Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 288 online users.
» 0 Member(s) | 285 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  Can u help me?? :D
Posted by: KaviPriyan - 01-24-2005, 01:43 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

ஆங்கிலத்தில் சுனாமியைப்பற்றிய தகவல்கள் உள்ளன... அதை யாரவது தமிழுக்கு மொழிபெயர்த்து தந்து உதவ முடியுமா??? முடிந்தால் தொடர்பு கொள்ளவும்....

<span style='font-size:30pt;line-height:100%'>asruban@hotmail.com
www.tsunamiineelam.com</span>

Print this item

  2006 ஆம் ஆண்டு இறுதிவரை அமெரிக்கப்படைகள் .....
Posted by: Vaanampaadi - 01-23-2005, 10:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

செய்திகள்
ஞயிற்றுக்கிழமை 23.01.05 - 19:45 மணி தமிழீழம்
2006 ஆம் ஆண்டு இறுதிவரை இலங்கையில் அமெரிக்கப்படைகள் நிலைகொண்டிருக்கும்.
ஏஜென்சி செய்தியொன்று தெரிவிப்பு.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்ää அழிந்துபோயுள்ள உட்கட்டுமானங்களை மீளக்கட்டியெளுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் உதவி புரியவென வந்துள்ள அமெரிக்கப்படையினர் அடுத்த வருட இறுதிவரை சிறிலங்காவில் நிலைகொண்டு இருப்பார்கள் என்று அரச உயர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஜென்சி செய்தியொனறு தெரிவித்துள்ளது.

நாட்டை மீழக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு உதவிபுரியவென 1ää657 அமெரிக்க படையினர்உட்பட 2ää517 வெளிநாட்டுப்படையினர் தற்போது சிறிலங்காவில் உள்ளனர். காலி கட்டுநாயக்கா விமான நிலையம் யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களில் அமெரிக்கப்படையினர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39பேர் மருத்துவர்கள் 676 பேர் கேகாலைக்கடலில் தரித்துள்ள அமெரிகாவின் தலுத் என்ற கப்பலின் சிப்பந்திகள் ஆவர்; 317 பேர் கட்டுநாயக்கா விமான நிலயத்திலும் 221பேர் கொழும்பிலும்ää 404 பேர் காலியிலும்ää 39பேர் யாழ்ப்பாணத்திலும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கேகாலைக்கடலில் தரித்துள்ள அமெரிக்கக்கப்பலின் சி.எச். 46 ஈ உலங்கு வானூர்தி நான்கும் 180 தொன் சரக்கை தரையில் ஏற்றிச்செல்லக்கூடிய பாரஊர்தி ஒன்றும் மற்றும் பொறியியல் தளபாடங்களும் உள்ளதாக அந்தவட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. சுpறிலங்காவுக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரிகள் பலரும் தமது நாட்டுப்படைகள் இங்கு பணி முடிந்ததும் நாட்டுக்குத்திரும்பிவிடும் என்று தெரிவித்துள்ளனர் அதாவது இங்கு மீள்கட்டுமானம் மற்றும் இயல்புநிலையை மீள ஏற்படுத்தும் பணிகளை முழுமையாக செய்துமுடிக்கும்வihää கிட்டத்தட்ட அடுத்தவருட இறுதிவரை அமெரிக்கப்படைகள் இங்கு நிலைகொள்ளும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source: Pathivu

Print this item

  தமிழர்களிடம் தணியாத அன்பு கொண்ட மாவீரன்
Posted by: Vaanampaadi - 01-23-2005, 09:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

தமிழர்களிடம் தணியாத அன்பு கொண்ட மாவீரன்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையும் ஈடுபடுத்தி உயிhpனை தியாகம் செய்து சுதந்திரக் காற்றை சுத்தமாக சுவாசிக்க வழிவகை செய்த மகாபுருஷரே நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ் ஆவார்.

இந்திய மக்களால் பொpதும் நேசிக்கப்பட்டவர். உலகத் தலைவர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றவர். பதினாறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது மட்டும் அல்லாமல் பெரும் பண வரவைத் தரக்கூடிய ஐ.சி.எஸ். பதவியினையும் தூக்கி எறிந்தவர்.

உலக வரலாற்றில் இடம் பிடித்த மாவீரன், மகத்தானதொரு விடுதலைப் போருக்குத் தலைமையேற்ற தளபதி. எஃகு உள்ளமும், இணையில்லாத் தன்னம்பிக்கையும் தன்னகத்தேக் கொண்டு ஊழையும் உட்பக்கம் காணச் செய்யும் மன உறுதி கொண்டவர்.

ஜெர்மனியின் சர்வாதிகாரி என சித்தரிககப் படும் ஹெர் ஹிட்லாpடம் நேருக்கு நேர் நின்று இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவுகேட்ட ஒரே இந்தியத் தலைவர் சுபாஷ் மட்டுமே.

……ஆஸhத் ஹிந்த்†† என்ற இயக்கத்தைத் தொடங்கியவர். மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்திய காந்தியடிகள் பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். ஆனாலும் நேதாஜpயே வெற்றி பெற்றhர். ஆயினும் …சுபாஷ் பிறவியிலேயேத் தலைவர்† என்று மகாத்மா புகழாரம் Nட்டினார்.
அனைத்து தகுதிகளும் நிரம்பிய முழு மனிதர். ஆனால் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டிய காலம் தவறிவிட்டார். வேறெந்த நாட்டிலேனும் பிறந்திருந்தால் நெப்போலியனும், அலெக்ஸhண் டரும் சாpத்திர வாpகளில் ஏறியிருக்கவே முடியாது என்று சிக்னர் பெனிடே முஸேhலினி சுபாஷினை பற்றி குறிப்பிட்டது மிகவும் சாலப் பொருந்தும்.

இந்தியாவின் தேசியகீதமாக ரவீந்திரநாத் தாகூhpன் …ஜனகனமன† பாடலை முதன்முதலில் தேர்வு செய்து அறிவித்த பெருமை நேதாஜpயையேச் சாரும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் …ஜெய்ஹிந்த்† என்ற சொல்லினை முழங்குவதை வழக்கப்படுத்தி இந்தியர்களுக்கு மன வலிமையையும் மனதிட்பத்தினையும் உண்டாகச் செய்தார்.

சுபாஷ் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து கிராமத்தில் காலரா நோய் பரவிய செய்தி கேட்டவுடன் நண்பர்களுடன் சென்று உதவி செய்தவர். நீர் மூழ்கிக் கப்பலில் 90 நாட்கள் பயணம் செய்த ஒரே தேசத் தலைவர். இப்பயணத்தின் போது கடலில் மிகப் பொpய கொந்தளிப்பும், எhp பொருள் பற்றhக் குறையும் ஏற்பட்டபோது iதாpயமாக மற்றெhரு கப்பலுக்கு இடுப்பில் கயிறினைக் கட்டிக் கொண்டு மாறினார்.

இளைஞர்களை தன் பால் ஈர்த்து இந்திய தேசிய ராணுவப் படை (ஐ.என்.ஏ)யினை அமைத்து பிhpட்டீஷ் பேரரசினை எதிர்த்தவர். இவாpன் இ.தே. ராணுவப்படையில் சிங்கப்பூர், மலேசியாவில் வாழ்ந்த ஏராளமானத் தமிழர்கள் இணைந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் துறந்தனர். இவர்களை பற்றிய முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது பெரும் கவலையளிக் கின்றது. நம்முடைய தாய்குலத்தின் ஆற்றலையும் திறமைகளையும் நன்குணர்ந்த சுபாஷ் 1943-ம் ஆண்டு ஜhன்சிராணி ரெஜpமெண்ட் என்ற பெண்கள் படைப்பிhpவினைத் தொடங்கி தமிழகத்தைச் சார்ந்த டாக்டர் இலட்சுமியை தளபதியாக நியமித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பர்மா வழியாக இந்தியாவின் கொஹிமா, தினாப்பூர் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் ஆங்கிலேய அரசுடன் போhpட்டு வெற்றிபெற்று ……ஆஸhத் ஹிந்த்†† என்ற அரசினை அமைத்தார்.

கி.பி. 1938-ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ம் ஆண்டு மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட்டார். எனினும் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் இறந்ததாகச் செய்திகள் மட்டுமே கிடைத்தன. உடலை எவரும் பார்க்கவில்லை. நேதாஜp சுபாஷ் சந்திரபோஷ் மேற்கு வங்காளத்தில் 1897-ம் ஆண்டு ஜனவாp 23-ம் நாள் பிறந்தார். இவர் தமிழர்களிடம் தனியாத அன்பு கொண்டவர்.

காதை சந்திரசேகரன்,

விhpவுரையாளர், தமிழ்த்துறை,

பி.ஜp.பி. கலை அறிவியல் கல்லு}hp,

நாமக்கல்-637 206

Print this item

  காதலும் கல்யாணமும்
Posted by: Vaanampaadi - 01-23-2005, 09:05 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (71)

காதலும் கல்யாணமும்
ஒரு ஊர்லகாதலும் கல்யாணமும்
ஒரு ஊர்ல ஒரு (நிஜமாவே ரொம்ப நல்ல) சாமியார் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை சில மணிநேரம் மக்களை சந்திக்கறது அவர் வழக்கம். ஒரு நாள் அவர் கிட்ட ஒரு இளைஞன் வந்தான். அவன் வெகுநேரம் ஏதும் பேசாம ஓரமா நின்னுகிட்டிருந்தான்.

எல்லோரும் போனப்றம் அவன் அந்த சாமியார் கிட்ட போய் "சாமி, உங்க கிட்ட இதக் கேக்கலாமான்னு தயக்கமா இருக்கு, இருந்தாலும் எனக்கு வேற யாரும் சிறப்பா விளக்க முடியுமான்னு தெரியல. காதல்னா என்ன?" அப்பிடின்னான்

அதுக்கு அந்த சாமியார் "தம்பி, ஆசிரமத்துக்கு எதிர்ல ஒரு பெரிய கரும்புத் தோட்டம் இருக்கு, அதுல இறங்கி நடந்துக்கிட்டே போ, இருக்கிறதுலயே பெரிய கரும்பாப் பாத்து வெட்டிகிட்டு வா, காதல்னா என்னன்னு அப்றம் சொல்றேன். ஞாபகம் வச்சிக்க, திரும்பிப் பாக்காம நடந்து போய் கரும்பு வெட்டி முடிச்சப்றம் திரும்பி வா"ன்னாரு

கொஞ்ச நேரம் ஆச்சு. போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சாமியார் "என்னப்பா? பெரிய கரும்பு எதுவும் சிக்கலையா ?"ன்னு கேட்டார்.

"வழியில சில பெரிய கரும்புங்களைப் பாத்தேன் சாமி ஆனா அதவிட பெரிசு இன்னும் கொஞ்சம் தூரத்துல இருக்குமோன்னு சந்தேகத்துல தோட்டத்தோட கடைசி வரைக்கும் போனேன், கடைசியில பெரிய கரும்பு ஏதும் இல்ல" அப்டின்னான்

"காதலும் அப்படித்தான், அதுவா நம்ம வழியில வரும்போது நமக்கு அது பெருசா தெரியாது, ஆனா காலம் கடந்து போனப்புறம் நாம தேடுனா கெடைக்காது"ன்னாரு சாமியார்.

"சாமி. இன்னோரு சந்தேகம், கல்யாணம்னா என்ன" அப்டின்னான்

அதுக்கு அவரு "ஆசிரமத்துக்கு பின்னால தேக்கு மரத்தோப்பு இருக்கு, போயி இருக்கறதுலயே பெரிய தேக்கு மரத்தை வெட்டி வண்டியில போட்டு எடுத்து வா, முன்ன மாதிரியே திரும்பிப் பாக்காம போய் வரனும். அப்றம் சொல்றேன் கல்யாணம்னா என்னன்னு" அப்டின்னாரு

கொஞ்ச நேரம் போனப்றம் அவன் ஒரு வண்டியில ஒரு தேக்கு மரத்தை போட்டு எடுத்து வந்தான். பார்த்தா அப்படி ஒன்னும் பெரிய மரமாத் தெரியலை.

சாமியார் "என்னப்பா இதுதான் நீ பாத்ததுலயே பெரிய மரமா?"ன்னாரு

அவன் "இல்லைங்க சாமி, போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதும் கெடைக்காம போயிறக் கூடாதுன்னு முதல்ல பாத்த மரங்கள்ல பெரிசா இருந்ததை வெட்டிகிட்டு வந்தேன், அப்றம் கொஞ்ச தூரம் உள்ளே போய் பாத்தா இத விட பெரிய மரமெல்லாம் இருந்தது" அப்டின்னான்.

"இப்படி நம்முடைய எதிர்பார்ப்பையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு எதோ ஒன்னு கெடைச்சாப் போதும்னு பண்ணிக்றதுதான் கல்யாணம். சில சமயம் நீ வெட்டினதே பெரிய மரமா இருக்கலாம், ஆனா பல சமயம் பெரிய மரம் வேற எங்கயாவது இருக்கும்"ன்னாரு



ஒரு (நிஜமாவே ரொம்ப நல்ல) சாமியார் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை சில மணிநேரம் மக்களை சந்திக்கறது அவர் வழக்கம். ஒரு நாள் அவர் கிட்ட ஒரு இளைஞன் வந்தான். அவன் வெகுநேரம் ஏதும் பேசாம ஓரமா நின்னுகிட்டிருந்தான்.

எல்லோரும் போனப்றம் அவன் அந்த சாமியார் கிட்ட போய் "சாமி, உங்க கிட்ட இதக் கேக்கலாமான்னு தயக்கமா இருக்கு, இருந்தாலும் எனக்கு வேற யாரும் சிறப்பா விளக்க முடியுமான்னு தெரியல. காதல்னா என்ன?" அப்பிடின்னான்

அதுக்கு அந்த சாமியார் "தம்பி, ஆசிரமத்துக்கு எதிர்ல ஒரு பெரிய கரும்புத் தோட்டம் இருக்கு, அதுல இறங்கி நடந்துக்கிட்டே போ, இருக்கிறதுலயே பெரிய கரும்பாப் பாத்து வெட்டிகிட்டு வா, காதல்னா என்னன்னு அப்றம் சொல்றேன். ஞாபகம் வச்சிக்க, திரும்பிப் பாக்காம நடந்து போய் கரும்பு வெட்டி முடிச்சப்றம் திரும்பி வா"ன்னாரு

கொஞ்ச நேரம் ஆச்சு. போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சாமியார் "என்னப்பா? பெரிய கரும்பு எதுவும் சிக்கலையா ?"ன்னு கேட்டார்.

"வழியில சில பெரிய கரும்புங்களைப் பாத்தேன் சாமி ஆனா அதவிட பெரிசு இன்னும் கொஞ்சம் தூரத்துல இருக்குமோன்னு சந்தேகத்துல தோட்டத்தோட கடைசி வரைக்கும் போனேன், கடைசியில பெரிய கரும்பு ஏதும் இல்ல" அப்டின்னான்

"காதலும் அப்படித்தான், அதுவா நம்ம வழியில வரும்போது நமக்கு அது பெருசா தெரியாது, ஆனா காலம் கடந்து போனப்புறம் நாம தேடுனா கெடைக்காது"ன்னாரு சாமியார்.

"சாமி. இன்னோரு சந்தேகம், கல்யாணம்னா என்ன" அப்டின்னான்

அதுக்கு அவரு "ஆசிரமத்துக்கு பின்னால தேக்கு மரத்தோப்பு இருக்கு, போயி இருக்கறதுலயே பெரிய தேக்கு மரத்தை வெட்டி வண்டியில போட்டு எடுத்து வா, முன்ன மாதிரியே திரும்பிப் பாக்காம போய் வரனும். அப்றம் சொல்றேன் கல்யாணம்னா என்னன்னு" அப்டின்னாரு

கொஞ்ச நேரம் போனப்றம் அவன் ஒரு வண்டியில ஒரு தேக்கு மரத்தை போட்டு எடுத்து வந்தான். பார்த்தா அப்படி ஒன்னும் பெரிய மரமாத் தெரியலை.

சாமியார் "என்னப்பா இதுதான் நீ பாத்ததுலயே பெரிய மரமா?"ன்னாரு

அவன் "இல்லைங்க சாமி, போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதும் கெடைக்காம போயிறக் கூடாதுன்னு முதல்ல பாத்த மரங்கள்ல பெரிசா இருந்ததை வெட்டிகிட்டு வந்தேன், அப்றம் கொஞ்ச தூரம் உள்ளே போய் பாத்தா இத விட பெரிய மரமெல்லாம் இருந்தது" அப்டின்னான்.

"இப்படி நம்முடைய எதிர்பார்ப்பையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு எதோ ஒன்னு கெடைச்சாப் போதும்னு பண்ணிக்றதுதான் கல்யாணம். சில சமயம் நீ வெட்டினதே பெரிய மரமா இருக்கலாம், ஆனா பல சமயம் பெரிய மரம் வேற எங்கயாவது இருக்கும்"ன்னாரு

Print this item

  ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம்
Posted by: Vaanampaadi - 01-23-2005, 07:46 PM - Forum: புலம் - No Replies

ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம்
இது ஒரு ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம். கால்போன போக்கிலை நடந்து,கண்போன போக்கிலை பார்த்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து.இன்றைக்கு வரைக்கும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சிவாஜியார் மாதிரி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன் என்று சொல்லிவிட ஆசையாத்தான் இருக்கு ஆனாலும் வாழ்க்கை என்னவோ என்னுடன் கூடவே ஓடிவந்து கொண்டிருப்பதால் ஓரத்துக்கு ஓடாமல் ஒரு மைய வட்டமாய் சுற்றியோடிக் கொண்டிருக்கிறேன்.
வட்டத்துக்குள் வந்து விழுந்ததையெல்லாம் கொட்டிவிட விரும்பித்தான் இங்கே வந்திருக்கிறேன்.
மண்ணினல்ல வண்ணம் வாழலாம் நல் அகதிக்கு யாதுமோர் குறைவில்லை.இடையிடை அருட்டும் ஊர்ஞாபகங்களைத் தவிர.........???????????

Print this item

  கதையே இல்லையே..
Posted by: Vaanampaadi - 01-23-2005, 07:30 PM - Forum: நகைச்சுவை - Replies (9)

கதையே இல்லையே..
அவன் அந்த நூலகத்துக்குள் கோபமுடன் வேகமாக நுழைந்தான். கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தான். நேராக நூலகரிடம் சென்று சற்றே கோபமாக

" என்னாய்யா நூலகம் நடத்துகிறீர்கள்....புத்தகங்கள் வாங்கும்போது பார்த்து வாங்கவேண்டாமா? நாங்கள் பணம் கட்டியல்லவா இங்கே அங்கத்தினர் ஆக இருக்கிறோம்" என்று சப்தம் போட்டான்.

அதற்கு நூலகர் " கொஞ்சம் பொறுமையாக அமைதியாகச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சினை என்ன? அமைதியாகக் கேட்டார்
அவன் இன்னும் கோபம் தனியாமலேயே

"பின்னே என்னாய்யா?...இந்த புத்தகத்தில் வரிசையாக கதாபாத்திரங்கள் பெயர்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய புத்தகத்தில் இன்னும் கதையே தொடங்கவில்லையே?. இப்படிப்பட்ட புத்தகங்களையா வாங்கி வைப்பது?"

உடனே நூலகர்
"அட நீதானா அந்த ஆள்....நேற்றிலிருந்து தொலைபேசி டைரக்டரியைக் காணோம் என்று தேடிக்கொண்டுள்ளோம்" என்று கூற அவனது முகத்தில் அசடு வழிந்தது.

Print this item

  பொய் சொன்னால் இதுதான் தண்டனையா...? ? ?
Posted by: Vaanampaadi - 01-23-2005, 07:16 PM - Forum: நகைச்சுவை - Replies (4)

பொய் சொன்னால் இதுதான் தண்டனையா...? ? ?
ஒரு கிராமத்துப் பக்கமாக ஒரு வேன் நிறைய அரசியல்வாதிகள் போய்க்கொண்டிருந்தார்கள். திடீரென்று வேன் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து அதில் பயணம் செய்த அனைவரும் அடிபட்டார்கள்.
அப்போது அங்கே தோட்டவேலை செய்துகொண்டிருந்த ஒரு கிழவன் வந்தான். வந்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று முடிவு செய்து ஒரு பெரிய குழியாகத் தோண்டி அனைவரையும் புதைத்துவிட்டான்.
ஒரு வாரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி அங்கே வந்தார்.
அங்கே கவிழ்ந்து கிடந்த வாகனத்தைப் பார்த்தார். இதில் வந்தவர்கள் எல்லாம் எங்கே என்று அந்தக் கிழவனிடம் கேட்டார்.
அனைவருமே இறந்துவிட்டதால் அவன் புதைத்து விட்டதாகக் கூறினான். அனைவருமே இறந்து விட்டார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்...".ம்...ம்... ஒண்றிரண்டு பேர்கள் தாங்கள் சாகவில்லை என்று கூறினார்கள்.
ஆனால் அரசியல்வாதிகள் எப்போதும் உண்மை பேசமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கிழவன் பதில் கூறினான்.

Print this item

  மருந்தினால் மரணத்தை.......
Posted by: Vaanampaadi - 01-23-2005, 06:51 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

மருந்தினால் மரணத்தை
தள்ளி போடலாம். ஆனால்
மரணம் வைத்தியனையும்
அழைத்துச் செல்லும்.

'''''''''''''''''''''''''''''''''' ஷேக்ஸ்பியர்.
பிறருக்கு உதவி
செய்யும் போது,
எதையும் ஆராயத்
தேவையில்லை.
ஒருவரைத் தண்டிக்கும்
நிலை வந்து விட்டால்
மட்டும் தெளிவாக
ஆராய வேண்டும்.

_ _ சுவாமி விவேகானந்தார்.

அன்பை எப்போது இரகசியமாக
வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு
முறையும் நல்ல,நல்ல செயல்கள்
மூலம் அதை வெளிப்படுத்திக்
கொண்டே இருங்கள்.

...........................ரவீந்திரநாத் தாகூர்

சந்தேகம்............

இளமையில் தவறான
பலவற்றை நம்புகின்றோம்.
முதுமையில் உண்மையான
பலவற்றை சந்தேகிக்கின்றோம்.

......................... லோங்பெல்லோ

பெண்களை பெண்கள் புரிந்து
கொள்வதால் வெறுப்புக்
கொள்கின்றார்கள். ஆனால்..
பெண்களை புரிந்து கொள்ள
ஆண்களால் முடிவதில்லை.
அதனால் பெண்களை அவர்கள்
விரும்புகின்றார்கள்.
.......................................... ஸ்டீவ் ஸ்மித்

இலட்சியத்தை அடையவேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக கீழ்கண்ட ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதுவரை இல்லையென்றாலும் இந்த நிமிடம் முதல் உறுதியுடன் நின்று இந்த ஏழு குணங்களையும் பழக்கத்தில் கொண்டு வாருங்கள்.

1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.
2. கற்பனை திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழங்குப்படுத்தி அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.
5. நேரத்தையும் பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்வது.
6. எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனத்தை வைத்திருப்பது.
7. தன்னை அடக்கித் திருத்திக்கொள்ளல்.

நெப்போலியன் ஹில் சொன்னவை


வார்த்தை ஒன்று தடை செய்யபட்டுவிட்டால் அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.அந்த வார்த்ர்தையில் விஷமேறி போகிறது.
- லென்னி புரூஸ் (13.10.1925-03.08.1966) அமெரிக்கா

Print this item

  'கூப்பிடு தூரம்'
Posted by: Vaanampaadi - 01-23-2005, 06:39 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (8)

'கூப்பிடு தூரம்'

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம்.

வீரசோழிய உரையில், 'முழ நான்கு கோல்; அக்கோலை கூப்பீடு'
என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று 'யோசனை' எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்
ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.
பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. அப்படியானால்
12000 கஜம் X 4 = 48000 கஜங்கள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல்
என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.
நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம்
என்று இப்படி.

நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து
வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம்
நீங்கள் கதை சொல்லும்போது, "இப்படியெல்லாம் அளந்து
விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க", என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)
12 விரக்கடை = 1 சாண் (9 inches)
2 சாண் = 1 முழம் (18 inches)
2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)
4 முழம் = 1 பாகம் ( 6 feet)
6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.
கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள்.

இதனை 'ஏழரை நாழிகை வழி' என்றும் சொல்வார்கள்.
ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும்
தூரமாக இதைக் கருதினார்கள்.
சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே
முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க
பின்னே இருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு
ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர்
கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர்
தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு
பேரேரி இருக்கிறது. ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில்
வெட்டப்பட்டது. அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.
ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.
அதையட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

'நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி'.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில்
தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை
கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.
நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது.
அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின்
நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

நன்றி அகத்தியம் இணைய குழு



காலங்களில் அவள் ???

6-00am - 8-24am - பூர்வான்னம்
8-24am - 10-48am - பாரான்னம்
10-48am - 1-12 pm - மத்தியான்னம் (மத்ய அன்னம்)
1-12pm - 3-36pm - அபரான்னம்
3-36pm - 6-00pm - சாயான்னம்


சாமம் என்பதற்கு இரண்டு மூன்று வகையாக கணக்குகள் இருந்தன.
சாதாரண வழக்கத்தில் ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை
கொண்டது. அதாவது மூன்று மணி நேரம். அப்படியானால் ஒரு நாளில்
எட்டு சாமங்கள் இருக்கின்றன.


முழுக்கணக்கு -->

2 கண்ணிமை = 1 நொடி
2 கைந்நொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை
2.5 நாழிகை = 1 ஓரை (1 மணி நேரம்)
3.75 நாழிகை = 1 முகூர்த்தம் (1.5 மணி)
2 முகூர்த்தம் = 1 சாமம் (3 மணி)
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
12 ஆண்டு = 1 மாமாங்கம்
5 மாமாங்கம் = 1 வட்டம்



பெரும்பொழுது

1 இளவேனில் சித்திரை, வைகாசி
2 முதுவேனில் ஆனி, ஆடி
3 கார் ஆவணி, புரட்டாதி
4 குளிர் ஐப்பசி, கார்த்திகை
5 முன்பனி மார்கழி, தை
6 பின்பனி மாசி, பங்குனி


சிறுபொழுது

1 காலை காலை 6 மணி - 10 மணி வரை
2 நண்பகல் காலை 10 மணி - பிற்பகல் 2 மணி வரை
3 எற்பாடு பிற்பகல் 2 மணி - மாலை 6 வரை
4 மாலை மாலை 6 மணி - முன் இரவு 10 மணி வரை
5 யாமம் இரவு 10 மணி - பின் இரவு 2 மணி வரை
6 வைகறை விடியற்காலம் 2 மணி - பின் இரவு


---------------

Print this item

  இளைப்பாறி செல்லுமிடம்
Posted by: Vaanampaadi - 01-23-2005, 06:01 PM - Forum: நகைச்சுவை - Replies (2)

இளைப்பாறி செல்லுமிடம் -
ஒரு அரண்மனைக்கு வந்த துறவியை எந்த காவலாளியும் தடுக்காததால் மன்னன் இருந்த சபைக்கு சென்றார். சபையில் இருந்த மன்னனைப் பார்த்து "இந்த தங்கும் விடுதியில் தூங்குவதற்கு ஒரு இடம் வேண்டும்" என்று கேட்டார்.
மன்னன் "இது தங்கும் விடுதி இல்லை - அரண்மனை, என்னுடைய இடம்" என்றார்.
துறவி மன்னனைப் பார்த்து "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?. - உனக்கு முன்னடி இந்த இடத்தில் யார் இருந்தது?" என்று கேட்டார்.
மன்னர் "எனது தந்தை!! இறந்துவிட்டார்" என்றார்.
"அதற்கு முன்பு?"
"எனது தாத்தா!! இறந்துவிட்டார்"
"அதற்கு முன்பு?"
"எனது பாட்டன்!! அவரும் இறந்துவிட்டார்"
துறவி "சிறிது காலம் இருந்து இளைப்பாறி செல்லும் இந்த இடத்தை தங்கும் விடுதி என்று கூறாமல் வேறு என்ன கூறுவது?" என்று கேட்டார்.

Print this item