Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 307 online users.
» 0 Member(s) | 304 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  Swastika சின்னம்.....ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Posted by: Vaanampaadi - 01-21-2005, 12:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

<img src='http://www.flagfocus.info/worldflags-large/flag-Ger-Swastika-1935-45.gif' border='0' alt='user posted image'>


`ஸ்வஸ்திக்' சின்னத்துக்கு
தடை விதிக்க வேண்டும் என்பதா?
இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு


லண்டன், ஜன. 21_

"ஸ்வஸ்திக்" சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்கு, இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள் ளனர்.

"ஸ்வஸ்திக்" சின்னம்

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதிர்ஷ்டத்துக்காகவும், அமைதிக்காகவும், ஆன்மீக திருப் திக்காகவும் "ஸ்வஸ்திக்" சின் னத்தை இந்துக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்துக்கள் ஆட்சி காலத்தில் நாணயங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னம் பொறிக்கப்பட்டது. வீட்டின் வாசல்களிலும், அழகு பொருட்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பொறித்து மகிழ்ந் தனர்.

இந்தியா, சீனா, கிரீஸ் ஆகிய நாடுகளில் இந்துக்கள் தவிர புத்தர்களும் இந்த சின்னத்தை அதிர்ஷ்டத்தின் சின்னமாக பயன்படுத்தி வந்தனர்.

ஹிட்லர்

இந்த நிலையில் ஜெர்மன் நாட் டில் புரட்சி படையை உருவாக் கிய ஹிட்லர் தனது "நாஜி" படைக்கு சின்னமாக "ஸ்வஸ் திக்"கை எடுத்துக்கொண்டார்.

"ஸ்வஸ்திக்" சின்னத்தை அழி வின் சின்னமாகவும், மரணத்தின் சின்னமாகவும் நாஜி படைகள் அறிவித்தன. பிற்காலத்தில் "ஸ்வஸ்திக்" சின்னத்துக்கு ஜெர்மனி அரசு தடை விதித்தது.

இங்கிலாந்து இளவரசர்

இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, லண்டனில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து இருந்த விசேஷ ஆடை யில் "ஸ்வஸ்திக்" சின்னம் அழகு பொருளாக பொறிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் இப்போது பிரச்சினையை கிளப்பி இருக் கிறது. "ஸ்வஸ்திக்" சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.

"எங்கள் சின்னம்"

அதற்கு இங்கிலாந்தில் வசிக் கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்து அமைப்பின் செயலாளர் ரமேஷ் கல்லிடை கூறியதாவது:_

ஸ்வஸ்திக் சின்னம், எங்கள் சின்னம். பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே ஸ்வஸ்திக் சின்னத்தை இந்து சமயத்தினர் கோவில்களிலும், குகைகளிலும் வரைந்து உல்ளனர்.

ஸ்வஸ்திக் சின்னம் சூரியனை குறிக்கிறது. நகைகளிலும் ஸ்வஸ் திக் சின்னத்தை பதித்து அணிந்து இருக்கிறார்கள். ஸ்வஸ்திக் என்ற சொல், சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்.

நாஜிக்கள் இந்த வார்த்தையை யும், சின்னத்தையும் 1920_ம் ஆண்டு தங்கள் படைக்கு சின்ன மாக பயன்படுத்திக் கொண் டனர்.

ஆதரவு திரட்டுவோம்

இங்கிலாந்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இதுபற்றி விளக்கம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் கோரிக் கைக்கு ïதர்களும் ஆதரவு தெரி வித்து உள்ளனர். தொடர்ந்து ஆதரவு திரட்டுவோம்.

ஸ்வஸ்திக் சின்னத்தை இந்துக் களின் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதற்கு தடை விதிக்க கூடாது.

இவ்வாறு ரமேஷ் கூறினார்.

கிறிஸ்தவர்கள் போல

இந்து அமைப்பு பிரதிநிதிகள் நிதின் மெகமா, பூபேந்திரா படேல் ஆகியோர் கூறுகையில், "கிறிஸ்தவர்கள் சிலுவையை சின்னமாக கழுத்தில் அணிந்து கொள்வது போல, இந்துக்கள் "ஸ்வஸ்திக்"கை அணிந்து கொள்ளவேண்டும். இந்த சின் னம் ஆரியர் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது" என்று தெரிவித்தனர்.

Print this item

  கருத்து படம்
Posted by: Vaanampaadi - 01-21-2005, 11:57 AM - Forum: நகைச்சுவை - No Replies

<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/21/others/Crt-21.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/21/others/Takav-20.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/21/others/arrivu.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  அந்தமான், நியூசிலாந்தில் தொடரும் நிலநடுக்கம்
Posted by: Vaanampaadi - 01-21-2005, 11:49 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஜனவரி 21, 2005

அந்தமான், நியூசிலாந்தில் தொடரும் நிலநடுக்கம்

டெல்லி வெலிங்டன்:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், நியூசிலாந்திலும் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.



லிட்டில் நிக்கோபார் தீவின் மேற்குக் கரையோரத்தில் இன்று அதிகாலை 12.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக இது பதிவானது. இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

நியூசிலாந்தில்..:

அதேபோல் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனின் வடக்குப் பகுதியில் இந்திய நேரப்படி அதிகாலை 12.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.5 ஆக பதிவானது.

இதில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. கடைகளில் இருந்த பொருட்கள் அலமாரியில் இருந்து கீழே விழுந்தாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை இதே பகுதியில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஒரு தொடர்விளைவுதான் என்றும் யாரும் பீதியடையத் தேவையில்லை என்றும் நியூசிலாந்து புவியியல் நிபுணர் கெவின் பெனாக்டி கூறினார்.

Source:Thatstamil

Print this item

  letter to bush
Posted by: thaiman.ch - 01-21-2005, 11:27 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (1)

வணக்கம் ஷோர்ஜ் டபுள்ய10 அவர்களே

இன்டைக்கு (20.01.2005) புஷ் உங்களுடைய இரண்டாவது ஆட்சிக்காலத்தை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில கொண்டாட திட்டமிட்டிருக்றீங்கள் என்டு கேள்விப்பட்டன். „விழுந்தும் மீசையில மண் ஒட்டேல“ என்ட மாதிரி உலகத்தில ஒன்டுமே நடக்காத மாதிரி நீங்க இப்படி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனை நினைச்சா கவலயா இருக்கய்யா. 60 மில்லியன் டொலர் சிலவு செய்து இந்த கொண்டாட்டம் நாலு நாளா நடக்கப்போகுது. இந்த நாலு நாளுக்கும் உங்கட பாதுகாப்புக்கு 13000 மெய்ப்பாதுகாவலர்களும்; ஏற்பாடு செய்திருக்கிறதா கேள்வி. இவங்களுக்கு வேற 20 மில்லியன் டொலர் செலவாம். இந்த பார்டிக்கு „ஸ்பொன்சர்“ பன்றது பெரிய எண்ணை வியாபாரிகளாம். ஆக மொத்தம் உங்களுக்கு 5 சதம் சிலவு கூட இல்லை போல தெரியிது.

சுனாமி வந்து லட்சக்கணக்கில சனம் செத்துப் போச்சு. அது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பியள் என்டு நினைக்கிறன். இல்ல உங்கட „குடீஐ“ ஈராக்கில ஆணுஆயுதம் இருக்கு என்டு உங்களுக்கு தவறான தகவல வளங்கின மாதிரிää ஒரு சனமும் சாகேல என்டு சொல்லி தகவல் அனுப்பியிருக்கலாம் என்ட சந்தேகமும் இருக்கு.

ஈராக் என்ட உடன தான் ஞாபகத்திற்கு வருது. உங்கட „உயிர்“ நண்பர் தொனி ப்ளேர்க்கு ஏற்பட்ட நிலமய பார்த்தீங்களாய்யா? சரி சுனாமியால செத்த சனங்களை பற்றி தான் உங்களுக்கு வருத்தம் இல்லை. நீங்க சொல்ற எல்லாத்துக்கும் மண்டய ஆட்டிக்கொண்டு உங்கட கால்ல கிடந்த தொனி ப்ளேர்க்கு என்டாலும் கொஞ்ச மன ஆறுதல் சொல்லி இருக்கலாமய்யா. அவரின்ர ஆக்கள் ஏதோ ஈராக் கைதிகள துன்புறுத்தினதா போட்டோக்கள் வெளி வந்திருக்கு. இதுக்கு முன்னால உங்கட ஆக்கள் பண்ணினத இப்ப இவையள் பண்ணீனம். நீங்க உங்கட போரை பின் லாடனில தொடங்கி இப்ப ஈரானில வந்து நிக்றீங்கள். சதாம் ஈராக் நாட்டு மக்களை அடிமைப்படுத்திறான் என்டு சொன்னீங்கள்ää இப்ப எல்லாமே தல கீழா இருக்கு. சதாமின்ற காலத்தில இப்படி கொடுமைகள் நடந்திருக்கா என்டு யோசிச்சுத் தான் பாக்கனும். உங்கட நண்பர் ப்ளேர் போர் தொடங்கின போது என்ன சொன்னவா என்டு உங்களுக்கு நினைவிருக்கோ தெரியா. இருந்தாலும் நானும் ஒருக்கு உங்களுக்கு நினைவுபடுத்திவிடுறேன்.

ழ அடக்கு முறையிலிருந்தும்ää பயத்திலிருந்தும்ää பயங்கரவாதத்திலிருந்தும் ஈராக் விடுதலை பெற்றுää ஒரு வளமான எதிர்காலம் ஈராக்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறதுää என்பதை தெரியப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ழ எங்களுடைய படையினர் (உங்கட படையையும் சேர்த்து தான் புஷ்) ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. நாங்கள் ஈராக்கியர்களின் நண்பர்கள்ää ஈராக் மக்களின் விடுதலையாளர்கள்.

ழ நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஒரு வளமான ஈராக்கை கட்டியமைப்போம்.

இது உங்கட நண்பர் ப்ளேர் சொன்னது. இங்கிலாந்தின் கதாநாயகன் றோபின் கூத் பணக்காரங்ககிட்ட திருடி ஏழை மக்களுக்கு கொடுத்தான். ஆனா உங்கட படையள் இப்ப இருக்கிறத விட நல்லா இருந்த ஈராக்க திருடி உங்க இரண்டு பேரட்டயும் தந்திருக்கறாங்க. குரங்கின்ற கையில பூமாலை கிடச்ச மாதிரி இருக்கு.

ஏதோ சனநாயகம் என்டு வாய் கிளிய ரெண்டு பேரும் பேசுறீங்க. வியட்நாமில நீங்க பண்ணின அழிவுகளை எந்த சாக்கடையில மறைக்க போறீங்க என்டு தெரியேல. ஈராக்கில ஆணு ஆயுதம் இல்லை என்டு நிரூபிக்கிறதுக்கு சதாம் அனுமதிச்சாரு. அங்க அப்படி ஒன்டும் இல்லை என்டு தெரிஞ்ச பிறகும் ஜக்கிய நாடுகள் சபையின்ற உத்தரவுகளின்றி படையெடுத்த நீங்க பயங்கரவாதிகளா இல்லை சதாம் பயங்கரவாதியா என்டு எனக்கு தெரியேல.

சரி நீங்க போய் கொண்டாட்ட வேலையள கவனீங்க. நான் உங்கள „டிஸ்ரப்“ பண்ணீட்டன் போல இருக்கு.

உவங்கள் டமிள் நாட்டில ஏதோ வீரப்பனை மயக்க மருந்து வச்சு பிடிச்சிட்டு தாங்கள் சண்டை செய்து பிடிச்சனாங்கள் என்டு கதவிடுறானுவளாம். இது எப்படி என்டா கோவில் (இட்ஸ் எ டடிமிள் சினிமா) படத்தில வடிவேல் (டமிள் காமெடியன்) கப்பை கடையில வாங்கி கொண்டு வந்து தான் வென்டுட்டன் என்டு சொன்ன மாதிரி இருக்கு. எதுக்கும் அங்கால போய்ட்டு வந்து உங்களுக்கு எழுதிறன்.



டமிளன்

காசி

Print this item

  கானல் நீர்
Posted by: தமிழரசன் - 01-21-2005, 08:19 AM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

நேற்றைய உறக்கத்தின் நடுவில்
நடனமாடிய உன் முகம்.
நீண்ட இடைவெளிக் கோடுகளில்
மெலிந்திருந்தாய்.

பேசும் போதே பறந்து விட்டாய்.
அருகாமையின் அருமை புலப்படும் முன்
பிரிவின் ஏக்கம் புரியவைத்து
பாதியிலே எனை விட்டுச் சென்றாய்.
கனவிலும் கூட.

மாற்றி அமைக்க,
எச்௪¢ல் தொட்டு அழித்து
மறுபடி கோலமிட மனமில்லை.
கனவிலும் கூட.

போனவை போனவைகளாகவே..
நினைப்பது நடப்பதில்லை.
கனவிலும் கூட.


ஷக்திப்ரபா

Print this item

  சிரிப்போ சிரிப்பு
Posted by: தமிழரசன் - 01-21-2005, 08:01 AM - Forum: நகைச்சுவை - Replies (43)

*ஏன் காந்தி கடற்கரை ஓரத்தில் சிலையாய் நின்னுட்டு கடல் பக்கம் பார்க்காமே மெட்ராஸைப் பார்த்துக்கிட்டு இருக்காரு?

கடற்கரையிலே காதலர்கள் தொல்லை அதிகமாப் போச்சாம்!
-----------------------------------------------------------------------
*உன் கடையில் செருப்பு ரொம்ப மலிவா இருக்கே.... உனக்கு மட்டும் செருப்பு எங்கேயிருந்து வருது?

கல்யாண மண்டபத்திலிருந்து.
-----------------------------------------------------------------------
*நீதிபதி: நீங்க ஏன் வக்கீலை அடித்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?

இன்ஸ்பெக்டர்: எனக்கு ட்ரான்ஸ்பர் வேணும் என்பதற்காக்த்தான் சார்.

-----------------------------------------------------------------------
*நீங்க போட்ட சபதப்படி 'பைக்' வாங்கிட்டீங்க, அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க?

பெட்ரோல் வாங்க முடியலையே!

-----------------------------------------------------------------------
*உன் தம்பி அமெரிக்காவில் இருக்கிறான். அண்ணன் இங்கிலாந்தில் இருக்கிறான் என்கிறாய். பிறகு ஏன் நீ மட்டும் இங்கே பிச்சை எடுக்கிறாய்?

அவர்களும் அங்கே பிச்சைதானே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.



-----------------------------------------------------------------------

மனைவி: "திருடன் வீட்டுக்குள் புகுந்து திருடிக்கிட்டு இருக்கிறான். நீங்க வாயைத் திறக்காம பார்த்துக்கிட்டு இருக்கீங்களே?"

கணவன்: "உஸ்..... சத்தம் போட்டுச் சொல்லாதே! நான் கட்டியிருக்கிற தங்கப்பல் தெரிஞ்சிடப் போவுது.

Print this item

  இது எப்பிடி இருக்கு?
Posted by: Mathan - 01-21-2005, 05:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

இது எப்பிடி இருக்கு?

<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/January/20/MOORTHY.gif' border='0' alt='user posted image'>

Thanx: Thinakkural

Print this item

  ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
Posted by: lakpora - 01-21-2005, 04:48 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (9)

[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்</span>

Print this item

  ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
Posted by: lakpora - 01-21-2005, 04:34 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (8)

<b><span style='font-size:23pt;line-height:100%'>துயரான தருனமாயினும் ,</span>

[b]<span style='color:green'>அனைத்து இஸ்லாமிய உறவுகளிற்கும் எனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


[b][size=18]உறவுகளிற்கு உதவும் மனப்பான்மை அனைவருக்கும் வரட்டும் எனவும் வேண்டிக்கொள்கின்ரேன் </b></span>

Print this item

  முதிர் கன்னி(நறுக்கு)
Posted by: shiyam - 01-21-2005, 03:55 AM - Forum: கவிதை/பாடல் - Replies (104)

(முதிர் கன்னி)

தன் கன்னிமை
உடைக்க காத்திருந்தாள்
உண்டியல் உடைக்கும்வரை

Print this item