![]() |
|
கோபிகா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கோபிகா (/showthread.php?tid=5054) |
கோபிகா - Mathan - 02-24-2005 திருமணம் எப்போது? கோபிகா பேட்டி <img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/gopika1d-350.jpg' border='0' alt='user posted image'> எப்போது கல்யாணம் என்று கேட்டால் இப்போதைக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை என்கிறார் கோபிகா. ஆட்டோகிராப் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கோபிகா தற்போது சிம்புவுடன் தொட்டி ஜெயா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த முதல் மலையாளப் படம் ஒரு தோல்விப் படம் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் இந்தப் படத்தைப் பார்த்துத்தான் கோபிகாவுக்கு சேரன் ஆட்டோகிராப்பில் வாய்ப்பு கொடுத்தார். இந்தப்படத்தின் அமோக வெற்றி கோபிகாவுக்கு தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அவருடன் ஒரு மினி பேட்டி.... எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். அப்பா ஆன்டோ, அம்மா டெஸ்ஸி, தங்கை க்ளினி, பாட்டி ஏலியாஸ் என ஒரு சிறிய குடும்பம். வீட்டில் நான் செல்லப்பிள்ளை. சினிமாவுக்கு வருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் எப்படியோ நடிக்க வந்துவிட்டேன். சினிமாவில் சில படங்கள் ஓடிவிட்டால் போதும், உடனே அடுத்த கேள்வி திருமணம் எப்போது என்பது தான். எனக்கு இப்போதைக்கு திருமண ஆசை இல்லை. ஆனாலும் இரண்டு வருடங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதை நிறுத்தி விடுவேன். நிச்சயமாக எனது திருமணம் காதல் திருமணமாக இருக்காது. எனது பெற்றோரின் விருப்பப்படித்தான் நடைபெறும். ஆட்டோகிராப் வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்றால் அதை மறுக்க முடியாது. என்னுடைய முதல் படமான ப்ரணயமணித்தூவல் தோல்வியடைந்த போதிலும் அந்தப் படத்தைப் பார்த்துத்தான் சேரன் எனக்கு ஆட்டோகிராப்பில் வாய்ப்பு கொடுத்தார். வாழ்க்கையில் பணம், புகழ் மட்டும் இருந்தால் எல்லாம் கிடைத்து விடாது. இவை எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டுப்போய்விடும். ஆனால் வாழ்க்கையை விட்டுவிட்டால் அது நமக்கு திரும்ப கிடைக்காது.(தத்துவம்...?) சமீபத்தில் எனது வீட்டில் நடந்த ஒரு சுவையான சம்பவம்.. தூத்துக்குடியிலிருந்து ஏராளமான ரசிகர்கள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நான் வீட்டில் இல்லை. பாட்டி மட்டுமே இருந்துள்ளார். அவர்கள் எனது பாட்டியிடம், என்ன பாட்டி சவுக்கியமா? என்று கேட்டுள்ளனர். இதைக்கேட்டவுடன் எனது பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் பாட்டி என்றது அவருக்கு பட்டி என்று கேட்டுள்ளது. பட்டி என்றால் மலையாளத்தில் நாய் என்று அர்த்தம். அதன் பிறகு அவர்கள் விளக்கமாக சொன்ன பிறகு தான் பாட்டிக்கு புரிந்தது. தினமும் தமிழ்நாட்டிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் எனது வீட்டிற்கு வருகின்றனர் என்றார். பேட்டியை முடிக்கும்போது, மலையாளப் படங்களில் நடிப்பதை விட தமிழில் நடிப்பதில் ஏராளமான சௌகரியங்கள் உள்ளன என்று கோலிவுட்டுக்கு ஐஸ் வைக்கவும் அவர் தவறவில்லை. தட்ஸ் தமிழ் - KATPUKKARASAN - 02-24-2005 ரொம்ப முக்கியம் - tamilini - 02-24-2005 Quote:தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்-சக்தி fm வாசகம் ஆச்சே.. அது சரி என்ன இப்படி சொல்லீட்டீங்கள்.. இந்திய நடிகைகளின்.. ஊடகம் மதன் ஆச்சே.. கடமையை செய்ய விடுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 02-24-2005 அமைதியா அடக்கமா பேசுறா....நல்லது கோபிக்கு..... :wink: - KATPUKKARASAN - 02-25-2005 மேற்கோள்: Quote:தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்-<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KATPUKKARASAN - 02-25-2005 தமிழ் அக்கா, நல்ல வாசகம் என்றால் யாரும் எடுத்தாளலாம். உ-ம்: உங்கள் வாசகம் கலைஞரிடம் சுட்டது. - Mathan - 02-25-2005 KATPUKKARASAN Wrote:தமிழ் அக்கா, நல்ல வாசகம் என்றால் யாரும் எடுத்தாளலாம். உ-ம்: உங்கள் வாசகம் கலைஞரிடம் சுட்டது. தமிழ் இது தேவையா? பொல்லை கொடுத்து அடி வாங்குகின்றீர்களே? - tamilini - 02-25-2005 என் வாசகம்... யாருடையது என்று தெரியாது யாரோ சொன்னாங்க.. பிடிச்சிருந்திச்சு.. போட்டன்.. நான் கேட்டதிற்கு காரணம்.. சக்தி (fm) க்கு தொடர்புடையவரோ என்று அறியிறதுக்கு தான்.. நீங்கள் வேறை.. - kavithan - 02-25-2005 என்ன கோபிகாவுக்கு அப்பிளிக்கேசன் போடேல்லையோ.. மதன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-25-2005 நான் யாருக்கும் அப்பிளிகேசன் போடவில்லை. ரசிக்கிறதோட சரி. - tamilini - 02-25-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மதன் சொல்லுறார் எல்லாரும் நம்புங்கோ. :wink: - kavithan - 02-25-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->நான் யாருக்கும் அப்பிளிகேசன் போடவில்லை. ரசிக்கிறதோட சரி.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட..சி... நான் கேட்டது அவாக்கு அப்பிளிக்கேசன் போட சொல்லிப் போடேல்லையோ என்று.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுக்கு ஏன் இப்படி பொய் சொல்லுறியள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-25-2005 நான் யாருக்கும் என்று குறிப்பிட்டது நடிகைகளை - வெண்ணிலா - 02-26-2005 tamilini Wrote:Quote:தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்-சக்தி fm வாசகம் ஆச்சே.. அது சரி என்ன இப்படி சொல்லீட்டீங்கள்.. இந்திய நடிகைகளின்.. ஊடகம் மதன் ஆச்சே.. கடமையை செய்ய விடுங்கள்.. <!--emo& எப்படித் தெரியும் அக்கா இது சக்தி FM இன் வாசகம் என்று? - sayanthan - 02-26-2005 சக்தி வானொலி செய்தியறிக்கைக்கு முன்னர் இப்படித்தான் சொல்வார்கள்.. ஒரு வேளை இப்படிக் கருதுகிறார்களோ தெரியவில்லை.. அதாவது.. நாங்கள் எதையும் எப்பிடியும் என்னவெண்டாலும் சொல்லுவம். நீங்கள் தான் சரியோ பிழையோ எண்டு முடிவெடுக்க வேணும்.. சில நேரம் அப்படி இல்லாமலும் இருக்கலாமோ தெரியாது - கறுணா - 02-26-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! ஐயோ :!: இங்கே திரிஸாவிற்குப் பின்னுக்கு நினேகாவும் வந்து கோபிகாவும் வந்தாச்சு உந்த காய்ச்சல் குருவீஸைத்தான் கானேலை :!: பாவத்திற்கு இருக்கிற கொப்புகளிலோ, கம்புகளிலோ உதுகளைப் பார்த்தாப்பிரகு காய்ச்சல் கூடிவிட்டதோ தெரியாது :?: பாவம் முடிச்சாலும் முடிந்துவிடும் :mrgreen: அதுக்கு முன்னுக்கு யாராவது குறுவீசை இங்கே கூட்டிக் கொன்டு வாங்கோவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - KULAKADDAN - 02-26-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-26-2005 என்ன அம்மான் இண்டைக்கு ...ஆறுதலா...வந்திருக்கிறியள் போல............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-07-2005 கோபிகாவின் தாராளம் கோபிகாவும் கோதாவில் இறங்கிவிட்டார். தனது சொந்த ஊரான கேரளத்தில் இருந்தும், மும்பை, ஆந்திராவில் இருந்தும் கிடைக்கிற வண்டியைப் பிடித்து கோடம்பாக்கத்தை நோக்கி செல்லுலாய்ட் கனவுகளுடன் தேவதைகள் திடீர் திடீர் என்று வந்து தொபுகடீர் என லேண்ட் ஆவதைப் பார்த்த கோபிகாவை இன்செக்யூரிட்டி சீண்டிப் பார்த்துவிட்டது. ஆனா.. ஆவன்னா எழுதிய மஞ்சள் சேலையுடன் மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ என்று நம்மை தென்றல் கலந்த பனியுடன் தாலாட்டிய கோபிகா இப்போது 'கபால்' என்று கவர்ச்சி ரூட்டைப் பிடித்து பெட்ரோல் பாம் வீச ஆரம்பித்திருக்கிறார். கனாக் கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துக்கு 'கந்தர்வ இலக்கணம்' சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கோபிகா. நம்ப முடியவில்லையா ஜென்டில்மேன்.. ஒத்தை கண்ணை மூடிக்கொண்டு இந்த ஸ்டில்லை பாருங்கோ.. தமிழில் முதல் படமான ஆட்டோகிராப்புக்குப் பின் தமிழில் நடித்துக் கொண்டே தெலுங்குக்குப் போன இவரை, தங்களது வழக்கமான பாணியில் பிராய்லர் கோழிக்கு மசாலா பூசுவது மாதிரி உரித்துவிட்டார்கள் ஹைதராபாத் சினிமா பார்ட்டிகள். ஒத்துழைப்பு தந்து நடித்தும் கோபிகா நினைத்த மாதிரி அங்கு காலூன்ற முடியவில்லை. போட்டி மிக மிகக் கடுமை. தமிழில் இவர் புக் ஆக இருந்த சுக்ரன் மற்றும் சக்கர ஆகிய படங்கள் கை நழுவிப் போய்விட்டன. இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கணாக் கண்டேன் படத்திலும் சிம்புவுடன் தொட்டி ஜெயாவிலும் மட்டுமே நடித்து வருகிறார். பெரும்பாலும் எல்லா படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கும் (போஸ் தவிர) ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கனாக் கண்டேனில் நடிக்கிறார் கோபிகா. இதில் கோபிகா புக் ஆகும்போது, தாராளம் குறித்து டைரக்டரும் ஏதும் சொலிக் கொள்ளவில்லை. கோபிகாவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால், நயனதாராவின் அலைவீச்சு கோடம்பாக்கத்தை ரொம்பவே சீண்டிப் பார்த்து வரும் நிலையில் சதா போன்றவர்களே ஏராள தாராளத்துக்கு மாறி வருகிறார்கள். இதனால் கோபிகாவின் நிலையிலும் நேற்று இல்லாத மாற்றங்கள். கனாக் கண்டேன் படத்தின் பாடல் காட்சிகளில் ஸ்ரீகாந்துடன் கொஞ்சம் நெருக்கமாகவே நடிக்குமாறு டைரக்டர் சொன்னபோது கோபிகாவிடம் ஆட்டோகிராப் வெட்கம் எல்லாம் இல்லவே இல்லை. இங்க.. பார்ராõõõ.... என்று வடிவேலு போன்றவர்கள் 'இழுத்து' ஆச்சரியப்படும் அளவுக்கு கலக்கிவிட்டார் கோபிகா, கலக்கி. சும்மா இங்கே கடி அங்கே கடி என்றபோது, ஸ்ரீகாந்த் கூச்சத்தில் குதிக்கும் அளவுக்கு பின்னி விட்டார் கோபிகா, பின்னி. பார்த்தார் மச்சப் பார்ட்டினான ஸ்ரீகாந்த். அவரும் போட்டிக்கு பாடலில் தனது திறமையைக் காட்ட, டைரக்டருக்கு ரொம்ப திருப்தி. வண்டலூர் தாண்டி ஒரு கிரானைட் குவாரியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில் ஸ்ரீகாந்த்கோபிகாவின் ரொம்பத்தான் ஜாஸ்தியாம். காலில் செருப்பில்லாமல் ஆடப் பாடி உருண்டதில் முட்களும் கல்லும் குத்தி கோபிகாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் காலில் ரத்தமாம். இந்த முள் குத்தையும் கூட வேஸ்ட் செய்யாமல், முள் பிராண்டிய இடங்களில் கோபிகாவுக்கு ஸ்ரீகாந்த் உதட்டால் ஒத்தடம் தருவது போலவும் காட்சிகளை சுட்டுள்ளார்களாம். படங்களை தட்ஸ் தமிழ் சென்று பார்க்கலாம், - KULAKADDAN - 03-07-2005 அப்ப இனி கோபிகா பக்கமும் அமோகமா.........மழை பொழியுமோ......... |