Yarl Forum
tsunami & security - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: tsunami & security (/showthread.php?tid=5642)



tsunami & security - glad - 01-24-2005

சுனாமியில் இருந்து பாதுகாக்க இயற்கை தரும் தடுப்புச்சுவர் சதுப்பு நிலக்காடுகள். தமிழகத்தில் சதுப்பு நிலக்காடுகளால் சூழப்பட்ட 5 கிராமங்கள் சுனாமியில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவர்களாக நின்று கரையோரக் கிராமங்களைக் காப்பாற்றி உள்ளது. கடலுக்கும் நிலத்துக்கும் இடையே வளரும் தாவரங்கள்தான் மாங்ரோவுகள். அவற்றின் வேர்கள் வண்டல்களைச் சேர்த்து நீரோட்டத்தை மிதப்பத்தி கடல் அலைகலால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நாளடைவில் வேர்கள் சேர்க்கும் வண்டல்களால் கரையோரம் நீட்டப்பட்டு நிலப்பரப்பும் கூடுகிறது.
மாங்குரோவ் காடுகள் வழிந்தோடும் நீரை உறிஞ்சி நிலத்தை அலைகள் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து காப்பதோடு மாசுக்களை வடிகட்டி நீரின் தரத்தையும் உயர்த்துகின்றன. கடல் நீர் சுத்திகரிக்கப்படுவதால் பவளப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிப்படைகிறது.மாங்குரோவ் காடுகளால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுத்தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளமும் பெருகுகிறது. இதனால் மீனவர் வாழ்வும் வ்ளம்பெறும். எமது கடலோரங்களையும் மீனவர்களையும் ஒரே நேரத்தில் காப்பாற்றும் வல்லமை கொண்ட இவ் மாங்குரோவ்க்கள் நான் கு ஆண்டுகளில் காடுகளாக வளர்ந்து விடக் கூடியன.
ஆதாரம்: பதிவுகள்