Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 396 online users.
» 0 Member(s) | 393 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,437
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,253
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் மரணம்
Posted by: Vaanampaadi - 02-23-2005, 11:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஈராக் தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் மரணம்
ஜ கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை 22 பெப்ரவரி 2005 23:59 ஈழம்
ஈராக் தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையரான ரொகான் பெர்னாண்டோ என்ற வாகன சாரதி கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து குவைத்திற்கு வேலை வாய்ப்பின் நிமித்தம் சென்றிருந்த இவர் தான் பணியாற்றிய கம்பனியின் வற்புறுத்தல் காரணமாக ஈராக்கிற்கு தொழிலின் நிமித்தம் சென்ற சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு இரண்டு நாட்கள் கடமைக்காக ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட இவர் பின்பு அது 10 நாட்கள் வரை நீடிக்கப்பட்டதாகவும் இந்த சமயத்தில் கடந்த 11 ஆம் திகதி இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து அமெரிக்க வைத்திய தளமொன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது உறவினரக்ளுக்கு அவரது நண்பர்கள் ஊடாகவே இந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Puthinam

Print this item

  கணனி
Posted by: eelapirean - 02-23-2005, 08:25 AM - Forum: கணினி - Replies (12)

எனது நண்பர் lap top க்கு போடும் lock இலக்கத்தை மறந்து விட்டார்.எப்படி திறப்பது யாருக்காவது தெரியுமா?

Print this item

  முதலாவது மற்றும் இரண்டாவது காதல்கள்
Posted by: sayanthan - 02-23-2005, 05:30 AM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

இந்த இரண்டையுமே எழுதியது நான் இல்லை. என் கணணிக்கும் எப்போதே சேமித்த வைத்தது. (சில சமயம் யாழிலிருந்து தான் எடுத்தேனோ தெரியவில்லை)

பிற் குறிப்பு 1: இதனை எழுதியவர் யாரோ அவருக்கு நன்றி.
பிற்குறிப்பு 2: முதலாம் மற்றும் இரண்டாவது காதல்கள் என்ற தலைப்பு ஒருவித வர்த்தக நோக்கம் கருதிய விளம்பர பாணியிலான தலைப்பு. அதன் மூலத் தலைப்பு எது என்று தெரியவில்லை.

அடுத்த காட்சியே உன்னுடன்
என் இறுதிக் காட்சியாய்
இறுதியாய்...
வேண்டாம் என்று மறுத்த என்
மனதுடன் போராடி இறுதியாய்
உனக்கொரு வார்த்தை சொல்ல
சம்மதம் பெற்றேன்
என் வார்த்தைகள் உன்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
உன் நினைவுகள் இனி என்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
வேறொரு உயிரில் உயிர்
வைக்க இன்று முதல் முயல்கிறேன்.

-----------------------------------

ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
விளையாடச்சொன்னது
இன்னும் பல உணர்வுளால்
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால்
இம்முறை மௌனமே என்
முதல் வாhத்தையாகியது
என் ஆன்மாவின் உணர்வுகள்
என் விருப்பத்தை உனக்கு
வெளிப்படுத்தும்வரை உன்
கள்ளமற்ற உள்ளம் மட்டும்
என் கண்களுக்குத் தெரியட்டும்
மெனமே என் மொழியாக இருக்கட்டும்
என் உணர்வின் அலைகள் உன்னை
நெருங்குவதற்குள் நீ என்னிடமிருந்து
விலகிவிட்டால் என் விருப்பு மௌனமாய்
என்னுள்ளே சாகட்டும்
உறவு ஒன்று புதிதாய் உருவாகும்
உருவங்கள் உணராமலும் கருத்தரிக்கும்
வேறெவரும் உரிமைபெற உள்ளம் மறுக்கும்
எமக்கு மட்டும் சொந்தமானது
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவரின்
ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும்
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்
விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பரிமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழக்கைத் தொடரின்
அடுத்த காட்சி அரங்கேறும

Print this item

  Vanakkam
Posted by: Mahima - 02-23-2005, 04:52 AM - Forum: அறிமுகம் - Replies (21)

எல்லோரூக்சூம் வணக்கம்
நான் புதிதாக களம் இறங்கி இரூப்பவள்
எல்லோரூம் வரவேற்பீர்கள் என்ற நம்பிககையில்
நன்றி

Print this item

  ஒரே நாளில் கட்டுப்பாட்டில் யாழ் !?
Posted by: anpagam - 02-23-2005, 02:37 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (44)

ஏன் இவ்வளவு காலம்.... தாமதம்....
ஆனால்.......
..கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் யாழ் இப்படியான முகம் அறியாத நண்பர்கள் உங்களுக்கு இருக்கும்போது... அதை நாம் யாவரும் அறிவாக அனுபவத்துடன் பாவிக்த்துக்கொள்ள வேண்டும். (அல்லது உள்வீட்டு நடவடிக்கைகளோ யாம் அறியோம்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மன்னிக்கவும் வியாசன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) )
நன்றி Idea :|

<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->  ........யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம்.    உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை  பல வேலைப்பழுவிற்கு இடையில்  வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை  எழுதுகிறர்கள்.
   அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும்  உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
   பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள்......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> எங்களுக்கு ஒன்றும் தகராறு செய்யவேண்டும் என்று நோக்கம் கிடையாது. யாழ்களம் தமிழ்க்களத்திலேயே தரமானது என்று யாவரும் சொல்லவேண்டும் இதுவே எங்கள் ஆசை.
  மாற்றங்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுக்குத்தான். சிறுபிள்ளை வெள்ளாமை விழைந்தும் பலனில்லை என்பார்களோ... யார் அறிவது யார் சிறிது யார் பெரிசு என எல்லாம் பெரிசுகள் விளையாட்டு சந்தர்பம் வந்தவுடன் இங்கு மாறிமாறி ஒருவரை ஒருவர் சாட்டுவது ஆனால் எல்லாம் இஞ்கே இந்த பெருசுகள்தான்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மேலும் மேலும்...

Print this item

  என்ன எல்லோரும் நலமா?
Posted by: manmadhan - 02-23-2005, 12:13 AM - Forum: அறிமுகம் - Replies (74)

என்னப்பா பெரிய தொல்லையாகிவிட்டது... நானும் எத்தன தடவை முயற்சி செய்கிறேன்.. பதில் அழிப்பதற்கு ஆனால் உங்கள் தளத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது ஏன்?

Print this item

  நேர்மைக்கு ஒரு பரிசோதனை
Posted by: Jude - 02-23-2005, 12:09 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (18)

நமது தமிழ் இளைஞர்கள் ஏன் வெளிநாடு வந்தனர்? நேர்மையாக பதில் சொல்வோமா? முதலில் நான்.
வசதியான வாழ்வும் உயர்வாழ்க்கைத்தரமும் தேவை என்று தான் நான் இலங்கைக்கு பிரியாவிடை சொல்லிவிட்டேன். நீங்கள் எப்படி?

Print this item

  கைகூடாத காதலின் சாட்சியாக....
Posted by: shanthy - 02-22-2005, 08:32 PM - Forum: கவிதை/பாடல் - Replies (101)

கைகூடாத காதலின் சாட்சியாக....

என் சுவாச அறைகளின்
சுழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.

கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.

கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி....

முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.

கூடப்பிறந்தவர்க்கும் ää
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.

அம்மாவிடம் உன்னைப்பற்றி
விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !

உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களையும்
இப்போதும் நினைத்தபடி - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....

22.02.05

Print this item

  என்முகம் எங்கு தேடுவேன் - மீரா -
Posted by: Thaya Jibbrahn - 02-22-2005, 08:15 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

காதலே காதலே என் தேசிய கீதமா?
காதலா காதலா - என்
காதல் உனக்கு சிலுவையா?

அன்னை மடி சுகத்தை நிதமும்
உன்னிடம் தேடித் தவித்தேன்
ஆதரவாய் உந்தன் தோளிலே
எந்தன் முகம் படர தவித்தேன்

கவிதையாய் நிறைத்த காதல்
காற்றிலே கலந்தது என்ன?
கடல் தாண்டியே கண்ணீரில் - நான்
வாழ்வதே தீர்வானதோ???

மனதும் மனதும் பேசிய காலம்
மௌனம் கூட அர்த்தமே
முகவரிகள் உறவெனவாக - உன்
காதல் சுயம் தான் தொலைந்ததே!

நீளமான இரவுகளில்
நீயில்லாத வெறுமை உணர்ந்தேன்
கண்ணீரெனும் தீர்த்தத்திலே -என்
காதல் துடுப்பில்லாப் படகாவதோ???

இறுகிப் போன உந்தன் மனதில்
என்முகம் எங்கு தேடுவேன்
இயந்திர வாழ்க்கை தன்னிலே - என்னை
நானும் தொலைத்து நிற்கிறேன்

திக்கு ஒன்றாய் சிதறிக் கசிந்த - எந்தன்
கவிதை உன்னைச் சேருமா
நாளையெந்தன் கல்லறை தனிலே
என் காதல் உனக்கென பூவாகுமோ.....?????????

- மீரா -

Print this item

  களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........
Posted by: வியாசன் - 02-22-2005, 03:20 PM - Forum: அறிமுகம் - Replies (64)

யாழ்இணையத்தில் நேற்று பொறுப்பாளர் ஒருவரால் ஒரு கருத்து வைக்கப்பட்டது அதில் அவர் குறிப்பிட்ட விடயம் உண்மையானது. ஆனால் முதலில் அதை தனிமடல் மூலம் சொல்லியிருக்கலாம்.
யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம். பொறுப்பாளர்கள் ஒரு பக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக இருக்கின்றார்கள். இருபகுதியையும் இணைப்பதற்கு கருத்து என்ற இரயில் வண்டியை இடையிடையே விட்டு இணைக்கவேண்டும்.
நேற்று பொறுப்பாளர் வைத்த கருத்துக்களுக்க உறுப்பினர்கள் வைத்த கருத்தை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்கது.
உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை பல வேலைப்பழுவிற்கு இடையில் வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை எழுதுகிறர்கள்.
அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
மற்றையது பொறுப்பாளர்கள் இல்லாதபோது ஒரு சந்தர்ப்பவாதி(பலபெயர்களில் இணையத்தில் விசமம் செய்கிறார்) தன்னுடைய இணையத்தில் (மஞ்சள்நிற இணையம்) கேவலமான செய்திகளை எழுதிவிட்டு யாழ்களத்தில் இணைப்பு கொடுத்துவிடுகிறார். அப்படியான செய்திகள் வருவது களத்துக்கு அவமானம் . பொறுப்பாளர்கள் இல்லாதபடியால் அந்த செய்திகள் நீண்டநேரத்துக்கு அகற்றப்படாமல் இருக்கிறது.
அதனால் நீண்டகால உறுப்பினர்களுக்ககு அப்படியான செய்திகளை [u]<b>மறைப்பதற்கு மட்டும்</b>[/u] சந்தர்பத்தை வழங்கலாம். பொறுப்பாளர்கள் பின் அதைப்பார்த்து அந்த செய்தியின்தரத்தை பார்த்து அதை நீக்கலாம் மறைத்தது தவறாயின் சம்மந்தப்பட்ட உறுப்பினரை எச்சரிக்கை செய்யலாம்
பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள்.
தயவுசெய்து அனைத்து உறுப்பினர்களும் உங்கள் கருத்தை பொறுப்பாளர்களுக்கு தெரிவியுங்கள் நேற்றைய சம்பவம் போன்று இன்னொரு சம்பவத்தை தவிர்ப்போம்
நன்றிகளுடன் உங்கள் வியாசன்

Print this item