Yarl Forum
பிரதிபலிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிரதிபலிப்பு (/showthread.php?tid=5685)



பிரதிபலிப்பு - தமிழரசன் - 01-22-2005

உதிர்த்துவிடாதே உன் புன்சிரிப்பை
உதிர்ந்து போவது நான்

தகர்த்துவிடாதே நம் பார்வைத்தொடர்பை
தகர்ந்து போவது நான்

தளர்த்திவிடாதே உன் நம்பிக்கையை
தளர்ந்துபோவது நான்

உலரவிடாதே உன் உதட்டின் ஈரத்தை
உலர்ந்து போவது நான்

சுழற்றிவிடாதே உன் பார்வைக்கயிற்றை
சுழன்று போவது நான்

மறுத்துவிடாதே என் விண்ணப்பத்தை
(வாழ்வை) மறுக்கப்போவது நான்

மறக்க நினைக்காதே மறந்துவிடுவேனென்று
(உன்னை) மறக்கப்போவதில்லை நான்


ஆஜோதா


- hari - 01-22-2005

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்! தமிழரசன்!

<img src='http://www.kaathal.com/modules/Songs/uploads/ninaivugal_nenjinil.gif' border='0' alt='user posted image'>


- kavithan - 01-22-2005

வாழ்த்துக்கள்


- aswini2005 - 01-22-2005

hari Wrote:அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்! தமிழரசன்!

<img src='http://www.kaathal.com/modules/Songs/uploads/ninaivugal_nenjinil.gif' border='0' alt='user posted image'>

மன்னா என்ன நீங்களும் ஆட்கோகிராப் சேரனாகிவிட்டீர்கள். சரி சரி நினைவுகளென்றாலே சுடத்தான் செய்யும்.

பிற்குறிப்பு - உந்தப்பாட்டு இசையோடை கேட்க அருமையாகத்தானிருக்கிறது.


- kuruvikal - 01-22-2005

கவிதைகள் நன்று...!

ரணங்கள் நிறைந்த இதயங்கள்
இதமாக இவ்வரிகள் போதுமா...??!
அன்பை அறுத்து
இதயத்தைக் குத்திக்கிழிக்கும்
சோகங்கள் தரும் பிசாசுகளே
கொஞ்சம் நில்லுங்கள்.. கேளுங்கள்..
இந்த நினைவுகளின் சோகங்களை...!

ஈரமிருந்தால் கசிந்திருக்கும்
பாறை கூட உவமையில்லை உமக்கு
ஈரமிருந்தால் துருக்கும் அந்த
இரும்புமில்லை உவமை உமக்கு
சுனாமி போல் எழும்
சுயநலமே இதயமாய் உமக்கு...!
உங்களை அடையாளம் காட்ட
வழியுமில்லை எமக்கு...!

எச்சரிக்கிறோம்...
இந்தச் சுனாமிகளை தடுக்க
இன்றே ஒரு தடைச் சுவர்
இதயத்துள் கட்டுங்கள் காளையரே...!
காதலலை கொண்ட அன்பு அலைகளாய்
வேசம் கொண்டெழும்
ஆர்ப்பரிக்கா சுனாமி அலைகள்
உங்களை "நன்றாய்" கண்டதும் எழும்
ராட்சத சுயநலச் சுனாமி அலைகளாய்
தூக்கி வீசும் உங்கள் இதயப்படகுகளை
வாழ்வெனும் கரைதனில் தூரவே...!

சோகங்கள் விளைவாகும்
சோகராகங்கள் காதோடு கவிபாடும்
இதயத்தை முள்ளாய்த் தைக்கும்
நினைவுகள் வசிப்பிடமாகும்
வேண்டாம் நமக்கு இந்த விளைவுகள்
சாதிக்க இருக்கு ஆயிரம்
அவை தவிர்த்து சாவதோ வீணே....!

விளிப்போடிருங்கள்...
கடலை கொண்டெழும்
சுனாமிகள் மட்டுமாய் அன்றி
காதலலைகள் தரும்
சுனாமிகள் குறித்துமே...!


- hari - 01-22-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மன்னா என்ன நீங்களும் ஆட்கோகிராப் சேரனாகிவிட்டீர்கள். சரி சரி நினைவுகளென்றாலே சுடத்தான் செய்யும்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மையை சொல்லபோனால் நான் ஒரு லோகல் ஆட்டோகிராப் சேரன் தான்


- tamilini - 01-22-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உண்மையை சொல்லபோனால் நான் ஒரு லோகல் ஆட்டோகிராப் சேரன் தான்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:x :oops:


- kavithan - 01-23-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
உண்மையை சொல்லபோனால் நான் ஒரு லோகல் ஆட்டோகிராப் சேரன் தான்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:x :oops:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன மன்னரை இப்படி கூட ஏற்று கொள்ள மாடியளா..... லோகல் எண்ட உடனை .. இப்படி சொலுறியள் அக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-23-2005

அப்படியில்லை... சும்மா தான்.. பாவம் மன்னர் அண்ணா கதைத்து அவரைக்கஸ்டப்படத்தக்கூடாது.. :|


- hari - 01-23-2005

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை? என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்?
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம், வானம் அளவு யோசிப்போம்,
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்!
லட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை, உறுதியோடுப் போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதைப் போடு, மரமாகும்;
அவமானம் அடைந்தால் நீ, எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன? என் தோழா!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!


- வெண்ணிலா - 01-23-2005

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை? என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்?
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம், வானம் அளவு யோசிப்போம்,
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்!
லட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை, உறுதியோடுப் போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதைப் போடு, மரமாகும்;
அவமானம் அடைந்தால் நீ, எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன? என் தோழா!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=105
ஹரியண்ணா பாடல்களை இந்தப்பக்கத்தில் போட்டால் எல்லாப்பாடல்களைப் பார்க்கவும் இலகுவாக இருக்கும்.

அருமையான பாடல்வரிகள். தமிழில் இணைத்தமைக்கு நன்றிமன்னா


- kavithan - 01-23-2005

மன்னா ஒரு புளக் ஒன்று அமைத்து அதில் இந்த பாடல்களை வரிசையாக போட்டால் ,அனைவரும் மன்னர் என்றால் பாடல் என ஓடி வந்து பெற்று கொள்ள இலகுவாக இருக்குமே. நீங்கள் இன்னும் யாழ் புளக் அமைக்க வில்லை தானே உடனே அமைத்து அதில் பாடல்களின் வரிகளை இடுங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->