Yarl Forum
அழிய மறுக்கும் சாப்ட்வேர்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: அழிய மறுக்கும் சாப்ட்வேர்... (/showthread.php?tid=5676)



அழிய மறுக்கும் சாப்ட்வேர்... - aathipan - 01-22-2005

கம்ப்யூட்டர் மலர் 21.01.2005


1.அழிய மறுக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள்!



கம்ப்யூட்டரில் பல சாப்ட்வேர் தொகுப்பு களை நீங்கள் நிறுவியி ருப்பீர்கள். ஏதாவது ஒரு சாப்ட்வேர் தொகுப்பு உங்களுக்குத் தேவை யில்லை என முடிவு செய்து உடனே அதனை முற்றிலுமாக நீக்கிவிட முயற்சிப்பீர்கள். அது தொல்லை கொடுக்கா மல் நீங்கிவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் சில சாப்ட்வேர் களை அழிக்க முடி யாது. ஏதாவது ஒரு காரணத் தைக் காட்டி கம்ப்யூட்ட ரில் அமர்ந்து கொண்டு இருக்கும். உங்கள் கம்ப் யூட்டர் மீது பிரியா அன்பு கொண்டிருக்கும் அந்த சாப்ட்வேர் தொகுப்பை முற்றிலுமாகத் தொலைந்து போ என அனுப்ப என்ன செய் யலாம்?

பொதுவாக சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை கம்ப்யூட்ட ரில் இருந்து நீக்கிட இரு வழி கள் உண்டு.

1. கண்ட்ரோல் பேனலில் உள்ள Add/Remove Program கணூணிஞ்ணூச்ட் என்ற பிரிவிற்குச் சென்று ஐகானைக் கிளிச் செய்து சாப்ட்வேர் தொகுப்பை நீக்கலாம்.

2.அந்த சாப்ட்வேர் தொகுப் பிலேயே Uninstall Applet தரப் பட்டிருக்கும். அதனைப் பயன் படுத்தியும் அந்த சாப்ட்வேர் தொகுப்பை நீக்கிவிடலாம்.

மேலேயுள்ள வழிகளில் ஒன் றைப் பின்பற்றி சாப்ட்வேர் தொகுப்பை நீக்கிடும் போது அந்த சாப்ட்வேர் உள்ள போல் டர், சாப்ட்வேர் தொகுப்பு குறித்து விண்டோஸ் ரெஜிஸ்ட் ரியில் உள்ள குறிப்பு, அதற் கான ஷார்ட்கட் மற்றும் திரை யில் உள்ள ஐகான்கள் அனைத் தும் நீங்கும். சில வேளைகளில் சாப்ட்வேர் நீக் கப்பட்டது; ஆனால் முற்றிலுமாக அடுத்த முறை கம்ப்யூட்டர் இயக்கு கையில் நீக்கப்படும் என அறிவிப்பு வரும். ஐகான் போன்ற சமாச்சாரம் மட்டும் அவ்வாறு நீக்கப்படும். இவ்வாறு சாப்ட்வேர் தொகுப் பின் சில எச்சங்கள் மிச்சங் களாய் இருக்கையில் முழுவது மாக எவ்வாறு சாப்ட்வேர் தொகுப்பினை நீக்க வேண்டும் என்பதனைப் பார்க் கலாம்.

சாப்ட்வேர் தொகுப்பை முற்றிலுமாக நீக்க:

கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட் வேர் தொகுப்பை முற்றிலு மாக நீக்குவதற்கு முன்னர் ஹார்ட்டிஸ்க்கை பேக்கப் செய் திடுங்கள். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் பேக்கப் இமேஜை உருவாக்குங்கள். அந்த சாப்ட் வேரின் பெயர் அல்லது அதனை உருவாக்கிய நிறுவ னத்தின் பெயர் கொண்டு கம்ப் யூட்டரில் அதற்கான பைல்கள் மற்றும் பைல்கள் உள்ள போல் டர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இவை எல்லா வற்றையும் அழியுங் கள். இப்போது Start==>Run கட்டளையைக் கொடுங்கள். Reg Edit என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். ரெஜிஸ்ட்ரி எடிட்டர் திறக்கப் படும். இங்கேயும் அந்த சாப்ட் வேரின் பெயர், அதை எழுதிய வரின் பெயர், அதைத் தயா ரித்த நிறுவனத்தின் பெயர் கொண்டு தேடுங்கள். அவை தொடர்பான விபரங்கள் ரெஜிஸ்ட்ரியில் தேடப்படும். அவற்றை எல்லாம் அழியுங் கள்.

கம்ப்யூட்டரை மறுபடியும் பூட் செய்யுங்கள். பூட்டாகும் போது ஏதாவது பிழைச்செய்திகள் கிடைக்கின்றனவா எனப் பா ருங்கள். பிழைச்செய்தி எது வும் கிடைக்காவிடில் நீங்கள் அழித்தவற்றால் கம்ப்யூட்ட ரில் உள்ள இதர சாப்ட்வேர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பொருள். பிழைச்செய்தி கிடைத்தால் பேக்கப்பைப் பயன்படுத்தி அழித்ததைப் பழையபடி கம்ப் யூட்டருக்குக் கொண்டு வர வேண்டும்.

ரெஜிஸ்ட்ரி பதிவைச் சோதிக்க:

ரெஜிஸ்ட்ரியில் நீங்கள் அழித் தவற்றால் பாதிப்பு இருக்கிறதா என்பதைச் சோதிப்பது முக் கியம். Registry Checker என்ற பிரிவில் பல சாப்ட்வேர் தொகு ப்புகள் இதற்காகவே உள்ளன. Add Windoctor, jv16 போன்ற சாப்ட் வேர் தொகுப்புகள் இந்த வகை சாப்ட்வேர்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். இவற்றைக் கொண்டு ரெஜிஸ் ட்ரியைச் சோதியுங்கள்.

ரெஜிஸ்ட்ரி பட்டியலில் இருந்து சாப்ட்வேரின் பெயரை நீக்க:

சில நேரங்களில் நீங்கள் சாப்ட்வேரை கம்ப்யூட்ட ரில் இருந்து முற்றிலுமாக நீக்கினாலும் அதன் பெயர் கண்ட்ரோல் பேன லில் உள்ள Add / Remove Program வழங்கும் பட் டியலில் காணப்படும். இந்த பட்டியலில் உள்ள பெயரை நீங்கள் நீக்கினா லும் அந்த பெயர் பழை யபடி அங்கே உட்கார்ந்தி ருக்கும். இப்படிப்பட்ட பெயரை நீக்கும் வழி யைப் பார்ப்போம். ரெஜிஸ்ட்ரி எடிட்டரின் இடப்பக்கம் தெரிகிற HKEY_ LOCAL_MACHINE பெயரை ஒட்டிய பிளஸ் அடையாளத் தைக் கிளிக் செய்யுங்கள். இப் படியாக பிளஸ் அடையாளங் களை வரிசையாகக் கிளிக் செய்து கொண்டே Microsoft பின்பு Windows பின்பு Current Version அடுத்து Uninstall வரை செல்லுங்கள். அதன் கீழே யுள்ள பெயரை (கீயைக்) கிளிக் செய்யுங்கள். வலதுபக்கம்தெரி Display Name ©ØÖ® Unin stall String ஆகிய பெயர்கள் நமக்கு முக்கியம். Display Name என்பதில் தெரிகிற Add/Remove Programs பெயர்தான் வழங் கும் பட்டியலில் காணப்படும். Unin stall String என்று குறிக்கிற இடத்தில் தான் இந்த சாப்ட் வேருக்கான பைல்கள் கொடுக் கப்பட்டுள்ளன.

அழிக்க விரும்புகிற பெயரை ரைட் கிளிக் செய்து Delete கட்டளையைத் தேர்வு செய்யுங் கள். அழிக்க உங்கள் ஒப்புதல் கேட்கப்படும். எனவேYes பட்டனை அழுத்துங்கள்.

Uninstall String என்பதில் குறிப் பிடப்பட்டுள்ள போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சென்று அழியுங்கள். இப்பொ ழுது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அந்த சாப்ட்வேர் முற் றிலுமாக நீக்கப்பட்டு விடும்.


- kavithan - 01-23-2005

நன்றி அத்தீபன் அண்ணா


- E.Thevaguru - 01-23-2005

<b>அழிய மறுக்கும் சாப்வேர்</b>

மேலே ஆதிபன் அவர்கள் கூறிய வழிகள் அனைத்தும் சரியே. அவருக்கு எனது பாராட்டுகள்

றெஜிஸ்ரியை திருத்து வழி சற்று விளக்கம் போதாமையால், அதை மாத்திரம் ஆங்கிலத்தில் சுருக்கமாக தந்துள்ளேன்.

Run the Registry Editor (REGEDIT.EXE). Open HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows\ CurrentVersion\ Uninstall. Click on the [+] next to Uninstall and a branch will expand under it, revealing all of the applications currently listed under Control Panel - Add/Remove Programs. Simply highlight any unwanted entries (with a single left-click) and hit Delete.


- kavithan - 01-23-2005

நன்றி


- hari - 01-23-2005

நன்றி அத்தீபன்