| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 396 online users. » 0 Member(s) | 393 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,437
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,253
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கடல்கோளின் பின்னர் புறப்பட்ட முதல் ரயில் மோதியதில் ..... |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 12:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கடல்கோளின் பின்னர் புறப்பட்ட முதல் ரயில் மோதியதில் அம்பலாங்கொடையில் பெண் பலி
மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த ருகுணு குமாரி ரயில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள மாதம்பாகம ரயில் நிலையம் அருகில் இடம் பெற்றுள்ளது.
இதில், திலகாவதி (வயது 58) என்ற, ஆயுர்வேத வைத்திய அலுவலக லிகிதரான பெண்ணே பலியானார். ரயில் வந்து கொண்டிருந்த போது கவனயீனமாக இவர் ரயில் கடவை ஊடாக தனது கணவருடன் பாதை மாற முற்பட்ட போதே ரயிலில் மோதி இவர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது இவரின் கணவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஹெலெபொல தெரிவித்தார்.
கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர், தென்பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த முதலாவது ரயில் மோதியபோதே இப் பெண் உயிரிழந்துள்ளார்.
Thinakural
|
|
|
| `வானம் இருண்டுவிடும்' அச்சம் |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 12:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
`வானம் இருண்டுவிடும்' அச்சம் ஆர்தர் சி கிளார்க் நிலையம் நிராகரிப்பு
சூரிய கிரகணம் காரணமாக பெப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் கறுப்பாக மாறிவிடும். இதன் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்படுமென வெளியாகியுள்ள செய்திகளை கொழும்பின் ஆர்தர் சி கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளது.
சூரிய கிரகணம் அல்லது சூரிய புயல் காரணமாக வானம் கறுப்பாக மாறிவிடும் என்ற வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளதையடுத்து தென்பகுதியில் அச்ச நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் தமது நகைகளை மறைத்துவைக்கத் தொடங்கியுள்ளதுடன், மாணவர்களை பாடசாலைகளுக்குச் செல்ல விடாமல் மறித்துவருகின்றனர்.
சில இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்கள் செல்லாததால் அவை இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்வாறான நிகழ்வொன்றிற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென ஆர்தர் சி கிளார்க் மையத்தைச் சேர்ந்த கலாநிதி சந்தான ஜெயரட்ண குறிப்பிட்டுள்ளார்.
பௌர்ணமி நாட்களில் சூரிய கிரகணத்திற்கான சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், வானம் கறுப்பாக மாறினால்கூட அது ஏழு, அல்லது எட்டு நிமிடங்களுக்கே நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய எரிகல் ஒன்று பூமியை தாக்கினால் மாத்திரமே இது சாத்தியம். எனினும், இதுவரை இவ்வாறான எரிகல் எதுவும் பூமியை நோக்கி வருவதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Thinakural
--------------------------------------------------------------------------------
|
|
|
| மீண்டும் போர் மூண்டால் சகலரும் அழிவோம் ...... |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 12:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மீண்டும் போர் மூண்டால் சகலரும் அழிவோம் யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படுங்கள்
எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் யுத்த நிறுத்தத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாடு மற்றொரு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாதென்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதுடன், போர் மூண்டால் சகலருமே அழிந்து போய் விடுவோமென்ற கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமையுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க் கட்சி முதல்வருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையிலேயே போர் நிறுத்தத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், யாவரும் ஒன்றிணைந்து போர் நிறுத்த உடன்படிக்கையை பாதுகாக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க இலத்திரனியல் ஊடகங்களூடாக விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
மூன்று வருடங்களுக்கு முன்பு 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் நாம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம். இதன் மூலம் மோதல் முடிவுக்கு வந்தது. அடுத்த நடவடிக்கையாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
2004 ஜனவரியில் ஸ்தம்பித நிலையை அகற்றி, சமாதானப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நாம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பேச்சுவார்த்தையை மீண்டும் அரசாங்கம் ஆரம்பிக்கவில்லையென்பது துரதிர்ஷ்டவசமானதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்குப் பதிலாக மோதல் நிறுத்தமானது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. தன்னலத்தைக் கொண்டுள்ளோர் மீண்டும் யுத்தத்துக்குச் செல்ல விரும்புகின்றனர். ஆனால், நாடு மற்றொரு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாதென்பதே யதார்த்தம். போரினால் சகலருமே அழிந்து விடுவோம்.
ஆதலால் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாக்க நாம் ஒன்றுபடுவோம். சகல சமூகங்களுக்கும் ஏற்புடைய இறுதியான சமாதானத்தை ஐக்கிய இலங்கைக்குள் வென்றெடுக்க நாம் ஒன்றுசேர்வோம்.
யுத்த நிறுத்தத்தை பாதுகாக்கவும், சகலரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான சிந்தனையை முன்னெடுத்துச் செல்லவும் உதவிய சகலருக்கும் நான் நன்றி கூறுகின்றேன். விசேடமாக நோர்வே, இந்திய, ஜப்பானிய, அமெரிக்க அரசாங்கங்களுக்கும் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு, ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான், ஏனைய நாடுகள், சர்வதேச அமைப்புகளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
யுத்த நிறுத்தத்தை தக்கவைக்க இவை எமக்கு உதவியளித்ததுடன் , தற்போது இறுதித் தீர்வைக் காணுமாறு இந்த நாடுகள், அமைப்புகள் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை அடிப்படையாகக் கொண்ட நிலையான சமாதானத்திற்காக நாம் எம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
Thinakural
|
|
|
| ..... சமாதானப் பேச்சை முன்னெடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 12:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
முடங்கிக் கிடக்கும் சமாதானப் பேச்சை முன்னெடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை
சர்வதேச சமூகத்தால் தீர்வை திணிக்க முடியாதென்கிறார் அமெரிக்கத் தூதுவர்
சமாதானத் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகம் எந்தத் தீர்வையும் திணிக்கப் போவதில்லை எனவும் பிரச்சினைக்குரிய இரு தரப்பும் மனம் திறந்து பேசித் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பை மட்டுமே சர்வதேச நாடுகள் வழங்குவதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைப் பிரச்சினையில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்தாது. அரசும் விடுதலைப் புலிகளும் நாட்டு மக்களும் மனம் திறந்து பேசித் தீர்வு காண முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மூன்று வருடங்கள் நிறைவடைவதையொட்டி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது:
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மூன்று வருடங்களாகின்றன. இதன்மூலம் நாட்டில் ஓரளவு அமைதிச் சூழல் காணப்படுகின்றது. ஆனால், இதுவே நிரந்தரமாக இருப்பதால் எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை.
போர் நிறுத்த உடன்படிக்கையென்பது ஒரு சைக்கிள் வண்டியைப் போலுள்ளது. அதில் நாமெல்லோரும் அமர்ந்த வண்ணமிருக்கின்றோமே தவிர, அதை மிதித்து பயணிக்கும் முயற்சியில் இன்னமும் சரிவர ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் பேச வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். சகலரிடமும் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் நிச்சயமாக சமாதானத் தீர்வு முயற்சி வெற்றியளிக்கவே செய்யும்.
நோர்வேயோ, ஜப்பானோ அல்லது அமெரிக்காவோ தீர்வு முயற்சியில் எதனையும் திணிக்கப் போவதில்லை. ஆதிக்கத் தன்மையில் செயற்படப் போவதுமில்லை. இது உங்கள் நாடு, உங்கள் பிரச்சினை. நீங்கள் தான் ஒன்றுபட்டுத் தீர்வைக் கண்டு கொள்ளவேண்டும். சர்வதேச சமூகங்கள் ஒத்துழைப்பு, ஆதரவு, பொருளாதார உதவி இவற்றை மட்டுமே வழங்கும், வழங்கவும் முடியும்.
எனவே, சிவில் அமைப்புகளும் நாட்டு மக்களும் ஒன்றுபட்டு அரசுக்கு ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வழங்கி விரைவாக சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். இலங்கைக்கு விரைவில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதையே அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
கடல்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அமெரிக்கா உதவியும், ஒத்துழைப்பும் வழங்குவதில் சிறிதளவும் தயக்கம் காட்டவில்லை. எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் வந்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் இங்கு சமாதானம் மலர வேண்டுமென எதிர்பார்ப்பதாக தெரிவித்துச் சென்றதையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
ஜப்பானியத் தூதுவர் அக்கியோ சூடா பேசுகையில், சமாதானப் பேச்சுகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
போர் நிறுத்த உடன்படிக்கை நிரந்தரமானதல்ல. அதனை சமாதானத் தீர்வுக்கான தளமாக மட்டுமே நாம் காண்கின்றோம். ஜப்பான் இலங்கைக்கு சகல விதத்திலும் உதவிகளை வழங்கி வருகின்றது. உதவி வழங்கும் நாடுகளின் உதவிகள் விரைவில் கிட்ட வேண்டுமானால் சமாதானப் பேச்சுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
thinakural
|
|
|
| பேசுவதற்கு அரசு தயாராம்! |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 11:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பேசுவதற்கு அரசு தயாராம்!
வடக்கு-கிழக்கு மக்களுக்கான அவசர மனி தாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்வதற்கான இடைக்கால அதிகாரசபை குறித் தும் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு குறித் தும் பேசுவதற்கு அரசு தயாராகவுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது இலங்கை அரசு. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவு தினத்தையயாட்டி நேற்று அரசு சார்பில் அரச ஊடகத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக் கும் இடையிலான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவுறு கின்றன.
தொடர்ந்து பாரிய அளவிலான யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் பல பெறுமதிமிக்க உயிர்கள் காக்கப்பட்டு, பரவலான அழிவுகள் தடுக்கப்பட் டுள்ளன. அதுகுறித்துத் திருப்தியைத் தெரிவிக் கும் அதேவேளையில், தான் சகல முன்னெ டுப்புக்களை மேற்கொண்ட போதிலும் , பேச்சுக்கள் மூலம் பெறப்படும் நிரந்தரத் தீர்வொன்றுக் கான சாதகமான சூழல் இதுவரை உருவாக்கப் படவில்லை என்பதையிட்டு இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.
இலங்கை அரசு, அதனைப் பொறுத்தவரை யில் சொல்லிலும் செயலிலும் போர்நிறுத்த ஒப் பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான அதன் உறுதியான ஈடுபாட்டை வலியுறுத்துகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் தேவைகளை நிறைவு செய்வதற்காக இடைக்கால அதிகார சபை யயான்றை அமைப்பது பற்றி புலிகள் இயக்கத் துடன் மீண்டும் நேரடிப் பேச்சை நடத்தவும், இனப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வொன்றைக் காண் பதற்கான பேச்சுக்களை மேற்கொள்ளவும் அரசு தொடர்ந்தும் தயாராகவுள்ளது.
சகல இலங்கையரும் சமாதானத்துடன், ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கு ஏது வாக எமது நாட்டிலிருந்ஸூது யுத்தத்தின் துன்பத்தை யும் அரசியல் வன்செயல்களையும் களைய சம் பந்தப்பட்ட சகலரும் ஒத்துழைப்பை வழங்கு வர் என அரசு நம்பிக்கை கொண்டுள்ளது
உதயன்
|
|
|
| வெடிமருந்து கலந்த உணவை பலாத்காரமாக உண்ண வைத்தனராம்! |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 11:55 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
வவுனியாவில் 17 படையினர் நோய்வாய்ப்பட்ட சம்பவம்
வெடிமருந்து கலந்த உணவை
பலாத்காரமாக உண்ண வைத்தனராம்!
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின ருக்கு அதன் பயிற்சி அதிகாரி பலாத்காரமாக வெடிமருந்து கலந்த உணவைப் பருக்கியதா லேயே வவுனியாவில் 17 இராணுவத்தினர் நோய் வாய்ப்பட்டனர் என்று கூறப்படுகின்றது.
வவுனியா இராணுவப் பயிற்சி முகாமில் அதிவிசேட பயிற்சியில் ஈடுபட்டு வந்த இராணு வத்தினரில் 17 பேர் கடந்த சனியன்று திடீர் சுகவீனமுற்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் அநு ராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவர்கள் 17 பேரும் திடீர் சுகவீனமுற்ற தற்கு வெடிமருந்து கலக்கப்பட்டஉணவு வழங் கப்பட்டதே காரணம் என்று பொலீஸ் விசார ணைகளின் போது தெரியவந்துள்ளதாம்.
வெடிமருந்து கலக்கப்பட்ட உணவை உண் ணுமாறு பயிற்சி வழங்கும் அதிகாரி வற்புறுத் தினார் என்று பாதிக்கப்பட்ட இராணுவத்தின ரில் சிலர் பொலீஸாரிடம் கூறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து இராணுவத் தலை மையகத்திடம் வினாவியபோது வெடிமருந் துடன் தொடர்புடைய இராணுவப்பயிற்சி வழங்கப்படுவது உண்மையென்றும் உணவில் வெடிமருந்து கலக்கப்பட்டு பலாத்காரமாக அதை உண்ணக் கொடுக்கப்பட்டது என்பது பொய். அப்படியான முறைப்பாடு எதுவும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் தெரி விக்கப்பட்டது.
உதயன்
|
|
|
| ஜேர்மன் அமைச்சர் மணற்காடு விஜயம் |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 11:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சுனாமி அனர்த்த அழிவுகளைப் பார்க்க
ஜேர்மன் அமைச்சர் மணற்காடு விஜயம்
கடற்றொழில் உபகரணங்களை வழங்கினார்
ஜேர்மன் நாட்டின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி வியெஸ்ஸோ றெக்சி யாஸ் தலைமையில் அந்த நாட்டின் பிரமுகர்கள் குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மணற்காட்டுக் கிராமத்துக்குச் சென்று அழிவுகளை அவர்கள் பார்வையிட்டனர்.
சுனாமியால் கடற்றொழில் உபகரணங்களை இழந்த குடும்பங்களில் 14 பேருக்கு பிளாஸ்ரிக் படகுகள் இழுவை இயந்திரங்கள் வலைகள் தூண்டல்கள் கயிறு போன்ற உபகரணங்களை யும் ஒரு தொகைப் பணத்தையும் ஜேர்மன் அமைச் சர் வழங்கினர்.
ஏனையோருக்கும் விரைவில் கடற்றொழில் உபகரணங்களை வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அழிவுகளைப் பார்வையிட்டதும் ஜேர்மன் குழுவினர் முற்பகல் 11.30 மணியளவில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்ற லில் அமைக்கப்பட்ட பந்தலில் மலர்மாலை அணி வித்து வரவேற்கப்பட்டனர்.
மணற்காடு கடற்றொழிலாளர் சங்கச் செய லாளர் சாமிநாதன் - அந்தோனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண் டகை சுனாமி அனர்த்த கூட்டுச்செயலணியின் பணிப்பாளர் எஸ்.பாலையா கடற்புலிகளின் பொறுப்பாளர் அன்பழகன் அனர்த்த உதவிப் பணிமனையைச் சேர்ந்த சீ.வீ.கே.சிவஞானம் ஆகி யோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜேர்மன் அமைச்சர் அங்கு உரையாற்றி னார். பாதிக்கப்பட்டோருக்கு அவர் தொழில் உபகரணங்களை வழங்கினார். மக்கள் பலர் தமது சோகங்களை கண்ணீர் மல்கியவாறு அமைச்சரிடம் கூறினர். இவற்றை கேட்டு தானும் கண்கலங்கிய ஜேர்மன் அமைச்சர் வியெஸ் றெக்சியாஸ் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற் றொழிலாளர்களுக்காக தமது நாட்டு அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று உறுதியளித்தார்.
உதயன்
--------------------------------------------------------------------
ஜேர்மன் அமைச்சர் குழுவினர்
டிறிபேர்க் கல்லூரிக்கும் விஜயம்
ஜேர்மன் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அவருடன் வந்த குழுவினர் நேற்றுப்பிற்பகல் சாவகச்சேரிக்கும் விஜயம் செய் தனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் இவர்கள் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
பாடசாலையில் ஜேர்மன் அரசின் உதவியு டன் சுமார் 36 மில்லியன் ரூபா செலவில் நடை பெற்றுமுடிந்த - நடைபெற்று வருகின்ற அபி விருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டனர்.
பி;ன்னர் அங்கு பாடசாலை அதிபர் மு. நாகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு தமது கருத்துக் களைத் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சபை யினர் மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளர் செ.சிறீனிவாசன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் உட்படப்பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஜேர்மன் நாட்டு அமைச் சர் திருமதி வியெஸ்ஸோ றெக்சியால் பிரதேச செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இக்குழுவினருக் குப் பொலீஸார் பாதுகாப்பு வழங்கினர்.
உதயன்
|
|
|
| அதிபரும் உப அதிபரும் இணைந்து ஆசிரியரைத் தாக்கியதாக .... |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 11:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சாவகச்சேரி பாடசாலையொன்றில்
அதிபரும் உப அதிபரும் இணைந்து
ஆசிரியரைத் தாக்கியதாக முறைப்பாடு
சாவகச்சேரிப் பகுதியில் உள்ள பிரபல பாட சாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒரு வரை அதிபரும் உப அதிபரும் சேர்ந்து மூர்க்கத் தனமாகத் தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறை யிடப்பட்டுள்ளது. புகன் ஸ்ரீந்திரன் என்ற ஆசிரியரே தாக்கப்பட்டவராவார்.
கடந்த வருடம் தனக்கு முறையற்ற விதத் தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய் திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக மனித உரி மைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து அவரின் இடமாற்றம் வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் ரத்துச்செய்யப்பட்டு, முன்னர் கடமையாற்றிய பாடசாலையிலேயே கடமையாற்றுமாறு அனுமதிக்கடிதமும் வழங் கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனை யடுத்து, கடந்த 17 ஆம் திகதி காலை தனது கட மையை ஏற்பதற்காக தான் குறிப்பிட்ட பாட சாலைக்குச் சென்று அதிபரின் அலுவலகத்தில் உள்ள ஆசிரியர் பதிவேட்டில் கையயாப்பமிட முற்பட்டவேளை, அங்கு வந்த அதிபரும் உப அதிபரும் தன்னை அலுவலகத்துக்குள் பூட்டி வைத்து அங்கிருந்த விக்கெட்டினால் மூர்க்கத் தனமாகத் தாக்கினார்கள் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் காலிலும் உடம்பிலும் பலத்த காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுள்ளார். இச்சம்பவம் தொடர் பாக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அதன் இணைப்பாளர் ருவான் சந்திரசேகரா தெரிவித்தார்.
உதயன்
|
|
|
| 100 வயதில் மணப்பெண் தேடும் ராணுவ அதிகாரி |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 11:13 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
3 மனைவிகள், 38 மகன்கள் 100 வயதில் மணப்பெண் தேடும் ராணுவ அதிகாரி
நகரி, பிப். 23-
நாகரீகம் பெருகிவிட்ட இக்கால கட்டத்தில் 60 வயதை தாண்டினாலே பெரும் பாலான ஆண்கள் நோயின் பிடியில் சிக்கி வீட்டில் முடங்கி விடுகிறார்கள். ஆனால் 100 வயதை கடந்த முன்னாள் அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற விரும்புகிறார்.
அவரது பெயர் ஸ்ரீகடிபிரேம் பிரசாத். ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் காரேபள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
1905-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி பிறந்த இவர் 25 வயதில் இந்திய ராணு வத்தில் அதிகாரி ஆனார். அப்போது இவர் லண்டனில் பணியாற்றியபோது 1925-ல் பாஸ்சி என்ற கிறிஸ்தவ பெண்ணை மணந்தார். இவர்களுக்கு 8 ஆண் குழந்தைகள் பிறந்தன.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரது மனைவியும் மகன்களும் இங்கு வர மறுத்து விட்டனர்.
இதனால் அவர் 2-வதாக கோவையைச் சேர்ந்த கண்ணம்மா என்பவரை திருமணம் செய்தார். 20 ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் 1965-ல் இந்தியா-சீனா போர் வந்தது. இதில் கலந்து கொண்டு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட போது சீன வீரர்களின் துப் பாக்கி குண்டு ஒன்று இவரது உடலில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்ததால் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு 1981-ல் பெங்களூர் வந்து தங்கினார். அப்போது மனதை மஞ்சுளா பீபி என்ற அழகான முஸ்லிம் பெண் ஆக்கிரமித்துக் கொண்டார். அவரை பிரிய மனம் இல்லாததால் 3-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 9 ஆண் குழந்தைகள் பிறந்தன.
அந்த காலகட்டத்தில் அவர் ஒரு தடவை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது அனாதையாக ஒரு சிறுவன் அழுது கொண்டிருப் பதை கண்டார். அவனது நிலையை அறிந்த அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த அனாதை சிறுவனையும் சேர்த்து பிரேம் பிரசாத்துக்கு 38 மகன்கள் உள்ளனர்.
அவர்கள் அத்தனை பேரும் தற்போது வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகி றார்கள்.
கடந்த மாதம் 100-வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய அவருக்கு "தனக்கு பெண் குழந்தை இல்லையே" என்ற ஒரே ஒரு குறைதான் உள்ளது.
இதுபற்றி பிரேம் பிரசாத் கூறும்போது, "எனக்கு 3 மனைவிகள், 38 மகன்கள் இருக்கிறார்கள். எனக்கு பெண் குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான் உள்ளது.
அந்த குறையைப் போக்க 4-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்.
அதற்காக மணப் பெண்ணை தேடிக் கொண் டிருக்கிறேன் என்றார்.
100 வயதைக் கடந்தாலும் பிரேம் பிரசாத் தினமும் வாக்கிங் செல்கிறார். கடினமான வேலைகளைச் செய்கிறார்.
அவரது உடல்பலத்தை பார்த்து காரேபள்ளி மக்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.
மாலைமலர்
|
|
|
|