Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
படம்: மகாநதி
பாடியவர்: கமல்ஹாசன் குழுவினர்.
எழுதியவர்:
பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்..
நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு..
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு..
அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்..
(பேய்களை நம்பாதே..)
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே...
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே..
மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு..
அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு...
(பேய்களை நம்பாதே..)
உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய்
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்
வீராதி வீரன் நீ என்று உலவு..
ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு..
நீ நேருக்கு நேர் நின்று பாரு..
எதையும் ஏனென்று ஏதென்று கேளு...
(பேய்களை நம்பாதே..)
உங்களை கவர்ந்த பாடல்களையும் எழுதுங்கள்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
பாடல்: சத்தம் இல்லாத தனிமை
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நல்ல ஒரு முயற்சி தொடருங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<span style='color:blue'>பாடல்: எவனோ ஒருவன் வாசிக்கிறான்
குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)</span>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<span style='color:green'>பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கண்ணதாசன்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (2)
(ஏழு)
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2)
(ஏழு)
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று (2)
(ஏழு)
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)
(ஏழு)
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2)
(ஏழு)</span>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
படம் - ரோஜாவனம்
பாடியவர் -S.P பாலசுப்ரமணியம்
மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள்ளிழுந்தே உயிர்கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது
நீ சிறகை விரிக்காதே
பிரிந்து போன பிறகு
சிதையம் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)
காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக்கொண்டால் போதையைக்கொடுக்கும்
போகப்போகத் தூக்கத்தைக் கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்தவழி வெளிச்சத்தில் ஒளிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண்மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆலவிருட்சம்போல வளருது அழகுப்பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடிவேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர்வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)
காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை
உலைமூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிடமூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களுமுண்டு
காதலின் கையில் கத்தியுமுண்டு
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதில் என்ன வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)
----------
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: ஜேசுதாஸ்
எழுதியவர் - தெரியவில்லை
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....
மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!
சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>பாடல்: இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
குரல் S P பாலசுப்ரமணியம்/இளையராஜா
வரிகள்: </b>
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன் (2)
(இதயம் ஒரு)
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்ரும் புதிது
(இதயம் ஒரு)
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம் ஒரு)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்ரும் வாழ்கவே
(இதயம் ஒரு)
--------------------------------------------------------------------------------
<b>பாடல்: நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
குரல் S P பாலசுப்ரமணியம்
வரிகள்:</b>
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
(நான் பாடும்)
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது
(நான் பாடும்)
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
(நான் பாடும்)
--------------------------------------------------------------------------------
<b>பாடல்: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
குரல் S P பாலசுப்ரமணியம்
வரிகள்:</b>
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் (2)
(வானுயர்ந்த)
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை
(வானுயர்ந்த)
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி
(வானுயர்ந்த)
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இங்கு போட்ட பாடல்களில அனேகம் எமக்கு பிடிச்சது நன்றிங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பொதுவா எல்லோருக்கும் பிடிக்கிற பிடிச்ச பாடலத்தான் போடுறாங்க...நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா...அவங்கள டிஸ்ரப் பண்ணாம...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்னங்க எங்ககு}ட சண்டைக்கு வாற மாதிரியிருக்கு.. நாம நமக்கு பிடிச்ச பாடல்கள் என்று சொன்னம்.. அது உங்களை என்ன பண்ணிச்சு.. ஆ :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்களுக்குப் பிடிச்சதுன்னா..உங்களோட வைச்சுக்கோங்க...அதையேன் எங்களுக்கு...அவங்க ஒரு சீரா எழுதுறாங்க இல்ல..இதைக்கையும் அலட்டலா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உங்களுக்குப் பிடிச்சதுன்னா..உங்களோட வைச்சுக்கோங்க...அதையேன் எங்களுக்கு...அவங்க ஒரு சீரா எழுதுறாங்க இல்ல..இதைக்கையும் அலட்டலா...
நாங்க அவங்களுக்கு சொன்னது ஒரு கருத்தோட முடிஞ்சிட்டுது.. இப்ப இந்த கருத்தை தொடக்கி யாராம் அலட்டுறது..??? :oops:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:உங்களுக்குப் பிடிச்சதுன்னா..உங்களோட வைச்சுக்கோங்க...அதையேன் எங்களுக்கு...அவங்க ஒரு சீரா எழுதுறாங்க இல்ல..இதைக்கையும் அலட்டலா...
நாங்க அவங்களுக்கு சொன்னது ஒரு கருத்தோட முடிஞ்சிட்டுது.. இப்ப இந்த கருத்தை தொடக்கி யாராம் அலட்டுறது..??? :oops:
அதையும் தொடராக்கி ஆராம் புதுசா ஒரு பாட்டுப் போல அலட்டுறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அதையும் தொடராக்கி ஆராம் புதுசா ஒரு பாட்டுப் போல அலட்டுறது
குருவி தான்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
பாடல்: ஏதோ ஒரு பாட்டு (ஆண்)
குரல்: ஹரிஹரன்
வரிகள்:
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
(ஏதோ)
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
(ஏதோ)
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
(ஏதோ)
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...
(பூங்காற்றிலே)
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)