Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுடன் இனணவதா? ஜிகாத்திற்கு தயாராவதா?
#1
சுனாமியõல் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தமக்கு நிவாரண உதவிகள் உரியவாறு கிடைப்பதில்லை என்றும் அரசாங்கம் தம்மை புறக்கணிப்பதாகவும் ஒருமித்து குரலெழுப்புகின்றனர்.

வடக்கு,கிழக்கு,தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் குரலாகவே இது உள்ளது.

முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையும் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது அரச நிவாரணங்களோ அரச உதவிகளோ இன்றிப் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர். கடந்த 18 ஆம், 19 ஆம் திகதிகளில் காலி,மாத்தறை,ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்குச் சென்ற போதும் அவர்களும் தாம் புறக்கணிக்கப்படுவது பற்றியே கூறினர்.

ஹம்பாந்தோட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் விரக்தியின் விளிம்பில் நின்று அரசாங்கம் ஏன் எம்மை புறக்கணிக்கின்றது. விடுதலைப் புலிகளுடன் இணையுமாறு அரசு கேட்கிறதா? அல்லது ஜிகாத்தாக மாறவேண்டும் என்று கேட்கிறதா? என ""கேசரி'' வார இதழுக்குத் தெரிவித்தனர்.

கடந்த 19 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் சிறுவர், முதியவர், ஆண்,பெண் என்ற பேதமின்றி திரண்ட முஸ்லிம் மக்கள் மேற்படி கேள்வியை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி நின்று கோஷமெழுப்பினர்.

""1500 குடும்பங்களுக்கு 27 கூடாரங்களா?'',""1500 குடும்பங்களுக்கு 17 உணவுப் பொதிகளா'',"" நாங்கள் அனைவரும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களே'',"" ஜனாதிபதியே அபிவிருத்திக்கான அடிக்கல்லை இங்கு நாட்டுங்கள்'',""சுனாமியால் பாதிக்கப்பட்ட எமக்கு வழங்கப்படும் தண்டனையா இது '', ""சுனாமி பாதிப்பிற்கு என வந்த வெளிநாடுகளின் உதவிகள் எங்கே?'',""கடற்றொ ழில் அமைச்சரே நீங்கள் நித்திரையா?'',வெளிநாடுகளின் உதவிகள் சுனாமி அனர்த்தத்திற்கா அல்லது துறை முகம் அமைக்கவா'',"" ஜனாதிபதி அவர்களே! எமது துக்கத்தையும் கவனத்திலெடுங்கள்'' போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தம்மை தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கூறுகின்றது. இந்த இடத்தில் துறைமுகம் அமைக்கப் போவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நாம் எங்கு போவோம்? என்று அவர்கள் கேள்வியும் எழுப்புகின்றனர்.

நன்றி - வீரகேசரி வாரமலர்
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)