![]() |
|
ப்ரியாவிடை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ப்ரியாவிடை (/showthread.php?tid=5729) Pages:
1
2
|
ப்ரியாவிடை - வெண்ணிலா - 01-19-2005 <img src='http://kavithan.yarl.net/kavithan_img/WKingbird1-thumb.jpg' border='0' alt='user posted image'> [size=18][b] பிரியாவிடை [i]பட்ட மரமான என்னை விட்டு பறந்து செல்ல நீ நினைத்துவிட்டாய் பரவாயில்லை- நீ பறந்து செல் அழகிய பட்சியே ஓர் பசுமையான சோலைதனில் படர்ந்து வளர்ந்த அடர்ந்த மரமொன்றிலே அமைத்துக் கொள் உனக்காக ஒர் அழகிய கூடுதனை பட்டுப்போன மொட்டை மரமான நான் உன் ஞாபகத்தோடே மீதமாயிருக்கின்ற -என் காலத்தைக் கடத்திக் கொள்கிறேன் இன்னும் சில நாட்களிலே நிலத்திலே சரிந்து விழுவேன் அல்லது சரிக்கப்பட்டு விழுவேன் நிதமும் உன் நினைவுக் கோடரி என்னிதயமதை கொத்தி தின்கிறது என்ன செய்வது எனக்கிது கண்ணீர் கலந்த கடும் கோடையாயிற்று இறுதியாய் உன் இரைப்பையின் பசி தீர்த்திடவென ஒரு கனிகூட இல்லாது போயிற்று இந்த காய்ந்த காயப்பட்ட கிளையிலே நிழலுக்காகவென நீ ஒதுங்கியதை உறவுக்காக என் பக்கம் ஒதுங்கிடுவதாய் உவகைகொண்டு உள்ளமதை சிதைத்துக்கொண்டது தான் மிச்சம் மொட்டை மரமான என்மீதும் நீ மோகம் கொண்டு ஓய்வு தேடி உறவாடியதற்காக உயிர்மூச்சுள்ளவரை உன் நினைவினை நான் இழக்கமாட்டேன் மரமான மனமும் ரணமான வாழ்வும் உரமான உன் நினைவால் உயிர்வாழ்ந்திடும் என்பது உன் நினைப்பு. ஒரு உறுதியற்ற அஸ்திவாரம் ஒரு நாள் சரிந்துவிடும் பட்சியே நீயாவது சந்தோசமாக வாழ்ந்திடு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ragavaa - 01-19-2005 கற்பனை அருமை - Mathuran - 01-19-2005 வணக்கம், அடடா, என்ன அழகான ஆழமான அர்த்தமுள்ள கவிதை. பதில் ஏதும் சொல்ல முடியாத பாவப்பட்ட கவிதை. கண்களும் கலங்குகின்றன. பட்ட மரம் என்கின்ற உவமை, கொஞ்சம் நெருடல் தருகின்றது. பட்ட மரம் என்றால் அதர்க்கு வேறு அர்த்தம். அந்த மரம் மீண்டும் துளிர்க்கட்டும். அந்த குருவியும் மாரி காலம் என்றால் சிலவேளை மீண்டும் வரலாம். கலக்கம் ஏன் மரமே, கலங்காதே. அன்புடன் மதுரன் - தமிழரசன் - 01-19-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அருமை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 01-19-2005 பட்ட மரம் தானாகி பரிதவிக்கும் கவியே பட்டது அது மரம் அல்ல உன் புத்தி....! முளை விடும் தளிரை கிளை விடும் நிலையில் கிள்ளி எறிய ஒரு பறவை சிந்தம் கொண்டதாய் சரித்திரம் இல்லை...! பசுமை இழந்து தனிமரமாய் நீ நிற்க தாங்காத சோகம் கொண்டு கூடி நின்று தேற்றும் பறவையது பறவாபிமானம் பார்க்க மறந்தனையோ....! வேண்டாத கற்பனை கொண்டு பழி சேர்த்தனையோ....! மனிதாபிமானம் தொலைத்த மனிதரிடத்து கொண்டதோ இந்த மரபாபிமானம்....! மரத்துக்கிடக்கு உன் உள்ளம் ஈரம் இழந்து மனிதரைப் போலே....! தோப்புக்கள் என் வாழ்விடம் அதற்காய் தப்புக்கள் என் வாழ்வல்ல பறவையாயினும் பார் சிந்திக்கத் தவறவில்லை...! சிறகடிக்க முதல் நீ முளைவிடக் காத்திருக்குது உன் பசுமை கண்டதும் அது பறப்பது உறுதி...! அதற்காய்... ஏங்காதே மரமே நீ பட்ட மரமும் அல்ல தோப்பிழந்த தனி மரமும் அல்ல முளை விரிய கிளை பரப்பி நீயும் ஒரு நாள் தோப்பாவாய்..! அன்று உன் கனவு நனவாக அகம் மகிழ்ந்திருப்பாய் அப்போ இந்தப் பறவை எங்கேயோ...???! இந்தப் பறவை உனக்கு மட்டுமல்ல உன்னைப்போல் ஏங்கும் அனைத்துக்கும் ஓர் உறவு அன்பின் தூதன்...! தேற்றிக் கொள் வேண்டாத கற்பனைகள் பறவையை அல்ல நிரந்தரமாய் உன் பசுமையை பாதிக்கலாம் பதறாமல் பக்குவம் கொள் பசுமரமாய் நீ வாழ்வாய்...! [b](சுட்டித் தங்கையே உங்கள் கவிதை அருமை.. காட்சியும் கற்பனையும் கவியும் ஒருங்கிணையும் அற்புதம் கண்டோம் வாழ்த்துக்கள்...!) - tamilini - 01-19-2005 ஆகா ஆகா இருவரது கவிகளும் அருமை.. தங்கை மரமாகவும்.. குருவிகள் நியமாகவே குருவியாகவும்.. உருமாறி.. எழுதிய இனிய கவி சு}ப்பர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-19-2005 Quote:ப்ரியாவிடை பட்டதாய் ஏன் கொண்டாய் மரமே காலச்சக்கரத்தில் இதுவும் ஒரு காலம் இலையுதிர் காலம்.. உன் அன்பிலே.. ஆழம் கண்டு.. உன் நிலை கண்டு வருந்தி நிக்கிறது பாவம் சின்னக்குருவி.. மீண்டும் நீ துளிர் விடுவாய்.. உன் அன்புக்குருவியதும் உனக்காய்.. உன்னோடு குடியேறும். நீ பட்ட மரமும் அல்ல. குருவியும்.. பாதகக்குருவியல்ல பாத்திரு இது நடக்கும்.. :wink: - kavithan - 01-19-2005 ஆகா மருமகளே கவிதை அருமை வாழ்த்துகள்.. குருவி மற்றும் அக்காவின் கவிதைகளுக்கும் வாழ்த்துகள். அருமையான கற்பனை... படம் போட்டது பயனளிக்குது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-19-2005 அண்ணா,அக்கா உங்களது கவிதைகள் அருமை. இந்தப் படம் மாமாட்டைதான் சுட்டேன். மாமா படத்திற்கு நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-19-2005 vennila Wrote:அண்ணா,அக்கா உங்களது கவிதைகள் அருமை. இந்தப் படம் மாமாட்டைதான் சுட்டேன். மாமா படத்திற்கு நன்றி. <!--emo& நீங்கள் படம் சுட்டீர்கள் நான் உங்கள் கவிதையை சுட்டுவிட்டேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 01-19-2005 kavithan Wrote:vennila Wrote:அண்ணா,அக்கா உங்களது கவிதைகள் அருமை. இந்தப் படம் மாமாட்டைதான் சுட்டேன். மாமா படத்திற்கு நன்றி. <!--emo& ஓ....! - Kishaan - 01-19-2005 நமக்கும் கவிதைக்கும் கனதூரம்.. இரசிப்பேன்.. அருமை அருமை! யாராவது கவிதை எழுத சொல்லித் தாறீங்களா.. காதலிச்சும் கவிதை வரவில்லை.. அது எப்பிடி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 01-19-2005 Kishaan Wrote:நமக்கும் கவிதைக்கும் கனதூரம்.. யாரைக் காதலித்தீர்கள்? இயற்கையை ரசித்தாலும் கவிதைவருமே. தமிழை நேசித்தாலும் கவிதை வருமே. இப்படி பல..................... அதற்காக காதலித்தால் மட்டும்தான் கவிதை வரும் என்பது முட்டாள்த்தனம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 01-19-2005 வணக்கம், வெண்ணிலாவின் பாட்டும் நல்ல பாட்டு, அதர்க்கு குருவிகள், தமிழினியின் பாட்டுகளும், அழகு, அருமை இனிமை. அன்புடன் மதுரன் - Kishaan - 01-19-2005 vennila Wrote:எதைக் காதலித்தும் கவிதை வரவி;ல்லையே..Kishaan Wrote:நமக்கும் கவிதைக்கும் கனதூரம்.. அது எப்பிடி ஆரம்பிக்கிறது என்று அடிப்படையாக ஏதாவது விடயங்கள் இருக்கும் தானே.. அதை சொல்லமுடியுமா யாராவது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 01-19-2005 உண்மையைச் சொன்னா குருவிகளுக்கு... கவிதை என்று சொல்ல முடியாத... ஆனா ஏதோ ஓசை வரத்தக்க வரி வடிங்கள் இன்று போலவே அன்றும்...இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுமைகள் கண்டு எழுந்தன...! பாடசாலைப் பள்ளிச் சிறுவர்களாய் இருந்து ஆக்கிரமிப்புச் சப்பாத்துக் கீறி எழுதியதே முதற் கவிதை (கவிதை அப்படி என்று சொல்வது உண்மையான கவிஞர்களைக் குறைத்துக் கூறுவதாகும் என்பதால் எமது தரத்துக்கு ஏற்ப...ஓசையுள்ள வரிகள்...என்பதே சரி..அது தற்போது வரை பொருந்தும்..!) இந்தியப் படை வழங்கிய கொப்பியில் தான்...அந்த வரிகள் வாட்களாய் வீழ்ந்தன...பின்னர் அந்தக் கொப்பியோடையே அந்த வரிகள் இலங்கை இராணுவத்தின் 90 காலப் பகுதித் தாக்குதலோடு தொலைந்து போயிற்று...! அதன் பின்னர் விமானக் குண்டுத்தாக்குதலில் தன்னுயிரை இழந்த கல்லூரி அண்ணா ஒருவரின் இழப்பைத் தொடர்ந்து எழுந்தது...அதுவும் கண்ணீரில் கரைந்து சோகத்தில் உக்கி அடங்கிப் போயிற்று...! பின்னர் அந்தப் பழக்கம் மறந்தே போயிற்று...! இப்போ யாழ் களம் எழுத இடம் தந்தது எழுதுகிறோம்... அவ்வளவும் தான்...எமக்குள் காதலும் வரவில்லை...கடைக்கண் பார்வையும் விழவில்லை..ஒசையோடு வரிகள் பிறக்க....தமிழும் சமூகமும் முயற்சியும் மட்டுமே விளைவுகள் தந்தன...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 01-19-2005 காதலித்தால் கவிதை வரும் என்பது.. எப்படி என்றால்.. காதலிப்பவர்கள் கூடிய பாகம் கற்பனையில் செலவிடுகிறார்கள். அப்போ கற்பனை கவிதையாக வரலாம். அப்படியாக இருக்கலாம். இயற்கையைக்காதலித்தால்.(ரசித்தால்). அந்த அழகை வருணிக்கும் போது. கவிதையா வராட்டாலும். நம்மளைப்போல அலட்டலாய் ஆவது வரும் இல்லையா.. மற்றப்படி என்ன இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kishaan - 01-19-2005 அது சரி! நீங்கள் சொல்லுறது.. பொதுவா சொல்லுறவை காதலிச்சால் கட்டாயம் கவிதை வருமே! அப்பிடியெண்டு... அப்ப கவிதை வராட்டால் அது உண்மையான காதல் இல்லையா எண்டு நான் திருப்பி கேட்கிறனாhன்.. அதுதான்.. நன்றி பதில்களுக்கு.. - tamilini - 01-19-2005 ஏங்க அப்படி பாத்த.. கவிதை வராத ஆக்கள் எல்லாம் உண்மையாக்காதிலிக்களை என்று ஆகிடுமா..?? அப்படி பாத்தால்.. கவிஞர்கள் தான் உண்மையா காதலிச்சவர்களாய் இருப்பார்கள்.. என்ன இது.. கேள்வி.. வடிவேலு சொன்ன மாதிரி சின்னப்பிள்ளைத்தனமாய்.. எல்லோ இருக்கு.. :wink: - kavithan - 01-19-2005 tamilini Wrote:ஏங்க அப்படி பாத்த.. கவிதை வராத ஆக்கள் எல்லாம் உண்மையாக்காதிலிக்களை என்று ஆகிடுமா..?? அப்படி பாத்தால்.. கவிஞர்கள் தான் உண்மையா காதலிச்சவர்களாய் இருப்பார்கள்.. என்ன இது.. கேள்வி.. <b>வடிவேலு சொன்ன மாதிரி சின்னப்பிள்ளைத்தனமாய்</b>.. எல்லோ இருக்கு.. :wink:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |