![]() |
|
மக்கள் விடுதலை முன்னணி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மக்கள் விடுதலை முன்னணி (/showthread.php?tid=5030) |
மக்கள் விடுதலை முன்னணி - eelapirean - 02-25-2005 -------------------------------------------------------------------------------- இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றை ஏற்படுத்தி அதன்பின்னர் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசாங்கம் முற்பட்டால் உடனடியாக அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. சபாநாயகரிடம் விசேட அனுமதியைப்பெற்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரசாரச்செயலாளர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றினார். அந்த உரையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மூன்று வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு தெளிவாகப்புலனாகின்றது என்று அவர் கூறினார். இவ் விடயம் எவராலும் மேடைப்பேச்சில் தெரிவிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்தல் ஒன்றின் மூலமே இதனைத் தெரிவித்துள்ளதால் அதன்மூலம் தெரிவிக்கப்படும் நிலைப்பாடு பாரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது. விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான நிலைப்பாடு இந்த அறிவித்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது தெளிவாகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சுட்டிக்காட்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை அரசாங்கம் நெருங்கி வருவதை இதன்மூலம் புலனாகின்றது. இவ்வாறான அறிவித்தல் ஒன்றை விடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் அதன் தோழமைக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியதன் அவசியத்தையும் விமல் வீரவங்ச அவரது உரையின்போது வலியுறுத்தினார். தேசியப்பிரச்சனை தொடர்பாக தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டார். புதினம் |