![]() |
|
காரைக்கால் அருகே கிணற்று நீர் பொங்கியதால் மக்கள் பீதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: காரைக்கால் அருகே கிணற்று நீர் பொங்கியதால் மக்கள் பீதி (/showthread.php?tid=5675) |
காரைக்கால் அருகே கிணற்று நீர் பொங்கியதால் மக்கள் பீதி - aathipan - 01-22-2005 25 . காரைக்கால் அருகே திடீர் பள்ளம் கிணற்று நீர் பொங்கியதால் மக்கள் பீதி காரைக்கால் : காரைக்காலில் அரசு குடிநீர் வழங்கும் கிணற்றோரம் நிலம் உள்வாங்கி, நீர் பொங்கி வழிந்ததால் மக்கள் பீதியடைந்தனர். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள ஜீவா நகரில் அரசுக்கு சொந்தமான குடிநீர் விநியோக நிலையம் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் நீரேற்று ஊழியர் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் நிரப்பச் சென்றுள்ளார். நீர் ஏற்றுவதற்காக மோட்டாரை இயக்கிவிட்டு கிணற்றின் அருகே வந்தபோது தரை நழுவுவதைப் போல் உணர்ந்து திடுக்கிட்டார். அங்கிருந்து வேகமாக நகர்ந்தார். அப்போது கிணறு அருகே தரைப்பகுதி ஒரு அடி ஆழத்துக்கு உள்வாங்கியதைப் பார்த்து கிராம மக்களிடம் தெரிவித்தார். கிராம மக்கள் அங்கு திரண்டுவந்து கிணற்றைப் பார்த்தபோது கிணற்றில் இருந்த தண்ணீர் கொப்பளிப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். கிணற்றின் நீர் மட்டமும் உயர்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அக்கிணற்று நீரை பல முறை இறைத்தும், நீர்மட்டம் அதிகரித்துப் பொங்கி வழிந்து வருவது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. - Danklas - 01-22-2005 §ƒ¡ùù ÅÊÅ¡ À¡÷ò¾£í¸Çö¡?? º¢ÄÐ Àì¸ò¾¢Ä ²¾¡ÅÐ §¸¡Â¢ø ¸£Â¢ø þÕóо¡ö¡?? À¡÷òÐ ¦º¡øÖí¸ö¡?..
- kavithan - 01-23-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|