Yarl Forum
2006 ஆம் ஆண்டு இறுதிவரை அமெரிக்கப்படைகள் ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: 2006 ஆம் ஆண்டு இறுதிவரை அமெரிக்கப்படைகள் ..... (/showthread.php?tid=5653)



2006 ஆம் ஆண்டு இறுதிவரை அமெரிக்கப்படைகள் ..... - Vaanampaadi - 01-23-2005

செய்திகள்
ஞயிற்றுக்கிழமை 23.01.05 - 19:45 மணி தமிழீழம்
2006 ஆம் ஆண்டு இறுதிவரை இலங்கையில் அமெரிக்கப்படைகள் நிலைகொண்டிருக்கும்.
ஏஜென்சி செய்தியொன்று தெரிவிப்பு.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்ää அழிந்துபோயுள்ள உட்கட்டுமானங்களை மீளக்கட்டியெளுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் உதவி புரியவென வந்துள்ள அமெரிக்கப்படையினர் அடுத்த வருட இறுதிவரை சிறிலங்காவில் நிலைகொண்டு இருப்பார்கள் என்று அரச உயர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஜென்சி செய்தியொனறு தெரிவித்துள்ளது.

நாட்டை மீழக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு உதவிபுரியவென 1ää657 அமெரிக்க படையினர்உட்பட 2ää517 வெளிநாட்டுப்படையினர் தற்போது சிறிலங்காவில் உள்ளனர். காலி கட்டுநாயக்கா விமான நிலையம் யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களில் அமெரிக்கப்படையினர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39பேர் மருத்துவர்கள் 676 பேர் கேகாலைக்கடலில் தரித்துள்ள அமெரிகாவின் தலுத் என்ற கப்பலின் சிப்பந்திகள் ஆவர்; 317 பேர் கட்டுநாயக்கா விமான நிலயத்திலும் 221பேர் கொழும்பிலும்ää 404 பேர் காலியிலும்ää 39பேர் யாழ்ப்பாணத்திலும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கேகாலைக்கடலில் தரித்துள்ள அமெரிக்கக்கப்பலின் சி.எச். 46 ஈ உலங்கு வானூர்தி நான்கும் 180 தொன் சரக்கை தரையில் ஏற்றிச்செல்லக்கூடிய பாரஊர்தி ஒன்றும் மற்றும் பொறியியல் தளபாடங்களும் உள்ளதாக அந்தவட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. சுpறிலங்காவுக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரிகள் பலரும் தமது நாட்டுப்படைகள் இங்கு பணி முடிந்ததும் நாட்டுக்குத்திரும்பிவிடும் என்று தெரிவித்துள்ளனர் அதாவது இங்கு மீள்கட்டுமானம் மற்றும் இயல்புநிலையை மீள ஏற்படுத்தும் பணிகளை முழுமையாக செய்துமுடிக்கும்வihää கிட்டத்தட்ட அடுத்தவருட இறுதிவரை அமெரிக்கப்படைகள் இங்கு நிலைகொள்ளும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source: Pathivu


- Niththila - 01-23-2005

அப்படியா சங்கதி..... :evil: :evil: :evil: :evil: