Yarl Forum
குழந்தைகளுக்கு அல்ல, முதியவர்களுக்கு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: குழந்தைகளுக்கு அல்ல, முதியவர்களுக்கு! (/showthread.php?tid=5049)



குழந்தைகளுக்கு அல்ல, முதியவர்களுக்கு! - Vaanampaadi - 02-24-2005

பேசும் பொம்மைகள் _
குழந்தைகளுக்கு அல்ல, முதியவர்களுக்கு!

ஜப்பான் நாட்டில் உள்ள பொம்மை தயாரிப்பாளர்கள் தனியாக வசிக்கும் முதியவர்களுக்காக பேசும் பொம்மைகளை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்தப் பொம்மைகள் அன்பான ஆறுதலான வார்த்தை களைப் பேசும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்தப் பேசும் பொம்மைகள் ஜப்பானில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து உள்ளன. முதியவர்கள் குழந்தைகளுக்கு பதிலாக பொம்மையை கட்டி அணைத்துக் கொள்கிறார்கள்.

`யுமெல்' என்ற பொம்மை ஒரு சிறுவனைப் போல இருக்கிறது.

1,200 சொற்களைப் பேசக்கூடியது. இன்று (வியாழக்கிழமை) முதல் இது சந்தைக்கு வருகிறது. இதன் விலை 4 ஆயிரம் ரூபாய்.

ஜப்பானில் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், பொம்மை தயாரிப்பாளர்கள் முதியவர் களுக்கு குழந்தை தயாரிப்பதுதான் லாபமானது என்று கருதுகிறார்கள்.

தினதந்தி


- Malalai - 02-24-2005

இது முதியவர்களைப் புறக்கணிக்கும் தொகையும் கூடிவிட்டதை உணர்த்துகிறது...... Cry Cry Cry