Yarl Forum
செல்போனில் இனி காற்று உதவியுடன் `சார்ஜ்' ஏற்றலாம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: செல்போனில் இனி காற்று உதவியுடன் `சார்ஜ்' ஏற்றலாம் (/showthread.php?tid=5027)



செல்போனில் இனி காற்று உதவியுடன் `சார்ஜ்' ஏற்றலாம் - Vaanampaadi - 02-25-2005

செல்போனில் இனி காற்று உதவியுடன் `சார்ஜ்' ஏற்றலாம்: டெல்லி மாணவர்கள் கண்டு பிடிப்பு

செல்போனில் `சார்ஜ்' ஏற்ற இனி மின்சாரத்தை தேடி அலைய வேண்டியது இல்லை. காற்று மூலம் மின்சாரம் தயாரித்து சார்ஜ் ஏற்றும் நவீன கருவி ஒன்றை டெல்லியில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கருவி சிறு சக்கரத்தை கொண்டது. காற்று வேகத்தில் இயங்கும் அந்த சக்கரம் 3 முதல் 4 வாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்கும் சக்தி கொண்டது.

இந்த அளவு மின்சாரம் மொபைல் போன்களுக்கு போதுமானதாகும். எனவே சக்கரத்துடன் கூடிய நவீன கருவியை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். மின்சாரம் கிடைக்காத நேரங்களில் அல்லது மின்சாரம் இல்லாத இடங்களில், செல் போன்களுக்கு சார்ஜ் ஏற்ற இந்த கருவி மிக, மிக பயன் உள்ளதாக இருக்கும்.

ரூ. 200 விலை உள்ள இந்த கருவி அளவில் சிறியது. சட்டைப் பைக்குள் அதை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் செல்போனுடன் இணைத்து விட்டால் அது தானாக காற்று மூலம் மின்சாரம் தயாரித்து சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.
Maalaimalar