| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 303 online users. » 0 Member(s) | 300 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| tsunami & security |
|
Posted by: glad - 01-24-2005, 01:16 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
சுனாமியில் இருந்து பாதுகாக்க இயற்கை தரும் தடுப்புச்சுவர் சதுப்பு நிலக்காடுகள். தமிழகத்தில் சதுப்பு நிலக்காடுகளால் சூழப்பட்ட 5 கிராமங்கள் சுனாமியில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவர்களாக நின்று கரையோரக் கிராமங்களைக் காப்பாற்றி உள்ளது. கடலுக்கும் நிலத்துக்கும் இடையே வளரும் தாவரங்கள்தான் மாங்ரோவுகள். அவற்றின் வேர்கள் வண்டல்களைச் சேர்த்து நீரோட்டத்தை மிதப்பத்தி கடல் அலைகலால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நாளடைவில் வேர்கள் சேர்க்கும் வண்டல்களால் கரையோரம் நீட்டப்பட்டு நிலப்பரப்பும் கூடுகிறது.
மாங்குரோவ் காடுகள் வழிந்தோடும் நீரை உறிஞ்சி நிலத்தை அலைகள் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து காப்பதோடு மாசுக்களை வடிகட்டி நீரின் தரத்தையும் உயர்த்துகின்றன. கடல் நீர் சுத்திகரிக்கப்படுவதால் பவளப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிப்படைகிறது.மாங்குரோவ் காடுகளால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுத்தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளமும் பெருகுகிறது. இதனால் மீனவர் வாழ்வும் வ்ளம்பெறும். எமது கடலோரங்களையும் மீனவர்களையும் ஒரே நேரத்தில் காப்பாற்றும் வல்லமை கொண்ட இவ் மாங்குரோவ்க்கள் நான் கு ஆண்டுகளில் காடுகளாக வளர்ந்து விடக் கூடியன.
ஆதாரம்: பதிவுகள்
|
|
|
| þôÀÊ இýனுõ ±ò¾¨É ±ò¾¨É ÌÆó¨¾¸û?? |
|
Posted by: selvanNL - 01-24-2005, 01:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
கிழக்கில் கல்முனை நகரில் மூன்று வயதான இச்சிறுமி சலோமியா காணவில்லை. உறவினர் ஒருவருடன் தற்காலிக முகாமில் தங்கியிருக்கும் சலோமியாவுக்கு தனக்கு நேர்ந்த அவலத்தின் பாரதூரம் புரியுமா? என்ன கொடுமை இது
<img src='http://img198.exs.cx/img198/1948/front.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| 84 வயது பள்ளி மாணவர் வெளியேற்றப்படுவார்? |
|
Posted by: Vaanampaadi - 01-24-2005, 11:31 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (37)
|
 |
84 வயது பள்ளி மாணவர் வெளியேற்றப்படுவார்?
உலகிலேயே மிக வயதான பள்ளி மாணவர் கென்யா நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் கிமானி மருகே வயது 84. கப்கெண் டூய்போ நகரில் உள்ள தொடக்கப்பள்ளிக் கூடத்தில் அவர் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
அவர் சிறுவனாக இருந்த போது மாடு மேய்க்க வேண்டி இருந்ததால் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. கல்விக் கட்டணத்தை கடந்த ஆண்டு அரசு ரத்து செய்ததும், அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டார். அதனால் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் சேர்ந்தார். படிப்பில் முதலா வதாக தேறினார்.
தலைமை ஆசிரியை ஜேன் ஒபிஞ்சு கூறுகையில், ``கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னை ஈர்த்தது. அதனால் அவரைச் சேர்த்துக்கொண்டேன்" என்று கூறினார்.
ஆனால் அவர் படிப்பைத் தொடர்வது கேள்விக்குறியாகி இருக் கிறது.
``வகுப்பில் மற்ற மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இவர் கெடுத்து வருவதாக பெற்றோர்கள் புகார் கூறி உள்ளனர்.
அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதைத் தான் குழந்தைகள் கவனித்துக்கொண்டே இருக்கின்றன என்றும் பெற்றோர் புகார் கூறுகிறார்கள்.
இதனால் அவர் பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Source : Dailythanthi
|
|
|
| தன்னம்பிக்கை இல்லாத தமிழர்கள் |
|
Posted by: hari - 01-24-2005, 10:34 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
<b>தன்னம்பிக்கை இல்லாத தமிழர்கள்</b>
பழ. நெடுமாறன்
""அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது'' என்பது ஓளவையாரின் வாக்கு. மனிதராகப் பிறப்பதிலும் தமிழராகப் பிறப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
""முயற்சி திருவினையாக்கும்'' எனக் கூறிய வள்ளுவன்தனை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நாடு நமது தமிழ்நாடு.
கங்கைவரை மட்டுமல்ல, கடல்கடந்து கடாரம் வரை சென்று அந்நாடுகளை வென்றடக்கி வீரமே ஆரமாக தியாகமே அணியாகப் பூண்ட இராசேந்திரசோழனை ஈன்ற இனம் தமிழினம்.
சோழநாடு விடுத்துப் பாண்டிய நாட்டிற்குப் பிழைக்கச்சென்ற கோவலன் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்ட போது மண்மகள் தன் சீரடி அறியாது வளர்ந்த கண்ணகி கொதித்துக் கிளம்பி பாண்டிய மன்னன் அவைக்களத்தில் உண்மையை நிலைநாட்டப் போராடி வென்ற கதையை உலகறியும்.
வள்ளுவன், இராசேந்திரன், கண்ணகி போன்ற தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையும், விடா¬முயற்சியும் இருந்த காரணத்தினால் அரிய சாதனைகளை நிகழ்த்தி தமிழினத்தின் பெருமையைப் பாரறியச் செய்தார்கள்.
ஆனால் அந்தத் தமிழினம் இன்று இருக்கும் நிலை இரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. தன்னம்பிக்கையற்றவர்களாக, உணர்ச்சிவயப்பட்டு அற்ப காரணங்களுக்காக விலை மதிப்பற்ற உயிர்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் வடிகட்டிய கோழைகளாகத் தமிழர்கள் காட்சி தருகிறார்கள். தமிழறிஞரான க.ப.அறவாணன் வெளியிட்டுள்ள தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தாங்கள் போற்றி வழிபடுகிற அரசியல் தலைவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத மனவலிமை அற்றவர்களாகத் தமிழர்கள் விளங்குவதை ஆதாரப்பூர்வமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட 17 பேர்களும் தமிழர்களே. வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரிசாவைச் சேர்ந்த ஒருவரும் மலேசியாவைச் சேர்ந்த மற்றொருவரும் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் தமிழர்களே.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தற்கொலை செய்தகொண்ட 9 பேரும் தமிழர்களே. முதல்வர் எம்.ஜி.ஆர். இறந்தபோது 26 தமிழர்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது 48 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி காஞ்சி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது 2 தமிழர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
நாட்டுக்காக, மொழிக்காக, இனமீட்சிக்காக எதிரியுடன் போராடிக் களத்தில் உயிர்த்தியாகம் செய்வது வேறு. அத்தகையோருக்கு நடுகல் நட்டுக் கொண்டாடிய தமிழர்களுக்கு இன்று என்ன நேர்ந்தது?
தலைவர்கள் சிறைப்பட்டால் கூட அதைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையற்ற தொண்டர்களும் அந்தத் தொண்டர்களைக் காவு கொடுத்துத் தமது புகழைப் பெருக்கிக் கொள்ள முயலும் தலைவர்களும் மிகுந்துவிட்டனர்.
ஆனால் வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வேறுவிதமாக இருந்தனர்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து
போர்க்களத்தில் பகைவனுடன் பொருதி ""வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில் அவன் உடல் மீது அவன் தலைவன் கண்ணீர் சிந்தினால் அதைவிடப் பேறு வேறு இல்லை. அத்தகைய சாவை இரந்தாவது பெறுவது பெருமை உடையதாகும்'' என்றார் வள்ளுவர்.
வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த வீரர்களையொத்தவர்கள் இன்று தமிழீழ மண்ணில் கரும்புலிகளாக வாழ்கிறார்கள். நாளையும் நேரத்தையும் குறித்துக்கொண்டு சென்று சாவைத் தழுவிக் கொள்கிறார்கள். அவர்களின் தலைவரும் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்ட அவர்களுக்காகக் கண்ணீர் மல்குகிறார்.
ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, கட்சி உணர்வுக்கும், சாதிய உணர்வுக்கும் ஆட்பட்டவர்களாக மிகமிக அற்பக் காரணங்களுக்காகத் தங்களை அழித்துக் கொள்பவர்களாக விளங்குகிறார்கள்.
தொண்டர்களின் தற்கொலையைக் கட்சிக்கும் தனக்கும் விளம்பரம் தேடிக்கொள்ளும் கருவியாக மட்டும் பயன்படுத்தும் தலைவர்களும், தகுதியற்ற தலைவர்களுக்காக அரிய உயிரைப் போக்கிக் கொள்ளும் மடமை நிறைந்த தொண்டர்களும் தமிழ்நாட்டிற்குத் தீராத அவமானத்தைத் தேடித்தருபவர்கள். இவர்களால் தமிழினம் ஒரு போதும் தலை நிமிர முடியாது.
நன்றி: தென்செய்தி
|
|
|
| 26.01.05 தேசிய துக்கதினம், |
|
Posted by: vasisutha - 01-24-2005, 05:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>விடுதலைப்புலிகளின் அரசியல்துறை விடுத்த அறிக்கை</b>
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழம்.
23.01.2004
பத்திரிகை அறிக்கை
<span style='font-size:20pt;line-height:100%'>கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் மிகுந்த துன்பங்களையும் அழிவுகளையும் சொல்லொணாத இடர்களையும் சந்தித்த எமது மக்கள் வாழ்க்கையின் அனுகூலங்கள் அனைத்தையும் இழந்தனர். தற்போது நிலவிவரும் போர் நிறுத்த காலத்தில் எமது மக்கள் கடற்கரையோரங்களில் குடியேறி தமது வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை மேற்கொண்டு வாழ்வியல் அனுகூலங்கiளை ஓரளவு உள்வாங்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த 26.12.2004 அன்று சற்றும் எதிர்பாராத விதமாக பொங்கி எழுந்த நிலவதிர்வுப் பேரலைகள் இலங்கைத்தீவு உட்பட தென்னாசியப் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கைத் தீவில் எமது தாயகப் பகுதிகளில் வாழும் எமது மக்கள் அதிகமான அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இந்த இயற்கையின் கோரத் தாண்டவத்தால் இடம்பெயர்ந்த எமது மக்கள் தமது உறவுகளையும் வாழ்விடங்களையும் இழந்து பிரிந்த தமது உறவுகளின் சோகத்துடன் மனது பேதலித்த நிலையில் மீண்டும் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் இருந்து வருகிறார்கள்.
<b>இப்பேரனர்த்தம் காரணமாக தமிழர் தாயகத்திலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 26.01.05 நாள் தேசிய துக்கதினமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்நாளில் தமது அன்புக்குரியவர்களையும் உறவுகளையும் இழந்து துடிக்கும் எமது உறவுகளின் சோகத்தில் பங்குகொள்வோம். </b>
மூர்க்கமாக எழுந்த கடலலைகளில் சிக்கி எமது உறவுகள் உயிர்நீர்த்த அந்தக் கணத்தில் தமிழர் தேசத்திலும் புலம்பெர்ந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்துவோம். </span>
|
|
|
| காய் கூய் டேட்டி "KTR" |
|
Posted by: கறுணா - 01-24-2005, 03:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் கூய் டேட்டி "KTR"
எப்படி இருக்கிறாய் டோக்! கடிதம் எழுதி கனகாலம்! அதுதான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். கவனம் எங்களது பல இராணுவ, அரசியல் இரகசியங்களை உனக்கு இதில் பகிர விரும்புகிறேன். கவனம் கடிதத்தை எங்கேயாவது தொலைத்து விடாதே?
கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு சங்கத்தில் லொறி லொறியாக சாமான்களை கடத்தி, பல காசு மோசடிகளைச் செய்த நீ, அங்கு அது சனத்திற்கு தெரியவர, தப்பினேன் பிழத்தேனென ஓடி, பின் ஓரிரண்டு இந்தியாக்காரர்களின் துணையுடன் ஆட்களை ஐரோப்பா, கனடாவிற்கு கடத்தத் தொடங்கி. எத்தனையோ பேரை எமாற்றி நீ பான்கொக்கில் போய் இருந்தது ஊரறிந்த கதை. உன்னால் பான்கொக்கில் ஏமாற்றப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அது மட்டுமா? எத்தனை இளம் தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சீரளித்தாய்? எத்தனை பெண்களை உன் காம இச்சைக்கும், உனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் இரையாக்கினாய்? எத்தனை பெண்களை விபச்சார விடுதிகளுக்கு அனுப்பினாய்? இந்த அற்புதங்களையெல்லாம் செய்த நீ! இன்று எவ்வாறு அரசியல்வாதி மாதிரி தோற்றம் போட முற்பட்டாய்? அதற்கு உனக்கு கிடைத்தது ஒரு இணையத்தளம்! அத்துடன் நீ அரசியல்வாதியாகி விட்டாய்!! கிரேட்! கிரேட்!! ம் ம் ஈழத் தமிழினத்திற்குக் கிடைத்த சாபம்?
இலங்கையிலுள்ள தமிழின விரோதிகளான சிங்களப் பத்திரிகையாளர்கள், தமிழ்த் துரோகக் கூட்டப் பத்திரிகையாளார்கள், தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் இந்திய பத்திரிகையாளர்களென்று ஒரு பெரும் கூட்டமே உனக்கு செய்தியாளர்கள்! போதக் குறைக்கு புலத்தில் லண்டனிலிருந்து "ரி.பி.சி" ராமராசு, டென்மார்க்கிலிருந்து குமாரதுரை குடும்பம், கனடாவிலிருந்து டி.பி.எஸ் ஜெயராஜ் சார்ந்த கூட்டம், ஒஸ்ரேலியாவிலிருந்து யாரோ நடராசாவாம், எல்லாத்திற்கு மேலாக இந்திய "றோ"!!!!!!!!!!!! ஓ ஆ என்ன கூட்டு??என்ன தமிழினப் பற்று??? எனக்கு புல்லரிக்குது!!!
போதாக்குறைக்கு இந்தக் "கோணல் களுணாவையையும்" தோளில் சுமக்கிறீயாம்!!!"பன்றியோடு சேர்ந்த பசுவும் பவ்வி உண்ணூமாம்", ஆனால் நீயும் நானும் ஏற்கனவே பவ்வியுண்ணும் பன்றிதான்! பசுவல்ல!
உனது இணையத்தளம் மூலம், நீ சார்ந்த கும்பலகளோடு சேர்ந்து காட்டிக் கொடுப்பு, அழிவுகளை எல்லாம் வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு செய்தாய். கிரேட்!! ஆனால் இன்று ஒரு மலையகத் தமிழனுக்கு, அதுவும் உலகறிந்த ஒரு பிரகாச நட்சத்திரம், இலங்கைக்கு தனிமனிதனாக நின்று பல மகுடங்களை சூட்டியவனுக்கு எதிராக, காழ்புணர்ச்சி கொண்ட உன் செய்தியாளன் என்று கூறும் சிங்கள வெறிபிடித்த ஒரு மிருகத்திற்கு களமமைத்துக் கொடுத்திருக்கிறாய்! இத்தனைக்கும் "உலக உணவு ஸ்தாபனத்தின்" பிரதிநிதியான அந்த நட்சத்திரம் சுனாமிக்குப் பின் வடக்குக்கிழக்கிற்கு அரச நிர்வாகம் போதிய நிவாரணங்களைச் செய்யவில்லையெனற உண்மையை சொல்லி விட்டான் என்பதற்காக!!!!!! ஆகா ஓகோ உவ்வ்வ்வ்வ் உன் என் போன்றோரின் தமிழ் உணர்வு!! நாங்கள் இப்படியான செய்திகளை இவர்கள் போன்றோர் கூறவிடலாமா? வடக்கு கிழக்கிலுள்ளவர்களுக்கு நிவாரணம் போக அனுமதிக்கலாமா? உலகத்திற்கு செய்திகள் போக அனுமதிக்கலாமா? இது எங்களின் தமிழ் உணர்வுக்கு வந்த சவால்! எனது தோள்கள் தினவெடுக்கின்றன! வீடு போ போ, காடு வாவா என்கிறது!!
இதோ புறப்பட்டு விட்டேன்!! என்று சவுண்டை விடத்தான் என்னால் முடியும்! நீயோ சுவீடனில் ஆட்கடத்திய காசில் ராஜபோகம் அனுபவித்துக் கொண்டும், "றோ" தாறதில் பாங்கொக்கிலிருந்து ஒண்டுக்கு நூறு இணையமும் நடாத்தி இப்படி சவிண்ட் விடலாம், நீ போன்றோர் வெளியிலை இருக்கிறதாலே தப்பி விடலாம், ம்ம் ம்ம் அவங்கள் நான் கிடங்குக்குளிருந்து வெளிக்கிட்டால் என்னையல்லவோ போட்டுடுவாங்கள்.
அன ஆவான்னா நாங்களின் தமிழ்ப்பற்றை விடக்கூடாது! தொடருவோம்!! உறுதியெடுப்போம்!!! இல்லை, நாம் விடுவோமாயின்? எம்மை நம்பியிருக்கும் எச்சிலிலைக் கூலிகளின் கதி??????????????
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| பட்டணத்தில் எலிகள்!-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்! |
|
Posted by: vasisutha - 01-24-2005, 03:20 AM - Forum: சினிமா
- Replies (19)
|
 |
குட்டீஸ்களை கவரும் பட்டணத்தில் எலிகள்!
-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்!
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/cartoon.jpg' border='0' alt='user posted image'>
நிலாவில் பாட்டி வடை சுடுவதாக பேர பிள்ளைகளுக்கு கதை சொன்ன பாட்டிகள் இப்போதும் அதே கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கிராமபுறங்களில். ஆனால் நகரத்து பிள்ளைகள் தங்கள் பாட்டிகளுக்கு டாம்-அண்டு ஜெர்ரி கதைகளை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இதுபோன்ற கதைகளை ஆங்கிலத்திலேயே பார்த்து ரசிக்கிற சிறுவர்கள், இனிமேல் தங்கள் தாய் மொழியிலேயும் பார்த்து ரசிக்கலாம்!
இந்த அழகான முயற்சியை தமிழில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் பகீரதன். பட்டணத்தில் எலிகள் என்ற தலைப்பில் இவர் உருவாக்கியிருக்கும் கதையில் கிராமத்து எலிகள் பட்டணத்திற்கு வருகின்றன. அங்கே அந்த எலிகளுக்கு ஏற்படுகிற அனுபவங்களை சுவையாகவும் குழந்தைகளை கவரும் விதத்திலும் சொல்லியிருக்கிறார். குட்டீஸ்களின் உலகமே அலாதியானது. அதுவும் இந்த டி.வி.டி வந்தபின் சொல்ல வேண்டுமா என்ன?
முக்கிய குறிப்பு- எலிகள் பேசுகிற இந்த தமிழ் இருக்கிறதே... அது ஈழத்தமிழ்!
tamilcinema.com
|
|
|
| கேட்டதில் பிடித்தது.. |
|
Posted by: vasisutha - 01-24-2005, 02:51 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (711)
|
 |
படம்: மகாநதி
பாடியவர்: கமல்ஹாசன் குழுவினர்.
எழுதியவர்:
பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்..
நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு..
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு..
அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்..
(பேய்களை நம்பாதே..)
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே...
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே..
மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு..
அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு...
(பேய்களை நம்பாதே..)
உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய்
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்
வீராதி வீரன் நீ என்று உலவு..
ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு..
நீ நேருக்கு நேர் நின்று பாரு..
எதையும் ஏனென்று ஏதென்று கேளு...
(பேய்களை நம்பாதே..)
உங்களை கவர்ந்த பாடல்களையும் எழுதுங்கள்.
|
|
|
|