Yarl Forum
ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம் (/showthread.php?tid=5656)



ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம் - Vaanampaadi - 01-23-2005

ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம்
இது ஒரு ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம். கால்போன போக்கிலை நடந்து,கண்போன போக்கிலை பார்த்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து.இன்றைக்கு வரைக்கும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சிவாஜியார் மாதிரி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன் என்று சொல்லிவிட ஆசையாத்தான் இருக்கு ஆனாலும் வாழ்க்கை என்னவோ என்னுடன் கூடவே ஓடிவந்து கொண்டிருப்பதால் ஓரத்துக்கு ஓடாமல் ஒரு மைய வட்டமாய் சுற்றியோடிக் கொண்டிருக்கிறேன்.
வட்டத்துக்குள் வந்து விழுந்ததையெல்லாம் கொட்டிவிட விரும்பித்தான் இங்கே வந்திருக்கிறேன்.
மண்ணினல்ல வண்ணம் வாழலாம் நல் அகதிக்கு யாதுமோர் குறைவில்லை.இடையிடை அருட்டும் ஊர்ஞாபகங்களைத் தவிர.........???????????