Yarl Forum
உளரீதியான பயிற்சி அவசியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: உளரீதியான பயிற்சி அவசியம் (/showthread.php?tid=5716)



உளரீதியான பயிற்சி அவசியம் - hari - 01-20-2005

[size=14]எமது குழந்தைகள், இளம் சிறார்கள் ஆகியோர் மிக மோசமான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இவ்வனர்த்தத்தின் பின் அவர்களது உளநலத்தில் கூடிய அக்கறை கொள்ளவேண்டியது எங்களது முன்னுரிமையாகவுள்ளது. மரபு ரீதியான அணுகுமுறைகளை விடுத்து எமது குழந்தைகளை விரைவாக மகிழ்ச்சிகரமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய புறச்சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டி யுள்ளது. விளையாட்டு மைதானங்கள் மகிழ்ச்சிகரமான பாடசாலைச்சூழல் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடைந்த அதிர்ச்சி அனுபவத்திலிருந்து அவர்களை விடுவிக்கமுடியும். <b> - தேசியத் தலைவர்- </b>

தெற்கில் மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் வெளி நாட்டவர்கள் அனேகமானவர்கள் அவர்கள் செய்யும் வேலைதிட்டங்களை படங்கள் எடுத்து தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்காக எனது இணைய மையத்துக்கு வருவது வழக்கம். வந்தவர்கள் கொண்டு வந்த படங்களில் நான் சுட்ட படங்களை இங்கு பிரசுரித்துள்ளேன், இப்படியான உளரீதியான வேலைத்திட்டங்கள் எங்கள் பிரதேசத்திலும் நடக்க வழிசெய்யவேண்டும்!
<img src='http://img124.exs.cx/img124/47/untitled359.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img124.exs.cx/img124/9003/untitled360.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img124.exs.cx/img124/7092/untitled361.jpg' border='0' alt='user posted image'>


- hari - 01-20-2005

<img src='http://img124.exs.cx/img124/9653/untitled362.jpg' border='0' alt='user posted image'>


- kavithan - 01-20-2005

நன்றி . ...


- tsunami - 01-20-2005

எனக்கும் விளையாட ஆசை என்ன செய்கிறது
என்னைக்கண்டால் சின்னதுகள் ஓடுதுகள்

எனக்கு இந்த மாதிரி நேரத்தில் என்னிலேயே வெறுப்பு வருகுது
யாராவது முடியும் என்றால் தமிழ்ப் பிள்ளைகளோடும் சேர்ந்து விளையாடுங்கோவன்...

சிறுவர்களைப் பாதுகாக்கவேன இருக்கிற சிறுவர் பாதுகாப்பு இலங்கை என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற நிறுவனத்தில் இருக்கிறவைகளுக்கு எல்லாப் பயறிசியும் கொடுத்தலும் அதுகள் எதையாவதை சுருட்டிக்கொண்டு ஒடுறத்தில் இருக்குதுகள்....

தமிழ்ச் சிறுவர்களைப்பற்றியும் நல்ல முன்னேற்றமான விடயங்களைச்செய்யுங்கோ...
இந்த விடயத்தில் தான் தமிழர்களின் தேசியத்தலைவரில் எனக்கு ஒரு தனியான பிடிப்பு.....

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது பாருங்கோ...
தமிழச் சமூகம் நல்லா வரவேணும் என்றால் தமிழ்ச் சிறுவர்களை நல்லா வளர்க்கப்பாருங்கோ.....

எல்லாரும் இதை முதலில் உணருங்கோ...


- hari - 01-20-2005

இதை நாங்கள் செய்யத்தவறினால் சுனாமியை விட பெரிய பாதிப்புக்களை எதிர்காலத்தில் சந்திக்கவேண்டிவரும்!


- hari - 01-20-2005

<img src='http://img31.exs.cx/img31/4278/SRILANKADAYFIVE006.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img31.exs.cx/img31/8468/SRILANKADAYFIVE015.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img31.exs.cx/img31/360/SRILANKADAYFIVE018.jpg' border='0' alt='user posted image'>
Photos: Andy Blanmore


- hari - 01-22-2005

<b>பல குடும்பங்கள் உள ரீதியாகப் பாதிப்பு</b>

யாழ் நிருபர் வெள்ளிக்கிழமை, 21 சனவரி 2005 22:32 ஈழம்

யாழ் குடாநாட்டில் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதக யாழ் பல்கலைக்கழத்தின் உளநல மருத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர்,

அனர்த்தகால உளநல மருத்துவ பிரிவின் செயலனிக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

ஆழிப்பேரலை காரணமாக பல குடும்பங்கள் சிதைவடைந்து போயுள்ளன. உயிரிழப்புகள்ää உடமை இழப்புகள், தொழில் இழப்புகள் என பல்வேறு இழப்புக்களை இந்த குடும்பங்கள் சந்தித்துள்ளமையினால் இக் குடும்பங்கள் உள ரீதியாகப் பாதிப்படைந்து விரக்தியடைந்துள்ளன.

இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள். 2 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

இதனைத் தவிர மற்றும் பலர் முகாம்களில் வாழ்வதால் மதுவிற்கு அடிமையாகின்றார்கள். எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்கள்.

இந் நிலையில் இவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதென்றால் மீள் குடியேற்றம் மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது உடனடித் தேவையாக உள்ளது.

இவற்றிற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி புதினம்