| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 495 online users. » 0 Member(s) | 492 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,438
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,551
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| காதலியைகழட்டி விட வழி சொல்லும் இணையதளம் |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 09:10 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
காதலியைகழட்டி விட வழி சொல்லும் இணையதளம்
காதலியை ஏற்படுத்த மட்டும் அல்ல கழட்டி விட வழி சொல்லும் புதிய இணையதளம் ஹாலந்து நாட்டில் செயல்பட்டு வருகிறது.
காதலன் அல்லது காதலியை பிடிக்கவில்லையா? கழட்டி விட வழிசொல்கிறது புதிய இணைய தளம். ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்த இணையதளம் கடந்த திங்கள் கிழமை தொடங்கப்பட்டது. அதற்குள் 2 லட்சம் பேர் இந்த இணைய தளத்தை பார்த்துள்ளார்கள் என்றால் இதற்குள்ள வரவேற்பை நாம் புரிந்து கொள்ளலாம். குழந்தை வேண்டும் என்று சொன்னால் காதலன் ஒடிவிடுவான் எனவும், காதலிக்கு பெரிய அளவில் உள்ளாடை வாங்கிக் கொடுத்தால் அவளது கோபத்தை எளிதில் சம்பாதிக்க முடியும் என ஐடியா கொடுக்கிறது இந்த தளம். அத்துடன் இகழ்ந்து கவிதை எழுத குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. உறவு பிடிக்கவில்லை என கரராக எழுதப்பட்ட மாதிரி கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இணைய தளத்திலிருந்து இறக்கி கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தினகரன்
|
|
|
| செல்போனில் இனி காற்று உதவியுடன் `சார்ஜ்' ஏற்றலாம் |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 09:10 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
செல்போனில் இனி காற்று உதவியுடன் `சார்ஜ்' ஏற்றலாம்: டெல்லி மாணவர்கள் கண்டு பிடிப்பு
செல்போனில் `சார்ஜ்' ஏற்ற இனி மின்சாரத்தை தேடி அலைய வேண்டியது இல்லை. காற்று மூலம் மின்சாரம் தயாரித்து சார்ஜ் ஏற்றும் நவீன கருவி ஒன்றை டெல்லியில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கருவி சிறு சக்கரத்தை கொண்டது. காற்று வேகத்தில் இயங்கும் அந்த சக்கரம் 3 முதல் 4 வாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்கும் சக்தி கொண்டது.
இந்த அளவு மின்சாரம் மொபைல் போன்களுக்கு போதுமானதாகும். எனவே சக்கரத்துடன் கூடிய நவீன கருவியை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். மின்சாரம் கிடைக்காத நேரங்களில் அல்லது மின்சாரம் இல்லாத இடங்களில், செல் போன்களுக்கு சார்ஜ் ஏற்ற இந்த கருவி மிக, மிக பயன் உள்ளதாக இருக்கும்.
ரூ. 200 விலை உள்ள இந்த கருவி அளவில் சிறியது. சட்டைப் பைக்குள் அதை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் செல்போனுடன் இணைத்து விட்டால் அது தானாக காற்று மூலம் மின்சாரம் தயாரித்து சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.
Maalaimalar
|
|
|
| போப் ஆண்டவருக்கு தொண்டையில் ஆபரேஷன் |
|
Posted by: Vaanampaadi - 02-25-2005, 09:09 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
போப் ஆண்டவருக்கு தொண்டையில் ஆபரேஷன்
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/25-2-2005/25pope.jpg' border='0' alt='user posted image'>
வாடிகன், பிப். 25-
கத்தோலிக்க மதத் தலைவர் 85 வயதான போப் ஆண்டவர் ஜான்பால் ஏற்கனவே பார்க்சின்சன் நோய் மற்றும் புளு காய்ச்சலால் அவதிப் பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் போப் ஆண்டவர் ரோம் நகரில் உள்ள ஜெமிலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து 10-ந் தேதி அவர் வாடிகன் திரும்பினர். வழக்கமான பிரார்த்தனை கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் செயின் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் பிரார்த்தனை நடத்தி லட்சக்கணக்கானவர்களுக்கு ஆசிவழங்கினார். அப்போது அவருக்கு தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டது. பேச முடியாமல் அவதிப்பட்டார். மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போப் ஆண்டவர் மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் ஜெமிலி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு தொண்டையில் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். `டிராக்கியோ டோமி' என்ற இந்த ஆபரே ஷன் 30 நிமிடத்துக்கும் மேல் நீடித்தது.
இந்த ஆபரேஷன் மூலம் அவரது தொண்டையில் உள்ள வால்வில் ஓட்டை போடப்பட்டது. அதன் மூலம் நுரையீரலுக்கு நேரடியாக ஒரு குழாய் பொருத்தப்பட்டது. இதனால் நுரையீரலுக்கு தாராளமாக சுவாசக்காற்று செல்லும். மூச்சுத்திணறலும் விலகும்.
இந்த ஆபரேஷன் வெற்றி கரமாக நடந்ததாக ஆபரேஷன் செய்த டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. சாதாரண அறையில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் போப் ஆண்டவரின் செய்தி தொடர்பாளர் அவர் வீடு திரும்பியதும் வழக்கமான பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளலாம் என்றாலும் சரளமாக பேச இன்னும் சில நாட்கள் பிடிக்கும்.
ஆபரேஷனுக்கு செல்வதற்கு முன் போப் ஆண்டவர் டாக்டர்களிடம் சில ஜோக்கு களை கூறினார். ஆபரேஷன் தியேட்டர் முன்கூடி நின்றவர்களை பார்த்து கை அசைத்தார்.
ஜெமிலி ஆஸ்பத்திரியில் போப் ஆண்டவர் அனுமதிக் கப்பட்டது கடந்த 27 ஆண்டுகளில் இது 10-வது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
Maalaimalar
|
|
|
| தமிழ்தான் தமிழருக்கு முகவரி! |
|
Posted by: hari - 02-25-2005, 07:04 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (8)
|
 |
<b> தமிழ்தான் தமிழருக்கு முகவரி!</b>
அக்னிப்புத்திரன்
கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு ஏராளமான மின்னஞ்சள்கள் குவிந்து விட்டன. போற்றியும், தூற்றியும் எண்ணற்ற கருத்துக் குவியல்கள்.
அனைவருக்கும் தனித் தனியே பதில் எழுத விருப்பமாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுதுவதை விட ஒட்டு மொத்தமாக எனது கருத்தை மீண்டும் வலியுறுத்தி ஒரு கட்டுரையாகப் படைப்பதே சிறந்தது என்று கருதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
முதலில், பாராட்டியும், ஆதரித்தும் எனது கருத்தை ஏற்றும் மின்னஞ்சல் அனுப்பிய அனைத்து நல்ல தமிழ் உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.
அடுத்ததாக, வன்மையாகவும், மென்மையாகவும், புழுதி வாரித் தூற்றியும் அவதூறாகவும், மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் என் நன்றி. ஏனென்றால் அவர்களுக்காகத்தானே மீண்டும் இந்தக் கட்டுரை.
சரி, இவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளின் பட்டியல் இதோ:
1. திருமாவளவன் ஏன் மேற்கத்திய உடை அணிந்து கொள்கிறார்?
2. "டாக்டர்" இராமதாஸ் அவர்களின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் ஆங்கிலம்தானே? அவரின் மகன் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில்தானே பேசுகிறார்?
3. உங்கள் பெயர் (அடியேன்தான் .. அக்னிப்புத்திரன்) தூயத் தமிழ்ப் பெயரா?
4. தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்களின் வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்களா இல்லை தமிழ் வழியிலாவது படிக்கிறார்களா?
5. நீங்கள் ஏன் யாகூ மெயில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதானே? (உண்மையாக, சத்தியமாக நம்புங்கள்! இப்படியும் ஒருவர் கேட்டு எழுதியிருந்தார்)
6. சினிமா வியாபாரம், அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்? தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?
7. கமல் தனது படங்களுக்கு எப்போதும் தமிழில்தான் பெயர் வைப்பார். இந்த ஒரு முறை மட்டும் ஆங்கிலத்தில் வைத்தால் என்ன தப்பு? (நல்லவேளை, சூரியா படத் தலைப்புக்கான பி.எப்பை யாரும் ஆதரித்து எழுதவில்லை. அந்த வகையல் கொஞ்சம் ஆறுதல்தான்)
8. ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் நம்மால் பேச முடியுமா.?
9. தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரீகம் அடைந்திருக்கின்றான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான் (கவனிக்கவும், வேட்டிக் கூட இல்லை .. தமிழன் கோவணத்துடன் திரிவானாம்)
10. சன் டிவி மற்றும் கே டிவி பெயர்களை மாற்றி தமிழில் பெயர் வைக்க ஏன் வலியுறுத்தவில்லை? (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார். சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை .. என்ன செய்வது?)
ஆக, கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் இவர்களின் உள் மனதின் ஆசை ஒன்றுதான். அது, தமிழ் தழைக்கக் கூடாது, செழிக்கக் கூடாது, வளரக் கூடாது. அதை வாழ விடக் கூடாது. அதற்காகத்தான் இத்தனை உருட்டுப் புரட்டுவாதங்கள்.
இந்த சந்தடிச் சாக்கில் மும்பையில் இருந்து ஒருவர் இந்தியையும் தமிழகத்தில் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். (இவர் மும்பைக்குப் பிழைக்கச் சென்றபோது இந்தி தெரியாமல் மிகவும் திண்டாடினாராம். இவர் மும்பை போய் இந்தி பேச தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்தி கற்றுத் தர வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். (நல்ல காலம் கொரியாவில் இருந்து ஒரு மின்னஞ்சலும் வரவில்லை. இல்லாவிட்டால் கொரியன் மொழியைத் தமிழ்நாட்டில் கற்பிக்க கேட்டு அவர் எழுதியிருப்பார். அந்த வகையில் நாம் தப்பித்தோம்)
தமிழுக்கு வெளிப் பகையை விட உட் பகைதான் எப்போதும் அதிகம். அது இம்முறையும் வெளிப்பட்டு இருக்கிறது. தமிழ்ச் சமூகம் , தன் அடையாளத்தை இழந்து விடக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் அதை மீட்ப்பிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகின்றது.
ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூறவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் பல மொழிகள், இனங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். நாங்கள் கூறுவது எல்லாம் இடம் பொருள் ஏவல் அறிந்து எதை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டுமோ, அதை அங்கு அப்போது பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகின்றோம்.
ஒருவருக்குப் பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவனுக்கு அவன் தாய் மொழி மிகவும் அவசியம். ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தலாம். ஆங்கிலப் படங்கள் எடுத்து ஆங்கில் பெயர் வைக்கட்டும். யார் தடுத்தார்கள் இவர்களை? பாலிவுட் படம் எடுத்து இந்தியில் பெயர் வைக்கட்டும். ஹாலிவுட் படம் எடுத்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கட்டுமே, யார் இவர்களின் கையைப் பிடித்து இழுத்தது?
தமிழ் மொழியில் படத்தைத் தயாரித்து விட்டு ஏன் ஆங்கில மொழியில் பெயர் வைக்க வேண்டும்? தமிழ் தெரிந்தவர்களுக்குத்தானே அப்படம்? இல்லை அமெரிக்கர்களுக்கா அப்படம்? ஒரு வாதத்திற்குக் கேட்கின்றேன், ஆங்கிலப் படம் எடுத்து அதற்குத் தமிழில் பெயர் வைப்பார்களா?
தமிழைப் பயன்படுத்துங்கள் என்று கூறினால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாதே, அது தேவையில்லை என்று பொருள் இல்லை. நாங்கள் யாரும், எந்த மொழிக்கும் விரோதியில்லை. எந்த மொழியும் அவரவர்களுக்குச் சிறப்புடையதுதான். உலகின் பழமையும், பெருமையும் வாய்ந்த செந்தமிழ் மொழி சிதைக்கப்படுவதையும் சீர்குலைக்கப்படுவதையும்தான் தடுக்க முற்படுகின்றோம். சிறப்புடைய தாய் மொழியைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றைப் போற்றாதே என்றுதான் கூறுகின்றோம்.
தமிழில் திரைப்படத்தின் பெயரை வைத்து விட்டால் மட்டும் தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் கூறவில்லை. சக்தி வாய்ந்த அதே சமயம் மக்களின் உள்ளத்தைக் கவரும் ஊடகமாகத் திரைப்படம் விளங்குவதால் அதில் கவனம் செலுத்தப்படுகின்றது. படிப்படியாகத்தான் முயல வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் தலைப்புகளில் முப்பத்தி ஐந்து பெயர்கள் ஆங்கிலப் பெயர்கள்தான் என்று தட்ஸ்தமிழ்.காம் இணையத்ததளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படி எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றால் ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ப் பெயரையே எங்கும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். எனவேதான், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
கமல் அல்லது ஆபாச இயக்குனர் சூரியா என்ற சிலருக்கு மட்டுமல்ல இந்த வேண்டுகோள். அனைவருக்கும் பொதுவாக விடுக்கப்படும் வேண்டுகோள் இது. ஆங்கில மோகம் அதிகரித்து தமிழைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தமிழன் தள்ளப்படுவதைத் தவிர்க்க எடுக்கப்படும் இந்த முயற்சி, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஏற்கனவே ஆங்கிலப் பெயர்கள் வைத்த (சன் தொலைக்காட்சி, கே தொலைக்காட்சி) எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்களைத் தற்போது மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு. அவர்களாகவே முன்வந்து விரும்பி, பெயரை மாற்றினால் மெத்த மகிழ்ச்சியே. எனவேதான், இனிமேலாவது தமிழைப் பயன்படுத்தித் தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகின்றது.
சினிமா ஒரு வியாபாரம் என்கிறீர்கள். எல்லாமே வியாபாரம்தான். அதில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் விளைவால் ஏற்கனவே கலாச்சாரச் சீரழிவு மின்னல் வேகத்தில் பரவுகின்றது. மொழியைச் சிதைத்தால் பண்பாடு சிதையும். ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலைக் கலாச்சாரப் புயல் வேகத் தாக்கத்தாலும், நம்மவர்களின் அடிமை மோகத்தாலும் தமிழைத் தமிழரே புறக்கணிக்கும் நிலை தற்சமயம் தமிழ் மொழிக்குப் பேராபத்தை உருவாக்கியுள்ளது. தமிழுக்கும் தமிழின் பெருமைக்கும் தமிழனிடமே யாசித்து நிற்கும் அவல நிலைக்கு நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ஆங்கில ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. அந்த வசனம் இதுதான்:
வீரபாண்டிய கட்டபொம்மன்: (கடும் கர்ஜனையுடன்) இந் நாட்டில் பிறந்த எவனும் யாருக்கும் எங்களைக் காட்டி கொடுக்க மாட்டான்!
ஜாக்சன் துரை: .. ம்ம்ம் (ஏளனத்துடன், எட்டப்பனை மனதில் நினைத்துக் கொண்டு) அப்படிக் காட்டிக் கொடுப்பவர்கள் ... யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்: (சீறும் எமலையாக) இந் நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான்.
இவ் வசனம் நாட்டிற்கும் பொருந்தும் மொழிக்கும் பொருந்தும். தாய் மொழியாம் தமிழைப் போற்று என்றால் ஏன் இத்தனைக் கோபம், ஆத்திரம், எரிச்சல் எல்லாம் ஒரு சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன? ஏன் விதண்டாவாதம் செய்கின்றீர்கள்?
தமிழ் படித்தால் அடிமையாகத்தான் வாழ வேண்டும். நாகரீகம் தெயாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று மடத்தனத்துடன் தமிழனே பேசும் அறியாமை நிலைக்குத் தமிழன் தள்ளப்பட்டுள்ள இழிநிலையை நினைத்தால் மகாகவி பாரதி கூறுவது போல நெஞ்சு பொறுக்குதில்லையே.
தமிழ் பேசு, தமிழ் படி என்றால் மற்ற மொழிகளைப் பேசாதே, மற்ற மொழிகளைப் படிக்காதே என்று ஏன் பொருள் எடுத்துக் கொள்கின்றீர்கள்? நம் செந்தமிழ்க் கவி பாரதி பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர்தான். விருப்பம் உள்ளவர்கள் சுய முயற்சியாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால் அதை அவர்கள் மற்றவர்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.
நம் தாய் மொழியை நாம் இகழ்ந்தால், எதிர்கால சந்ததியினரின் நிலை படு கேவலமாக இருக்கும். மொழியை இழந்தவன் தன் விழியை இழந்தவனாவான். தாய் மொழி வாயிலாக கலை, கலாச்சாரம் மற்றும் அற நெறிக் கருத்துக்கள் இளம் உள்ளங்களுக்கு வழங்கும்போது எளிமையாகவும், அதே சமயம் இனிமையாகவும் öநிஞ்சத்தில் நன்கு ஆழமாகப் பதியும். தன் தாய் மொழியை இழந்தவன் விழி இழந்த குருடனுக்கு ஒப்பாவான். இந்த மொழிக் குருடர்களின் கருத்தைப் பாருங்கள். சினிமா இல்லாவிட்டால் இன்றைய தமிழனுக்கு உலக நாகரீகம் தெரியாதாம். இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே என்னால் முடியும்.
உலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த ஒரு உன்னத நாகரீகத்துக்குச் சொந்தக்காரன் தமிழன். முடிந்தால் தமிழக வரலாறு அதன் பண்பாடு பற்றிய நூல்களை வாங்கிப் படிக்கவும். உங்கள் விருப்பப்படி ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்றால்
The language problem of Tamilnadu.. Author evaneyapavanar... என்ற நூலை வாங்கிப் படிக்கவும்.
ஈராயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது நம் தமிழ் மொழி. தமிழ் மக்களின் நாகரீகம் பண்பாடும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், மிக்க சிறந்த அரசியல் பொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.
யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று உன்னத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய தமிழனிடமா நாகரீகம் இல்லை? ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரீக வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்.
உங்கள் சினிமாவைப் பார்த்துத்தான் நாகரீகம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழனுக்கு இல்லை. எல்லாத் திரைப்படங்களையும் குறை கூறவில்லை. ஒரு சில தற்கால சினிமா காட்டும் கேடு கெட்ட எந்த நாகரீகமும் நமக்குத் தேவையில்லை.
தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கிலோ சாக்சன் காலத்தில் அது வெறும் இரு நூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது பிற்காலத்தில் பிற மொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி.
ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கருத்து வளத்துடன் உயர் தனி செம்மொழியாக விளங்கியது. எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். சொன்னால் சொல்லி மாளாது, எழுதினால் ஏடு கொள்ளாது.
<span style='color:red'>ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி</span>
நன்றி
அக்னிப்புத்திரன் ( agniputhiran@yahoo.com )
|
|
|
| மக்கள் விடுதலை முன்னணி |
|
Posted by: eelapirean - 02-25-2005, 06:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
--------------------------------------------------------------------------------
இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றை ஏற்படுத்தி அதன்பின்னர் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசாங்கம் முற்பட்டால் உடனடியாக அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
சபாநாயகரிடம் விசேட அனுமதியைப்பெற்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரசாரச்செயலாளர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றினார்.
அந்த உரையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மூன்று வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு தெளிவாகப்புலனாகின்றது என்று அவர் கூறினார்.
இவ் விடயம் எவராலும் மேடைப்பேச்சில் தெரிவிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்தல் ஒன்றின் மூலமே இதனைத் தெரிவித்துள்ளதால் அதன்மூலம் தெரிவிக்கப்படும் நிலைப்பாடு பாரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது.
விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான நிலைப்பாடு இந்த அறிவித்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது தெளிவாகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை அரசாங்கம் நெருங்கி வருவதை இதன்மூலம் புலனாகின்றது. இவ்வாறான அறிவித்தல் ஒன்றை விடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் அதன் தோழமைக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியதன் அவசியத்தையும் விமல் வீரவங்ச அவரது உரையின்போது வலியுறுத்தினார்.
தேசியப்பிரச்சனை தொடர்பாக தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டார்.
புதினம்
|
|
|
| பழம் புராணம் |
|
Posted by: Rajan - 02-25-2005, 03:16 AM - Forum: நகைச்சுவை
- Replies (3)
|
 |
பழம் புராணம் பாட நான் என்ன பழம் பண்டிதனா இல்லை பாமரனா?
தமிழ் விளங்க கஸ்டபடும் உங்களுக்கு ஆங்கிலம் விளங்குவது
இன்னும் கஸ்டம் என்பது புதுமையல்ல வேல்ல முடியாவிட்டால் தோல்வியைணய
ஏற்பதுதான் மனிதனுக்கு அழுகு.ஏன்ப்பா இந்த நாடகம்? யாருக்கு காட்டுகிறிர்கள்
இந்த நடனம்? எல்லாம் வல்ல ஆன்டவர் உங்கள் அறிவை முதிர்ப்படைய
அருள்புரிவாராக!!!!!!!!!!!!!!!!! பூனை
ஜந்தடி
|
|
|
| தேனீர் |
|
Posted by: shiyam - 02-25-2005, 02:08 AM - Forum: சமையல்
- Replies (16)
|
 |
அதுசரி என்ன இன்று களத்திலை கனபேர் நிக்கினம் என்ன விசேடம்
|
|
|
| கலந்துரையாடல் |
|
Posted by: tamilini - 02-25-2005, 12:40 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (36)
|
 |
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்புவுக்கு ஒரு ரசிகர் மன்றம் தொடங்கலாம் என்கிறீங்க..?? :wink:
|
|
|
|