![]() |
|
ஊனமாகிப்போன தமிழ் நட்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஊனமாகிப்போன தமிழ் நட்பு (/showthread.php?tid=5734) |
ஊனமாகிப்போன தமிழ் நட்பு - Mathan - 01-19-2005 ஊனமாகிப்போன தமிழ் நட்பு இப்போதும் தமிழ்ச் சமுதாயத்தில் 'ஆண்-பெண்' நட்பு ஒரு அதிசியமாகவோ அல்லது சந்தேகத்துடனோ பார்க்கப்பட்டு வருகிறது. தந்தை-தாய் , அண்ணன்-அக்காள் , தம்பி-தங்கை , மைத்துனன்-மைத்துனி என்று அனைத்து உறவிலும் 'ஆண்-பெண்' கலந்து வரும் போது "நட்பு" மட்டும் ஊனமாகிப்போய் ஒரு பாலுடன் நின்றுவிடுகிறது. இது நமது சமுதாய அமைப்பில் உள்ள பெரிய குறைபாடு . ஆண்/பெண் நட்பில் புறத்தோற்றம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒரு முக்கிய காரணமாகிவிடுவது நடைமுறை வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திக்கும் உண்மை. இந்த புறத்தோற்றம் வேண்டுமானால் நட்புக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாமே தவிர, அதுவே உண்மையாகி விடாது. நட்புக் கொள்வதும் அந்த நட்பை சீரான பாதையில் எந்த சுனக்கமும் இல்லாமல் வளர்த்துச்செல்வதும் பெரிய விசயம். புறத்தோற்றம் மட்டுமே ஆண்/பெண் நட்பின் அடிப்படையாகிப்போகும் பட்சத்தில் அது நட்பையும் தாண்டி திருமண உறவையோ அல்லது சமுதாயம் விமர்சிக்கும் ஒரு தப்பான உறவை நோக்கி வளர்ந்து செல்வது தடுக்க முடியாத ஒன்று. என்னைக்கேட்டால் காதலியைத் தேர்ந்தெடுப்பதுகூட சுலபம் என்று சொல்வேன். காதலன்/காதலி தேர்வில் புறத்தோற்றம் மிகப்பெரிய இடம் வகிப்பதால் அவர்களை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. அடையாளம் கண்டபின் அந்த காதலை வளர்த்துச்செல்வது மிகச்சுலபமாகி விடுகிறது. புறத்தோற்றம் தவிர்த்த ஆண்/பெண் நட்பு என்பது ஒரு இனிய அனுபவம் ஆகும். இந்த உறவு கத்திமேல் நடப்பது போன்றது. இது அனைவருக்கும் வாய்த்து விடுவது இல்லை. இந்த வகை நட்பு திருமண உறவைவிட மேலானது. திருமணத்தில் உறவு சட்டப்படி பதிவுசெய்யப்படுகிறது. நட்பு எந்த சட்டப்படியும் பதிவுசெய்யப்படுவது இல்லை. இங்கு நட்பே எந்த சாட்சிகளும் இல்லாமல் தன்னைத்தானே தனக்குள் பதிவு செய்து கொள்கிறது. இவ்விதமான உறவில் முழுமையான அன்பும், உண்மையும் இல்லாத பட்சத்தில் அந்த நட்பு எந்தச் சாட்சிகளுமின்றி தற்கொலை செய்து கொல்லும். இதற்கு எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது ஆனால் மனசாட்சி மரணதண்டனை கொடுத்துவிடும். Thanx: கணேசன் - tamilini - 01-19-2005 :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 01-19-2005 வணக்கம், நீங்கள் சொல்வது உண்மை, நீன்கள் விடய்த்தை நன்றாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். என்ன செய்வது இந்த துன்பமான உலகத்தை நோகத்தான் எங்களால் முடிகின்றது. தனிமைப் படுத்தப்படுகின்றோம் என்பது என்னமோ உண்மைதான். எனக்கு தெரிந்த ஒருவர் என்னிலும் விட ஒரு ஏளு வயது கூட இருக்கும், அவர் சிலநேரன்களில் தன்னையே மறந்து செயல்படுவார். நாட்டில் நன்றாக வர்த்தகம் படித்தவராம். அவரின் நடவடிக்கைகளை பார்த்து சிலர் நகைப்படும் உண்டு. இதனால் நான் அவரை அணுகி அவரிடம் கேட்டேன் " ஏன் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றீர்கள்" என. தன் கூட யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள் என்றார். நானும் சிலநிமிடம் அவருடன் பேசினேன். மிகவும் வேதனைபட்டு கொண்டார். இப்போது அவர் யழ்பாணம் போய்விட்டார் என நினைக்கின்றேன். இதில் பெண்களுடன் நட்பு என்பது............. சாத்தியம் தானோ? இப்படி ப்ல கதைகள் அன்புடன் மதுரன் - shiyam - 01-19-2005 உண்மையான நட்பு என்றுபார்க்கும்போது என்னைபொறுத்தவரை அங்கு பால் வித்தியாசமோ அல்லது வயதுவித்தியாசமோ காணாமல்போய் விடுகிறது அதேபோல் கூட இருப்பவர்களின் புரிந்துணர்வும் முக்கியம் உதாரணத்திற்கு உங்களிற்கு உண்மையான நண்பரோ நண்பியோ இருந்து அவர் திருமணமானவராக இருந்தால் அவரின் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உங்களின் நட்பின் உண்மைதன்மை விளங்கியவராக இருக்கவேண்டும்.அதாவது அவரும்உங்களின் இன்னொரு நண்பராக இருப்பார் இல்லையேல் வீண் சச்சரவுகள்தான் - kasthori - 01-19-2005 எமது தமிழ் சழுதாயம் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளக்கூடிய பக்குவநிலையை இன்னமும் எய்தவில்லை என்றே நான் கருதுகின்றேன். ஒரு அண்ணனும் தங்கையும் கூட குறிப்பிட்ட ஒரு வயதின் மேல் ஒருவரையொருவர் தொட்டுப்பேசுவதைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை இப்போதும் எமது சமுதாயத்தில் காணப்படுகின்றது. இப்படி இருக்கும்போது ஆண்-பெண் நட்பை எமது சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலையை அடையும் காலம் வெகுதூரத்தில் என்பதே என் கருத்து. :?: |