| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 125 online users. » 0 Member(s) | 122 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பொலிசார் கண்ணீர்புகைகுண்டு பாவித்து தமிழர்களை கலைத்தார்கள்.. |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 06:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Yahoo! Asia News Search Yahoo! News
Sunday January 16, 10:01 PM
Police fire tear gas to disperse pro-rebel Tamils
Police used tear gas Sunday to disperse a group of Tamils who turned violent when security forces took down a Tamil Tiger flag commemorating the death of a rebel commander in northern Sri Lanka, a military spokesman said.
About 500 persons tried to hoist the flag in the government-held town of Pesalai to mark the 12th anniversary of the death of Sathasivam Krishnakumar, a rebel commander who blew up his ship when surrounded by the Indian navy in 1993, said military spokesman Brig. Daya Ratnayake.
Ratnayake said the mourners turned violent and began throwing stones when police and navy officers took down the flag. Three policemen sustained injuries and police fired tear gas to disperse the crowd, he said.
Pesalai is 220 kilometers (135 miles) north of the capital, Colombo. Under a Norway-brokered cease-fire signed in February 2002, the rebels are not allowed to hoist their flag in government-held areas. The area is inland and was not affected by last month's tsunami.
The Liberation Tigers of Tamileelam had fought government troops for nearly two decades, demanding a separate state for ethnic minority Tamils. About 65,000 people were killed in the conflict before the truce.
Peace talks broke down in April 2003 when the rebels withdrew demanding more autonomy in the Tamil-majority northeast.
|
|
|
| கனேடியப்பிரதமர் பவுல் மார்ட்டின் அவர்கள் சற்று ....... |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 06:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
கனேடியப்பிரதமர் பவுல் மார்ட்டின் அவர்கள் சற்று நேரத்திற்க்கு முன்னர் இலங்கை வந்து சேர்ந்துள்ளார். இலங்கை பிரதமர்,லக்ஷ்மன் கதிகாமர், மற்றும் ஜனாதிபதியின் காரியதர்சி ஆகியோர் அவரை அவரை வரவேற்றுள்ளார்கள்......
கனேடியப்பிரதமர் வடகிழ்க்கிற்கு விஜயம் செய்வார் என
எதிர்பார்க்கப்படுகிறது......
Canadian PM arrives in Colombo to support tsunami relief
[TamilNet, January 16, 2005 14:23 GMT]
Canadian Prime Minister Paul Martin arrived in Colombo on Sunday evening for a two day visit to the country. Prime Minister Mahinda Rajapaksa welcomed him at the Kattunayaka international airport. Foreign minister Luxman Kadirkamar and presidential secretariat officials were also present at the welcome, sources in Colombo said.
Mr Paul Martin had discussions with Prime Minister Mahinda Rajapaksa at the Temple Tree. He will also call on President Chandrika Kumaratunge, humanitarian agencies and Sri Lankan Parliamentarians.
The main purpose of his visit is to support relief aid to tsunami victims.
Sources in Colombo said that the Canadian Prime Minister is also expected to visit northeast.
|
|
|
| தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 04:44 PM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
<b>முதல்கடிதம்***
பெறுநர்: விஷ்ணு
அனுப்புனர்: நாரதர்
பொருள்: தமிழக அரசியல்
கருணை கூரும் பிரபோ,
நேற்று தமிழ்நாடு போயிருந்தேன். ரஜினி பூந்து கலக்குகிறார். (ராகவேந்திரராக வேஷம் போட்ட அதே ஆள்தான்). ராமதாஸ் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் நான் தான் ஜெயித்தேன் என்பதுமாதிரி எல்லாவற்றையும் பூர்வ ஜென்மப் புண்ணியத்தின் மீது பழி போட்டுவிட்டு அடித்தாரே ஒரு அடி.. (இந்த சமாச்சாரமெல்லாம் தமிழ்நாட்டில் போய்விட்டது என்று நினைத்தேன்..ம்ஹ்.ம்.. அப்படியே இருக்கிறது) அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று உண்டு பிரபோ. கருணாநிதி முதல் ஜெயலலிதாவரை சனிபகவான் அவரவர் வாயில் பூந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்று சனியை சிவபெருமானிடம் சொல்லி சற்றே விசாரியுங்கள்.
இப்படிக்கு
உங்கள் காலடிப்பொடி
நாரதன்
***
[b]இரண்டாம் கடிதம்</b>***
பெறுநர் : சிவபெருமான்
அனுப்புனர் : விஷ்ணு
பொருள்: தமிழக அரசியல்
பிரபோ,
சமீபத்தில் மைக்ரோசாஃப் அவுட்லுக் போட்டதில் ஏகப்பட்ட வைரஸ்கள். துர்வாசரைக் கூப்பிட்டு எல்லா வைரஸ்கள் மீதும் சாபம் விடச்சொன்னேன். (அவரோ பூமிக்குப் போங்கள் என்று சாபம் விட்டுவிட்டார்). என்னவாயிற்று என்று தெரியவில்லை. சமீபகாலமாக நாரதரிடமிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் ஆச்சரியமாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன. போன வைரஸ்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கே நேரடியாகப் போய் சேர்ந்துவிட்டனவா என்று தெரியவில்லை.
உதாரணமாகப் பாருங்கள். நம் அருமைச் சினேகிதர் கருணாநிதி சனிபகவான் பெயரை அடிக்கடிச் சொல்கிறாராம். அப்புறம் விசாரித்ததில், செல்வி ஜெயலலிதாவை சனியன் என்று சொல்லியிருப்பதாக அறிந்தேன். அந்தம்மாவுக்கு சொல்லியா தரவேண்டும். ஒரே மேடையில் ஒரே பேச்சில் 24 முறை கருணாநிதியை சனியன் சனியன் சனியன் என்று சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் என்றுமே ஜனநாயகப் பாரம்பரியம் கிடையாது. ராஜாஜி இதனைக் கேட்டு நொந்து நூலாகி விட்டார் (சரி சரி அவர் ஏற்கெனவே நூல் போலத்தான் இருப்பார் என்று கிண்டல் வேண்டாம்) தமிழ்நாட்டில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஜனநாயகப்பாரம்பரியத்தைக் கெடுக்க சனி ஏதும் வேலை செய்கிறாரா என்று சற்றே விசாரித்து சொல்லவும்.
இப்படிக்கு
உங்கள் மச்சான்
விஷ்ணு
***
பெறுநர்: சனிபகவான்
அனுப்புனர்: சிவன்
பொருள்: தமிழக அரசியல்
அன்புடைய சனி அவர்களே,
உங்களது பெயர் தமிழக அரசியல்வாதிகள் வாயில் அடிக்கடி அடிபடுகிறது. என்ன விஷயம்? நம்மை நம்பாத திரு கருணாநிதி கூட உங்கள் பெயரை அடிக்கடி உபயோகித்து செல்வி ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார். நம்மை நம்பும் ஜெயலலிதாவோ உங்களது நல்ல குணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவமரியாதை செய்கிறார். நீர் ஏதும் நமக்குத் தெரியாமல் காரியம் செய்கிறீரா? முக்கால பார்வையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துவது இல்லை. ஆகையால், உடனே இதற்கு பதில் போடும்படி கட்டளை
இப்படிக்கு
சிவன்
***
இரண்டாம் கடிதம்
***
பெறுநர் : சிவன்
அனுப்புனர்: சனிபகவான்
பொருள்: தமிழக அரசியல்
கருணைகூரும் பிரபோ,
ஐயா தெரியாதய்யா... நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் மும்முரமாக இருக்கிறேன். எனக்கு வேலை வைக்காமல் அமெரிக்க அரசாங்கமே முக்ததா அல் சதாவை சீண்டிக்கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பாவமும் அறியாத ஜப்பானியர்களை விடுவிக்க ஒரு வெடிக்காத வெடிகுண்டை வெடிக்கும் வேலை வந்துவிட்டது. இந்த மும்முரத்தில் நான் ஏன் தமிழ்நாட்டுக்குப் போகிறேன்? இது நாரதர் வேலையாக இருக்கும். அல்லது அவரது தொண்டரடிப்பொடி சோ அவர்களின் வேலையாக இருக்கும். சற்றே நாரதரை கதவைத் தாளிட்டுவிட்டு விசாரிக்கவும்.
அடியேன் உங்கள் காலடியில்,
சனி
***
பெறுநர்: பிள்ளையார்
அனுப்புனர்: சனிபகவான்
பொருள்: தமிழக அரசியல்
கருணை கூரும் பிரபோ,
உங்கள் சாப்பாட்டுக்கு இத்துடன் இரண்டு வண்டி கொழுக்கட்டைகளும், மூன்று வண்டி சுண்டலும் அனுப்பியிருக்கிறேன். (லோக்கல் மக்டொனால்டில் ஒரு கொழுக்கட்டைதான் கேட்டேன். சூப்பர்சைஸ் செய்துவிட்டார்கள்) எனக்கு அப்படியே சற்று உதவி செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் தந்தையார் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் என் பெயரை சொல்லி பெருந்தலைவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிகொள்கிறார்கள் போலிருக்கிறது. நாரதர் என் வேலை என்று பற்றவைத்திருக்கிறார். நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். இல்லையெனில் நேரடியாக சிவபெருமானை சந்தித்து அவர் காலடியில் விழுந்து விளக்கியிருப்பேன். தயவுசெய்து என் சார்பாக சிவபெருமானிடம் பேசவும். இல்லையேல் ஒரு கடிதமாவது என் சார்பில் போடுங்கள்
உங்கள் அடியேன்
சனி
***
பெறுநர்: சிவன்
சிசி: விஷ்ணு
அனுப்புனர்: விநாயகன்
பொருள்: தமிழக அரசியல்
அன்புள்ள அப்பா,
நான் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் காற்று வெயில் பனி என்று பாராமல் எல்லா பறவைகளின் காலைக்கடன் கழிக்க வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் கேட்கக்கூடாதா? நீங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்து சனி அரண்டுவிட்டார்.
விஷயம் இதுதான். தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில் ஜெயிக்கவேண்டுமென்றால் உங்களுக்கே தெரியும் என்ன என்ன நாடகம், மெகாசீரியல், வில்லன் எல்லாம் பண்ணவேண்டும் என்று. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த நீ சனி, உங்கப்பன் சனி உங்கம்மா சனி போன்ற வசையாடல்கள் எல்லாம். தமிழ்நாட்டு ஜனநாயகப் பாரம்பரியம் ஊழலில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும், வழக்கம்போல உனக்கு 10 சதவீதம் எனக்கு 15 சதவீதம் என்று ஜனநாயகத்தைக் காப்பாற்றச் சென்றுவிடுவார்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம்.
இப்படிக்கு
உங்கள் மூத்தபிள்ளை
விநாயகன்
பின் குறிப்பு: இதன் படிவத்தை மாமாவுக்கும் அனுப்பியிருக்கிறேன்
**
|
|
|
| வர்த்தக அமைச்சர் ஜெயராஜ் பெ(f)ர்னாண்டொபுல்லெ தானும்...... |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 01:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
இலங்கை வர்த்தக அமைச்சர் ஜெயராஜ் பெ(f)ர்னாண்டொபுல்லெ தானும் சுனாமியால் அநாதையான ஒரு பிள்ளையை தத்து எடுக்கப்போகிறாறாம். அது எந்த இனத்தைச்சேர்ந்த பிள்ளையென்றாலும் ஓகேயாம்..........
அது பெண் அல்லது ஆண் குழ்ந்தையாகவும் இருக்கலாம்......
இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண்மகன் வயது 12,ஒரு பெண் வயது 13 உள்ளனர். இவருடைய மகன் "ஒரு தம்பி இருந்தால் நல்லது" என்கிறானாம்...........
Sunday, January 16, 2005
Sri Lankan Cabinet minister wants to adopt tsunami orphan
COLOMBO, Sri Lanka (AP) - A Cabinet minister from Sri Lanka's minority Tamil community said Sunday he plans to adopt a child orphaned by last month's tsunami and doesn't care about the ethnic background.
"The race is immaterial, we want a boy or girl to adopt as our own,'' said Jeyaraj Fernandopulle, the minister of trade and commerce.
The adoption offer came a week after President Chandrika Kumaratunga, an ethnic Sinhalese, said she would adopt a Tamil orphan, in an apparent gesture at national reconciliation between the two ethnic groups.
Nearly 1,000 children were orphaned by the tsunami. Among Sri Lanka's 31,000 dead, children accounted for a staggering 40 percent, or 12,000. In all, at least 162,000 people have died across southern Asia and as far as eastern Africa.
Fernandopulle already has a son, 12, and daughter, 13. "My son prefers to have a little brother,'' he said. "We want to care and nurture this child and have the child's best interests at heart.''
Fernandopulle said orphanages were the "worst places'' for children and it was important to ease procedures allowing orphans to be raised by families.
Sri Lanka has been wracked by ethnic war since Tamil extremists began fighting in 1983 for a separate state in the Tamil-majority north and east, claiming systematic discrimination by the majority Sinhalese.
The war killed nearly 65,000 people. Norway brokered a cease-fire in 2002, though efforts toward a permanent peace have stalled.
Many Sri Lankans have expressed hope that the tsunami disaster, which equally affected both communities, will help bridge the chasm.
Fernandopulle is part of a three-member Cabinet group appointed to revamp laws to help orphans and other victims of the disaster. Currently, only children under 14 years may be adopted, but Fernandopulle said he hoped to "widen this window.''
-AP
|
|
|
| காங்கேசன்துறை, பருத்தித்துறை இறங்கு துறைகள்............ |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 01:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
காங்கேசன்துறை, பருத்தித்துறை இறங்கு துறைகள்
அமெரிக்க அரசினால் விரைவில் புனரமைப்பு
(ஆர். புஷ்பபரன்)
சுனாமி கடற்கொந்தளிப்பினால் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதும், தற்பேõது படையினரது பாவனையிலுள்ளதுமான காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை இறங்கு துறைகளை உடன் புனரமைக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இவ்விரு இறங்குதுறைகளையும் பார்வையிட அமெரிக்க இராணுவ பொறியியல் பிரிவின் உயரதிகாரிகள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரியவருகின்றது.
தமது நாட்டு விசேட கடற்படை கப்பலில் இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகுகள் பாதுகாப்பு வழங்க இக்குழுவினர் காங்கேசன்துறை வந்திருந்ததாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதே வேளை இவ் இராணுவ பொறியியல் நிபணர் குழுவும் யாழ். மாவட்ட படைத்தலைமையினைச் சேர்ந்த சில அதிகாரிகளும் பலாலியிருந்து வாகனத் தொடரணி மூலம் பருத்தித்துறை இறங்கு துறையினை நேரடியாக வந்து பார்வையிட்டிருந்ததாக அங்கு பணியாற்றும் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஆயினும் இந்நிபுணர்கள் குழு எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள் என்பதை தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இவ் இறங்குதுறையை உடனடியாக புனரமைத்து தமது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதில் யாழ். மாவட்ட படைத்தலைமை கூடிய கவனமெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமாதானமுமில்லை சுனாமி உதவியுமில்லை என்ற நிலையில் தமிழர்;
நடவடிக்கை எடுக்காத அரசின் பிரதிநிதிகள் யாழ். வருவதில் அர்த்தமில்லை
Source: Virakesari
|
|
|
| ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்க படைகள் விரைவில் வெளியேறும் |
|
Posted by: sinnachi - 01-16-2005, 12:19 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்க படைகள் விரைவில் வெளியேறும்: அமெரிக்க செயலாளர் அறிவிப்பு
ஜ மா.சேரமான் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 16 சனவரி 2005ää 8:08 ஈழம் ஸ
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளின் மீட்பு பணிகளுக்காக என்று இறக்கப்பட்டுள்ள பாரிய அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையின் துணைச்; செயலாளர் பவுல் ஒல்ப்விட்ஸ் அறிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஆசிய பயணம் ஒன்றை அவர் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது தாய்லாந்தின் பாங்காங் சென்ற அவர்ää ஊடகவியலாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
ஆழிப்பேரலைக்குப் பின் ஆசிய நாடுகளில் 15ää000 படையினர்ää 21 கப்பல்கள்ää 41 விமானங்கள்ää 50 உலங்குவானூர்திகளை அமெரிக்கா குவித்துள்ளது. இந்தியா 16 ஆயிரம் படையினரையும்ää அவுஸ்திரேலியா 350 படையினரையும் ஆசிய நாடுகளில் குவித்துள்ளது. மொத்தம் 16 நாட்டின் படைகள் ஆசிய நாடுகளில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்ச்; 31ஆம் தேதிக்குள் அந்நியப் படைகள் தமது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இந்தோனேசியா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
| விழியீர்ப்பு விசை |
|
Posted by: தமிழரசன் - 01-16-2005, 08:17 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (55)
|
 |
விழியீர்ப்பு விசை
------------------------------------------------------
*காதலை எப்பொழுது சந்தித்தேனோ
அப்பொழுது தொடங்கியது என் வாழ்வு
என்றாலும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது
சந்தித்து விட வேண்டும்
என் காதலியை
*என்னிடம் கொட்டிக் கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும் வாங்கிவிட முடியாது
காதலைத் தவிர
*எனக்குப் பெண் கிடைப்பது முக்கியமில்லை
என் காதலுக்கொரு
காதலி கிடைக்க வேண்டும்.
*என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை உன்னைப் பா¡த்துமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு.
*சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.
எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
*கடிகாரத்தைத் திருடியவனையெல்லாம்
விரட்டிப் பிடித்திருக்கிறேன்.
என் இதயத்தைத் திருடிப்
போகிறாய்
பேசாமல் நின்றுகொண்டிருக்கிறேன்.
*உனக்குத் தெரியாமலேயே
உன்னை நேசிக்கும்படி
என்னை ஆக்கியது நீ தான்.
*சூரியன் வந்த பிறகு தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போது தான்
விழிக்கிறது இந்த வீதி.
*இந்த மலையைக் குடைந்து ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது.
அலைகள்
|
|
|
| பி.பி.ஸி செய்தியாளர் திருமதி. பிரான்சிஸ் கரிசன்........ |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 07:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
எதனுடனும் ஒப்பிட முடியாத பேரழிவு இது
முல்லைத்தீவில் சுனாமியால் ஏற்பட்டிருக்கின்ற அழிவை எதற்கும் ஒப்பிட்டுக் கூறமுடியாது. யுத்த அழிவுகள் வேறுää இயற்கை அழிவுகள் என்பது வேறுää இங்கு இயற்கை அழிவு இப்படியொரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் நினைக்கவில்லை என பி.பி.ஸி செய்தியாளர் திருமதி. பிரான்சிஸ் கரிசன் தெரிவித்தார்.
முல்லைத்தீவுப் பகுதியில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு தொடர்பான செய்திகளை அவர் பி.பி.ஸிக்காகத் திரட்டிக் கொண்டிருக்கையில் நாம் அவரைச் சந்தித்தோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வரை இலங்கைக்கான பி.பி.சி முகவராக இருந்த இவர்ää தற்போது ஈரானில் கடமை புரிகிறார். 4 வருடங்கள் இங்கு கடமை புரிந்த இவர் சுனாமி அனர்தங்கள் தொடர்பில் செய்திகளைத் திரட்டுவதற்காக இலங்கை வந்துள்ளார்.
அரசின் நடவடிக்கை தொடர்;பான கேள்விகள் எதற்கும் பதிலளித்தால் அது பி.பி.சியின் கருத்தாக மாறிவிடு;ம். எனவே அது தொடர்பான வேள்விகளைத் தவிர்குமாறு கேட்டுக் கொண்டார் அவர் முல்லைத்தீவு நிலமை தொடர்பாக எமக்கு வழங்கிய செவ்வியை கீழே தருகின்றோம்.
கேள்வி - சுனாமியால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவின் நிலைமை பற்றி உங்கள் பார்வை எப்படி உள்ளது?
பதில் - முல்லைத்தீவைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கின்றது. இந்தப் பகுதிகள் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை விட மிகவும் மோசமான அதிகமான அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒரு யுத்தம் ஏற்படுத்த முடியாத அழிவுகளை இயற்கை ஏற்படுத்தி இருக்கின்றது. யுத்த நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர் நான் இந்தப் பகுதிகளுக்கு . வந்திருந்தேன் அப்போது தான் மக்கள் மீளக் குடியமர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையுடன் தான் இருந்தார்கள். ஆனால் அவர்களின் உழைப்புää உறுதிää மகிழ்ச்சி அனைத்துடன் அவர்களின் இருப்பிடங்கள் பொருட்கள் அனைத்துமே கடல் அள்ளிச் சென்று அவர்களை நிர்க்கதியாக்கி பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது.
கடற் பெருக்கில் சிக்கித் தப்பி நலன்புரி நிலையங்களில்
கேள்வி - தங்கியிருக்கும் மக்களை நீங்கள் சென்று பார்வையிட்டிருந்தீர்களா? அப்படியானால் அவர்களின் மன நிலைபற்றி உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது?
பதில் - ஆம் இந்தப் பெரும் அனர்த்தத்தில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் பெருந்தொகையானவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றார்கள் உண்மையில் இந்த மக்களின் மனநிலை மிக மோசமாக இருக்கின்றது. அவர்கள் கூறுகின்ற கரைகள் வேதனையைத்தருகின்றது.
தங்களை நோக்கி கடல் வந்ததும் அதில் அடிபட்டுப் போனதும் அவர்கள் மனதில் அழியாதிருக்கின்றது. குறிப்பாக சிறுவர்கள் பற்றித்தான் நான் மிகக் கவலையடைகிறேன். பிள்ளைகள் பெரிதும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏனெனில் சிறுவர்கள் தங்கள் தாய்ää தந்தையர்ää இரத்த உறவுகள் கடலுடன் அடித்துச் செல்லப்படுவதையும் அதில் மூழ்கி இறந்து போவதையும் நேரிலே பார்த்திருக்கின்றார்கள் இது அவர்களின் மனநிலையை வெகுவாகப் பாதித்திருக்கின்றது எனக்கும் வேதனையைத்தருகின்றது. நான் ஒரு கதையைச் சொல்கின்றேன். ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் அவன் எனது மகன்மாதிரிää அவனை இந்தச் சம்பவம் பற்றி கேட்டவுடனேயே அவன் ஏதேதோ எல்லாம் சொல்லிக்கொண்டே போகின்றான் தான் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுää அதிலிருந்து ; தப்ப முடியாமல் தத்தளித்ததுää இறந்த சடலத்தைப்பார்த்தது. அப்படி இப்படி என் று கதையை நிறுத்தாமலேயே தொடர்ந்துகொண்டு போனான். இது சிறு பிள்ளைகளின் மனப் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மனநிலை மிக மோசமாக இருக்கின்றது. குறிப்பாக சிறு பிள்ளைகளின் மனநிலை கவலை தருவதாக இருக்கின்றது.
ஒரு தாய் தனது பிள்ளையைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடியதாகவும் கடல்நீர் தனது இறுகிய அரவணைப்பி;ல் இருந்த குழந்தையை உருட்டி அடித்துப் பறித்துக் கொண்டு போய்விட்டதாகவும் வேதனையுடன் கூறினார். இப்படி பல சம்பவங்கள் நடத்திருக்கின்றன. அனைவரும் இப்படித்தான் புலம்புகிறார்கள். எவராலும் எவரையும் காப்பாற்ற முடியாத நிலை. அந்த அளவிற்கு கடல் மூர்க்கமாக அடித்திருக்கின்றது. இவர்களின் வேதனைகளை என்னால் உணர முடிகின்றது. நானும் ஒரு தாய்தான் அதனால் என்னை இந்த சோகச்கதைகள் வெகுவாகப்பாதிக்கச்செய்கின்றது.
இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நீண்டகாலமாக யுத்தப்பாதிப்புக்குள்ளாகி பல தடவைகள் இடம் பெயர்ந்து பெரும் சிரமங்களின் மத்தியில் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்ந்து மகிழ்வாக இருந்தார்கள். அவர்களின் அந்த மகிழ்வை முன்னர் இந்தப்பபுதிக்கு வந்தபோது கண்டேன். நான் கண்ட அந்த மக்கள் “ சுனாமி ” யால் பாதிக்கப்பட்டு நிறையப்பேர் இறந்திருக்கலாம். முன்னர் அவர்கள் வாழ்ந்த மகிழ்வான வாழ்வையும் பார்க்கிறேன் இது ரொம்பவும் மோசமானது.
இதுபோலத்தான் வேறு பகுதிகளில் உள்ளவர்களும்ää அவர்கள் ஆடம்பரமான மகிழ்வான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். பெரும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து சொத்துக்களை இழந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த முல்லைத்தீவு மக்களின் நிலை மிகவும் மோசமானது. தொடர்ச்சியாக இடம் பெயர்ந்து துயரத்துக்குள்ளேயே வாழ்ந்து மகிழ்வான வாழ்வுக்குள் போய்க்கொண்டிருந்த போது இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேள்வி - முல்லைத்தீவின் அழிவை எதற்காவது ஒப்பிட்டுக்கூறக் கூடியதாக இருக்கிறதா?
பதில் - இந்த அழிவை குறிப்;பிட்டுக்கூற முடியாது. பேரழிவுதான் இது. யுத்த அழிவுகள்வேறு. இயற்கை அழிவுகள் வேறு. இங்கு இயற்கை அழிவு இப்படித் தாக்கம் ஏற்படுத்தும் என்று யாரும் நினைக்கவில்லை.
கேள்வி - முகாம்களில் வாழ்கின்ற மக்கள் இந்த அதிர்வில் இருந்து மீளக்கூடியதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் - இது மிகவும் கஷ்ரமான கேள்வி. இந்த மக்களால் எவ்வளவு காலம் துயரத்தைத் தாங்க முடியும்? சிலரிடம் துணிவு இருக்கிறது. முனதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் புதிய வாழ்வை ஆரம்பிப்பார்கள்.ஆனால் இந்த மக்கள் அழிவுகளுக்குள்ளேயே வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. இந்த அழிவில் இருந்து மீள்வதென்பது கஷ் ரமான ஒன்று. அவர்கள் எப்படிச் செய்வார்கள் என்று என்னால் கூறமுடியவில்லை. இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். 62வயதுடைய ஒரு அம்மா அவர் வத்திராயனைச் சேர்ந்தவர். அவரின் மனநிலை மோசமாக இருக்கிறது. அவர் சொன்னார் 64ஆம் ஆண்டு கடலில் புயல் அடித்த நேரம் கணவன் கடலில் செத்து விட்டார்.
பிறகு யுத்தத்தால் இடம் பெயர்ந்து அனைத்தையும் இழந்து மீண்டும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்ந்து வாழ்வைக்கட்டி எழுப்பிக்கொண்டிருந்த இந்த வேலையில் கடல் கொந்தளிப்பில் இந்த வேளையில் கடல் கொந்தளிப்பில் தனது பிள்ளைகள் அனைத்தையும் இழந்த நிர்க்கதியான நிலையில் இருக்கிறார். அவர் புலம்புகிறார். “ வாழவேண்டிய இளம்பிள்ளைகள் எல்லாம் செத்துப்போய் விட்டார்கள். நான் ஏன் தப்பியிருக்கிறேன் எங்களுக்கு ஏன் இந்தத் துன்பம் தொடர்ந்து வருகுது. ” என்ற கேள்வியை எங்களிடம் தொடர்ந்த கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மக்கள் இப்படியான கேள்வியுடன் தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மீண்டும் துன்பத்தையே கொடுத்து மனதைச் சோர்வாக்கி அவர்களை மன நெருக்கடிக்குள்ளாக்குகின்ற அந்த முகாம் வாழ்க்கைக்குத் திரும்பிப்போவது என்பது மிகவும் மோசமானது. இவர்கள் எப்படி மீளப்போகிறார்கள் என்பது என்னால் கூறமுடியாதிருக்கின்றது.
இதிலே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிக் கூறுவதானால்ää அன்ரனிடேவிட் என்ற 13வயதுப் பிள்ளை ஒருவனுடன் கதைத்தேன். அந்தப்பிள்ளை சொன்னான் “ நான் 5வயதாக இருக்கின்றபோது யுத்தத்தில் தந்தையைப் பறிகொடுத்துவிட்டேன் ” அவன் இந்தப் பேரழிவு பற்றிக் கூறும்போது சொன்னான் “ நீண்ட யுத்தம் நடந்தது அதுக்குள் அப்பாவை இழந்தோம்.
இப்படிப் பலதை இழந்தோம். ஆனால் ஆமியால எல்லாத்தையும் கொல்லமுடியேல்ல ஆனால் கடல்வந்து அவங்களால செய்யஏலாத எல்லாத்தையும் செய்து போட்டுது ” என்று அந்தச் சிறுவன் கடல்செய்த பொரிய அனர்த்தத்தை வெகு சுருக்கமாகச் சொன்னான். அந்த மாதிரியான மோசமான மனநிலையில் தான் இருக்கின்றார்கள். இந்த உதாரணமே அவர்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளப் போதுமானது.
கேள்வி - பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களால் செய்ய முடிந்தது?
பதில் - எங்களைப் பொறுத்தவரை இந்த அழிவுகள் பெரும் துன்பமானது. இங்குள்ள நிலைமையற்றி நான் ஊடகவியலாளர் என்ற வலையில் வெளி உலகுக்குக் கூறமுடியும். இதைவிட எதனைச் செய்யமுடியும்? இவர்களின் துயரில் நாமும் பங்குகொள்ளுகின்றோம். உலக உதவிகள் தான் இந்த மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்பும்.
கேள்வி - முகாம்களில் வாழ்கின்ற மக்கள் இந்த அதிர்வில் இருந்து மீளக்கூடியதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கயா?
பதில் - இது மிகவும் கஷ்ரமான கேள்வி. இந்த மக்களால் எவ்வளவு காலம் துயரத்தைத் தாங்க முடியும்? சிலரிடம் துணிவு இருக்கிறது. முன்னதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் புதிய வாழ்வை ஆரம்பிப்பார்கள்.
Source: Pathivu
|
|
|
| தலைவர் ஜேம்ஸ் மொரிஸ் கிளிநொச்சி பயணம் |
|
Posted by: Vaanampaadi - 01-16-2005, 04:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மொரிஸ் கிளிநொச்சி பயணம்
ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மொரிஸ் அவர்கள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும், அந்த ஒப்புதலைப் பெநறுவதற்காக அரசுடன் பேச்சுகள், சமரசங்கள் செய்ய வேண்டியதாக இருந்தது என்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் அதிகாரி ஜோர்டன் டே தெரிவித்துள்ளார்.
நாளை காலை தமது தலைவர் கிளிநொச்சிக்கு செல்வதாகவும், நேர நெருக்கடி காரணமாக பிற வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு போக முடியாதுள்ளது என்றும், எனினும் அனைத்துப் பகுதிகளிலும் தமது பணியாளர்கள் சேவை புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.
உலக உணவுத் திட்டத்தின் செயலியக்குநர் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வதை உலக உணவுத் திட்டம் தடுப்பதாக எழுந்த ஊடகச் செய்திகள் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி சார்பாக பேசவல்ல அதிகாரியான ஹரிம் பீரிஸ், ஜேம்ஸ் மோரிஸ் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வதை அரசு தடுக்கவில்லை; மாறாக ஊக்குவிக்கிறது என்றார்.
ஜேம்ஸ் மோரிசின் பயனத்துக்கு உதவியாக இலங்கை அரசு விமானப் படை ஹெலிகாப்டரை தந்து உதவுகிறது. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் நடைமுறைப் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு தரையிறங்க இயலாது என்பதாக விமானப் படை தெரிவித்திருந்தது என்று ஹரிம் பீரிஸ் தெரிவித்தார். வவுனியாவரை ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து தரைவழியாக கிளிநொச்சி செல்வதை தாங்கள் ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.
Source : BBC
--------------------------------------------------------------------------------
|
|
|
|