அதென்ன ஆணாதிக்கம் என்பது...???! இது பற்றி உச்சரிக்கிறார்களே தவிர விளக்கிறார்கள் இல்லை எவரும்...உலகில் பெண்கள் நிலை பேசுவோரும் கூட....!
ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பொதுவாகப் பலம் மிக்கவன் தான்...அதனால் தான் பொதுவா உயிரினச் சமூகங்களில் ஆண் தலைமைத்துவம் முதன்மை பெறுகிறது..! இப்போ யானைக் கூட்டத்தை எடுத்தால் அங்கு ஆண் தான் தலைமைத்துவம் பெறுகிறது...மான் அப்படி...சிங்கம் புலி...என்று பொதுவாக எல்லாமே அப்படித்தான்..மனிதனும் அந்த வகையினன் தான்...!
இருந்தாலும் மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை விருத்தி செய்து இயற்கையை ஆளப்பழகியதால் தனக்கான பாதுகாப்பு வாய்ப்பு அதிகரிக்க தேவை கூட பெண்ணுக்கும் சமூகத்தில் சம பங்களிப்பு வழங்க விளைந்தான்...அது ஒன்றும் பெண்களால் இயற்கையில் இயல்பாய் பெறப்பட்டவையல்ல...ஒட்டுமொத்த மனித சமூக மாற்றம் தந்தவையே அவை..! ஆண் இயற்கையாகவே கொண்டிருந்த விலங்குக் கூட்டத்துக்கு ஒத்த தலைமைத்துவத்தைத் துறந்து இன்று பெண்ணுக்கும் அதில் பங்களிப்புச் செய்ய சம சந்தர்ப்பம் அளித்திருப்பது ஒன்றும் இலகுவான மாற்றம் அல்ல...! அவை தனியே பெண்களால் தேடிப் பெறப்பட்டவையும் அல்ல...! ஆண்களின் உயரிய சிந்தனைப் போக்கு தந்த விளைவுகள் தான் அவை....!
எனினும் இன்னும் ஆண் தலைமைத்துவச் சிந்தனைகள் எங்கள் சமூகத்தில் மட்டும் இன்றி உயிரினச் சமூகங்களில் நிழவுவதற்கு ஒப்ப மனித சமூகத்தில் சிதறுண்டுதான் இருக்கின்றன...! காரணம் மனிதன் இன்னும் இயற்கையின் படைப்பாக இருப்பதால்...அவன் செயற்கையை உருவாக்கினும் இயற்கையை ஆளினும்...இயற்கை அளித்த பண்புகள் முற்றாக இழந்து விடவில்லை...இழக்கப் போவதும் இல்லை...அப்படி எதிர்பார்க்கவும் முடியாது...!
எனவே அந்த இயற்கைப் பண்புகளை வெளிக்காட்டும் ஆண்களை ஆதிக்க சகதிகள் என்று வரையறுக்க முடியாது...! ஒரு அளவுக்கு மிஞ்சி விட்டுக்கொடுக்க ஒரு மனிதனைக் கோரவும் முடியாது...விட்டுக்கொடுக்கும் பண்பு கூட ஆளுக்கு ஆள் வேறுபடும்....! ஆனால் ஒன்று நிச்சயம் பெண்களை விட ஆண்கள் விரைந்த புரிந்துணர்வு உடையவர்கள்...! அவர்கள் நிலைமைகளைச் சாதுரியமாகச் சமாளிக்கும் பண்பை வளர்த்துக் கொண்டால் சமூக விருத்திக்கி பகுத்தறிவின் பால் பலவற்றைச் செய்யலாம்...!
அதைச் செய்யத் தூண்டாமல் எமது சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்று விளிப்பதைத் தவிருங்கள்...அது ஆண்கள் தங்கள் இயற்கைக்குரிய பண்புகளை விட்டுக்கொடுத்து பெண்களை சமத்துவத்துடன் அழைத்துச் செல்வதை கேலி செய்வதற்கு ஒத்ததாகும்...! அது பெண்களின் மேலாண்மை வெறியைத் தூண்ட வழி செய்யும்...! : <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> idea:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>