![]() |
|
களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ (/showthread.php?tid=5085) |
களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ - வியாசன் - 02-22-2005 யாழ்இணையத்தில் நேற்று பொறுப்பாளர் ஒருவரால் ஒரு கருத்து வைக்கப்பட்டது அதில் அவர் குறிப்பிட்ட விடயம் உண்மையானது. ஆனால் முதலில் அதை தனிமடல் மூலம் சொல்லியிருக்கலாம். யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம். பொறுப்பாளர்கள் ஒரு பக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக இருக்கின்றார்கள். இருபகுதியையும் இணைப்பதற்கு கருத்து என்ற இரயில் வண்டியை இடையிடையே விட்டு இணைக்கவேண்டும். நேற்று பொறுப்பாளர் வைத்த கருத்துக்களுக்க உறுப்பினர்கள் வைத்த கருத்தை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்கது. உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை பல வேலைப்பழுவிற்கு இடையில் வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை எழுதுகிறர்கள். அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும். மற்றையது பொறுப்பாளர்கள் இல்லாதபோது ஒரு சந்தர்ப்பவாதி(பலபெயர்களில் இணையத்தில் விசமம் செய்கிறார்) தன்னுடைய இணையத்தில் (மஞ்சள்நிற இணையம்) கேவலமான செய்திகளை எழுதிவிட்டு யாழ்களத்தில் இணைப்பு கொடுத்துவிடுகிறார். அப்படியான செய்திகள் வருவது களத்துக்கு அவமானம் . பொறுப்பாளர்கள் இல்லாதபடியால் அந்த செய்திகள் நீண்டநேரத்துக்கு அகற்றப்படாமல் இருக்கிறது. அதனால் நீண்டகால உறுப்பினர்களுக்ககு அப்படியான செய்திகளை [u]<b>மறைப்பதற்கு மட்டும்</b>[/u] சந்தர்பத்தை வழங்கலாம். பொறுப்பாளர்கள் பின் அதைப்பார்த்து அந்த செய்தியின்தரத்தை பார்த்து அதை நீக்கலாம் மறைத்தது தவறாயின் சம்மந்தப்பட்ட உறுப்பினரை எச்சரிக்கை செய்யலாம் பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள். தயவுசெய்து அனைத்து உறுப்பினர்களும் உங்கள் கருத்தை பொறுப்பாளர்களுக்கு தெரிவியுங்கள் நேற்றைய சம்பவம் போன்று இன்னொரு சம்பவத்தை தவிர்ப்போம் நன்றிகளுடன் உங்கள் வியாசன் - yarlmohan - 02-22-2005 <b>viyasan</b>, நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் எடுக்கின்றோம். நேரம் தான் பிரச்சனையாக உள்ளது. ஆதலால் தான் அதிகம் கலந்து கொள்ள முடிவதில்லை. எனினும் விரைவில் சில மாற்றங்களைக் கொண்டுவருகின்றேன். - tamilini - 02-22-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மாற்றங்களை வரவேற்கிறோம். :|
- வியாசன் - 02-22-2005 நன்றி மோகன் எங்களுக்கு ஒன்றும் தகராறு செய்யவேண்டும் என்று நோக்கம் கிடையாது. யாழ்களம் தமிழ்க்களத்திலேயே தரமானது என்று யாவரும் சொல்லவேண்டும் இதுவே எங்கள் ஆசை. மாற்றங்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் - shanmuhi - 02-22-2005 மாற்றங்களை வரவேற்கிறோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வியாசன் - 02-22-2005 நீங்கள் வரவேற்பதைவிட உங்கள் மனதில் படும் கருத்தக்களை சொன்னால் பொறுப்பாளர்களுக்கு சுலபமாக இருக்கும் தயவுசெய்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள் - Vasampu - 02-23-2005 உண்மையில் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் நாம் களத்திற்கு வருகின்றோம். நாம் ஒவ்வொருவரும் வரும்போதும் களப்பொறுப்பாளர்கள் வந்து எம்முடன் கலந்துரையாடுவது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது. வேண்டுமென்றால் களப்பொறுப்பாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை களத்தில் ஏற்படும் பிரைச்சினைகள் சம்பந்தமாக தமது கருத்துக்களை களத்தில் வைத்தால் அது சம்பந்தமாக கள உறவுகளும் தத்தமது கருத்துக்களை தொடர்ந்து முன் வைக்கலாம். பின்பு களப்பொறுப்பாளர்கள் களத்தில் என்ன மாற்றம் செய்யலாம் என்ற தமது இறுதி முடிவினை எடுக்கலாம்.
- Mathan - 02-23-2005 வணக்கம் மோகன் அண்ணா, களப் பொறுப்பாளர்கள் வேலைப்பளு மற்றும் நேரப்பற்றாக்குறை காரணமாக களத்தை எப்போதும் அவதானிப்பது முடியாதவிடயம் தான். ஆனால் களத்தை அவதானிக்கும் நேரத்தை அவர்கள் தமக்கிடையே பகிர்ந்து கொண்டால் இலகுவாக இருக்கும் அல்லவா? உதாரணத்திற்கு உங்களால் காலை நேரங்களில் இடைக்கிடையே களத்தை அவதானிக்க முடியும் என்றால் மாலையில் இராணவனால் அவதானிக்க நேரம் கிடைக்குமா என்று பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல பொறுப்பாளர்கள் அவதானிப்பதை விட தமக்கிடையே நேரத்தை பகிர்ந்து கொண்டால் ஏறக்குறைய முழு நாளுமே களத்தை அவதானித்து தமது கருத்துக்களையும் எழுதி உறுப்பினர்களை தட்டி செல்ல முடியும். இது ஒரு யோசனை. மற்றய கள உறுப்பினர்களும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். - KULAKADDAN - 02-23-2005 களபொறுப்பாளர் /மடடுறுத்துனர்களது ஆக்க பூர்வமான கருத்தாடல் அவசியமானது. <b>Mathan</b>, இன் கருத்தை ஆதரிக்கிறேன். களத்தில் பல மூத்த உறுப்பினர்கள் புதியளவர்கள் என பலர் இருக்கிறார்கள். புரியவர்களில் பலருக்கு களம் கடந்து வந்த பாதை பூரணமாக தெரியாதிருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவருடத்திற்கு முன் களம் எப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் பழைய உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். களத்தில் மாற்றம் வரவேற்க படவேண்டியது. கள உறுப்பினர்களது கருத்துக்களை கேட்கபடும் போது பழையவர்களது அனுபவம் முக்கியமானது. ஆனால் அவர்களது கருத்துகளை காண்பது அரிதாக இருக்கிறது. - tamilini - 02-23-2005 எது எப்படியோ களம் களமாய் இருந்தால் சரி.. இப்ப கொஞ்ச நாளாய்.. வெறிச்சோடிப்பேரய் இருக்கிற மாதிரி இருக்கு
- Malalai - 02-23-2005 Quote:இப்ப கொஞ்ச நாளாய்.. வெறிச்சோடிப்பேரய் இருக்கிற மாதிரி இருக்குஅப்படித்தான் நானும் உணர்கிறேன்....
- KULAKADDAN - 02-23-2005 யாரொடு நோக............ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வியாசன் - 02-23-2005 கவலைப்படாதையுங்கோ ஊடகவியலாளர் வந்திட்டார் இனி களம் களமாகத்தான் இருக்கும். ஆர் ஆற்றை மனைவி ஓடினது அது இது எண்டெல்லாம் வந்து களம் கலகலப்பாப வந்துவிடும் கவலைப்படாதையுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 02-23-2005 வணக்கம் அண்ணா எங்க போணிங்கள்?
- வியாசன் - 02-23-2005 மழலை எந்நேரமும் கணனியுடன் இருந்தால் அண்ணி பிறகு என்ன நடக்கமென்று தெரியும்தானே? தமிழ்ஸ் உந்த blog வந்தபின் கருத்தாடல் செய்வது குறைந்துவிட்டது போல இருக்கு இப்போது பலர்அதை அழகுசெயஇவதில் கவனம் செலுத்துகின்றனர் - KULAKADDAN - 02-23-2005 மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை. இதுவரை விடுமுறை காலமாக இருந்ததால் களத்தில் கன நேரம் நிற்க முடிந்தது. தற்போது பணிக்கு திரும்பியுள்ளதால் அதிக நேரம் நிற்க முடிவதில்லை. - sinnappu - 02-23-2005 Quote:tamilini வந்தால் கொத்து விழுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-24-2005 tamilini Wrote:எது எப்படியோ களம் களமாய் இருந்தால் சரி.. இப்ப கொஞ்ச நாளாய்.. வெறிச்சோடிப்பேரய் இருக்கிற மாதிரி இருக்குஇங்கு சிலதை பாக்க சாத்தான் வேதமோதுவது மாதிரி இருக்கு அழுறதா சிரிப்பதா தெரியவில்லை. [உங்களை அல்ல. ]முகம் தெரியாத பல அண்ணா அக்கா தங்கை என வீட்டில் இருப்பது போன்ற ஒரு மன உணர்வை தந்தது களம். தற்போது..........
- tamilini - 02-24-2005 Quote:இங்கு சிலதை பாக்க சாத்தான் வேதமோதுவது மாதிரி இருக்கு அழுறதா சிரிப்பதா தெரியவில்லை. [உங்களை அல்ல. ]முகம் தெரியாத பல அண்ணா அக்கா தங்கை என வீட்டில் இருப்பது போன்ற ஒரு மன உணர்வை தந்தது களம். தற்போது.......... உண்மை தான் தம்பி... நகைச்சுவை அலட்டல் இல்லாதவைக்கு சரியாகிட்டுது.. நம்மை மாதிரி கேசுகள் நிலை என்ன.. இப்படி இன்னும் கொஞ்ச நாள் போனால் பயித்தியம் பிடிச்சிடும் களம் களகளப்பாய் இருக்கனும்..
- Mathan - 02-24-2005 அது என்ன களகளப்பாய் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|