| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 560 online users. » 0 Member(s) | 557 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,438
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,255
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| ஓமினி தொலைக்காட்சி வாக்கெடுப்பில் எங்கள் பலத்தை நிரூபியுங்கள |
|
Posted by: kavithan - 02-24-2005, 01:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>கனடாவின் ஓமினி தொலைக்காட்சி நடத்தும் வாக்கெடுப்பில் உங்கள் பதிலை கூறி எங்கள் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள்.
இன்றைய அவர்களின் தலைப்பு
கனடிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கனடாவில் தடைசெய்ய வேண்டுமே..? தடைசெய்யக் கூடாதா என்பதே ஆகும்.
தடை செய்ய வேண்டும் எனப்தற்கு இலக்கம் 1
தடைசெய்ய கூடாது எனபதற்கு இலக்கம் 2
416-2604005
உடனடியாக இவ் தொலை பேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்கள் வாக்கை இலக்கம் 2 ஜ அழுத்தி இடுங்கள்.</b></span>
|
|
|
| தப்பான கணிப்புகள் |
|
Posted by: Mathan - 02-23-2005, 11:37 PM - Forum: புலம்
- Replies (5)
|
 |
தப்பான கணிப்புகள்
ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார். யார் அவர்? எப்படிச் சொன்னார் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடை முக்கியமானதுமானதுதான். அதை நான் மறுக்கவும் இல்லை. புறத்தோற்றம் என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.
அதற்காக காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள், மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது. இப்படியான கணிப்பை சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தொள தொளா ரவுசரும், மொத்தச் சங்கிலியும், காதில் வளையமும் போடுகின்ற இளைஞனையோ இளைஞியையோ நாட்டுப் பற்று இல்லாதவரென்றும், மேலைத்தேயக் கலாச்சாரத்துள் தன்னைத் தொலைத்து விட்டார் என்றும் எடை போட்டு விட முடியாது. இத்தனையும் போட்டுக் கொண்டு நாட்டுப் பற்றோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவை எதுவுமே போடாமல் தாய்நாட்டைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபம் தொலைக்காட்சியில் "அன்பே சிவம்" படம் ஒளி பரப்பானது. அதிலே கூட ஒரு கருத்து வருகிறது. மாதவன், பார்ப்பதற்கு அநாகரீகமாகத் தெரியும் கமலகாசனை தலையிடி பிடிச்ச ஆள் என்ற மாதிரி எண்ணுகிறார். அதே நேரத்தில் ரெயினுக்குள் நல்ல desent ஆக உடை அணிந்து decent ஆகப் பேசத் தெரிந்த ஒருவரிடம் ஏமாந்து போகிறார்.
இதே போலத்தான் புலம்பெயர் இளைஞர்கள் மேலிருக்கும் தப்பான பிரமையும். இந்தப் பிரமை இன்னும் எம்மவரை விட்டுப் போகவில்லை. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எழுபதுகளில் எம்மவர்கள் பெல்பொட்டம் போடவில்லையா. அதற்கும் முன்னர் எம் மூதாதையர் கடுக்கன் போடவில்லையா? வேட்டி, சாரம், குறுக்குக்கட்டு...... என்று வாழ்ந்த சமூகம் இன்று ரவுசர் காற்சட்டை என்று போட்டுக் கொண்டு திரியவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இன்றைய இளைய சமூகத்தை குற்ற முலாம் பூசிய பூதக்கண்ணாடி வைத்து ஏன் பார்க்க வேண்டும்.
காலஓட்டத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. அதே போல வாழும் இடங்களினாலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களை வைத்து புலம்பெயர் இளைஞர் சமூகத்தைக் கணிப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமே.
நன்றி - சந்திரவதனா
|
|
|
| நெதர்லாந்தில் பொலிவுட் ஆஸ்கார் 2005 பரிசளிப்புவிழா? |
|
Posted by: ganesh - 02-23-2005, 09:06 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
நெதர்லாந்தில் பொலிவுட் ஆஸ்கார் 2005 பரிசளிப்புவிழா?
2005ம் வருடத்திற்கான பொலிவுட் ஆஸ்கார் பரிசளிப்பு விழா இம்முறை நெதர்லாந்நதின் தலைநகரம் அம்ஸ்ரடாமில் நடைபெறவுள்ளது இவ்விழாவில்
பங்குகொள்ளுவதற்காக இந்தியாவில் இருந்து நடிகர் நடிகைகள் உட்பட நூற்றுக்கணக்கான திரைப்படக்கலைஞர்கள் நெதர்லாந்திற்கு வரவுள்ளார்கள? இவ்விழா வருகிற ஆனிமாதம் இங்கு நடைபெறவுள்ளது இதற்கான ஆயத்தங்கள் தற்போது இங்குசெய்யப்பட்டுவருகின்றன இவ்விழாவிற்காக 1.5 மில்லியன் ஈரோக்கள் செலவுசெய்யப்படவுள்ளது
மேலதிகவிபரங்கள் விரைவில்?
|
|
|
| ஜேர்மன் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 08:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜேர்மன் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு
புதன்கிழமை 23 பெப்ரவரி 2005 அருள்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கெய்டா மாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவிரும்பிய போதிலும் அதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவும் ஜேர்மன் அமைச்சர் விருப்பம் கொண்டிருந்ததாகவும் இது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான சாதகமான பதில் கிடைக்க வில்லை என்றும் தெரிய வருகின்றது. இதேவேளை ஜேர்மன் அமைச்சர் கெய்டா மாரி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு தாம் விஜயம் செய்யாத போதிலும் விரைவில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசவுள்ளதாக ஜேர்மன் அமைச்சர் கெய்டா மாரி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழச்செல்வன் தலைமையிலான குழுவினர் விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமையினால் ஜேர்மனில் அவரை சந்தித்து பேச ஜேர்மன் அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதர்சனம்
http://www.nitharsanam.com/?art=8971
|
|
|
| தேர்தலுக்கு தயாராகிறார் விஜயகாந்த் |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 07:32 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
27-ந்தேதி சுற்றுப்பயணம் தொடக்கம் - தேர்தலுக்கு தயாராகிறார் விஜயகாந்த் - "புரட்சி கலைஞர்" பெயரில் புதிய நகர்கள் திறக்கிறார்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/23/flash/C1144_Vijayakanth-2.jpg' border='0' alt='user posted image'>
விஜயகாந்த்
சென்னை பிப் 22- நடிகர் விஜயகாந்த் தன் ரசிகர்களை சந்திக்க 27-ந்தேதி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது புதிய நகர்களை திறந்து வைக்கிறார். இது தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றது. நடிகர் சங்க தேர்தல், சுனாமி போன்ற காரணங்களால் தனது அரசியல் பிரவேசம் பற்றி கருத்து சொல்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இப்போது அரசியலில் நுழைவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி உள்ளார். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் தற்போது பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அணி, மாணவர் அணி, மகளிர் அணி. வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, தொண்டர் அணி போன்றவைகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. உறுப்பினரானவர்களுக்கு உடனுக்குடன் விஜயகாந்த் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் விஜயகாந்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ரசிகர் மன்றத்தினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். வருகிற 27-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை விஜயகாந்த் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து புறப்படும் அவருக்கு வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரடி, போரூர், கலசப்பாக்கம், உள்ளிட்ட பல இடங்களில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள கீழ்நாச்சிப்பட்டி ஆறுமுக நகரில் பிரமாண்ட ரசிகர் மன்ற பொதுக்கூட்டம் நடக்கிறது. மன்ற பொதுச்செயலாளர் ராமு.வசந்தன் தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 15 லட்சம் பெறுமான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு 20 ஆயிரம் ரசிகர்களை திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதையடுத்து வருகிற மார்ச் 13-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் இதேபோன்று பிரமாண்ட வரவேற்புகளும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் தலா 150 வீடுகள் கொண்ட புதிய நகரை விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் உருவாக்கி உள்ளனர். இதற்கு -புரட்சி கலைஞர் "விஜயகாந்த் நகர்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த நகரில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஈரோட்டில் நடக்கும் விழாவில் விஜயகாந்த் வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து மார்ச் 30-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு அனைத்து மாட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய விஜயகாந்த் திட்டமி;ட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மன்றத்தின் நிலவரம், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நடவடிக்கைகள் வருகிற சட்டசபை தேர்தலுக்கு விஜயகாந்த்தும் அவரது ரசிகர்களும் இப்போதே தயாராகி வருவதை காட்டுகிறது என்கின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.
தினகரன்
|
|
|
| மீண்டுமொரு ஏமாற்று நாடக அரங்கேற்றமா? |
|
Posted by: Nellaiyan - 02-23-2005, 07:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
புலிகளின் யோசனைக்கு அரசாங்கம் இணக்கம்
இடைக்கால தன்னாட்சி அதிகாரம் குறித்து பேச்சுக்கு தயாரென அரச சமாதான செயலகப் பணிப்பாளர் அறிவிப்பு
விடுதலைப் புலிகள் முன்வைத்திருக்கும் வட, கிழக்குக்கான இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனையை அடிப்படையாக வைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தேசிய சமாதான பேரவை நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்திய போர்நிறுத்த உடன்படிக்கையின் மூன்றாண்டு நிறைவையொட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜயந்த தனபால அரசின் இந்த முடிவை வெளியிட்டார்.
அவர் இங்கு பேசுகையில் கூறியதாவது:-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை ஏற்படுத்திய பின்னரே சமாதானப் பேச்சுகளை தொடர முடியுமென அறிவித்திருந்தது. ஆனால், அதில் சில சிக்கல்கள் காணப்பட்டதால் அதனைச் செய்வதில் அரசு தயக்கம்காட்டி வந்தது.
எனினும், இவ் விடயத்தை மிக ஆழமாக ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க முடிவு செய்திருக்கின்றார்.
இதன் பிரகாரம் முதலில் வடக்கு, கிழக்கு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை அமைக்கப்படும். அதன் பின்னர் இறுதித் தீர்வை நோக்கிய பேச்சுகளை ஆரம்பித்து தொடரப்படும்.
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான நோக்கிலேயே அரசாங்கம் இந்த முடிவு எடுத்துள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடித்த விடயத்தில் அரசு பூரண திருப்தி கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பேணவும் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்த அறிக்கையில்,
வடக்கு, கிழக்கில் இடைக்கால அதிகார சபையொன்றை அமைப்பது குறித்தும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது குறித்தும் விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசு தயாராயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு நேற்று 22 ஆம் திகதியுடன் 3 ஆம் ஆண்டு நிறைவடைவதையொட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தொடர்ந்தும் பாரிய அளவிலான யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் பல பெறுமதிமிக்க உயிர்கள் காக்கப்பட்டு பரவலான அழிவு தடுக்கப்பட்டுள்ளது பற்றி திருப்தியைத் தெரிவிக்கும் அதேவேளை, சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொண்ட போதிலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பெறப்படும் நிரந்தரத் தீர்வொன்றுக்கான சாதகமான சூழல் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதையிட்டு அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
அரசாங்கத்தை பொறுத்தவரை, சொல்லிலும் செயலிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான அதன் உறுதியான ஈடுபாட்டை அரசு வலியுறுத்துகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி தேவைகளை நிறைவு செய்வதற்காக இடைக்கால அதிகார சபையொன்றை அமைப்பது பற்றி புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடாத்தவும் இனப்பிரச்சினைக்கு இறுதியான தீர்வொன்றுக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் தொடர்ந்தும் அது தயாராகவுள்ளது.
சகல இலங்கையரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வதற்கு ஏதுவாக எமது நாட்டிலிருந்து யுத்தத்தின் துன்பத்தையும் அரசியல் வன்செயல்களையும் களைய சம்பந்தப்பட்ட சகலரும் ஒத்துழைப்பை வழங்குவர் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த பூர்த்தியை முன்னிட்டு இலங்கை அரசு தனது வழமையான மேற்குறிப்பிட்ட அறிவித்தல்களை உள்நாட்டிலும், சர்வ தேசத்திலும் தவள விட்டுள்ளது. இவ்வறிவிப்பானது உண்மையிலேயே பேச்சு வார்த்தை மூலம் இலங்கையின் புரையோடிப் போயுள்ள இனப்பிரட்சனையை தீர்ப்பதற்காக, இலங்கை அரசு கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடா? அல்லது ..
1) இன்று சர்வதேசத்தினால் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்குமாறு கொடுக்கப் பட்டுவரும் அழுத்தங்களை சமாளிக்கும் ஓர் ஏமாற்று வித்தையா?
2) சுனாமியின் பின் இலங்கையின் பொருளாதாரம் பல முன்னேற்றங்களைக் கண்டது. ஆனால் மீண்டும் உறுதியளிக்கப்பட்ட இவ்வுதவிகள் வராததனால், ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. இதனால் இவ்வுதவிகளைப் பெறுவதற்காக சர்வதேசத்தை ஏமாற்றும் இன்னொரு நாடகமா?
3) பலத்த யுத்த ஏற்பாடுகளை தொடங்கிய இலங்கையரசிற்கு, அவர்களுடைய எசமானர்கள் இன்னும் சிறிதுகாலம் இழுத்தடித்து புலிகளைப் பலகீனப் படுத்தலாம் எனக்கூறிய அறிவுரைகளின் வெளிப்பாடா?
4) யுத்த நிறுத்தத்தை பேச்சுவார்த்தைகள் எனும் நாடகத்தில் இழுத்தடித்து இன்னும் பல படுகொலைகளைத் தொடருவதற்கோ? பிரதேச வாதங்கள், இனப்பூசல்கள் போன்றவற்றை தென் தமிழீழத்தில் முனைப்பாக்குவதற்காகவோ? ...
.... இந்தப் பேச்சுவார்த்தை நாடகத்தை மீண்டுமொருமுறை அரங்கேற்ற முற்படுகிறது?
|
|
|
| கிளாலியில் படையினர் ஒருவர் சுட்டுக்கொலை |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 06:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
கிளாலியில் படையினர் ஒருவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு படைவீரர் காயமடைந்ததாகவும்
செய்திகள் வெளியாகி உள்ளன.........
இச்சம்பவம் பற்றி புலிகள் தரப்பிலிருந்து எதுவித விபரமும் இல்லை....
Tamil Tigers 'shoot soldier dead' (BBC)
The Sri Lankan government says Tamil Tiger rebels have shot dead a soldier on the third anniversary of a ceasefire between the two sides.
Defence ministry spokesman Daya Ratnayake said the soldier was killed and another injured in the incident at Killali in northern Jaffna district.
There was no immediate comment from the Tamil Tigers.
The ceasefire has been under pressure recently from incidents such as the killing of a senior rebel leader.
Under pressure
Mr Ratnayake said the dead soldier had just finished duty and had gone to investigate a noise when he was shot.
His colleague was injured on investigating the first shooting.
One military source told the AFP news agency the soldier had strayed into a 500-metre section that separated government and rebel-held land.
The Scandinavian-led Sri Lankan Monitoring Mission that oversees the ceasefire has begun an investigation.
Both the army and rebels had been under pressure to observe restraint during the anniversary period.
More than 60,000 people have died since the rebels began their fight for a homeland for minority Tamils.
The biggest recent threat to the ceasefire came with the death of E Kaushalyan, the most senior Tiger killed since it began in February 2002.
The rebels blamed the government for carrying out the killing.
The government denied the accusation and said it was carried out by a rival rebel faction.
On Tuesday, the Tamil Tigers' political wing leader, SP Thamilselvan, accused the government of engaging in a "secret war".
The peace monitors say the recent violence must be stopped.
"Assassinations and killings... have without a doubt poisoned the atmosphere between the parties and led to an unsafe environment creating fear among the general public," Hagrup Haukland, the head of the monitoring mission, said.
BBC
|
|
|
| யானைகள் படம் வரைந்து கின்னஸ் Book ல் இடம்பிடிக்க முயற்சி |
|
Posted by: Vaanampaadi - 02-23-2005, 02:30 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (43)
|
 |
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20050220/capt.sge.mhv28.200205231748.photo00.photo.default-380x278.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/th/afp_lo_1.gif' border='0' alt='user posted image'>
Elephants paint on the canvas during new Guinness record attemp of most expensive paint by elephants at Maesa elephant camp in Chiang Mai province northern Thailand.(AFP/File)
|
|
|
|