Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனியவளே
#1
<span style='font-size:25pt;line-height:100%'>இனியவளே </span>
வானம் பார்த்த பூமியாய்
வரண்டிருந்த என் மனதில்
கார்மேகமாய் கனநேரம்
காட்சிதந்து கனியவைத்தாய்..
காதலுடன் காத்திருந்தேன்
நீயோ கானல் நீராய் மாறி
காணாமலே போனாய்..

மனமென்னும் மாநிலத்தில்
பூகம்பத்தை புகுத்தி விட்டு
நீராவி போல நீயும்
மறைந்தே போனாய்..
நீந்தத்தெரியாத என்னை
நீரில் தள்ளிவிட்டு
நிதானமாய் நீயும்
நித்திரை செய்கின்றாய்..

முடியவில்லை முயன்று பார்க்கிறேன்
முகிலிலே உன்னை முகர்ந்து
நானும் ழூச்சுவிட..

காத்திருக்க நானும் கஷ்டப்படவில்லை
இழவுகாத்த கிளியாகவும் இஷ்டபடவில்லை
இடியாக விழுவாயா?இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே…
thilee@gmail.comதமிழரசன்

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
ஆகா என்ன ஒரு காதல்? உங்கள் காதலியை இடியாக வர சொல்லி கேட்கிறீர்களே...அழகான கவிதை. பாராட்டுக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=16][b].
Reply
#3
அருமையான கவிவரிகள். கற்பனையா?
----------
Reply
#4
வரிகளை வைச்சு வெறுமனே கற்பனை என முடிவெடுக்க முடியாத நிலை..
எது எப்படி இருப்பினும்.. இரசிக்க முடிகிறது..

நன்றி அண்ணா!
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#5
கன்னிக்காய் காத்திருப்பு
காலத்தின் பேரழிவு
கனவுகள் தந்தே கவிழ்த்திடுவாள்
நிஜத்துக்கு வந்து
நிம்மதி காணுங்கள்...!
காதலெனும் போதையில்
கண்டதையும் உளறாதீர்கள்
பார்க்கப் பாவமாகி நீர்
அவளோ பார்த்து பரிகசிப்பாள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
kuruvikal Wrote:கன்னிக்காய் காத்திருப்பு
காலத்தின் பேரழிவு
கனவுகள் தந்தே கவிழ்த்திடுவாள்
நிஜத்துக்கு வந்து
நிம்மதி காணுங்கள்...!
காதலெனும் போதையில்
கண்டதையும் உளறாதீர்கள்
பார்க்கப் பாவமாகி நீர்
அவளோ பார்த்து பரிகசிப்பாள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அவரே சொல்கிறாரே
நீந்தத்தெரியாத என்னை
நீரில் தள்ளிவிட்டு
நிதானமாய் நீயும்
நித்திரை செய்கின்றாய்..

பிறகேன் இப்படி
இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே
ஏங்குகிறார்.
புரியுதெல்லோ பரிகசிப்பாள் என்று.
----------
Reply
#7
காதல் போதையானால்
உளறல் வரும்
காதல் அமிர்தமானால்
மெளனம் வரும்
இனிமையாகும்...!

அமிர்தம் கொள்
மலரினும் மெலியது காதல்
வார்த்தைகள் கூட
காயப்படுத்தும்
தூய அன்பு மட்டுமே
ஆசுவாசப்படுத்தும்

அன்புக்கு அருகதையில்லா
பாவிகளாய் பாவையர்
உலாவரும் உலகில்
காதலுடன் கன்னி தேடி
கடைசியில் கானல் என்பது
வாழ்க்கைப் பாலவனத்தில்
ஒட்டகமோட்டிய
ஓரங்க நாடகத்தின் முடிவே,,,! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
காதல் என்றால் என்னங்க.. சுத்தமாய் ஒரு வெங்காயம் மாதிரி.. உரிக்க உரிக்க உரிபடும் உள்ளுக்குள் எதுவுமே இருக்காது.. இதைப்புரிஞ்சால் சரி.. நமக்கு எது நடக்குமே அது நடந்து தான் தீரும்.. இதில காதல் கத்திரிக்கா வெங்காயம் என்று கொண்டு.. ஆனா தமிழரசன்.. நீங்கள் றொம்ப அனுபவித்துகவிதை எழுதிறீங்க.. வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
கணணிக்கோளாறு காரணமாக இருமுறை வந்த பதிவு நீக்கப்பட்டிருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
ஏங்க காதல் கத்தரிக்காய் என்றது போய் வெங்காயம் ஆகிட்டுதா..வெங்காயம் உரிச்சா கண்ணீர் வருமே...!

இன்னும் ஒன்றுங்க...தமிழரசன விட நீங்க அனுபவிச்சு எழுதுறீங்க போல...காதலுக்கு வெங்காய உவமானம் பிரமாதம்...! ஆழமாக ஆழமாக புனிதமாகும்...ஆழமாக ஆழமாக கண்ணீர் வரும்..ஒன்று அது ஆனந்தக் கண்ணீர்...இல்ல வேதனைக் கண்ணீர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
kuruvikal Wrote:ஏங்க காதல் கத்தரிக்காய் என்றது போய் வெங்காயம் ஆகிட்டுதா..வெங்காயம் உரிச்சா கண்ணீர் வருமே...!

ஆனந்தக்கண்ணீரும் இல்லை.. வெங்காயத்தை உரிக்கும் போது வாற கண்ணீர் ஆனந்தக்கண்ணீரா.??? அதை மாதிரி தான் இதுவும்.. அனுபவம் பேசுகிறது.. அதெல்லாம்.. சுத்த வேஸ்ட்.. அப்படி என்று நாங்க நினைக்கிறம்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
tamilini Wrote:

அப்படி என்றீங்க..அப்படி சரி...நீங்க சொன்னா உண்மையாத்தான் இருக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
குருவிகளே தமிழினி சொல்வதுபோல் காதலிக்காமல் பேசாமல் வெங்காயம் உரிக்கலாம் ஏனெண்டால் இரண்டினானும் இறுதியில் வருவது கண்ணீர்தான்
; ;
Reply
#14
தமிழரசன் அருமையானா கவிதை வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
#15
இது வேணும் என்றால் பெரும்பாலான மனிசாளுக்குப் பொருந்தலாம்...ஆனா உண்மையான காதல் என்பது எல்லா உயிருக்குள்ளும் இருக்கு...ஏன் பறவைகளுக்குள்ளும் இருக்கு...அதுகள் காதல் கொண்டதற்காக அழுகுதுகளா...இல்லையே...!

மனிதர்களுக்கு எதைத்தான் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்திப் பழக்கம்...எங்கும் ஒளிவு மறைவு கலப்படம் தானே மிச்சம்...அவனுக்குள் காதல் என்பது காதலாக உணரப்படாத வரை...அது கண்ணீரில் தான் முடிக்கும்...! மனிதருக்குள்ளும்...மனிதன் உண்மையான உயிரியாக இருக்கிறான் உண்மையான காதலோடு...! அவர்களை நாமே கண்டிருக்கின்றோம்..அதற்கு என்ன சொல்லுறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
பாப்பம் ஒரு வழி காணுவதற்காய்.. ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.. உங்கள் பொன்னான வோட்டை அழியுங்கள்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
தமிழரசன் Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>இனியவளே </span>

காத்திருக்க நானும் கஷ்டப்படவில்லை
இழவுகாத்த கிளியாகவும் இஷ்டபடவில்லை
இடியாக விழுவாயா?இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே…
thilee@gmail.comதமிழரசன்

கவிதை அற்புதம். பாராட்டுக்கள். ஆனால் இலவு காத்த கிளி என்று வரவேண்டியதை நீங்கள் தவறாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதியதற்கு அர்த்தமே வேறு. முடிந்தால் அதை மாற்றி விடுங்கள்.

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#18
[quote="shiyam"]குருவிகளே தமிழினி சொல்வதுபோல் காதலிக்காமல் பேசாமல் வெங்காயம் உரிக்கலாம் ஏனெண்டால் இரண்டினானும் இறுதியில் வருவது கண்ணீர்தான்[/quote

ஆனால் சியாம் வெங்காயத்தை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு வெட்டினால் கண்ணீர் வராது ஆனால் காதல் அப்படியில்லையே. Cry Cry Cry Cry
Reply
#19
Vasampu Wrote:[quote=shiyam]குருவிகளே தமிழினி சொல்வதுபோல் காதலிக்காமல் பேசாமல் வெங்காயம் உரிக்கலாம் ஏனெண்டால் இரண்டினானும் இறுதியில் வருவது கண்ணீர்தான்[/quote

ஆனால் சியாம் வெங்காயத்தை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு வெட்டினால் கண்ணீர் வராது ஆனால் காதல் அப்படியில்லையே. Cry Cry Cry Cry

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#20
Vasampu Wrote:ஆனால் சியாம் வெங்காயத்தை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு வெட்டினால் கண்ணீர் வராது ஆனால் காதல் அப்படியில்லையே. Cry Cry Cry Cry

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)