Yarl Forum
ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை (/showthread.php?tid=5678)



ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை - வியாசன் - 01-22-2005

ஈழத்தமிழரின் அரசியல் தந்தையான செல்வநாயகம் அவர்களை கொச்சைப்படுத்தவதாக பல ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்ட திரைப்படமான ஆயுதஎழுத்து திரைப்படம் இன்று தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படப்போகிறது..
இந்த திரைப்படத்தில் வரும் அரசியல்வாதிக்கு செல்வநாயகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த அரசியல்வாதி ஒரு வன்முறையாளனாக சித்தரிக்கப்பட்டமையால் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாரித்திருந்தது.
இந்த திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புவது நியாயமா?
உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாக சொல்வது நல்லது .யாரையும் புண்படுத்தாமல் எழுதுங்கள்.


- thaiman.ch - 01-23-2005

மாலதி படையணியில சந்திரிகா என்ட ஒரு போராளி இருந்தவா. அவா இப்ப மாவீரர் ஆகிட்டா. பெயரில என்ன இருக்கு?
நாயள் (இந்தியன்) குரச்சா நாங்க ஏன் திருப்பிக் குலைக்கனும்? அவங்கட நாடு அரசியல் சாக்கடையில நாறுது. முதல்ல அவங்கள் அதை திருத்தட்டும்.


Re: ஈழத்தமிழரை புண்படுத்திய திரைப்படத்தை - kavithan - 01-23-2005

<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->ஈழத்தமிழரின் அரசியல் தந்தையான செல்வநாயகம் அவர்களை கொச்சைப்படுத்தவதாக பல ஊடகங்களாலும் விமர்சிக்கப்பட்ட திரைப்படமான  ஆயுதஎழுத்து திரைப்படம் இன்று தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படப்போகிறது..
    இந்த திரைப்படத்தில் வரும் அரசியல்வாதிக்கு செல்வநாயகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த  அரசியல்வாதி ஒரு வன்முறையாளனாக சித்தரிக்கப்பட்டமையால்  ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாரித்திருந்தது.
 இந்த திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புவது நியாயமா?
உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாக சொல்வது நல்லது .யாரையும் புண்படுத்தாமல் எழுதுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பெயரிலை என்ன இருக்கு.. அவர்கள் தான் பேர் பிரச்சனையில் இருகிறார்கள் என்றால் நமக்கு என்ன... அது அவர்களின் சுதந்திரம்.. அந்த அரசியல் வாதிகளுக்கும் எங்கள் அரசியல் வாதிகளுக்கும் ரொம்ப வித்தியாசம்.. படத்தை படமா பாருங்கோ.. அரசியலை அரசியலா பாருங்கோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 01-23-2005

வியாசன் படத்தை படமா பாருங்கோ பிறகு எங்களிற்கும் தமிழ்நாட்டிலை திரைக்கு கற்புரம் காட்டி மாலை போடுறவனிற்கும் வித்தியாசம் இல்லாமல் போடும் அதைவிட தந்தை செல்வா சில இடங்களிலை சென்ன சில வசனங்கள் தமிழரின நிலையி யதார்த்தத்தை எடுத்து சொன்னதே தவிர நீங்கள் உணர்ச்சி வசப்படகூடிய அளவிற்கு அவர் ஒன்றும் புனிதர் அல்ல. அது எல்லாம் அரசியல் இப்ப தேவையில்லாத கதை எனவே அப்படியே விட்டு விடுவோம்


- வியாசன் - 01-23-2005

நண்பர்களே அப்படியானால் நாளைக்கு எங்கள் தலைவரையும் கொச்சைப் படுத்தமுயலலாம். மணிரத்தினம் என்ற வியாபாரி எப்போதும் இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தமுயல்பவர்.


- sri - 01-23-2005

<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->நண்பர்களே அப்படியானால் நாளைக்கு எங்கள் தலைவரையும் கொச்சைப் படுத்தமுயலலாம். மணிரத்தினம் என்ற வியாபாரி எப்போதும் இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தமுயல்பவர்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அவர்கள் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் என்றால் தங்கள் தாயைகூட கொச்சைப்படுத்தி படம் எடுப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை