| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 563 online users. » 0 Member(s) | 560 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,438
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,255
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| செவ்வாய் கிரகத்தில் பெரிய `பனிக்கடல்' விஞ்ஞானிகள் ... |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 01:37 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/24-2-2005/24mars.jpg' border='0' alt='user posted image'>
செவ்வாய் கிரகத்தில் பெரிய `பனிக்கடல்' விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஆம்ஸ்டர்டாம், பிப். 24-
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? அந்த கிரகத்தின் தட்பவெப்ப சூழ்நிலை என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடக்கிறது.
அமெரிக்காவும், ஐரோப் பாவும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வேலை களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பும், ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையமும் செயற்கை கோளை அனுப்பி செவ்வாய்க்கிரகத்தை படம் பிடித்து வருகின்றன.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் செவ்வாய் கிரகத்தில் முன்பு கடல் மற்றும் ஆறு இருந்ததாகவும், கால நிலை மாற்றத்தால் அவை மறைந்து விட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இவர்கள் கருத்துக்கு மாறான தகவலை ஐரோப்பிய விண்வெளி அமைப்பினர் தெரிவித்து இருக்கிறார்கள். செவ்வாயில் பனிக்கடல் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
அவர்கள் அனுப்பிய செவ்வாய் எக்ஸ்பிரஸ் என்ற விண்கலம் தற்போது செவ்வாய்க் கிரகத்தை சுற்றி வருகிறது.
அந்த விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் பனிக்கடல் இருப்பது தெளிவாக தெரிகிறது.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் செவ்வாயில் பனிக்கட்டி மற்றும் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.
தூசி மற்றும் புகை மூட்டம் பனிக்கட்டியை மறைத்து இருக்கிறது. அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது போன்று பாறை போன்ற அமைப்பில் பனிக்கட்டிகள் காட்சி அளிக்கின்றன.
அதன் அடியில் தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது மிகப்பெரிய பனிக்கடல் செவ்வாய் கிரகத்தில் உள்ளது.
இந்த பனிக்கடல் 50 லட்சம் வருடத்திற்கு முன்பு உருவாகி இருக்கலாம். கிட்டத்தட்ட 500 மைல் நீள அகலத்தில் இந்த பனிக்கடல் உள்ளது.
இதனால் செவ்வாய்க் கிரகத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டால் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாலைமலர்
|
|
|
| நடிகை ரோஜா தாயார் மாரடைப்பால் மரணம் |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 01:34 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (1)
|
 |
நடிகை ரோஜா தாயார் மாரடைப்பால் மரணம்: தெலுங்குதேச தொண்டர்கள் அஞ்சலி
நகரி, பிப். 24-
நடிகை ரோஜாவின் தாயார் லலிதம்மா (வயது66). இவர் திருப்பதி ரூயா மருத்தவமனை நர்சிங் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சில நாட் களுக்கு முன்பு இதய கோளாறு ஏற் பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8மணி அளவில் அவர் திடீ ரென மாரடைப்பால் இறந்து போனார்.
அவரது உடல் சொந்த ஊரான சித்தூர் மாவட்டம் வளசபள்ளி கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தகவல் அறிந்ததும் ரோஜா மதனபள்ளிக்கு விரைந்து சென்றார். தாயாரின் உட லைப்பார்த்து கதறி அழுதார்.
அவர் நிருபர்களிடம் கூறும் போது என் அம்மா எனக்கு சிறுவயதில் இருந்தே நிறைய சுதந்திரம் கொடுத்தார். படங் களில் நடிக்க விரும்பியபோது அவர் தடை எதுவும் சொல்ல வில்லை. நன்றாக ஊக்கப் படுத்தினார். அவரது ஒத் துழைப்பும், ஆதரவும் இல்லா விட்டால் என்னால் 120 படங் களில் நடித்துஇருக்க முடி யாது.
நான் பிரச்சினைகளில் சிக்கியபோதெல்லாம் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்ததது தாயார்தான். அவரது மரணம் என்னை நிலைகுலையச் செய்து விட்டது என்றார்.
நடிகை ரோஜாவின் தாயார் இறந்த தகவலை அறிந்ததும் நகரியில் இருந்து வேன், லாரி களில் ஆயிரக்கணக்கான தெலுங்குதேச தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வளசபள்ளிக்கு சென்றனர். அங்கு லலிதாம்மாளின் உடலுக்கு மாலைகள் அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று காலை லலிதாம்மாவின் இறுதிச் சடங்கு நடந்தது.
மாலைமலர்
|
|
|
| நாய்களுடன் குழந்தைகளுக்கு திருமணம் |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 12:30 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
கண் திருஷ்டி கழிய
நாய்களுடன் குழந்தைகளுக்கு திருமணம்
ஜாம்ஷெட்பூர், பிப். 24-
கண் திருஷ்டி கழிவதற்காக நாய்களுடன் சிறுவர், சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் வினோத பழக்கம் ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்கள் இடையே உள்ளது.
இதன்படி சரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் குலுப்டங் என்ற கிராமத்தில் 2 சிறுவர் மற்றும் 2 சிறுமி களுக்கு நாய்களுடன் திருமணம் நடந்தது.
அங்கு நடைபெறும் முக்கிய பண்டிகையான `மகே பர்வான்' திருவிழாவின் இறுதிநாளில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரளான உறவினர்கள் கலந்து கொண் டனர்.
`பொதுவாக நடைபெறும் திருமணம் போலவே இந்த திருமணம் நடைபெறும்' என்று கூறிய 54 வயதான சோனாமுனி. நாயுடன் திருமணம் செய்து கொண்ட அவருடைய 3 வயது பேத்தி பிரியாவுக்கு பிரியமுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தினதந்தி
|
|
|
| குழந்தைகளுக்கு அல்ல, முதியவர்களுக்கு! |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 12:29 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
பேசும் பொம்மைகள் _
குழந்தைகளுக்கு அல்ல, முதியவர்களுக்கு!
ஜப்பான் நாட்டில் உள்ள பொம்மை தயாரிப்பாளர்கள் தனியாக வசிக்கும் முதியவர்களுக்காக பேசும் பொம்மைகளை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்தப் பொம்மைகள் அன்பான ஆறுதலான வார்த்தை களைப் பேசும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்தப் பேசும் பொம்மைகள் ஜப்பானில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து உள்ளன. முதியவர்கள் குழந்தைகளுக்கு பதிலாக பொம்மையை கட்டி அணைத்துக் கொள்கிறார்கள்.
`யுமெல்' என்ற பொம்மை ஒரு சிறுவனைப் போல இருக்கிறது.
1,200 சொற்களைப் பேசக்கூடியது. இன்று (வியாழக்கிழமை) முதல் இது சந்தைக்கு வருகிறது. இதன் விலை 4 ஆயிரம் ரூபாய்.
ஜப்பானில் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், பொம்மை தயாரிப்பாளர்கள் முதியவர் களுக்கு குழந்தை தயாரிப்பதுதான் லாபமானது என்று கருதுகிறார்கள்.
தினதந்தி
|
|
|
| பயந்து ஓடிய போலீசார் |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 12:29 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பயந்து ஓடிய போலீசார்
ஜப்பானில் டோக்கியோ நகரில் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்ற காரை நோக்கி 2 போலீசார் சென்றனர். காரை ஓட்டி வந்தவர், இந்த விபத்தின் காரணமாக கார் கதவைத் திறக்க முடியவில்லை. பேஸ்பால் விளையாடுவதற்கான `பேட்' காரில் இருந்தது. அதை எடுத்து கார் கண்ணாடிகளை உடைத்து கார் ஜன்னல் வழியாக வெளியே வந்தார்.
அப்போது அவரை நோக்கி வந்த போலீசாரைப் பார்த்ததும் அவர் பேட்டைத் தூக்கிக்கொண்டு அவர்களை அடிக்கப் போவதுபோல விரைந்தார். இதைப் பார்த்த போலீசார் பயந்து போய் ஓடத்தொடங்கினர்.
கொஞ்ச தூரம் போலீஸ்காரர்களை விரட்டிய அந்த நபர் பிறகு காரில் போய் உட்கார்ந்து விட்டார். அப்போது அந்த போலீசார் அங்கு வந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.
விபத்து ஏற்படுத்தியவர் அடிக்க ஓடி வந்ததைப் பார்த்து போலீசார் பயந்து ஓட்டம் பிடித்ததை ஒரு டி.வி.சேனல் படம் பிடித்து ஒளிபரப்பியது. இதைப் பார்த்து கோபம் அடைந்த ஜப்பான் பிரதமர் போலீசார் எதையும் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தினதந்தி
|
|
|
| நிர்வாணமாக விருந்து |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 12:28 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
நிர்வாணமாக விருந்து
நியுயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 17_ந்தேதி ஒரு வித்தியாசமான `டின்னர்' நிகழ்ச்சி நடந்தது. "குளோத்திங் ஆப்ஷனல் டின்னர்" என்று அதற்கு பெயர்.
இந்த விருந்தில் கலந்து கொள்பவர்கள் ஆடை அணியாமல் நிர்வாணமாகவும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் 30 பேர் நிர்வாணமாக கலந்து கொண்டனர். எல்லோருமே நடு வயதினர். பலர் தம்பதிகளாகவும், சிலர் தனியாகவும் நிர்வாணமாக இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
தினதந்தி
|
|
|
| ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா? |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 12:28 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா?
புஷ்சின் விமர்சனத்துக்கு புதின் பதிலடி
"உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வெளிநாடுகளை அனுமதிக்கமாட்டோம்"
பிரஸ்சல்ஸ், பிப். 24_
ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் செய்த விமர்சனத்துக்கு ரஷிய அதிபர் புதின் பதிலடி கொடுத்து இருக்கிறார். எங்கள் நாட்டு விவகாரங் களில் அன்னிய நாடுகள் தலையிட அனுமதிக்க மாட் டோம்" என்று அவர் கூறி இருக்கிறார்.
மனித உரிமை மீறல்
ரஷிய அதிபராக எல்ட்சின் இருந்தவரையில் அமெரிக்கா வுடன் இணக்கமாக நடந்து கொண்டார். புதின் அதிபராக ஆனதும் இந்த நெருக்கம் கொஞ் சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
செசன்யா தீவிரவாதிகளை ரஷியா ஒடுக்க நடவடிக்கை எடுத்தபோது அமெரிக்கா அதைக் கண்டித்தது. மனித உரிமை மீறப்படுவதாகக் குறை கூறியது. இது ரஷியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
புஷ் குற்றச்சாட்டு
அதன் பிறகு சமீப காலமாக, ரஷியாவில் ஜனநாயக நெறி முறைகள் புறக்கணிக்கப்படுவ தாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.
ஐரோப்பாவில் சுற்றுப்பய ணம் செய்து வரும் ஜனாதிபதி புஷ், ரஷிய அதிபர் புதின் சர் வாதிகாரப்பாதையில் செல் கிறார் என்று குற்றஞ்சாட்டினார். ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்றும் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.
பதிலடி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாஸ்கோவில் அதிபர் புதின் கூறியதாவது:_
ரஷியா தனக்கு ஏற்ற மாதிரி யான ஜனநாயகப் பாதையை பின்பற்ற வேண்டும். அன்னிய நாடுகள் ரஷியாவின் உள் விவ காரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்.
மாற்றிக்கொள்ள வேண்டும்
ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளும், அதன் அமைப் புகளும் இன்றைய ரஷியா வாழ்க் கையின் உண்மை நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப்பட வேண் டும். இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
இவ்வாறு புதின் கூறினார்.
புதினும், புஷ்சும் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேச இருக்கிறார்கள்.
Dailythanthi
|
|
|
| ஜெயலலிதாவின் தேவையற்ற கருத்து |
|
Posted by: Vaanampaadi - 02-24-2005, 12:27 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
பிப்ரவரி 24, 2005
விடுதலைப் புலிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
ரோட்டரி அமைப்பின் சார்பில் ஜெயலலிதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய மாநாட்டு அரங்கில் நடந்த புதன்கிழமை இந்த விழாவில் ரோட்டரி சர்வதேச மாவட்ட ஆளுனர் பெஞ்சமின் செயன் விருதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள். தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
உலக அமைதிக்கு வன்முறை சரியான தீர்வாகாது. அதை ஒரு வழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உலக அளவில் எழுந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
சென்னை பெருநகர வளர்ச்சிக்காக ரூ. 18,000 கோடியில் பத்தாண்டுத் திட்டம் ஒன்றை நான் வகுத்துள்ளேன். உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற இந்தத் திட்டம் பேருதவி புரியும்.
குடிநீர், மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய இந்தத் திட்டத்தில் வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர மக்களே பங்கேற்கும் வகையில் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள் அமைப்பது, சாலை நடுவில் பூங்காக்கள் அமைப்பது, போக்குவரத்து சீரமைப்பு, குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவை மக்களின் ழுமையான பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்டு வரும் நல்ல செயல்களை அங்கீகரிப்பதாகவே இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன் என்றார் ஜெயலலிதா.
Thatstamil
|
|
|
| கோபிகா |
|
Posted by: Mathan - 02-24-2005, 12:01 PM - Forum: சினிமா
- Replies (61)
|
 |
திருமணம் எப்போது? கோபிகா பேட்டி
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/gopika1d-350.jpg' border='0' alt='user posted image'>
எப்போது கல்யாணம் என்று கேட்டால் இப்போதைக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை என்கிறார் கோபிகா.
ஆட்டோகிராப் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கோபிகா தற்போது சிம்புவுடன் தொட்டி ஜெயா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த முதல் மலையாளப் படம் ஒரு தோல்விப் படம் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் இந்தப் படத்தைப் பார்த்துத்தான் கோபிகாவுக்கு சேரன் ஆட்டோகிராப்பில் வாய்ப்பு கொடுத்தார்.
இந்தப்படத்தின் அமோக வெற்றி கோபிகாவுக்கு தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.
அவருடன் ஒரு மினி பேட்டி....
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். அப்பா ஆன்டோ, அம்மா டெஸ்ஸி, தங்கை க்ளினி, பாட்டி ஏலியாஸ் என ஒரு சிறிய குடும்பம். வீட்டில் நான் செல்லப்பிள்ளை. சினிமாவுக்கு வருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது.
ஆனால் எப்படியோ நடிக்க வந்துவிட்டேன். சினிமாவில் சில படங்கள் ஓடிவிட்டால் போதும், உடனே அடுத்த கேள்வி திருமணம் எப்போது என்பது தான்.
எனக்கு இப்போதைக்கு திருமண ஆசை இல்லை. ஆனாலும் இரண்டு வருடங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதை நிறுத்தி விடுவேன்.
நிச்சயமாக எனது திருமணம் காதல் திருமணமாக இருக்காது. எனது பெற்றோரின் விருப்பப்படித்தான் நடைபெறும்.
ஆட்டோகிராப் வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்றால் அதை மறுக்க முடியாது.
என்னுடைய முதல் படமான ப்ரணயமணித்தூவல் தோல்வியடைந்த போதிலும் அந்தப் படத்தைப் பார்த்துத்தான் சேரன் எனக்கு ஆட்டோகிராப்பில் வாய்ப்பு கொடுத்தார்.
வாழ்க்கையில் பணம், புகழ் மட்டும் இருந்தால் எல்லாம் கிடைத்து விடாது. இவை எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டுப்போய்விடும். ஆனால் வாழ்க்கையை விட்டுவிட்டால் அது நமக்கு திரும்ப கிடைக்காது.(தத்துவம்...?)
சமீபத்தில் எனது வீட்டில் நடந்த ஒரு சுவையான சம்பவம்..
தூத்துக்குடியிலிருந்து ஏராளமான ரசிகர்கள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நான் வீட்டில் இல்லை. பாட்டி மட்டுமே இருந்துள்ளார்.
அவர்கள் எனது பாட்டியிடம், என்ன பாட்டி சவுக்கியமா? என்று கேட்டுள்ளனர். இதைக்கேட்டவுடன் எனது பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.
ஏனென்றால் பாட்டி என்றது அவருக்கு பட்டி என்று கேட்டுள்ளது. பட்டி என்றால் மலையாளத்தில் நாய் என்று அர்த்தம். அதன் பிறகு அவர்கள் விளக்கமாக சொன்ன பிறகு தான் பாட்டிக்கு புரிந்தது.
தினமும் தமிழ்நாட்டிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் எனது வீட்டிற்கு வருகின்றனர் என்றார்.
பேட்டியை முடிக்கும்போது, மலையாளப் படங்களில் நடிப்பதை விட தமிழில் நடிப்பதில் ஏராளமான சௌகரியங்கள் உள்ளன என்று கோலிவுட்டுக்கு ஐஸ் வைக்கவும் அவர் தவறவில்லை. தட்ஸ் தமிழ்
|
|
|
| தாத்ஸ் சிந்தனைகள் |
|
Posted by: Mathan - 02-24-2005, 11:54 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (2)
|
 |
நித்திரை கழிய மற்ற நேரத்தையெல்லாம் நவக்கிரகங்களுக்கு குடுத்துப்போட்டு இருக்கிறம்.
எல்லாப்பிள்ளையளுக்கும் வணக்கம்! ஏதோ உந்த மழையும் ஓயுற மாதிரி தெரியேல்லை. அம்பாறை, மட்டக்களப்புப்பக்கம் கன பகுதிகளுக்கான பாதையளும் பாவிக்கேலாத அளவுக்குச் சேதமாகிக்கிடக்காம். கிழக்கு மாகாணத்தில் 4,5 நாடுகள் தங்களின்ர படையயோட திரியினம். இருந்தும் இன்னும் சனம் குறைந்தபட்ச வசதியளே கிடைகாமல் கஷ்ரப்படுகிறது. கிட்டடியில் ஒரு அலுவலா தெற்குபக்கம் போன நேரம் கன வெள்ளைக்காற ஆமிமார் பெரிய ஒரு கப்பலில இருந்து பொருட்களை இறங்கிக்கொண்டிருந்திச்சினம். கப்பலில பெரீசா 'சுனாமி நிவாரணப் பொருட்கள்" எண்டு போட்டிருந்திச்சு. அப்பாடா ஒருமாதிரி எங்கட சனத்தின்ர துயரமெல்லாம் தீரப்போகுது. எதுக்கும் அவையளுக்கு நாலு வார்தை நன்றி சொல்லுவோம் எண்டு கிட்டப்போனன். இதென்னடா கரைச்சல்! மல்லர் மாதிரி இரண்டு இரண்டு ஆமியளாக ஒரு சின்ன டப்பாவை நாலு கையாலையும் கவனமாய் இறுக்கிப்பிடிச்சு இறக்கிக்கொண்டிருந்திச்சினம்.
அதென்ன அப்பிடிக் கனமான டப்பா எண்டு பார்த்தால் 'சண்-கிறீம்" எண்ட திலை கிடந்திச்சு. விசயம் ஒண்டும் விளங்காமல் உதென்ன எண்டு அவையளையே கேட்டன். 'றிலீஃப் கொன்வோய் (நிவாரணப்பொருட்கள்) எண்டு பதில் வந்திச்சு. 'நிவாரணத்துக்கு ஏன் சன்-கிறீமைக் கொண்டு வாறீயள்? ஏதாவது அவசரமா, அவசியமாய் தேவைப்படுறதைக் கொண்டு வந்திருக்கலாமெல்லே! 'நோ.. யூ ஆர் றோங்க் மிஸ்ரர். வீடில்லாமல் மக்கள் வெளியாலை கனநேரம் வெய்யிலுக்கிள்ளை நிண்டால், அவையளுக்கு தோல்வருத்தம் வந்திடும். நீர் லோக்கல் பியூப்பிள்ளை ஒண்டு. உமக்கிது விளங்காது" 'என்ர கடவுளே! உங்கட வெள்ளைத் தோலுக்குத்தான் பாதுகாப்புக்கு சன்-கிறீம் பூசிப்போட்டு வெளியாலை திரியோணும். எங்களின்ர தோல் வெளியிலுக்குப் பழக்கப்பட்டிட்டிது. அது சரி ஆறடிக்கு மேலாலை வளர்நத்திருக்கிறீங்கள். ஒரு கிறீம் டப்பாவுக்கு இரண்டு பேர்கணக்கில 1500 பேர் நிக்கிறீயள். நான் வயசு போன கிழவனே உதைமாதிரி 50 டப்பா ஒரே தடவையில சுமப்பன். நீங்கள் உதென்ன கப்பல் பார்த்தவன் மாதிரி காரியம் செய்யிறீயள் எல்லாரும்? நான் சொன்னதை முன்னுக்கு கேட்டுக்கொண்டு நிண்ட ஒரு அதிகாரி தரத்தவர் சந்தோசமடைஞ்சமுகத்தோட வந்து என்ர கையைக் குலுக்கினார். 'ஓ யூ லோக்கல் ஓல்ட மான். நீங்க ரொம்ப புட்டிசாலி. இண்டையில இருந்து சிறிலாங்காவுக்கான எங்கட legal adviser (சட்ட ஆலோசகர்) நீங்க தான்! மாதம் ஆயிரம் டொலர் சம்பளம்! 'இஞ்சை தேவைப்படாத கிறீம் டப்பாவைத் தூக்கிறதுக்கு 2 பேர் தேவையில்லை எண்டு சொல்ல புட்டிசாலியா இருக்கத்தேவையில்லை. உதெல்லாம் எனக்கு விளங்கும். சோப்புப்போட்டு ஆக்களை எடுக்கிற உந்த வேலையை வேறஇடத்தில வைச்சுக் கொள்ளுங்கோ! எண்டு சொன்னபடியே அந்த இடத்தை விட்டுக் கழண்டிட்டன்.
உதைச்சொல்லத்தான் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிது. இந்தியாவின்ர பெரிய நகரங்களிலை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின் படி 62 வீதமான சனத்துக்கு ஜோர்ஜ் புஷ் அரசை நல்லாப் பிடிச்சிருக்காம். ஏதோ நல்லா உதவியள் கிடைச்சிருக்கு எண்டு நினைப்பியள். ஓமோம் எம்.ரி.வியிலை பாட்டுக்கள், அது இதெண்டு எக்கச்சக்கம் நற்பணியளாம். போனகிழமை இந்தியா முழுக்க 25எப்.எம் வானொலியளை அமெரிக்கா தொடங்கிறதுக்கு ஆரம்பகட்டமா அலுவல் குடுக்க வெளிக்கிட்டிருக்கு. பாருங்கோ காலத்தை! இவையள் ஊரோட உளவாடும் கும்பலுக்கு உதவ, வேற ஆரோ இவையளின்ர நடுவீட்டுக்குள்ளையே.. ம்...ம்... 62வீதம் எண்டால் சும்மாவே? காங்கிரஸ் இல்லாட்டி பாரதீய ஜனதாவுக்குக் கூட உவ்வளவு கிடையாது. என்னவோ நீதி,நியாயத்தை மதிச்சு மற்றவையளையும் மூச்சுவிட அனுமதிச்சு எல்லாரும் வாழத்தலைப்பட்டா எவ்வளவு நல்லது! இன்னுமொரு விசயம் பிள்ளையள். ஈராக்கிலையும், ஆப்கானிஸ்தானிலையும் இருக்கிற அமெரிக்கப்படைகளுக்கு ஒரு வருசத்துக்கு ஒதுக்கியிருக்கின்ற பாதுகாப்புச்செலவு 100 பில்லியன் டொலர் (100 000 000 000 டொலர்! என்ற கடவுளே. ஏ9 என்ன ஆசியாவைச் சுத்தியே சீனப் பெருஞ்சுவர் மாதிரி குந்து கட்டலாம்!) உவ்வளவோட, ஆயிரம் பேருக்கு மேலை தங்கட ஆக்களையும் இழந்தும் நினைச்சதும் நடக்கேல்லை! நல்ல பேரும் கிடைக்கேல்லை! அந்த செலவோட பார்த்தால் இலங்கைக்கு ஓமெண்ட தொதை 200இல ஒரு பங்குதான். அதிலையும் வந்து சேர்றது எவ்வளவெண்டு வந்தாப்பிறகுதான் தெரியும்.
உங்களில ஆருக்காவது என்ரை பக்கத்துவீட்டு பொன்னர்கிழவனைத் தெரியுமே? இவரே கிழவர்.. இவர் போய் அவரை கிழவர் எண்டிறெண்டு நினைக்கிறீயளாக்கும். இதென்ன பெரிய வயசு! எல்லாம் மனம் தான் பாருங்கோ! ஆ.. அவர் பொன்னரோ போனகிழமை நல்லாய்த்தான் வாக்குவாதப்பட்டிட்டன். உந்த அழிவுகளைப் பற்சி கதைச்சுக்கொண்டிருக்கேக்கிள்ளை தான் நான் சொன்ன 'பத்து வருசத்துக்கு முன்னால உலகமெல்லாம் இருந்த பாலைக்குடிச்சு முடிச்ச பிள்ளையார். இந்த சுனாமி அலையளை நடு வழியிலை வைச்சுக் குடிச்சு குடிச்சு உதவியிருக்கலாம்" எண்டு. 'இப்பிடி நாங்கள் கஷ்ரப்படடோணும் எண்டு, எங்கட தலைவிதி இருந்தால் அதை ஆராலைதான் மாத்தலாம்? எண்டு பெரிய ஒரு பெருமூச்சோடை சொன்னார். 'கண்டறியாத மண்ணாங்கட்டி தலைவிதி! அப்பிடி ஏதாவது அபூர்வம் நடந்து, உது மட்டும் தடுக்கப்பட்டிருக்கோணும்... என்ர ஆசையைச் சொன்னன். 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை! நடப்பதையே நினைத்துவிட்டால்,.. அவற்றை பாட்டைக்கேட்க எனக்குப் பத்திக்கொண்டு வந்திச்சு. எட கைகாவலுக்கு உதவாத கண்டறியாத பாட்டுக்களைப் பாடிக் கொண்டு, மனுசற்றை மண்டையெல்லே வெடிக்கிது. 'எட 74 வயசில நான் இன்னும் உயிரோடை இருக்கிறன். எத்தினை வாழவேண்டியதுகள் எங்களை விட்டிட்டுப்போட்டுதுகள்" 'ஏரம்பர்! உம்மட ERAMPU எழுத்துகளின்ர கூட்டுக்கு 26ஆம் திகதி அண்டைக்கு கண்டமில்லை". 'சும்மா கண்டமும், சமுத்திரமும்! விசர்க்கதை! அந்த டிச.26 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் பகுதியை நானும் கிட்டடியிலை திரும்பி எடுத்துப்பார்த்தனான். ஏதாவது கிடக்கோ எண்டறிய, ஒரு ராசிக்குக் கூட அப்பிடி ஒண்டுமே சொல்லப்படலேல்லை. எல்லாம் முடிஞ்சாப்பிறகு குரு மேடும், கும்பமேடும் கையிலை கிடக்கு, கண்டுபிடிக்கலாம் எல்லாத்தையும் எண்டு கதை அளக்கினம் எங்களுக்கு. உதிலை ஒண்டுமே இல்லை எண்டு நான் சொல்லேல்லை. ஆனாலும், நம்பிற அளவுக்கு ஒண்டுமே இல்லை எண்டிறதைத்தான் சொல்லவாறன். இன்றும் சிலர் பழைய நேரத்தை அமுல்படுத்தினால் பிரச்சினை தீருமெண்டு சொல்லினம். அகலாங்கு, நெட்டாங்கு எல்லாம் மனுசரால ஆக்கப்பட்ட கற்பனைக்கோடுகள் எண்டிறது இந்த அறுந்த தேவாங்குகளுக்கு ஏன்தான் விளங்குதில்லையோ? நான் தமிழன், அப்பிடியிருக்க என்ர பேரை இங்கிலிஷிலை எழுதி, என்ரை தலைவிதியை என்னண்டு சொல்லிறது? அதுவும் தமிழ்ப்பெயரை ஆங்கிலத்திலை எழுதேக்கிள்ளை கிட்டத்தட்டத்தான் அது சரியாய் இருக்கும். இன்னுமொண்ருங்கோ! கனகராசா எண்டால் அதை கனGAறாஜா எண்டெல்லே எழுதினம். இல்லாட்டி சுட்டெண் பிழைக்கிதெண்டிட்டு பேரை silent letters ஜப்போட்டு சரிகட்டிறதே? அண்டைக்கு தெரிஞ்ச தம்பி ஓராள் தான் கட்டப்போற வீட்டுப் பிளானை என்னட்டைத் தந்து, ஜடியா கேட்டார். நான் பார்த்து அங்கையிஞ்ச கொஞ்சம் நீள அகலங்களை கூட்டிக்குறைச்சுப்போட்டன். அதுக்கு அவர் சொன்னார், அளவுகள் ஒற்றை இலக்கத்திலை இருக்கோணும் எண்டொரு சாத்திரம் இருக்காம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய எங்கட மூத்த குடியளிடை உப்பிடியும் ஒரு சாத்திரம் இருக்காம். அவருக்குச் சொன்னன். 'அடியிலை ஒன்றை இலக்கங்களோ இருக்கிற இந்த அளவுகளை எல்லாம் அங்குலமாய் போட்டால் இரண்டை இலக்கமாத்தானே கட்டாயம்வரும். காலா காலா இருந்து வாற வழக்கம் எண்டால் கல், காதம் எண்ட அளவுகளையெல்லோ கடைப்பிடிக்கோணும். அடியும், அங்குலமும் வெள்ளைக்காரன் காட்டிக்கொடுத்ததெல்லே!
என்னவோங்கோ! அவனவன் அங்கையிஞ்சை அதையிதைக் கண்டு பிடிச்சு ஈ-மெயில், இலையான்-மெயில் எண்டெல்லாம் அறிமுகப்படுத்தி, முன்னேறிக்கொண்டிருக்க நாங்கள் சும்மா இருந்துகொண்டு விஞ்ஞானத்துக்குப் பதிலா விண்ணாளம் கதைச்சுக் காலம் போக்கிக்கொண்டிருக்கிறோம். அவங்கள் மணிக்கூட்டைக் கண்டுபிடிச்சு, நேரா நேரத்துக்குத் தன்ர கடமையளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்களோ அவன்ரை கண்டுபிடிப்பை வைச்சு, இருக்கிற 24 மணித்தியாலத்தில நித்திரை கழியமிச்சமிருக்கிற நேரம் எல்லாத்தையும் நவக்கிரங்களுக்குப் பிரிச்சுக்குடுத்துப்போட்டு ஆவெண்டு கொண்டு இருக்கிறம். நீங்கள் நினைக்கக்கூடாது. இவர் ஆகலும் ஓவராப் போறாரெண்டு இப்பத்தைய நிலைமை என்னை அப்பிடிச் சொல்லிற அளவுக்குக் கொண்டு வந்துவிட்டது. அவங்கள் சந்திரனுக்குப் போனாங்கள், செவ்வாய்க்கு 'பாத்ஃபைன்டர்" அனுப்பினாங்கள் இன்னும் ஸ்பிறிற், ஹசினி எண்டு ஏதேதோ பேரிலையெல்லாம் அனுப்பித்தொலைக்கிறாங்கள் பூமிக்கு வெளியாலையும் மனுசர் வாழக்கூடின மாதிரி கிரகங்கள் இருக்கோ எண்டு அண்ட வெளியிலை உலாத்திக் கொண்டிக்கிறார்கள். நாங்கள் இஞ்சை '1இல் செவ்வாய்க்குற்றம் உள்ள அவாவுக்கு, 2இல குற்றம் இருக்கிற அவரைத் தேடி அலைச்சுகொண்டிருக்கிறம். அவனாரோ கண்டுபிடிச்ச மணிக்கூட்டை வைச்சுக்குறிப்பெழுதின ஒண்டுதான் நாங்கள் கண்ட மிச்சம். நல்லகாரியம் ஒண்டுமே குறிப்பிட்ட நேரத்துக்கு நடக்கிறறேல்லை. சொன்ன நேரத்துக்கு ஒரு இழவும் நடக்கிறேல்லை. அப்படியிருக்க பிறந்தநேரம் மட்டும் சரியாக் குறிச்சிருப்பினம் எண்டு எப்பிடி எதிர்கார்கிறது. சரி அப்பிடித்தான் caiso high quality மணிக்கூட்டைக் துணைக்கு எடுத்துக்கொண்டாலும், கால் வெளியே வந்தாப்பிறகோ, தலை வந்தாப்பிறகோ எந்த நேரம் பிறந்த நேரம் எண்டு குறிக்கிறவை? அதிலை ஏதாவது பொது வழக்கம் தானும் இருக்கிதோ? எனக்குத் தெரிஞ்ச ஒருசிலர் பள்ளிக்கூடத்திலை பதியேக்கிளை தான் சும்மா ஒரு நாலு வயசெண்டு சொல்லி Birth certificate எடுத்தவை. தயவுசெய்து குறை நினைக்கக்கூடாது. ஒரு கேள்வி ஒண்டு கேக்கிறன். முந்தி அந்நாளிலை என்ரை காலத்தில பிரபல்யமா இருந்த மூக்கம்மா, முனியம்மா எண்ட நடிகையளை உங்களுக்குத் தெரியுமோ? ஆ...சீ மன்னிக்கோணும்! நான் உங்கட காலத்துக்கு வாறன். ஆர்உந்த பேயா சிங்கியோ, சாயாசிங்கியோ! அந்தப்பிள்ளைக்கு செவ்வாய்தோசம், இஞ்சினைக்கிள்ளை வந்து ஆராவது தன்னைக் கட்டுவீங்களோ எண்டு அறிவிக்கிது எண்டு வைப்போம். பருத்தித்துறையில இருந்து காலி வரைக்கும் கண்டி-வீதி ஆம்பிளையளினர கியூவால நிரம்பி வழியுமோ இல்லையோ? ஒழுங்கா கியூவில நிக்கினமோ அல்லாட்டி கலவரம் வருகிறதோ எண்டிற அளவுக்கு நிலைமை மாறிவிடும். எட இவ்வளவு சொல்லிற ஏன்ரபுத்தியே அந்தநேரம் எப்பிடிப்போகுதோ தெரியாது. சும்மா பல்லைக்காட்டிறதை விட்டிட்டு, சொல்லவாற விசயத்தைப் பிடியுங்கோ! இயல்பாகவே சந்தர்ப்பங்களுக்கு ஏற்றமாதிரி சாத்திர, சம்பிரதாயங்களை ஏற்கனவே நாங்கள் மாத்தி வைச்சிருக்கிறம். அந்த மாற்றமும், வழக்கங்களும் எங்கட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கோணுமே தவிர, ஆக்கினையளா இல்லை.
உப்பிடித்தான் கதைபடேக்கிள்ளை எங்கட முன்வீட்டு செல்வம் ஆச்சி சொல்லுவா, 'அது அது அறிஞ்சவை தெரிஞ்சவை தான் கனகாலமா ஆராய்ச்சியள் செய்து, எங்கட முன்னேற்றத்துக்காகத்தான் ஏடுகளில்லை எழுதி வைச்சிட்டுப் போனவை. அதுக்கு ஒருசிலர் பிழையா விளக்கம் குடுத்தாப்போல எல்லாம் பிழையெண்டு நாங்கள் அவசரப்பட்டு சொல்லக்கூடாது' எண்டு. எங்கட முன்னேற்றத்துக்காகத்தான் விட்டிட்டுப் போனவை எண்டால்.... அந்த தீர்க்கமான உண்மையளை வைச்சு நாங்கள் முன்னேறியெல்லோ இருக்கோணும். உலகத்திலேயே உருப்படமாக் கிடக்கிற இரண்டு நாடுகளும் (இலங்கையும்,இந்தியாவும்) பெரிய சாத்திரக்கொம்புகள் இருக்கின்ற நாடுகள்தானே! ஆனாலும் பாருங்கோ! செல்வம் ஆச்சியைப் போலத்தான் நானும் கிட்டத்தட்ட அதைத்தான் சொல்லிறன். எல்லாமே எல்லாக் காலத்துக்கும் அறிவுச்சியாக நிலைபேற்றோட இருக்காது. இருக்கிற அறிவுநிலையிலை இருந்து மேலதிகமாச் சிந்தித்துப் பெறுகிறதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவு.
நிகழ்வுகளுக்கான மூல காரியங்களை அறிவியல் ரீதியாக, புலன்களால் அறியக்கூடியதாக விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும்.
அதை விட்டிட்டு நாலு பேர் சொல்லினம் எண்டிறதுக்காக தலையாட்டக்கூடாது. 1609ஆம் ஆண்டு தன்ர தொலைநோக்கியை வைச்சு கலிலியோ பூமியின்ர வடிவம், சூரியத்தொகுதியைப் பற்றியெல்லாம் சொல்லிப்போட்டார். அதுக்குப்பிறகும் அவர். புவியியல் தொடர்பாகச் சொன்ன கருத்துக்கள் பிடிக்காமல் வத்திக்கானில இருந்த பாப்பரசரின்ரை அதிகாரம் அவரை சிறையில தள்ளிச்சிது. அதெல்லாம் நடந்து 392 வருசங்களுக்குப் பிறகும் வத்திக்கான் தங்கட பிழையை ஒத்துக்கொண்டிருச்சு. கொப்பேணிகஸீம், கலிலியோவும் பூமி உருண்டை எண்டு சொல்லி கிட்டத்தட்ட எல்லாருமே நம்பினாப்பிறகு, 1960-1970களில தமிழ்நாட்டில இருக்கிற புத்திஜீவிகள் கூட்டம் 'அகத்தியர்" படம் எடுத்திச்சினம். அதிலை இமயமலையில நடந்த சிவபெருமானின்ரை திருமண வைபவத்துக்கு பூமியிலை உள்ள எல்லாச்சனமும் போனதாலை பூமி 'படார்" எண்டு ஒரு பக்கம் சரிஞ்சிடும். விசயம் பிசகப்போகுது, சனம் பயப்பிடுகிதெண்டு சிவபெருமான் பார்த்திட்டு, அகத்தியரை அடுத்த பக்கத்துக்கு போய் பலன்ஸ் பண்ணச் சொல்லிக் கேட்பார். அந்தாளும் பாவம்! முக்கியமான அலுவல், அதுவும் கடவுளே உதவி கேட்கிறாரெண்டிட்டு, அந்த மனுசனும் பாவம் உம்மெண்டு மூஞ்சையை நீட்டிக் கொண்டு சோகப்பாட்டொண்டு பாடிக்கொண்டு, மற்றப்பக்கமாக நடந்து போவர். பாட்டோ அகத்தியர் போகப்போக தட்டை உலகம் எப்படி பலன்ஸ் ஆகுதெண்டு அந்தப்படத்திலை அவையள் animate பண்ணி படம் காட்டுவினம்.
பார்த்தீங்களே, என்னவிசயம் எண்டாலும் ஆதாரபூர்வமா தெரிஞ்சாத்தான் உண்மையெண்டு ஏற்றுக் கொள்ளலாம். அதைவிட்டிட்டு கொஞ்சம் அசந்தாலும், எங்கட காதிலையே பூச்சுத்தி பேப்பட்டம் கட்டிப்போடுவினம். நீங்கள் சிலநேரம் நினைப்பியள், இந்த மனுசன் உதைவிட திரும்ப வராமலே இருந்திருக்கலாம். எப்ப பார்த்தாலும் சும்மா குறை கண்டு பிடிச்சுக்கொண்டு, நொட்டை கதைச்சபடி தானெண்டு! என்ர குஞ்சுகள்! உங்களைப்பற்றி நான் கதைக்காமல், கவலைப்படாமல் வேறஆர்? நீங்களே சொல்லுங்கோ பார்ப்பம். அதுக்கும் நான் எங்கட எல்லாற்றையும் நன்மைக்காகத்தானே சொல்லிறன். என்னிலையும் உங்களுக்குப் பிடிக்காத விசயங்களை, எனக்கு நீங்கள் தாரளமா எழுதலாம். அப்ப நான் வாறன் என்ன! பேந்து சந்திப்பம் (சும்மா என்னைத் திட்டிக்கொண்டு பத்திரிகைப் பக்கத்தைப் புரட்டவேண்டாம்)
ஈழநாதம்
|
|
|
|