![]() |
|
ஓமினி தொலைக்காட்சி வாக்கெடுப்பில் எங்கள் பலத்தை நிரூபியுங்கள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஓமினி தொலைக்காட்சி வாக்கெடுப்பில் எங்கள் பலத்தை நிரூபியுங்கள (/showthread.php?tid=5057) |
ஓமினி தொலைக்காட்சி வாக்கெடுப்பில் எங்கள் பலத்தை நிரூபியுங்கள - kavithan - 02-24-2005 <b><span style='font-size:25pt;line-height:100%'>கனடாவின் ஓமினி தொலைக்காட்சி நடத்தும் வாக்கெடுப்பில் உங்கள் பதிலை கூறி எங்கள் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள். இன்றைய அவர்களின் தலைப்பு கனடிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கனடாவில் தடைசெய்ய வேண்டுமே..? தடைசெய்யக் கூடாதா என்பதே ஆகும். தடை செய்ய வேண்டும் எனப்தற்கு இலக்கம் 1 தடைசெய்ய கூடாது எனபதற்கு இலக்கம் 2 416-2604005 உடனடியாக இவ் தொலை பேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்கள் வாக்கை இலக்கம் 2 ஜ அழுத்தி இடுங்கள்.</b></span> - Mathan - 02-24-2005 ஏற்கனவே ஒரு வாக்கெடுப்பு நடந்து தடை செய்ய கூடாது என்பதற்கு ஆதரவாக 65 வீதம் மக்கள் வாக்களித்தார்கள் என்று படித்தேனே கவிதன்? அது வேறு இது வேறா? :? - Mathuran - 02-24-2005 தகவலுக்கு நன்றி கவிதன் - kavithan - 02-24-2005 ஆம் அது நடந்தது .. இது இன்று அவர்கள் வைத்திருக்கும் விடையம்... இது வேறு.. இதன் முடிவு நாளை வெளிவரும்... இன்று மட்டும் தான் இந்த கருத்துக் கணிப்பு. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புக்களில் கருத்துக்கணிப்பை நடாத்தும் அந்த வகையில் இன்று எங்கள் ஈழப்போராட்ட நடவடிக்கைகளை கனடாவில் தடைசெய்ய வேண்டுமா வேண்டாமா என வினா எழுப்பி மக்களிடம் விடைகேட்கிறார்கள்.. இது அனைத்து இன மக்களும் கலந்து கொள்ளும் நேர்மையான வாக்கெடுப்பு BBC போல் போலியல்ல.. என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். சென்ற முறை எம் மக்களே புரியாமல் 1/2 என மாறி அழுத்தி தான் 68% வெற்றி பெற்றோம் .. எனவே இந்த முறை 90% க்கு மேலாக ஆதரவான வாக்கு பெற வேண்டுமானால் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும். - Mathan - 02-24-2005 நல்லது கவிதன் வாக்களிப்போம். தொலைபேசி தவிர வேறு வழியில் வாக்களிக்க முடியுமா? ஏன் BBC வாக்களிப்பு போலி என்று சொன்னீர்கள்? - kavithan - 02-24-2005 ஆம் நான் பல நாட்களாக கவனித்து வருகிறேன் அதில் ஈழத்தமிழர் பற்றி எதனை இட்டாலும் பலமடங்கு வித்தியாசத்தில் வாக்கு அவர்களுக்கு எதிராகவே வருகிறது. எப்படி..? கணனி மற்றும் இணையம் பாவிக்கும் மக்களில் தமிழர்களோ சிங்களவர்களோ அதிகம்.... அதைவிட மற்ற இனத்தவர்கள் எல்லாம் அவ்வளவு வேகமாக எதிராக வாக்களிப்பார்கள் என நினைக்கிறீர்கள்..? BBC தான் நடாத்துவதும் அதற்கு எதிராகா அதிக வாக்குகளைப்போடுவதும்.. இனிமேலாவது கவனித்து பாருங்கள்.. அல்லது அனுபவித்தவர்களை கேட்டுப்பாருங்கள்.. - Mathan - 02-24-2005 ம் நானும் வாக்களித்திருக்கின்றேன் அப்படி உணரவில்லை இனி கவனித்து பார்க்கின்றேன். அவர்களின் இணைய மூல வாக்களிப்பில் குக்கீசை அழித்து மீண்டும் மீண்டும் வாக்களிக்க முடியும் :wink: - Mathuran - 02-24-2005 கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன். - vasisutha - 02-24-2005 தகவலுக்கு நன்றி கவிதன். - Mathan - 02-24-2005 Mathuran Wrote:கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன். நான் குறிப்பிட்டது பிபிசி தமிழோசையை அல்ல. இணைய மற்றும் தொலைகாட்சி மூலம் வரும் செய்திகளையே. இணைய மூலம் தமிழோசை கேட்க முயற்சிக்கும் போது அடிக்கடி தடைப்படுகின்றது. - Mathuran - 02-24-2005 Mathan Wrote:மதன் பீ.பீ.சீ நிறுவனம் என்றால் எல்லாம் தான். பீ.பீ.சீ தமிழோசையும்தான், பீ.பீ.சீ சிங்கள சேவையும்தான், தொலைக்காட்சியும்தான், இணயமும்தான். எல்லாம் ஒரே நிறுவனம்தானே. என்ன பீ.பீ.சீ தமிழோசை தமிழில் வருவதால் அவர்களின் அப்பட்டமான முகமூடியை தாண்டிய கொடூரமுகத்தினை தமிழ் மக்களில் பலர் கண்டுகொண்டுள்ளார்கள். எதேச்சதிகாரமான முறையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பது புத்திசாலிதனமானதன்று. ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி ஏப்பம் விடும் பணக்காறனிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனம் என்பது நமக்கும் தெரியும். அதை பீ.பீ.சீ நமக்கு சொல்லிதான் தெரியவேண்டும் என்பதல்ல.Mathuran Wrote:கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன். - வியாசன் - 02-24-2005 கவிதன் கனடியமக்கள்தான் வாக்களிக்கமுடியுமா அல்லது அனைத்து நாட்டு மக்களும் வாக்களிக்கமுடியுமா? தகவலுக்கு நன்றி - hari - 02-24-2005 இங்கு சென்று http://www.voiceglo.com/ இணைய தொலைபேசியை தரவிறக்கம் செய்து இலவசமாக வாக்களியுங்கள் (30 நிமிடம் இலவசம்) இந்த வாக்களிப்புக்கு நீங்கள் கதைக்கவேண்டியதில்லை என்பதால் உங்கள் கணனியில் ஒலிபெருக்கி மட்டும் இருந்தால் போதுமானது! - hari - 02-24-2005 viyasan Wrote:கவிதன் கனடியமக்கள்தான் வாக்களிக்கமுடியுமா அல்லது அனைத்து நாட்டு மக்களும் வாக்களிக்கமுடியுமா?யாரும் வாக்களிக்கலாம்! - KATPUKKARASAN - 02-24-2005 பெரும்பாலான வாக்கெடுப்புக்கள் அந்த ஊடகம் சார்ந்த சாதகத்தன்மையெ கொண்டிருக்கும்.பீ பீ சி சிங்கள சேவைப் பக்கம் பார்க்க, அவர்களின் எண்ணம் சார்ந்த முடிவே அதிக வாக்குகளாக காட்டப்பட்டுள்ளது. - seelan - 02-24-2005 தகவலுக்கு நன்றி கவிதன். |