![]() |
|
அதிபரும் உப அதிபரும் இணைந்து ஆசிரியரைத் தாக்கியதாக .... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அதிபரும் உப அதிபரும் இணைந்து ஆசிரியரைத் தாக்கியதாக .... (/showthread.php?tid=5073) |
அதிபரும் உப அதிபரும் இணைந்து ஆசிரியரைத் தாக்கியதாக .... - Vaanampaadi - 02-23-2005 சாவகச்சேரி பாடசாலையொன்றில் அதிபரும் உப அதிபரும் இணைந்து ஆசிரியரைத் தாக்கியதாக முறைப்பாடு சாவகச்சேரிப் பகுதியில் உள்ள பிரபல பாட சாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒரு வரை அதிபரும் உப அதிபரும் சேர்ந்து மூர்க்கத் தனமாகத் தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறை யிடப்பட்டுள்ளது. புகன் ஸ்ரீந்திரன் என்ற ஆசிரியரே தாக்கப்பட்டவராவார். கடந்த வருடம் தனக்கு முறையற்ற விதத் தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய் திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பாக மனித உரி மைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து அவரின் இடமாற்றம் வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் ரத்துச்செய்யப்பட்டு, முன்னர் கடமையாற்றிய பாடசாலையிலேயே கடமையாற்றுமாறு அனுமதிக்கடிதமும் வழங் கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனை யடுத்து, கடந்த 17 ஆம் திகதி காலை தனது கட மையை ஏற்பதற்காக தான் குறிப்பிட்ட பாட சாலைக்குச் சென்று அதிபரின் அலுவலகத்தில் உள்ள ஆசிரியர் பதிவேட்டில் கையயாப்பமிட முற்பட்டவேளை, அங்கு வந்த அதிபரும் உப அதிபரும் தன்னை அலுவலகத்துக்குள் பூட்டி வைத்து அங்கிருந்த விக்கெட்டினால் மூர்க்கத் தனமாகத் தாக்கினார்கள் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் காலிலும் உடம்பிலும் பலத்த காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுள்ளார். இச்சம்பவம் தொடர் பாக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அதன் இணைப்பாளர் ருவான் சந்திரசேகரா தெரிவித்தார். உதயன் - tamilini - 02-23-2005 hock: hock: சாவகச்சேரியில் எந்த பாடசாலை.. :x
|