Yarl Forum
பட்டணத்தில் எலிகள்!-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பட்டணத்தில் எலிகள்!-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்! (/showthread.php?tid=5650)



பட்டணத்தில் எலிகள்!-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்! - vasisutha - 01-24-2005

குட்டீஸ்களை கவரும் பட்டணத்தில் எலிகள்!
-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்!
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/cartoon.jpg' border='0' alt='user posted image'>

நிலாவில் பாட்டி வடை சுடுவதாக பேர பிள்ளைகளுக்கு கதை சொன்ன பாட்டிகள் இப்போதும் அதே கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கிராமபுறங்களில். ஆனால் நகரத்து பிள்ளைகள் தங்கள் பாட்டிகளுக்கு டாம்-அண்டு ஜெர்ரி கதைகளை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இதுபோன்ற கதைகளை ஆங்கிலத்திலேயே பார்த்து ரசிக்கிற சிறுவர்கள், இனிமேல் தங்கள் தாய் மொழியிலேயும் பார்த்து ரசிக்கலாம்!

இந்த அழகான முயற்சியை தமிழில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் பகீரதன். பட்டணத்தில் எலிகள் என்ற தலைப்பில் இவர் உருவாக்கியிருக்கும் கதையில் கிராமத்து எலிகள் பட்டணத்திற்கு வருகின்றன. அங்கே அந்த எலிகளுக்கு ஏற்படுகிற அனுபவங்களை சுவையாகவும் குழந்தைகளை கவரும் விதத்திலும் சொல்லியிருக்கிறார். குட்டீஸ்களின் உலகமே அலாதியானது. அதுவும் இந்த டி.வி.டி வந்தபின் சொல்ல வேண்டுமா என்ன?

முக்கிய குறிப்பு- எலிகள் பேசுகிற இந்த தமிழ் இருக்கிறதே... அது ஈழத்தமிழ்!

tamilcinema.com


- hari - 01-24-2005

தகவலுக்கு நன்றி , இந்த பாடத்தை பார்க்க வழியுண்டா?


- vasisutha - 01-24-2005

<img src='http://www.swisstamilan.com/img/cartoon.gif' border='0' alt='user posted image'>




நோர்வேயில் வாழும் தமிழரால் வெளியிடப்பட உள்ளது பட்டணத்தில் எலிகள் என்ற தமிழ் பேசும் சித்திரப்படம். நோர்வேயில் மட்டுமின்றி ஏனைய பல நாடுகளில் வெளிவரவுள்ளது.

தமயந்தியின் பாடல்களுக்கு சுந்தரமுர்த்தி (குட்டி மாஸ்ரர்) இசையமைக்கிறார். பகீரதன் தமிழாக்கி வெளியிடுகிறார்.

இந்தச்சித்திரப்படம் புலம் பெயர்ந்து வாழம் நாடுகளில் வாழம் தமிழ்ச்சிறுவர்கள் தாய் மொழியில் சித்திரப்படங்களை பார்த்து மகிழ வேண்டும் எனும் நோக்குடன் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி பாராட்டு பெற்ற இப்படம் தமிழில் வெளிவரவுள்ளது.


S.Pakeerathan
Sylvelinstien 4,
4021 Stavanger,
Norway.
Tel: 0047 51870311, 0047 90782132

swisstamilan.com


- hari - 01-24-2005

நன்றி தகவலுக்கு!


- kavithan - 01-24-2005

எங்களுக்கா.. நல்லது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி வசி


- hari - 01-24-2005

<span style='color:green'>பட்டணத்தில் எலிகள் ....... விமர்சனம்

பட்டணத்தில் எலிகள் என்பது சிறுவர்களுக்கான தமிழ் பேசும்
சித்திரப்படமாகும். வேற்று மொழியில் தயாரிக்கப்பட்டிருந்த இந்தப்படத்தை தமிழ் சிறார்கள் தமிழில் பார்த்து மகிழக் கூடியதாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கிராமத்தில் இருந்து பட்டணம் செல்லும் எலிகளின் கதை தான்
இந்தப்படத்தின் கதை. எலிகள் கதைப்பது போல் சிறுவர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.


பெரியவர்களும் குரல் கொடுத்துள்ளார்கள்.கேட்பதற்கு மிகவும்
இனிமையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.
பட்டணம் சென்ற கிராமத்து எலிகளுக்கு, பட்டணத்தில் உள்ள எலிகள் உதவி செய்வதைப்பார்க்கும் போது எம்மிடையே இந்த உணர்வு இல்லையே என்ற ஏக்கம் தோன்றுகிறது.

கிராமத்து எலிகளுக்கு மற்ற எலிகள் மட்டும் உதவி செய்யவில்லை. பறவைகளும் உதவி செய்கின்றன. இப்படியான சித்திரப்படங்களைச் சிறுவர்கள் பார்க்கும் போது அவர்கள் மனதிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தோன்ற வாய்ப்பு உண்டு.

இந்தச்சித்திரப்படத்தை அழகான தமிழில் அதாவது இனிமையான சுத்தமான மழலைத்தமிழில் சிறுவர்கள் பேசி இருப்பது படத்திற்கு மெருகூட்டுகிறது. படம் இரவலானானும் தவளும் பேச்சு எம்முடையது. படத்திற்கு இசையமைத்த க.சுந்தர் பாராட்டப்படவேண்டியவர்.

ஈழத்தமிழன் ச.பகீரதனின் இந்த முயற்சி தமிழ் பேசும்
ஈழத்தமிழர்களுக்கு ஓர் புகழ்ச்சி. அவர் ஆக்கிய இந்த DVD அறுபது நிமிடங்கள் என்றாலும்அதைப்பார்த்துக்கொண்டிருந்தாலும் போது நேரம் போனதே தெரியவில்லை.

இப்படியான நல்ல சிததிரப்படங்களை நமது சிறார்கள் பார்த்து,
அவர்கள் தமிழில் நாட்டம் கூடியவர்களாக வளர வேண்டும் என்பதே எனது ஆசையும் இந்த விமர்சனத்தை எழதியதன் நோக்கமும் ஆகும்.

பொன்னையா இலங்கேஸ்வரன் /
கனடாவில் வெளியாகும் தங்கத்தீபம் பத்திரிகை

</span>


- kuruvikal - 01-24-2005

யாழ் களத்தில குட்டீஸ் கூடிட்டுதப்பா...சிறீலங்காவில டயனா விஷனில தானே போடுறாங்களே..காலம் காலமா...பாக்கிறேல்லையோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன குட்டீஸ் பட்டினத்து ரொம் அன்ட் செரியப் பாத்திட்டு...புத்தக்கத்தைக் கைவிடாட்டிச் சரி...!

இது சொல்லத்தான் ஒன்று ஞாபகம் வருகுது...அங்க ஒரு வீட்ட இரண்டு சின்னனுகள்..ரெண்டும் ரொம் அன்ட் செரிதான் பாக்கிறது ஒன்றுக்கு வயது மூன்று மற்றதுக்கு ஐந்து..அதுகள் ரொம் அன் செரியப் பார்க்கும் வரைக்கும் பிரச்சனையே இல்ல பார்த்து முடிய இரண்டும் ரொம்மும் செரியும் ஆகிடுங்கள்...வீடு அல்லோலகல்லோலப்படும்...! :wink:

எங்காலத்தில சுப்பர் மான் ஸ்பைடர் மான்...பட் மான்...நைற் றைடர் என்று காலம் ஓடிச்சு...அதாலேயே சோதனையில சில நேரம் கையைப் பிசைந்த அனுபவங்களும் உண்டு...எனவே குட்டீஸ் ஜாக்கிரதை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-24-2005

Quote:யாழ் களத்தில குட்டீஸ் கூடிட்டுதப்பா...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tsunami - 01-24-2005

உலகம் முழுக்க பரவச்செய்ய ஏதாவது வழிசெய்யுங்கோ
முதலில் ஈழத்துக்கு அனுப்புங்கோ
அங்க இதைப்பாத்து என்னால் பாதித்த சிறுவர்கள் சில வேளைகளில் சந்தோஷம் அடைவார்கள்...

நாத்தம் கெட்ட தமிழ்ப்படத்தையும்ää தொடர் நாடகங்களையும் தான் எல்லாச்சிறுவர்களும் ஈழத்தில் பார்க்குதுகள்
நான் போனபோது பார்த்தேன்...

தயவு செய்து மிச்சமாக இருக்கிற சின்னதுகளை காப்பாத்துங்கோ
இதை எடனே செய்யுங்கோ...


- nallavan - 01-24-2005

இதுகளைக் கள்ளக் கொப்பியடிச்சு பாக்காதையுங்கோ. அல்லது விக்காதயுங்கோ. தரமான சில முயற்சியளுக்கு நாங்கள் ஆதரவு குடுக்க வேணும்.


Re: பட்டணத்தில் எலிகள்!-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்! - Thaven - 01-24-2005

[quote="vasisutha"][size=13]குட்டீஸ்களை கவரும் பட்டணத்தில் எலிகள்!
-ஈழத்தமிழில் ஓர் இனிய உலகம்!
சிறந்த முயற்சி தொடர்ந்து செயலாற்ற எமது வாழ்த்துக்கள்


- KULAKADDAN - 01-24-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி தகவலுக்கு!


- hari - 01-24-2005

<b>KULAKADDAN</b>, எங்க எவ்வளவு காலமும் போய் இருந்தீர்கள்?


- KULAKADDAN - 01-24-2005

ஆகா நன்றி மன்னா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வணக்கம்....
சும்மா ஒரு பயிற்சிக்கு பொறனான் இண்டைக்கு கொஞ்சம் லீவு........
வழமைக்கு வர இன்னும் ஒர வாரமாகும்;;;
என்ன பாட்டெல்லாம்... வலு அமொகமாய் பொடுறியள்;; <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி


- hari - 01-24-2005

ஏதோ நம்மட நண்பர்கள் ஆசையாக கேட்டவை அதுதான் போட்டனான்!


- KULAKADDAN - 01-24-2005

எனக்கும் பிடிச்சுது..........


- kavithan - 01-24-2005

சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 01-24-2005

சரி சரி.... இந்தப் படம் எப்ப திரைக்கோ அல்லது ஐங்கரன் டி வி டியில வரும்..... இப்பவே சொன்னாத்தான் வசதி.


- yarlmohan - 01-25-2005

vasisutha Wrote:<img src='http://www.swisstamilan.com/img/cartoon.gif' border='0' alt='user posted image'>




நோர்வேயில் வாழும் தமிழரால் வெளியிடப்பட உள்ளது பட்டணத்தில் எலிகள் என்ற தமிழ் பேசும் சித்திரப்படம். நோர்வேயில் மட்டுமின்றி ஏனைய பல நாடுகளில் வெளிவரவுள்ளது.

தமயந்தியின் பாடல்களுக்கு சுந்தரமுர்த்தி (குட்டி மாஸ்ரர்) இசையமைக்கிறார். பகீரதன் தமிழாக்கி வெளியிடுகிறார்.

இந்தச்சித்திரப்படம் புலம் பெயர்ந்து வாழம் நாடுகளில் வாழம் தமிழ்ச்சிறுவர்கள் தாய் மொழியில் சித்திரப்படங்களை பார்த்து மகிழ வேண்டும் எனும் நோக்குடன் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி பாராட்டு பெற்ற இப்படம் தமிழில் வெளிவரவுள்ளது.


S.Pakeerathan
Sylvelinstien 4,
4021 Stavanger,
Norway.
Tel: 0047 51870311, 0047 90782132

swisstamilan.com

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பகீரதனின் மின்னஞ்சல் முகவரி BAHIR@THOOTHU.COM


- Niththila - 01-25-2005

நன்றி மோகன் அண்ணா.