![]() |
|
தப்பான கணிப்புகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தப்பான கணிப்புகள் (/showthread.php?tid=5058) |
தப்பான கணிப்புகள் - Mathan - 02-23-2005 தப்பான கணிப்புகள் ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார். யார் அவர்? எப்படிச் சொன்னார் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடை முக்கியமானதுமானதுதான். அதை நான் மறுக்கவும் இல்லை. புறத்தோற்றம் என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. அதற்காக காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள், மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது. இப்படியான கணிப்பை சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொள தொளா ரவுசரும், மொத்தச் சங்கிலியும், காதில் வளையமும் போடுகின்ற இளைஞனையோ இளைஞியையோ நாட்டுப் பற்று இல்லாதவரென்றும், மேலைத்தேயக் கலாச்சாரத்துள் தன்னைத் தொலைத்து விட்டார் என்றும் எடை போட்டு விட முடியாது. இத்தனையும் போட்டுக் கொண்டு நாட்டுப் பற்றோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவை எதுவுமே போடாமல் தாய்நாட்டைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபம் தொலைக்காட்சியில் "அன்பே சிவம்" படம் ஒளி பரப்பானது. அதிலே கூட ஒரு கருத்து வருகிறது. மாதவன், பார்ப்பதற்கு அநாகரீகமாகத் தெரியும் கமலகாசனை தலையிடி பிடிச்ச ஆள் என்ற மாதிரி எண்ணுகிறார். அதே நேரத்தில் ரெயினுக்குள் நல்ல desent ஆக உடை அணிந்து decent ஆகப் பேசத் தெரிந்த ஒருவரிடம் ஏமாந்து போகிறார். இதே போலத்தான் புலம்பெயர் இளைஞர்கள் மேலிருக்கும் தப்பான பிரமையும். இந்தப் பிரமை இன்னும் எம்மவரை விட்டுப் போகவில்லை. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எழுபதுகளில் எம்மவர்கள் பெல்பொட்டம் போடவில்லையா. அதற்கும் முன்னர் எம் மூதாதையர் கடுக்கன் போடவில்லையா? வேட்டி, சாரம், குறுக்குக்கட்டு...... என்று வாழ்ந்த சமூகம் இன்று ரவுசர் காற்சட்டை என்று போட்டுக் கொண்டு திரியவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இன்றைய இளைய சமூகத்தை குற்ற முலாம் பூசிய பூதக்கண்ணாடி வைத்து ஏன் பார்க்க வேண்டும். காலஓட்டத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. அதே போல வாழும் இடங்களினாலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களை வைத்து புலம்பெயர் இளைஞர் சமூகத்தைக் கணிப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமே. நன்றி - சந்திரவதனா - Mathan - 02-24-2005 M.I.A <img src='http://kavithai.yarl.net/archives/mia.jpg' border='0' alt='user posted image'> இந்தப் பெண்ணின் புகைப்படமொன்றுடன் இது எப்படியிருக்கு என்ற குறிப்பையும் கருத்துக்களமொன்றில் பார்த்தேன்.சிறிது சுவாரசியம் தரும் வகையில் இருந்த அந்தக் கருத்தைப் பின் தொடர்ந்து இவரது தனிப்பட்ட இணையத் தளத்திற்குப் போனபோது சுவாரசியம் குறைந்து சலிப்பே ஏற்பட்டது.மேற்கத்தைய கலை வடிவங்களை அப்படியே பின்பற்றும் நம்மவர்களில் ஒருத்தர் என்ற அளவிலான புரிந்துகொள்ளலுடன் அது பற்றி மறந்துவிட்டேன். காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள்,மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது.கொஞ்சநேரம் கேட்ட 'கலாங்' 'கலாங்' பாடலின் மாதிரி மட்டும் நினைவில் நின்றது மீண்டும் ஏதோ ஒரு இணைப்பின் வழி அவருடைய தளத்திற்குப் போனபோது ஆச்சரியமாக இருந்தது அதற்குள் இரண்டாவது இசை வட்டை வெளியிட்டிருந்தார்.கூடவே மெருகூட்டப்பட்டிருந்த அவரது தளத்தில் அவர் வெளிப்படையாகச் சொல்லியிருந்த விடயம் என்னைக் கவர்ந்தது.தான் ஈழத்தவள் என்பதைக் குறிப்பிட்டிருந்ததோடு ஈழத்தில் நடக்கும் இனப்பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.அட புகலிடத்தில் அதுவும் ஆங்கிலத்தில் பாட்டுப்பாடி நடனமாடும் பெண்ணுக்கு தனது தாய்நாடு பற்றி இந்தளவு பிரக்ஞை இருக்கிறதே என்பது ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. இப்போது அப்பால் தமிழில் கி.பி.அரவிந்தன் அவர்களது குறிப்புகளுடன் அவரைப் பற்றிய கட்டுரையை மீண்டும் படித்தப்போது அதுபற்றி எழுதவேண்டுமென்று என்னைத் தூண்டியது அவர் வேறு யாருமல்ல தற்போது இசைநடன உலகில் முத்திரை பதித்து வரும் M.I.A எனப்படும் 'மாயா' என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம். என்னை அதிசயத்தில் ஆழ்த்திய இன்னொரு விடயம் இவர் ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான அருளர் எனப்படும் அருட்பிரகாசத்தின் மகள் என்பதுதான்.இந்த அருளர் தான் லங்காராணி என்னும் நாவலை எழுதியவர். மாயா லண்டனில் பிறந்து பின்னர் தந்தையாருடன் ஈழம் போய் திரும்பவும் லண்டன் வந்து மேற்படிப்பை முடித்திருக்கிறார் தான் நடத்திய ஓவியக் கண்காட்சியில் தாய்நாடான இலங்கையின் வளமான பனையையும் தற்போது நடந்துவரும் போரின் தாக்கத்தையும் காட்சிப்படுத்திருந்தார்.அந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற படங்கள் ரூனர் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன. அவரது இசைவட்டின் முகப்புகளில் கூட ஏதோ ஒருவகையில் ஈழப்போராட்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.தன்னை நேர்காண வரும் பத்திரிகையாளர்களிடம் கூட தனது வாழ்க்கையுடன் பயணிக்கும் ஈழப்போராட்டம் பற்றிக் கூறத் தவறுவதில்லை. மாயா தனது அடுத்த இசை வட்டுக்கு அருளர் எனத் தந்தையின் பெயரைச் சூட்டியுள்ளார்.தந்தையாரின் கடந்தகால அரசியல் செயற்பாட்டிற்காக இந்த இசை வட்டை அர்ப்பணித்துள்ளார். வெளிநாடு போய் அந்த நாட்டுடன் கொஞ்சம் ஒன்றிப்போய் விட்டாலே தமது சுய அடையாளத்தை இழந்துவிடுபவர்கள் மத்தியில் தனது சுய அடையாளத்தை இழந்துவிடாமல் வெளிப்படுத்தி வரும் மாயா பாராட்டுக்கும் கவனிப்புக்கும் உரியவர். நன்றி - ஈழநாதன் - shiyam - 02-24-2005 மதன் நானும்படித்திருக்கிறேன் இரத்தினசபாபதி கி.பி அரவிந்தன் பாலகுமார் ஆகியோருடன் ஆரம்பத்தில் ஈரோசை நிறுவதிலும் plo வுடனான தொடர்புகளை பேணுவதிலும் அருட்பிரகாசமும் ஒருவர் அவரின் உணர்வுகளில் கொஞ்சமாவது மகளிற்கும் இருக்கும்தானே - vasisutha - 02-24-2005 நன்றி மதன்.. முன்பு தந்த கட்டுரையும் படித்திருந்தேன்.. அவரின் இணையத்தள முகவரியை தரமுடியுமா.. போய் பார்க்கலாம் என்றுதான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 02-24-2005 உண்மயாகவே மாயா வாழ்த்தப்பட படவேண்டியவரும் போற்றப்படபடவேண்டியவருமான ஒரு கலைஞ்ஞரே. - Mathan - 02-24-2005 vasisutha Wrote:நன்றி மதன்.. முன்பு தந்த கட்டுரையும் படித்திருந்தேன்.. இதோ http://www.miauk.com/ இங்குதான் இருக்கிறாராம். |