தைக் கடத்திக் கொள்கிறேன்
இன்னும் சில நாட்களிலே
நிலத்திலே சரிந்து விழுவேன்
அல்லது
சரிக்கப்பட்டு விழுவேன்
நிதமும் உன் நினைவுக் கோடரி
என்னிதயமதை கொத்தி தின்கிறது
என்ன செய்வது
எனக்கிது கண்ணீர் கலந்த
கடும் கோடையாயிற்று
இறுதியாய் உன் இரைப்பையின்
பசி தீர்த்திடவென
ஒரு கனிகூட இல்லாது போயிற்று
இந்த காய்ந்த காயப்பட்ட கிளையிலே
நிழலுக்காகவென நீ
ஒதுங்கியதை உறவுக்காக
என் பக்கம் ஒதுங்கிடுவதாய் உவகைகொண்டு
உள்ளமதை சிதைத்துக்கொண்டது தான் மிச்சம்
மொட்டை மரமான என்மீதும்
நீ மோகம் கொண்டு ஓய்வு தேடி
உறவாடியதற்காக உயிர்மூச்சுள்ளவரை
உன் நினைவினை நான் இழக்கமாட்டேன்
மரமான மனமும் ரணமான வாழ்வும்
உரமான உன் நினைவால்
உயிர்வாழ்ந்திடும் என்பது
உன் நினைப்பு.
ஒரு உறுதியற்ற அஸ்திவாரம்
ஒரு நாள் சரிந்துவிடும்
பட்சியே நீயாவது
சந்தோசமாக வாழ்ந்திடு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  அந்நிய படைகளின் அடுத்த கட்ட நகர்வென்ன?
Posted by: ragavaa - 01-19-2005, 05:47 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

தகவலுக்கு

http://www.tamilnatham.com/articles/thevar...jah20050119.htm


நன்றி
http://www.tamilnatham.com

Print this item

  பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
Posted by: thamizh.nila - 01-19-2005, 04:38 AM - Forum: தமிழும் நயமும் - Replies (28)

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். இதில அந்த 10 என்றால் என்ன?

Print this item

  டாக்டரானார் கமல்...!
Posted by: kuruvikal - 01-19-2005, 03:29 AM - Forum: சினிமா - Replies (6)

<img src='http://thatstamil.com/images26/cinema/kamal-battam450.jpg' border='0' alt='user posted image'>

சென்னையைச் சேர்ந்த சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம், நடிகர் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் வி.என். ராஜசேகரன் பிள்ளை கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்,

இது எனக்கு வழங்கப்பட்ட பட்டமாக நினைக்கவில்லை. திரைத் துறைக்கே வழங்கப்பட்ட கௌரவமாக கருதுகிறேன். திரைத் துறை சார்பாக இந்த பட்டத்தை பெற்றுக் கொள்கிறேன்.

இந்தப் பட்டம் கிடைக்க காரணமாக இருந்த சக நடிகர்கள், நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு எனது நன்றிகள் என்றார்.

இந் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிறுவனர் ஜேபியார், இயக்குனர் பாலசந்தர், நடிகர் விஜய்காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்ஸ் தமிழ்.கொம்

---------------------------------

[b]பல ஆண்டுகால திரையுலக வாழ்வில் அன்று குழந்தை நட்சத்திரம் முதலாய் இன்று வசூல் ராஜா வரை...நவரச ராஜ நடை போடும் திரையுலகக் கலைஞனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்...! நடிகர் கமலுக்கு வாழ்த்துக்கள்...!

Print this item